

ஜம்மு:
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயங்கரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் அவரது சகோதரர் காயமடைந்துள்ளார். உயிரிழந்த நபர் சுனில் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சகோதரர் பிந்து குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு நடிகர் அனுபம் கெர் கண்டனம் தெரிவித்தார்,
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காஷ்மீரி பண்டிட்கள் மீதான அட்டூழியங்கள் இன்றும் தொடர்வது வெட்கக் கேடானது. பயங்கரவாதிகள் தங்கள் சொந்த மக்களைக் கூட கொன்றுவிடுகிறார்கள். இந்தியாவுடன் நிற்கும் அனைவரையும் அவர்கள் கொன்று விடுகிறார்கள். இது கடந்த 30 ஆண்டுகளாக நடந்துவருகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கண்டிக்கிறீர்களோ, அவ்வளவு குறையும். இந்த தீவிரவாத மனநிலையை நாம் மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.