என் மலர்tooltip icon

    இந்தியா

    மோடியை கொல்ல தயாராகுங்கள் என பேசிய காங்கிரஸ் தலைவர் கைது
    X

    'மோடியை கொல்ல தயாராகுங்கள்' என பேசிய காங்கிரஸ் தலைவர் கைது

    • காங்கிரஸ் மூத்த தலைவர் பேசிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
    • நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் முன்னாள் அமைச்சரே கொல்லுமாறு அழைப்பு விடுத்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் திக்விஜய் சிங் முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் கேபினட் அமைச்சர் பதவி வகித்தவர் ராஜா பட்டேரியா. இவர் தற்போது மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக உள்ளார். இவர் பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் நகரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசி உள்ளார்.

    அந்த கூட்டத்தில் பேசியபோது, "மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டி விடுவார். மோடி மதம், சாதி, மொழியின் பெயரால் பிளவுபடுத்துவார். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினால், மோடியைக் கொல்வதற்கு தயாராகுங்கள். அவரை வீழ்த்துவதாக கருதி கொல்லுங்கள்" என்று கூறினார்.

    இதையொட்டிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் முன்னாள் அமைச்சரே கொல்லுமாறு அழைப்பு விடுத்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக ராஜா பட்டேரியா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சருமான ராஜா பட்டேரியாவை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×