என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- தலைமறைவான அம்ரித்பால் சிங் அரியானாவுக்கு தப்பி சென்றதாக முதலில் தகவல் வெளியானது.
ஜம்மு:
பஞ்சாப்பில் காலிஸ்தான் தனி நாடு என்ற கோஷத்துடன் செயல்படும் 'பஞ்சாப் தி வாரிஸ்' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
கடந்த 9 நாட்களாக தேடுதல் வேட்டை நீடித்து வரும் நிலையில் அம்ரித் பால்சிங்கின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் என இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமறைவான அம்ரித்பால் சிங் அரியானாவுக்கு தப்பி சென்றதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அவர் நேபாளம் தப்பி செல்ல முயல்வதாக உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து நேபாள எல்லைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவர் டெல்லியில் துறவி வேடத்தில் சாதாரண உடையில் நடந்து செல்வது போன்ற காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன. அதன் அடிப்படையில் டெல்லியிலும் பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே அம்ரித்பால் சிங்குடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ்.புரா பகுதியை சேர்ந்த அம்ரிக்சிங், அவரது மனைவி பரம்சித்கவுர் ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இவர்கள் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளரான பப்பில்பிரீத் சிங்குடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து இருவரும் கைது செய்யப் பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான தம்பதியினரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே அம்ரித்பால் சிங்குடன் பல வீடியோக்களில் காணப்பட்ட தல்விந்தர்சிங் மற்றும் வீரேந்தர்சிங் ஆகிய 2 மெய்க்காப்பாளர்களின் ஆயுத உரிமங்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள கித்துவார் மற்றும் ராம்பன் மாவட்டங்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த இரண்டு உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்து குழந்தையை வரவேற்றுள்ளார்.
- மார்க் தனது குழந்தையைப் பார்த்து புன்னகைக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மெடா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தனது 3வது பெண் குழந்தையை வரவேற்றுள்ளார். மார்க் சுக்கர்பர்க் கடந்த 2012ம் ஆண்டு பிரிசில்லா சான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், மார்க் ஜூக்கர்பர்க் தம்பதிக்கு சமீபத்தில் மூன்றாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை மார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்து குழந்தையை வரவேற்றுள்ளார்.

அந்த பதிவில், "உலகிற்கு வருக அரேலியா சான் ஜூக்கர்பெர்க்! நீ எங்களின் சிறிய ஆசீர்வாதம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மார்க் தனது பிறந்த குழந்தையைப் பார்த்து புன்னகைக்கும் புகைப்படமும், பிரிசில்லா சான் குழந்தையை தன் மீது வைத்திருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.
- பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டாக அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனை அடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே அந்த பகுதியில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வீரர்கள் கொண்டு வந்து உள்ளதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பர்சூ பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து.
- 23 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பர்சூ பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் பீகாரைச் சேர்ந்த 4 பயணிகள் உயிரிழந்தனர். 28 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் 23 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசரணை நடத்தி வருகின்றனர்.
- மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்த்து தன்வீர் வீட்டில் அனைவரும் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டனர்.
- தன்வீரின் சகோதரி, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டம் சோய்பக் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் கடந்த 7-ந்தேதி திடீரென்று மாயமானார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரர் தன் வீர் அகமதுகான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் தனது சகோதரி பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த பெண்ணுடன் கடைசியாக யாரெல்லாம் பேசியுள்ளனர் என்ற தகவலை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஷபீர்அகமது வானி என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் கடைசியாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து ஷபீரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் அந்த இளம்பெண்ணை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் புதைத்ததாக திடுக்கிடும் தகவலை கூறினார். இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வரு று:-
ஷபீர் திருமண வரன்களை அமைத்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். அப்போது தன்வீர் அகமது குடும்பத்துக்கு அறிமுகமாகி உள்ளார். தன்வீர் தனது சகோதரியின் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று ஷபீரிடம் தெரிவித்தார். ஷபீர் ஓரிரு நாட்களில் ஒரு வரனின் புகைப்படத்தை தன்வீரிடம் கொடுத்து இந்த மாப்பிள்ளை உங்கள் தங்கைக்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறினார்.
அந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்த்து தன்வீர் வீட்டில் அனைவரும் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டனர். ஆனால் தன்வீரின் சகோதரி, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.
