என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jyotiraditya Scindiya"

    • தபால் நிலையங்களின் சேவைகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
    • நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார் மத்திய மந்திரி.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டில் கையால் கடிதங்கள் எழுதும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது இதயத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.

    தபால் நிலையங்களின் சேவைகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

    அதன்படி, நாட்டின் 543 தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வெளியுறவு அமைச்சகம் மற்றும் அஞ்சல்துறை ஆகியவை உறுதிகொண்டுள்ளன என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் உள்கட்சி நிலைமை தெளிவாக வெளியே தெரிகிறது.
    • காங்கிரசுடனான 50 ஆண்டுகால தொடர்பை முடித்துக் கொண்டுள்ளார்.

    குவாலியர்:

    காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா விமானப் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று அவர் பார்வையிட்டார். முன்னதாக அவரிடம் குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    அதற்கு பதில் அளித்த அவர், காங்கிரசில் உள்கட்சி நிலைமை பல ஆண்டுகளாக தெளிவாக வெளியே தெரிகிறது என்றார். மூத்த தலைவரான ஆசாத், காங்கிரசுடனான தனது 50 ஆண்டு கால தொடர்பை முடித்துக் கொண்டு அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    ×