என் மலர்
மத்தியப்பிரதேசம்
- லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அருந்ததியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
- 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தினார்.
போபால்:
6-வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இதில் அசாமை சேர்ந்த லவ்லினா, 75 கிலோ இறுதிப்போட்டியில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார்.
தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அருந்ததியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
அதேபோல, 50 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப்போட்டியில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனாமிகாவை எதிர்கொண்டார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த நிகாத், அனாமிகாவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.
- கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
- உடனிருந்த சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.
தாமம்:
மத்திய பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நாற்பது அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது
தாமோ மாவட்டத்தில் உள்ள வீட்டில் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூடி போடப்பட்டிருந்த தரைக்கிணறு சரியாக மூடப்படாததால் அதில் சிறுவன் தவறி விழுந்தான். உடனே உடனிருந்த மற்றொரு சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.
- அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்தது.
- கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம் 4 கால்களுடன் பிறந்துள்ளது.
அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேவேளை, குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதேவேளை, கூடுதலாக உள்ள 2 கால்கள் செயல் இழந்த நிலையில் உள்ளது.
மேலும், கருமுட்டை பிரிதலின்போது ஏற்பட்ட குறைபாட்டால் குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளதாகவும், கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என்றும் டாக்டர்கள் கூறினர்.
- பதான் படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- பேஷ்ரம் ரங் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.
போபால்:
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் முதல் பாடல் 'பேஷ்ரம் ரங்' வெளியாகியுள்ளது. முதல் பாடலைப் பார்த்ததும், சமூக வலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும்போது பதான் 2023-ம் ஆண்டின் பெரிய படம் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் இந்த பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீச்சல் உடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார். தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.
மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடல் காட்சியின் காஸ்ட்யூமுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த பாடலானது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. பேஷ்ரம் ரங் பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்யும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார். #BoycottPathan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் பேசிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
- நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் முன்னாள் அமைச்சரே கொல்லுமாறு அழைப்பு விடுத்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலத்தில் திக்விஜய் சிங் முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் கேபினட் அமைச்சர் பதவி வகித்தவர் ராஜா பட்டேரியா. இவர் தற்போது மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக உள்ளார். இவர் பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் நகரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசி உள்ளார்.
அந்த கூட்டத்தில் பேசியபோது, "மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டி விடுவார். மோடி மதம், சாதி, மொழியின் பெயரால் பிளவுபடுத்துவார். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினால், மோடியைக் கொல்வதற்கு தயாராகுங்கள். அவரை வீழ்த்துவதாக கருதி கொல்லுங்கள்" என்று கூறினார்.
இதையொட்டிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் முன்னாள் அமைச்சரே கொல்லுமாறு அழைப்பு விடுத்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ராஜா பட்டேரியா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சருமான ராஜா பட்டேரியாவை போலீசார் கைது செய்தனர்.
- தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக பேச்சு
- பிரதமரைக் கொல்ல சதி நடக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தும்படி பாஜக தலைவர் வேண்டுகோள்
போபால்:
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜா படேரியா, பிரதமர் மோடி குறித்து கடுமையான வார்த்தைகளால் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச முன்னாள் அமைச்சரான படேரியா, பவாய் நகரில் தொண்டர்களிடையே பேசியது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "மோடியைக் கொல்லத் தயாராக இருங்கள். அவரைத் தோற்கடிக்கும் பொருளில் கொல்லுங்கள்" என்று காங்கிரஸ் தொண்டர்களிடம் படேரியா கூறுவதைக் கேட்க முடிகிறது.
"மோடி தேர்தலுக்கு முடிவுகட்டுவார். மதம், ஜாதி, மொழி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்றால் மோடியை கொல்ல தயாராக இருக்கவேண்டும். அவரை தோற்கடிக்கும் பொருளில் கொல்லுங்கள்" என படேரியா கூறுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவந்தனர். பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொள்பவர்களின் உண்மை முகம் வெளிவருகிறது என்று, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக விமர்சித்துள்ளார். படேரியா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படுவதாகவும், சட்டம் அதன் கடமையை செய்யும் என்றும் சவுகான் கூறி உள்ளார்.
முன்னதாக, மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா, படேரியாவின் வீடியோ கிளிப்பை பகிர்ந்ததுடன், பிரதமரைக் கொல்ல சதி நடக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிககை வைத்தது குறிப்பிடத்தக்கது.
