என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    • காஷ்மீரி பண்டிட் கொல்லப்பட்டதற்கு நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு:

    சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயங்கரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த தாக்குதலில் அவரது சகோதரர் காயமடைந்துள்ளார். உயிரிழந்த நபர் சுனில் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சகோதரர் பிந்து குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்தார்,

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், காஷ்மீரி பண்டிட்கள் மீதான அட்டூழியங்கள் இன்றும் தொடர்வது வெட்கக் கேடானது. பயங்கரவாதிகள் தங்கள் சொந்த மக்களைக் கூட கொன்றுவிடுகிறார்கள். இந்தியாவுடன் நிற்கும் அனைவரையும் அவர்கள் கொன்று விடுகிறார்கள். இது கடந்த 30 ஆண்டுகளாக நடந்துவருகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டிக்கிறீர்களோ, அவ்வளவு குறையும். இந்த தீவிரவாத மனநிலையை நாம் மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

    • காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பாஜக கண்டனம்.
    • காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறி விட்டதாக அசாதுதீன் ஒவைசி குற்றச்சாட்டு.

    சோட்டி போரா: 

    ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார். சோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிபோரா பகுதியில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    உயிரிழந்தவர் சுனில் குமார் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது சகோதரர் பிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 


    இந்த கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, இந்துக்களை குறி வைத்து நடத்தப்பட்ட கோழைத்தன தாக்குதல் இது என குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் இரத்தக் களரி சூழலை பாகிஸ்தான் விரும்புகிறது, அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மக்களின் எதிரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த ஜூன் மாதம் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் விஜய்குமார் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  காஷ்மீரில் சிறுபான்மை மக்களாக உள்ள இந்துக்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது.

    இந்நிலையில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


    ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநரை நியமித்து பாஜக ஆட்சி செய்கிறது. ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பண்டிட்கள் இப்போது காஷ்மீரை விட்டு வெளியேற விரும்புகிறார்கள், இது பிரதமர் மோடியின் தோல்விக்கு மற்றொரு உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 

    • பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.
    • காயமடைந்த வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம், சந்தன்வாரி அருகே இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் சந்தன்வாரி பாகல்காமில் இருந்து திரும்பியபோது, அவர்களின் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது.

    பேருந்தில் பயணித்த 6 வீரர்கள் உயிரிழந்தனர். 35 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.
    • பாகிஸ்தான் அகதிகளுக்கு மாநில தேர்தலில் வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மேற்கு பாகிஸ்தானை சேர்ந்த அகதிகளின் பேரணியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    ஐம்மு:

    பாகிஸ்தானில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட இந்திய வம்சாவளி அகதிகள், பிரிவினைக்குப் பிறகு, இந்திய பக்கம் தஞ்சம் அடைய குறுகிய கால அவகாசத்தில் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டு வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

    நாடு பிரிக்கப்படுவதற்கு முந்தைய மேற்கு பாகிஸ்தானில் பிறந்த டாக்டர் மன்மோகன் சிங், குஜ்ரால் ஆகிய இருவரும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நிலையில், ஜம்மு காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தான் அகதிகளுக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவோ, போட்டியிடவோ உரிமை மறுக்கப்பட்டது. சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் சூழ்ச்சிகளால், பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி 370வது சட்டப்பிரிவுவை ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடி இந்த முரண்பாட்டை சரிசெய்தார். அதன்பிறகு, இப்போது ஜம்மு காஷ்மீரில் குடியேறிய பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் கூட தேர்தலில் போட்டியிடலாம். மேலும் எம்எல்ஏவாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ கூட அவர்கள் ஆகலாம்.

    அடுத்த கால் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிப் பாதை பொன்னான அத்தியாயத்தை பதிவு செய்யும். அதில் ஜம்மு காஷ்மீர் முக்கியப் பங்கு வகிக்கும். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ், ஜம்மு காஷ்மீர் போன்ற நாட்டின் ஒதுக்குப்புறப் பகுதிகளின் திறன்கள் இப்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரில் விவசாய துறையில் பல புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர தெரிவித்துள்ளார்.

    • ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஸ்ரீநகரிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    குல்காம்:

    சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த புதன்கிழமை இரவு காஷ்மீரின் புட்காம் பகுதியில் போலீசாருடன் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மறுநாள் அதிகாலையில் ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீரில் பீகார் தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் குல்காம் மாவட்டத்திற்கு உட்பட்ட கைமோ பகுதியில் பயங்கரவாதிகள் போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பூஞ்ச் பகுதியை சேர்ந்த தாகீர்கான் என்ற போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சக காவலர்கள் மீட்டு அனந்தநாக் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் என ஜம்மு-காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஸ்ரீநகரிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அங்குள்ள ஈத்கா சாலையில் பாதுகாப்பு படையினர் சென்றபோது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பந்திப்போராவில் உள்ள சோத்னாரா சம்பல் பகுதியில் பயங்கரவாதிகள் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
    • துப்பாக்கி சூடு சம்பவத்தில் பீகார் தொழிலாளி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

    ஸ்ரீநகர்:

    பீகார் மாநிலம் மாதே பூரா பகுதியை சேர்ந்தவர் முகமது அம்ரேஸ். இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் வசித்து வந்தார். இவர் புலம் பெயர்ந்த தொழிலாளி ஆவார்.

    பந்திப்போராவில் உள்ள சோத்னாரா சம்பல் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு மீண்டும் கைவரிசை காட்டி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பீகார் தொழிலாளி முகமது அம்ரேஸ் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர்.

    • ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினார்கள்.
    • பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தற்கொலை படை பிரிவு தாக்குதலை நடத்தியது.

    ஜம்மு:

    இந்தியாவில் 75-வது சுதந்திர தினம் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளன.

    இதையொட்டி வருகிற 13, 14, 15-ந்தேதிகளில் தேசிய கொடியை வீடுகளில் ஏற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தினத்தை மிக விமரிசையாக இந்த ஆண்டு கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    75-வது ஆண்டு சுதந்திர தினம் என்பதால் நாடுமுழுவதும் 75 இடங்களில் வித்தியாசமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சுதந்திர தினத்தை இந்தியா இப்படி எழுச்சியுடன் கொண்டாடுவது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

    எனவே இந்தியாவில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர். பயங்கரவாதிகளின் நடமாட்டங்களை உறுதி செய்த மத்திய உளவுத்துறை மிக உஷாராக இருக்கும்படி மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து நாடுமுழுவதும் விமான நிலையங்கள், ராணுவ முகாம்கள் மற்றும் முக்கிய நிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் தங்களது கைவரிசையை காட்ட பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று புத்காம் பகுதியில் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். புல்வாமா சாலை சந்திப்பில் நேற்று இரவு 30 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கோழைத்தனமான தாக்குதலை நடத்தினார்கள். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தற்கொலை படை பிரிவு இந்த தாக்குதலை நடத்தியது.

    ரஜோரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ முகாமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் 2 பயங்கரவாதிகள் அந்த ராணுவ முகாம் பகுதிக்கு வந்தனர்.

    ராணுவ முகாமை தகர்க்கும் வகையில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதைதொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பயங்கரவாதிகளும் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் நோக்கில் ஆக்ரோஷமாக தாக்கினார்கள்.

    இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.

    2 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் ராணுவ முகாமுக்குள் ஊடுருவ முயன்றவர்கள் ஆவார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலை தொடர்ந்து அங்கு கூடுதல் படை அனுப்பப்பட்டுள்ளது. கார்கில் போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த முகாம் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு கூடுதலான படைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. முகேஷ்சிங் தெரிவித்தார்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக ராணுவ வீரர்களும், போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வரும் நிலையில் அதை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் லத்தீப் ராதர் மிகவும் முக்கியமானவன்.
    • பாதுகாப்பு படை வீரர்களால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான அவன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளான்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர் ஆவார்கள்.

    சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் லத்தீப் ராதர் மிகவும் முக்கியமானவன். காஷ்மீர் பண்டிட்டுகளான ராகுல் பட், அம்ரீன் பட் உள்பட பல பொதுமக்களை சுட்டுக் கொன்றவன் ஆவான். பாதுகாப்பு படை வீரர்களால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான அவன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளான்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
    • கடந்த மே 10-ந்தேதி ஹைபிரிட் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தின் 2 ஆர்.ஆர். படை பிரிவினர் இணைந்து கூட்டு வேட்டை நடத்தினார்கள். இதில் நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.