இதையடுத்து திருமணம் தள்ளிப்போனது. இந்த நிலையில் ஷபீருக்கும், தன்வீரின் சகோதரிக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி வெளியில் செல்வது, ஊரை சுற்றிப்பார்ப்பது என்று இருந்துள்ளனர்.
ஷபீர் ஒரு கட்டத்தில் தன்வீரின் சகோதரியை காதலிக்க தொடங்கினார். சில மாதங்களாக அவர்கள் ஒன்றாக பழகி வந்த நிலையில் கடந்த மாதம் ஷபீர் தனது காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.
திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். ஆனால் அவரது காதலை தன்வீரின் சகோதரி ஏற்காததுடன் திருமணத்துக்கும் மறுத்துள்ளார். அதன்பிறகு ஷபீருடன் பழகுவதை அந்த பெண் நிறுத்தினார்.
இதை ஷபீர் எதிர்பார்க்கவில்லை. தன்னிடம் பேசுமாறு அந்த பெண்ணிடம் கெஞ்சினார். ஆனாலும் அந்த பெண் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார்.
கடந்த 7-ந்தேதி அந்த பெண்ணின் செல்போனுக்கு போன் செய்த ஷபீர் தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுதான் கடைசி முறை இதன்பிறகு தொந்தரவு செய்ய மாட்டேன் என்று ஷபீர் கெஞ்சியுள்ளார். இதையடுத்து அந்த பெண் ஷபீரை சந்திக்க ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஷபீரின் வீட்டுக்கு அவர் சென்றார். அப்போது ஷபீர் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் திருமணத்துக்கு மறுத்தார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷபீர் கத்தியால் அந்த பெண்ணின் வயிற்றில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இதையடுத்து ஷபீர், அந்த பெண்ணின் உடலை 35 துண்டுகளாக வெட்டினார். பின்னர் அதை ஓம்புரா பகுதியில் பல்வேறு இடங்களில் புதைத்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஷபீரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் புதைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாகங்களை மீட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- காஷ்மீரில் ஸ்ரீநகர்-லே இடையே 434 கி.மீட்டர் தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலையை மூடியுள்ளனர்.
- இந்திய விமான படை மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
காஷ்மீரில் ஸ்ரீநகர்-லே இடையே 434 கி.மீட்டர் தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலையை மூடியுள்ளனர். பனிச்சரிவு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக இந்த சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அந்த நெடுஞ்சாலையில் சிக்கி தவிக்க நேரிட்டது. இதையடுத்து இந்திய விமான படை மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 438 பேர் விமானப்படை விமானங்கள் மூலம் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.
ஸ்ரீநகர் பகுதியில் 260 பேர் மீட்கப்பட்டு லே பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
- செனாப் பள்ளத்தாக்கு மண்டலத்தில் ஏற்றப்படும் 2-வது உயரமான தேசியக்கொடி இதுவாகும்.
- ராணுவத்தில் சிறந்த பங்களிப்பு செய்த வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
டோடா :
இந்திய ராணுவம் நேற்று ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றியது. பட்டொளி வீசி பறந்த தேசிய கொடிக்கு ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
ராணுவத்தின் டெல்டா படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜய் குமார், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் 9-வது பிரிவு தளபதியுடன், தோடா விளையாட்டு அரங்கில் இந்த உயரமான தேசிய கொடியை ஏற்றினார்.
"நாட்டிற்காக இன்னுயிரை தியாகம் செய்த எண்ணற்ற ராணுவ வீரர்களுக்கு செலுத்தும் உரிய அஞ்சலியாக இது அமைந்துள்ளது. பள்ளத்தாக்குப் பகுதியில் பறக்கும் உயர்ந்த தேசியக்கொடி தொலைதூரத்தில் இருந்து பார்க்கும்போதும் தேசபக்தியை நெஞ்சில் விதைக்கும்" என்று அவர் கூறினார்.
