என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • வானிஹாம் பாலா கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்.
    • மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்ந்து போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை பாராமுல்லா மாவட்டம் வானிஹாம் பாலா கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அவர்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    அங்குள்ள குடியிருப்பில் பதுங்கிய 2 பயங்கரவாதிகள் இதில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்த சண்டையில் உயிர் இழப்பு எதுவும் ஏற்பட்டதா? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

    • பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே.
    • நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது.

    ஜம்முவில் நடந்த கார்கில் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேச சேவையில் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆயுதப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே. அனைத்து வகையான எதிர்காலப் போர்களிலும் போராட ஆயுதப் படைகளுக்கு ஆயுதங்கள், உபகரணங்களைத் தயாரிக்கும் தற்சார்பு சூழலை உருவாக்க தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

    இந்தியா ஒரு வலிமையான மற்றும் நம்பிக்கையான தேசமாக மாறியுள்ளது. புதிய இந்தியா, தீய நோக்கம் கொண்ட எவருக்கும் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக உள்ளது. இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.

    வலிமையான, வளமான, தன்னம்பிக்கை மற்றும் வெற்றிகரமான இந்தியாவை உருவாக்குவதே, உயர்ந்த தியாகத்தைச் செய்த நமது மாவீரர்களுக்கு செய்யும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

    1965 மற்றும் 1971 நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அது இந்தியா மீது மறைமுக யுத்தத்தை மேற்கொண்டது.

    ஆனால், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்பதை மீண்டும் மீண்டும், நமது துணிச்சலான வீரர்கள் நிரூபித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஹிக்னி-பதர்கூட் பெல்ட்டின் இணைப்பு சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜம்மு- காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பயணித்த வாகனம் சாலையில் சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    ஹிக்னி-பதர்கூட் பெல்ட்டின் இணைப்பு சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இறந்தவர்கள் ஜாஹிதா பேகம் மற்றும் முஷ்டாக் அகமது, ஹசா பேகம் மற்றும் அப்துல் ரஷீத் என அடையாளம் காணப்பட்டனர்.

    காயமடைந்தவர்களில் ஷகன் ராம்சூவைச் சேர்ந்த ஷானாசா பேகம் மற்றும் முஷ்டாக் அகமது ஆகிய இருவர் அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • 4 ஆண்டுகளுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீநகர்:

    திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தலாய் லாமா நேற்று மதியம் லே விமான நிலையத்தை வந்தடைந்தார். 4 ஆண்டுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா தங்கள் எல்லை பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தலாய் லாமா பேசுகையில், இந்தியாவும் சீனாவும் போட்டி மற்றும் அண்டை நாடுகள். இரு நாடுகளும் விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிகளில் எல்லை பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பயனற்றது என குறிப்பிட்டார்.

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ராணுவ கமாண்டர்கள் அளவிலான உயர்மட்ட 16-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இந்த பயணத்தை அவர் மேற்கொண்டதை சீனாவுக்கு ஓர் எச்சரிக்கை என பார்க்கப்படுகிறது.

    • ஸ்ரீநகர் புகர் பகுதியில் லால்பஜார் என்ற இடத்தில் சோதனை சாவடி இருக்கிறது.
    • போலீசார் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் புகர் பகுதியில் லால்பஜார் என்ற இடத்தில் சோதனை சாவடி இருக்கிறது.

    இதை குறி வைத்து நேற்று இரவு 7.15 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். போலீசாரும் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அங்கு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தாக் அகமது குண்டு பாய்ந்து பலியானார்.

    பயங்கரவாதிகள் சுட்டதில் பயாஸ் அகமது, அபுபக்கர் ஆகிய இரண்டு போலீசாரும் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    • அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பு, பெருமழையால் தற்காலிக ரத்து செய்யப்பட்டது.
    • சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது.

    ஜம்மு :

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் கடந்த வெள்ளி கிழமை மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. மேகவெடிப்பு ஏற்பட்டதில் சிக்கி 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 45 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    படுகாயமடைந்த நபர்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணிகள் நடந்த நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனர். அமர்நாத் குகை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட பகுதியருகே, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார், தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன.

    பட்டான் மற்றும் ஷரிபாபாத் பகுதியை சேர்ந்த தலா இரு மோப்ப நாய் படைகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதேபோன்று, காஷ்மீரின் சுகாதார சேவை இயக்ககம், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்பட அனைவரின் விடுமுறையையும் ரத்து செய்தது. அதனுடன், அவர்களை உடனடியாக பணிக்கு வரும்படியும் உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தத்ரி நகரில் குந்தி வனத்தின் மலைபிரதேச பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது.

    இதனால், அந்த பகுதியில் பெருமழை கொட்டியது. இதில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சேற்றில் சில வாகனங்கள் சிக்கி கொண்டன. கார், ஜீப் உள்ளிட்டவற்றின் சக்கரங்கள் மண்ணில் புதையுண்டன. இதனை அடுத்து, வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் இயங்கப்பட்டன.

