என் மலர்

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ராணுவம், காவல்துறை இணைந்து நடவடிக்கை
    X

    தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் 

    ஜம்மு காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ராணுவம், காவல்துறை இணைந்து நடவடிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
    • சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 2 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.

    குப்வாரா:

    ஐம்மு காஷ்மீரின் சண்டிகம் லோலாப் பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷோகத் அஹ்மத் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மறைவிடத்தில் இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

    இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். இதை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் ஈ தொய்பாவை சேர்ந்த இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல் குல்காம் பகுதியில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×