என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • எல்லைப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டை
    • ட்ரோன் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்டதா என்பது குறித்து ஆய்வு.

    ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சில்லியாரி கிராமம் அருகே பறக்கும் சாதனம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அது ட்ரோன் ஆக இருக்கலாம் என்று எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். எனினும் அந்த ஆளில்லா விமானத்தை யாரும் பார்த்தார்களா என்பது குறித்து தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.

    பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு எல்லைப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்றதாகவும் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் ஏதுவும் வீசப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் இந்த பணிக்கு ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    அண்டை நாட்டில் இருந்து ஏவப்படும் ட்ரோன்களின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தெற்கு காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பு.
    • பயங்கரவாதிகளை எதிர்கொள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி.

    ஸ்ரீநகர்:

    இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, தெற்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் புனித யாத்திரை இன்று தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ந் தேதிவரை நடைபெறுகிறது.

    முன்னதாக இந்த யாத்திரையில் பங்கேற்கும் முதல் குழுவின் பயணத்தை நேற்று ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து கவர்னர் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை நிகழ்ச்சியில் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பக்தர்கள் செல்லும் பாதையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக தெற்கு காஷ்மீரின் குல்காம், சோபியான், புல்வாமா மற்றும் அனந்த்நாக் ஆகிய நான்கு மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    மேலும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு மற்றும் ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணும் முறைகளும் பின்பற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாதுகாப்பு படைகளின் தேடுதல் வேட்டை மற்றும் தாக்குதல் அணுகுமுறை காரணமாக ஜூன் மாதத்தில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    • அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள்.
    • கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    ஸ்ரீநகர்:

    தெற்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலில் பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை நாளை தொடங்குகிறது.

    ஆகஸ்டு 11-ந்தேதி யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்கம் மற்றும் பல்டால் முகாம்களில் புனித யாத்திரை தொடங்குகிறது.

    இந்த நிலையில் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் குழுவின் முதல் பகுதியை இன்று ஜம்முவில் உள்ள பகவதி நகர் முகாமில் இருந்து கவர்னர் சின்கா கொடியசைத்து தொடங்கி வைத்தார். யாத்ரீகர்கள் குழு பலத்த பாதுகாப்புடன் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் காஷ்மீரில் உள்ள முகாம்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஜம்மு மேயர் சந்தர்மோகன்குப்தா, பா.ஜனதா தலைவர் தேவேந்தர நாரானா, தலைமை செயலாளர் அருண்குமார் மேத்தா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமர்நாத் யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    • பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது.

    ஜம்மு:

    தெற்கு காஷ்மீரில் பனிபடர்ந்த இமயமலையின் உச்சியில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாகவே தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் புனிதப்பயணம் செய்வார்கள். கரடுமுரடான மலைப்பாதை வழியாக பயணித்து, 3,888 மீட்டர் உயரத்தில் உள்ள குகைக்கோயிலை தரிசிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    அமர்நாத் குகைக்கோயிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்ல முடியாது. ஜம்முவிலிருந்து பாகல்காம் அல்லது பல்டால் அடிவார முகாம் வரை வாகனங்களில் சென்று அங்கிருந்து குகைக்கோயிலுக்கு நடைப்பயணமாக தான் செல்ல முடியும். பல்டால் வழியாக செல்லும் பாதை 14 கிமீ நீளம் கொண்ட குறுகிய பாதை ஆகும். பாகல்காம் வழியாக செல்லும் பாரம்பரிய வழி 48 கிமீ நீளம் கொண்டது.

    இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு இம்மாதம் 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை. இந்த ஆண்டு யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் சாதுக்கள் மற்றும் யாத்ரீகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள் மற்றும் பக்தர்கள் ஜம்முவுக்கு வரத் தொடங்கி உள்ளனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பழைய நகரின் பூரணி மண்டி பகுதியில் உள்ள அடிவார முகாம் ராம் மந்திரில் முகாமிட்டு, யாத்திரைக்கான நாளை எதிர்பார்த்துள்ளனர்.

    யாத்திரை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜம்முவில் உள்ள பகவதி நகர் மற்றும் ராம் மந்திரில் இருந்து அடிவார முகாம்களுக்கு சாதுக்கள் உட்பட யாத்ரீகர்களின் முதல் குழு புறப்படுகிறது.




    அமர்நாத் யாத்திரைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது. பயங்கரவாதத் தாக்குதலை முறியடிக்கவும், அமைதியான யாத்திரையை உறுதி செய்யவும், அடிப்படை முகாம்களிலும், ஜம்மு காஷ்மீருக்கான நுழைவாயிலான லகான்பூரிலிருந்து குகைக் கோவிலுக்குச் செல்லும் பாதையிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஜம்முவில் உள்ள கோவில் வளாகத்தில் உள்ள பெரிய மண்டபத்தில் சிறு குழுக்களாகத் தங்கியிருக்கும் சாதுக்கள், சிவபெருமானைப் போற்றி பாடியவண்ணம் உள்ளனர். அப்போது, உலக வாழ்க்கையைத் துறந்த சாதுக்கள், பயங்கரவாத அச்சுறுத்தலைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை என்றும், இது தங்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல என்றும் கூறுகின்றனர்.

    எங்களுக்கு தர்மம் (மதம்) மட்டுமே தெரியும். எங்கள் தர்மம் அனைவரையும் நேசிக்க கற்றுக்கொடுக்கிறது. நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திப்பதற்காக புனித பயணத்தில் இருக்கிறோம், அதைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம், வேறு எதுவும் இல்லை என அசாமிலிருந்து வந்திருக்கும் சாது ஒருவர் கூறினார்.

    • அமா்நாத் புனித யாத்திரை வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.
    • ஜம்மு நகரில் 5,000 போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோமீட்டர் தூரத்தில் இமயமலை பகுதியில் உள்ள லிடர் பள்ளத்தாக்கில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்க வடிவில் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிப்பதாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் அமர்நாத் யாத்திரை நடைபெறுகிறது.

    அமா்நாத் புனித யாத்திரை வரும் 30-ம் தேதி தொடங்கி 43 நாட்கள் நடைபெற உள்ளது. தெற்கு காஷ்மீாின் பஹல்காமில் உள்ள நுன்வான் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு வழிகளில் யாத்திரை தொடங்க உள்ளது.

    இந்நிலையில், அமா்நாத் யாத்திரைக்காக ஜம்மு நகா் முழுவதும் 5 ஆயிரம் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். இதுதொடா்பாக போலீசார் கூறியதாவது:

    ஜம்மு நகாில் உள்ள முகாம்கள் மற்றும் யாத்திரையில் பங்குபெறும் பக்தா்கள் தங்கும் முகாம்களில் போதிய அளவு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    இங்கு பாதுகாப்பு மிகப்பொிய சவாலாக உள்ளது. இந்த பகுதிகளில் பயங்கரவாதிகள் மற்றும் டிரோன்கள் மூலம் வீசப்படும் குண்டுகள் ஆகியவற்றால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது.

    இங்குள்ள பகுதிகளில் 5 பதிவு மையங்கள், 3 டோக்கன் மையங்கள் மற்றும் 32 தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், அமா்நாத் செல்லும் வாகனங்கள் மற்றும் பக்தா்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, விரைவு எதிர்வினை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது என தொிவித்தாா்.

    கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டாக அமா்நாத் புனித யாத்திரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள துஜ்ஜன் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
    • அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஜித் நசீர் என்பது தெரிய வந்தது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் பாரமுல்லா துலிபால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

    அதேபோல் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள துஜ்ஜன் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

    அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஜித் நசீர் என்பது தெரிய வந்தது.

    இவன் சில நாட்களுக்கு முன் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • காஷ்மீரில் இன்று 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
    • பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஸ்ரீநகர்:

    ஐம்மு காஷ்மீரின் சண்டிகம் லோலாப் பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷோகத் அஹ்மத் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் நேற்று காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு மறைவிடத்தில் இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதன் முடிவில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் ஈ தொய்பாவை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 4 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இந்நிலையில் இன்றும் தொடர்ந்து தேர்தல் வேட்டை நடைபெற்றது. இதில் புல்வாமா உள்பட இரண்டு பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டர்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
    • சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 2 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.

    குப்வாரா:

    ஐம்மு காஷ்மீரின் சண்டிகம் லோலாப் பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷோகத் அஹ்மத் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மறைவிடத்தில் இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

    இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். இதை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் ஈ தொய்பாவை சேர்ந்த இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல் குல்காம் பகுதியில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல் ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.
    • சிடிசி லெத்போராவில் உள்ள ஐஆர்பி 23வது பட்டாலியனில் ஃபரூக் மிர் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அருகே பாம்பூரில் காவல் உதவி ஆய்வாளரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    காவல் ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர் மீதான தாக்குதல் நேற்று இரவில் பாம்பூர் பகுதியில் உள்ள சம்பூரா என்ற இடத்தில் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    சிடிசி லெத்போராவில் உள்ள ஐஆர்பி 23-வது பட்டாலியனில் ஃபரூக் மிர் நியமிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இளைஞர்கள் தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னிபாத் திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளது.
    • ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் தொடங்கும்

    இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,  கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெறாததால், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

    இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னிபாத் திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளதாக அவர் கூறினார்.

    இளைஞர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, அக்னிபாத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி அரசு அறிவித்துள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

    அரசின் வயது தளர்வு அறிவிப்பு இளைஞர்கள் நலன் மீதான அரசாங்கத்தின் அக்கறையை காட்டுகிறது என்றும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.

    பின்னர் அவர், பஹல்காமிலுள்ள ஜவஹர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மவுன்டெய்னரிங் மற்றும் விண்டர் ஸ்போர்ட்சின் 9-வது நிர்வாகக்குழு மற்றும் 4-வது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், மலையேறுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்கள் உடல் சகிப்புத் தன்மையை அதிகரிப்பதுடன், மனஉறுதியையும், உற்சாகத்தையும் தருவதாக குறிப்பிட்டார்.

    ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த துறைகளில் தற்போது பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவது அதிகரித்து வருவதற்கு, அவர் பாராட்டு தெரிவித்தார்.

    • ஜம்மு காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள், காஷ்மீர் பண்டிட்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    • குல்காம் மாவட்டத்தில் மே 30-ம் தேதி பள்ளி ஆசிரியை ரஜினி பாலாவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    விசாரணையில், கடந்த மாதம் 30-ம் தேதி பள்ளி ஆசிரியை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஷோபியானைச் சேர்ந்த ஜான் முகமது லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
    • குல்காம் மாவட்டத்தில் ஜூன் 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்றதில் பயங்கரவாதி ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் கடந்த 2-ம் தேதி காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், வங்கி மேலாளரைக் குறிவைத்து கொல்லப்பட்ட பயங்கரவாதி நேற்றிரவு ஷோபியானில் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் ஒருவன் என காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஷோபியானைச் சேர்ந்த ஜான் முகமது லோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற பயங்கரவாத குற்றங்களைத் தவிர குல்காம் மாவட்டத்தில் ஜூன் 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜய் குமாரைக் கொன்றதில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

    ×