செனாப் பள்ளத்தாக்கு மண்டலத்தில் ஏற்றப்படும் 2-வது உயரமான தேசியக்கொடி இதுவாகும். இதற்கு முன்னர் அருகிலுள்ள பகுதியான கிஸ்ட்வார் நகரத்தில் 100 அடி உயர தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அந்த பகுதியில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமிருந்தது ஒடுக்கப்பட்டு, அங்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் தேசத்திற்காக உயிர்நீத்த ராணுவவீரர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கவுரவிக்கப்பட்டனர். ராணுவத்தில் சிறந்த பங்களிப்பு செய்த வீரர்களும் கவுரவிக்கப்பட்டனர். உயிரிழந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகள் மற்றும் மாணவ மாணவிகள், உள்ளூர் மக்கள் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு பயன்பாட்டிற்கு அதிவிரைவு இணைய சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பெருநகரங்களில் 5-ஜி சேவையை ஜியோ, ஏர்டெல் அகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.
இன்றைய நவீன உலகில் இணையத்தின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. உலகத்தையே நமது உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை வழங்கும் 5 ஜி சேவையை இந்தியாவில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். பல்வேறு பெருநகரங்களில் 5-ஜி சேவையை ஜியோ, ஏர்டெல் அகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஜம்மு- காஷ்மீரில் ஜியோ 5ஜி சேவையை துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கவர்னர் மாளிகையில் துவக்கி வைத்தார்.
இதன் ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு பயன்பாட்டிற்கு அதிவிரைவு இணைய சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த சில தினங்களாக ராகுல் காந்தி அங்கு பனி சறுக்குகளில் விளையாடி பொழுதை போக்கினார்.
- ராகுல் காந்தி பனி சறுக்கு கண்ணாடி அணிந்து இருந்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டார். அவர் தனிப்பட்ட முறையில் காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்றுள்ளார். கடந்த சில தினங்களாக ராகுல் காந்தி அங்கு பனி சறுக்குகளில் விளையாடி பொழுதை போக்கினார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி குல்மார்க்கில் தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்காவுடன் இணைந்து பனி சறுக்கு வாகனத்தில் சவாரி செய்தார். இருவரும் பனி சறுக்கில் சவாரி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இருவரும் மாறி, மாறி வாகனத்தை ஓட்டுகிறார்கள். ராகுல் காந்தி பனி சறுக்கு கண்ணாடி அணிந்து இருந்தார்.
- நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 13 குடும்பத்தினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
- நிலச்சரிவால் 10-க்கும் மேற்பட்ட சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 13 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. ராம்பன்-சங்கல்தான் கூல் சாலையில் உள்ள துக்கர் தல்வாவில் சுமார் 1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 13 குடும்பத்தினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ராணுவத்தினர் உணவு வழங்கினார்கள். மேலும் போர்வை, பாத்திரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.
நிலச்சரிவால் 10-க்கும் மேற்பட்ட சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் வழித்தடம், குடிநீர் குழாயும் சேதம் அடைந்துள்ளது.
- காஷ்மீர் மக்களின் வேதனையை நான் உணர்ந்துள்ளேன்.
- காஷ்மீர் நிர்வாகம், மக்களை அலைக்கழித்து வருகிறது.
குல்மார்க் :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனிப்பட்ட முறையிலான பயணமாக காஷ்மீரில் உள்ள குல்மார்க் சென்றுள்ளார். நேற்று அங்கு காஷ்மீர் யூனியன் பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-
காஷ்மீர் மாநிலம், மக்களின் விருப்பத்துக்கு மாறாக, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தேர்தல் நடத்தாததால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. அந்தவகையில், காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டது.
தனது தவறான கொள்கைகளையும், முழு தோல்வியையும் மறைக்க மத்திய அரசு இப்படி செய்து வருகிறது. அனைத்து முனைகளிலும் மக்களை கைவிட்டுவிட்டது. காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
தற்போது, ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் காஷ்மீர் நிர்வாகம், மக்களை அலைக்கழித்து வருகிறது. வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப ஆக்கிமிரப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை பின்பற்றுவதால், இளைஞர்கள் ஏராளமானோர் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். காங்கிரசில் சேர விரும்புவோருக்கு எப்போதும் கதவை திறந்து வைக்க வேண்டும். மக்கள் நலனுக்காக பாடுபட அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
காஷ்மீர் மக்களின் வேதனையை நான் உணர்ந்துள்ளேன். அதனால் அடிக்கடி இங்கு வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் பேசினார். கீழ்மட்டத்தில் கட்சியை வலுப்படுத்த பாடுபடுமாறு கேட்டுக்கொண்டார்.
- ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.