    கைதான நபர் சங்கம் புத்காம் பகுதியை சேர்ந்த ஆர்ஷித் அகமது என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து 5 கை துப்பாக்கிகள், 5 தோட்டா உறைகள், 50 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக ஷால்தெங் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பதில்லை. அவர்களை பயங்கரவாத குழுவினர் ஒன்று அல்லது 2 முறை மட்டுமே தாக்குதல் நடத்த பயன்படுத்திக்கொள்வார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டில் காஷ்மீரில் பொதுமக்கள், போலீசார், அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் என பலரை இலக்காக கொண்டு 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் இதுபோன்ற ஹைபிரிட் வகை பயங்கரவாதிகளே ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கடந்த மே மாதம் 1-ந் தேதி குல்காம் போலீசாருடன் இணைந்து காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி வேட்டையில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி யாமின் யூசப்பட் கைது செய்யப்பட்டார்.

    அவர் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட பணியமர்த்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதேபோன்று கடந்த மே 10-ந்தேதி லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதும், பயங்கரவாத குழுவினர் அவர்களை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதும் பெரும் சவாலான பணியாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • இந்திய எல்லையில் டிரோன் ஒன்று மர்மமான முறையில் பறந்து கொண்டிருந்தது.
    • டிரோனை கண்டுபிடிக்கும் முயற்சியில் எல்லை பாதுகாப்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் கனசாக் செக்டர் பகுதியில் உள்ள இந்திய எல்லையில் டிரோன் ஒன்று மர்மமான முறையில் பறந்து கொண்டிருந்தது. நேற்று இரவு 9.35 மணி அளவில் அது ஒளிர்ந்த படி பறந்ததை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் அந்த டிரோன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த டிரோன் தூள் தூளானது. அதன்பிறகு டிரோன் விளக்கு தென்பட வில்லை சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த டிரோனை கண்டுபிடிக்கும் முயற்சியில் எல்லை பாதுகாப்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டனர்.

    • தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர்.
    • பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி.

    ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில்  தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.

    இந்த என்கவுண்டரில் இர்ஷாத் அகமது பட் என்ற பயங்கரவாதியை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர், ஏகே ரக துப்பாக்கி மற்றும் குண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இர்ஷாத் அகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.

    • மோடி முதலமைச்சராக இருந்தபோது குஜராத் நிலநடுக்கம் அவருக்கு பெரிய சவாலாக இருந்தது.
    • தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று சவாலாக உள்ளது.

    ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மோடி @ 20 - ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், தெரிவித்துள்ளதாவது:

    முதலில் முதலமைச்சராக இருந்து பின்னர் பிரதமராக ஆகி உலகிலேயே 20 ஆண்டுகளை நிறைவு செய்த ஒரே இந்தியத் தலைவர் நரேந்திர மோடி மட்டுமே. கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்காமல், நேரடியாக பிரதமர் பதவியை ஏற்ற முதலமைச்சர் என்ற அரிதான சாதனையும் மோடிக்குச் சொந்தமானதாகும்.

    கடந்த 2002ல் மோடி குஜராத் முதலமைச்சராக வருவதற்கு முன், அவர் அரசிலோ அல்லது நிர்வாகத்திலோ எந்தப் பதவியையும் வகித்ததில்லை. கடந்த காலங்களில் உள்ளூர் மட்டத்திலோ அல்லது மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.

    மோடியின் ஆட்சி 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடிப்பதற்கும் அத்தியாவசியமான காரணிகள் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குஜராத்தின் முதலமைச்சராக மோடி பதவியேற்ற போது பூஜ் நகரில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கம்தான் அவருக்கு முதல் சவாலாக இருந்தது.

    பிரதமர் ஆன பிறகு அவர் எதிர்கொண்டுள்ள சமீபத்திய மிகப் பெரிய சவால் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றுநோய். புதிய சவால்களை எதிர்கொண்டு வலுவாக உள்ள ஆட்சி என்பதற்கு மோடி தலைமையிலான ஆட்சியே உதாரணமாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×