    இதுவரை நடந்த மீட்பு பணியில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பில் காயமடைந்து மீட்கப்பட்ட நபர்களில் ஒரு சிலர் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா நேரில் சென்று சந்தித்து அவர்களது உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார். இதன்பின் அவர்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

    அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பு மற்றும் பெருமழை ஆகியவற்றால் தற்காலிக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் அடங்கிய குழு ஒன்று ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து புறப்பட்டு தரிசனத்திற்கு சென்றுள்ளனர். இதுபற்றி பக்தர்கள் கூறும்போது, எங்களுக்குள் சக்தி நிறைந்துள்ளது. பாபாவை தரிசிக்காமல் நாங்கள் திரும்பி செல்லமாட்டோம். போலே பாபா மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அவரது தரிசனத்திற்காக காத்திருக்கிறோம்.

    அமர்நாத் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் பாதுகாப்புடன் பயணிக்க ஏதுவாக சி.ஆர்.பி.எப். மற்றும் பிற பாதுகாப்பு படையினர் எங்களுக்கு வழிகாட்டி வருகின்றனர் என கூறியுள்ளனர். இதற்கு முன், நுன்வான் பகல்காம் பகுதியில் இருந்து அமர்நாத் புனித யாத்திரை இன்று தொடங்கும் என ஸ்ரீ அமர்நாத்ஜி கோவில் வாரியம் தெரிவித்து இருந்தது.

    பக்தர்கள் பால்தல் முகாமில் இருந்தும் புறப்பட்டு செல்ல காத்திருக்கின்றனர். இதனை முன்னிட்டு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா பகல்காமில் உள்ள பக்தர்களை நேற்று நேரில் சென்று சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புனித யாத்திரை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணவழிகளை சீர்செய்து உள்ளோம். பக்தர்கள் வரவேண்டும். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து தருவோம் என சின்ஹா உறுதி கூறினார்.

    • மேக வெடிப்பு நிகழ்வால் ஒரு மணி நேரத்தில் 28 மிமீ மழை கொட்டியது.
    • மறு அறிவிப்பு வரும் வரை அமர்நாத் புனித யாத்திரை நிறுத்தம்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் பனிலிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை கடந்த 30-ந்தேதி தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வந்தனர்.

    இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கியது.

    #WATCH | Mountain Rescue Team (MRT) rescue work under progress after a cloud burst occurred in the lower reaches of the Amarnath Cave

    இந்நிலையில், அமர்நாத் குகை அருகே நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு நிகழ்வால் கடும் மழை கொட்டியது. அமர்நாத் குகை கோவிலுக்கு மேலே உள்ள பகுதியில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை 31 மிமீ மழை பெய்ததாக என்று வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதனால் உருவான வெள்ளப்பெருக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த 20க்கு மேற்பட்ட பக்தர்களின் முகாம்களை அடித்துச் சென்றது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 48 பேர் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை காணவில்லை என கூறப்படுகிறது.  

    #WATCH | Rescue operations are being carried out in cloudburst affected area at the lower Amarnath Cave site

    அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் சமூக சமையலறைகள் மீது மண் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதாக, காவல்துறை. அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. இரவு நேரத்திலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.75 மீட்புப் பணியாளர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் இதில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை அமர்நாத் புனித யாத்திரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் மேகவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • அமர்நாத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
    • மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. வெள்ளத்தில் பல முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 2 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் மாயமாகினர். சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அமர்நாத் யாத்திரையின்போது மேக வெடிப்பு ஏற்பட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

    • அமர்நாத் யாத்திரை கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது.
    • தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வருகின்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். கடந்த 2 ஆண்டாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த ஆண்டு கடந்த 30-ந்தேதி முதல் பனிலிங்க யாத்திரை மீண்டும் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கியது.

    இந்நிலையில், அமர்நாத் யாத்திரை குகை அருகே இன்று ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த 20க்கு மேற்பட்ட முகாம்களை வெள்ளம் அடித்துச் சென்றது.

    இதில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

    தகவலறிந்து இந்தோ திபெத்திய போலீஸ் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பனி நடைபெற்று வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான ஆயத்த பணியை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.
    • பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல.

     ஜம்மு:

    கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதை யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு, அங்கு சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பயணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

    ஜம்முவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜம்முகாஷ்மீர் சட்டசபைத் தேர்தலை சந்திக்க பாஜக எப்போதும் தயாராக இருப்பதாக கூறினார். அது பஞ்சாயத்து தேர்தலாக, சட்டசபை தேர்தலாக, நாடாளுமன்ற தேர்தலாக என எந்த தேர்தலுக்கும் தயாராகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • என்கவுன்டரின்போது இரண்டு பயங்கரவாதிகளும் அவர்களது பெற்றோர் மற்றும் காவல்துறையின் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து சரணடைந்துள்ளனர்.
    • பயங்கரவாதிகளிடம் இருந்து வெடி பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் ஹதிகம் பகுதியில் நேற்று நள்ளிரவில் என்கவுன்டர் தொடங்கியது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

    சரணடைந்த இரண்டு பயங்கரவாதிகளும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும், என்கவுன்டரின்போது இரண்டு பேரும் அவர்களது பெற்றோர் மற்றும் காவல்துறையின் மூறையீட்டின்பேரில் சரணடைந்துள்ளனர். பின்னர், பயங்கரவாதிகளிடம் இருந்து வெடி பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காஷ்மீர் மண்டல காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • பக்தர்கள் யாரும் யாத்திரை செல்லமுயற்சி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த 30-ந்தேதி முதல் பனிலிங்க யாத்திரை மீண்டும் தொடங்கியது. வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பக்தர்கள் யாரும் யாத்திரை செல்லமுயற்சி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ×