காஷ்மீரில் என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள துஜ்ஜன் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஜித் நசீர் என்பது தெரிய வந்தது.
காஷ்மீரில் என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீரின் பாரமுல்லா துலிபால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

அதேபோல் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள துஜ்ஜன் பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

அதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மஜித் நசீர் என்பது தெரிய வந்தது.

இவன் சில நாட்களுக்கு முன் சப்-இன்ஸ்பெக்டர் கொலையில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com