கடும் சர்ச்சை எழுந்த நிலையில், படேரியா ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க செய்யுங்கள் என்ற அர்த்தத்தில் தான் பேசியதாகவும், தனது கருத்துகள் தவறாக விளக்கப்பட்டதாகவும் கூறி உள்ளார்.
- தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
- சிறுவனுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தின் பீட்டல் மாவட்டம் மாண்டவி என்ற கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் அங்கு விளையாடி கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சிறுவன் சுமார் 55 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.
சிறுவன் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய பிரதேச மாநிலத்தில் 88வது நாளாக பாதயாத்திரை நடைபெறுகிறது.
- மத்திய பிரதேசத்தில் மட்டும் 380 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடைபெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை பயணம், கடந்த மாதம் 23ந் தேதி மகாராஷ்டிராவிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்தது. 88வது நாளாக இன்று காலை மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் நகுல் நாத், முன்னாள் மத்திய மந்திரி அருண் யாதவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியவ்ரத் சிங் ஆகியோரும் இந்த அணிவகுப்பில் ராகுல் காந்தியுடன் நடந்து சென்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் புர்ஹான்பூர், கந்த்வா, கர்கோன், இந்தூர் மற்றும் உஜ்ஜைனி மாவட்டங்களை கடந்து மொத்தம் 380 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை நடைபெற்றுள்ளது. இந்த பாத யாத்திரையின்போது உஜ்ஜயினியில் உள்ள 12 ஜோதி லிங்கங்களில் ஒன்றான மகா காளேஸ்வரர் கோயிலுக்கு சென்ற ராகுல்காந்தி வழிபாடு நடத்தினார்.
இந்நிலையில் இன்று மாலை ராஜஸ்தான் மாநிலத்திற்குள் ராகுலின் யாத்திரை நுழைகிறது. அங்குள்ள சான்வ்லி கிராமத்தில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் உறுப்பினர்கள், ராஜஸ்தானை சேர்ந்த கட்சி உறுப்பினர்களிடம் தேசியக் கொடியை ஒப்படைக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அம்மாநில காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.
- நடத்தை விதிகளை மீறி அரசியல் பேரணியில் கலந்து கொண்டதாக கூறி பாஜக அரசு நடவடிக்கை.
- அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக காங்கிரஸ் புகார்
பர்வானி:
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கனஸ்யாவில் உள்ள பழங்குடியினருக்கான தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ராஜேஷ் கண்ணோஜ், முக்கியமான வேலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கான சேவை நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரகுவன்ஷி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ் சஸ்பெண்ட் உத்தரவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தற்போது இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மாநில காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிவராஜ் சிங் சவுகான் அரசு, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்துள்ளது, ஆனால் பழங்குடியினரான ராஜேஷ் கண்ணோஜ், அரசியல் சாராத அணிவகுப்பில் பங்கேற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
- வெளியேறிய பின்னர் கட்சியை விமர்சித்தவர்களை மீண்டும் வரவேற்கக்கூடாது.
- கண்ணியத்தைக் காப்பாற்றிய தலைவர்கள் மீண்டும் வரவேற்கப்படுவார்கள்.
அகர் மால்வா:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை இன்று மத்திய பிரதேச மாநிலம் அகர் மால்வா பகுதியை அடைந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், ஊடக பிரிவு தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது
கட்சியை விட்டு வெளியேறிய பிறகு கண்ணியமான மௌனம் காத்த கபில் சிபல் போன்றவர்கள் கட்சிக்கு திரும்ப அனுமதிக்கப்படலாம், ஆனால் ஜோதிராதித்ய சிந்தியா அல்லது ஹிமந்தா பிஸ்வா சர்மா போன்றவர்களை அனுமதிக்க முடியாது. காங்கிரஸை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் வரவேற்கக் கூடாது என்று நினைக்கிறேன்.
கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்தவர்கள் உள்ளனர், எனவே அவர்களை திரும்பப் அழைக்கக் கூடாது. ஆனால் கட்சியில் இருந்து கண்ணியத்துடன் வெளியேறியவர்களும் உள்ளனர், மேலும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமை குறித்து அவர்கள் கண்ணியமான மவுனம் காத்து வருகின்றனர்.
சில காரணங்களுக்காக கட்சியை விட்டு வெளியேறிய எனது முன்னாள் சகாவும் மிக நல்ல நண்பருமான கபில் சிபலைப் பற்றி என்னால் நினைக்க முடிகிறது அவர், சிந்தியா மற்றும் சர்மாவைப் போல அல்லாமல் மிகவும் கண்ணியமான மௌனம் காத்துள்ளார்.
எனவே, கண்ணியத்தைக் காப்பாற்றிய அத்தகைய தலைவர்கள் மீண்டும் வரவேற்கப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் கட்சியை விட்டு வெளியேறி பின்னர் கட்சியையும் அதன் தலைமையையும் விமர்சித்தவர்களை மீண்டும் வரவேற்கக்கூடாது. ஜோதிராதித்ய சிந்தியா ஒரு துரோகி, உண்மையான, 24 காரட் துரோகி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயராம் ரமேஷின் கருத்துக்கு பதிலளித்த மத்தியப் பிரதேச பாஜக செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால், சிந்தியா வலுவான கலாச்சார வேர்களைக் கொண்ட 24 காரட் தேசபக்தர் என்று குறிப்பிட்டுள்ளார். சிந்தியா மற்றும் சர்மா இருவரும் தங்கள் பணியில் 24 காரட் அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளனர், ரமேஷின் கருத்துக்கள் பண்பாடு இல்லாதது, முற்றிலும் ஜனநாயகமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
- வேலை முடிந்து வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கம் கெடுகிறது.
- அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என டாக்டர் புகாரில் தெரிவித்துள்ளார்.
போபால்:
இந்தூரின் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருகிறார் அலோக் மோடி. இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது:
எனது அண்டை வீட்டில் உள்ள ஒரு பெண் ஒருவர் கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அந்த சேவல் கோழிகள் தினமும் அதிகாலை தவறாது 5 மணிக்கெல்லாம் கூவுகிறது. இதனால் வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கலாம் என்றபோது சேவல் கூவி தூக்கத்தைக் கலைத்து விடுகிறது. அது முற்றிலும் தமக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அலோக் மோடியின் புகாரை பலாசியா காவல் நிலைய பொறுப்பாளர் சஞ்சய் சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.
இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் சேவல் கூவும் சிக்கலை தீர்க்க குற்றவியல் நடைமுறையைப் பின்பற்றுவோம். பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம் என சஞ்சய் சிங் தெரிவித்தார்.
- மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கும் திறன் அதிகரித்துள்ளது.
- அசவுகரியத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது எப்போதும் நல்லது.
இந்தூர் :
மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அங்குள்ள இந்தூர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பாதயாத்திரையில் மிகவும் திருப்தியான தருணம் குறித்து கேட்டதற்கு ராகுல்காந்தி கூறியதாவது:-
திருப்தியான தருணங்கள் நிறைய உள்ளன. ஆனால், என்னுள் ஏற்பட்ட சில சுவையான மாற்றங்கள் இருக்கின்றன. பாதயாத்திரையால் எனது பொறுமை கணிசமாக அதிகரித்து விட்டது. இரண்டாவது, 8 மணி நேரமானாலும் நான் எரிச்சல் அடைவது இல்லை. முன்பெல்லாம் 2 மணி நேரத்தில் எரிச்சல் அடைந்து விடுவேன். யாராவது தள்ளினாலும், இழுத்தாலும் என்னை பாதிப்பது இல்லை.
மூன்றாவது, மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கும் திறன் அதிகரித்துள்ளது. யாராவது என்னிடம் ஏதேனும் சொல்ல வந்தால், நன்றாக கேட்கிறேன். இவையெல்லாம் எனக்கு பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.
நான் பாதயாத்திரையை தொடங்கியபோது, ஏற்கனவே குணமாகிவிட்ட ஒரு காயத்தால், முழங்காலில் வேதனை ஏற்பட்டது. அந்த நிலைமையில், என்னால் நடக்க முடியுமோ, முடியாதோ என்ற அச்சம் உருவானது. ஆனால், அந்த அச்சத்தை படிப்படியாக சமாளித்தேன். அசவுகரியத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்வது எப்போதும் நல்லது.
தென்மாநிலம் ஒன்றில் நான் நடைபயணத்தில் இருந்தபோது, வேதனையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, 6 அல்லது 7 வயதுடைய ஒரு சிறுமி என்னிடம் வந்து ஒரு கடிதத்தை அளித்தாள்.
அதை படித்து பார்த்தேன். ''நீங்கள் தனியாக நடப்பதாக கருதாதீர்கள். பெற்றோர் அனுமதிக்காததால், உங்களுடன் என்னால் நடக்க இயலாது. ஆயினும் நானும் நடப்பதாக கருதுகிறேன்'' என்று எழுதப்பட்டு இருந்தது.
இதுபோல், ஆயிரக்கணக்கான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதுதான் முதலில் என் மனதில் வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.






