search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாதாம் பருப்பை திருடியதாக சிறுவனை மரத்தில் கட்டி வைத்த அர்ச்சகர்
    X

    பாதாம் பருப்பை திருடியதாக சிறுவனை மரத்தில் கட்டி வைத்த அர்ச்சகர்

    • சிறுவன் அழுவதையும், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சுவதையும் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பாதிக்கப்பட்ட சிறுவன் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் பாதாம் பருப்பை திருடியதாக 11 வயது சிறுவனை, கோவில் அர்ச்சகர் மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாஹர் பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிறுவன் அழுவதையும், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சுவதையும் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மோதி நகர் போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினர். அப்போது, பூஜை தட்டில் இருந்த பாதாம் பருப்பை, சிறுவன் திருடியதாக அந்த அர்ச்சகர் போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த அர்ச்சகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுவன் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    Next Story
    ×