என் மலர்tooltip icon

    அரியானா

    • 9 ஆண்டுகளில் இந்தியாவை பாதுகாப்பான நாடாக பிரதமர் மோடி மாற்றி விட்டார்.
    • எதிர்க்கட்சிகளால் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் குறிப்பிட முடியவில்லை.

    சிர்சா :

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பா.ஜனதா சார்பில் அரியானாவில் சாதனை விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கலந்து கொண்டார்.

    அரியானாவின் சிர்சாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கி பேசினார்.

    அத்துடன் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    9 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.12 லட்சம் கோடி அளவிலான ஊழல்களை செய்ததை நினைத்துப்பாருங்கள்.

    ஆனால் இந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி வருகிறது. எதிர்க்கட்சிகளால் கூட எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் குறிப்பிட முடியவில்லை.

    காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடுமையாக எதிர்த்தபோதும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ மோடி அரசு உறுதியாக நீக்கியது.

    9 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து நமது வீரர்களின் தலையை துண்டித்து செல்வார்கள். அப்போது மன்மோகன் சிங் மற்றும் சோனியா அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தது.

    ஆனால் மோடி தலைமையிலான அரசு உரி, புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது. 9 ஆண்டுகளில் இந்தியாவை பாதுகாப்பான நாடாக பிரதமர் மோடி மாற்றி விட்டார்.

    அரியானாவில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசு, 3டி அரசாக இருந்தது. அதாவது தர்பாரிகள் (மன்றத்தினர்), தாமத் (மருமகன்) மற்றும் டீலர்களுக்கான அரசாக இருந்தது.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    முன்னதாக பஞ்சாப்பை ஒட்டியுள்ள குர்தாஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

    • அரியானா மாநிலத்தில் பா.ஜ.க.வின் முதல் மந்திரியாக மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார்.
    • விவசாயிகள் கோரிக்கை அரியானா அரசு ஏற்றதால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. முதல் மந்திரியாக பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டார் உள்ளார். அந்த மாநிலத்தில் சூரியகாந்தி மலர் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரசாங்கம் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசாங்கம் இதற்கு மறுத்து வருகிறது.

    குறைந்தபட்ச ஆதார விலையில் சூரியகாந்தி விதைகளை வாங்க மறுக்கும் அரியானா அரசின் முடிவை கண்டித்து, குருக்ஷேத்திரத்தில் டெல்லி-அம்ரித்சர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கலைந்து செல்ல வைப்பதற்கு காவல்துறை தடியடியும், தண்ணீர் பீரங்கியும் பயன்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விவசாயிகள் மற்ற பல மாவட்டங்களில் சாலைகளை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தைக் கண்டிக்கும் விதமாக சோனிபட், கோஹனா மற்றும் ரோஹ்டக் நகரங்களிலும் பல விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், விவசாயிகள் கோரிக்கை அரியானா அரசு ஏற்றது. இதையடுத்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நிறைவு செய்தனர். அரசு கோரிக்கையை ஏற்றதால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

    • அரியானா மாநிலத்தில் பா.ஜ.க.வின் முதல் மந்திரியாக மனோகர் லால் கட்டார் இருந்து வருகிறார்.
    • கட்டார் அரசாங்கம் ஒரு தடியடியை நம்பும் அரசாங்கமாக மாறிவிட்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. அரசாங்கம் நடந்து வருகிறது. முதல்வராக பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டர் உள்ளார். அம்மாநிலத்தில் சூரியகாந்தி மலர் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரசாங்கம் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசாங்கம் இதற்கு மறுத்து வருகிறது.

    குறைந்தபட்ச ஆதார விலையில் சூரியகாந்தி விதைகளை வாங்க மறுக்கும் அரியானா அரசின் முடிவை கண்டித்து, குருக்ஷேத்திரத்தில் டெல்லி-அம்ரித்சர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கலைந்து செல்ல வைப்பதற்கு காவல்துறை தடியடியும், தண்ணீர் பீரங்கியும் பயன்படுத்தியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விவசாயிகள் மற்ற பல மாவட்டங்களில் சாலைகளை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசாங்கம் விதைகளை வாங்க மறுப்பதால் தங்கள் விளைச்சல்களை குவிண்டாலுக்கு அரசாங்க விலையான ரூ. 6,400க்கு பதிலாக, தனியார்களிடம் குவிண்டாலுக்கு ரூ. 4,000த்திற்கு குறைத்து விற்க வேண்டியுள்ளதாக போராடும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அவர்கள் அரசாங்கத்திடம் பல முறை கோரிக்கைகள் வைத்தும் அது நிராகரிக்கப்பட்டதால், அவர்களின் சாலை மறியலும், அதனை தொடர்ந்து தடியடி மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்ட காட்சிகளும் நடந்தேறின.

    அரசாங்கத்தைக் கண்டிக்கும் விதமாக சோனிபட், கோஹனா மற்றும் ரோஹ்டக் நகரங்களிலும் பல விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சோனிபட் பகுதியில் சர்தானா கிராமத்தின் அருகே கானௌர்-புக்தலா சாலையை விவசாயிகள் மறித்து போராடினர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், கட்டார் அரசாங்கம் ஒரு தடியடியை நம்பும் அரசாங்கமாக மாறிவிட்டது. விவசாயிகள் மேல் நடத்தப்பட்ட இந்த தடியடி பா.ஜ.க. - ஜ.ஜ.க. (ஜனநாயக ஜனதா கட்சி) கூட்டணி அரசின் மேல் அடிக்கப்பட்ட ஆணியாகும். குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 6,400 என்றிருக்கும் நிலையில் ரூ. 4000-4500 என விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளபட்டிருக்கிறார்கள். இதற்கு நீதி கேட்டு போராடினால், அவர்களுக்கு தடியடி பதிலாக கிடைக்கிறது. இந்த அடக்குமுறை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. குருக்ஷேத்திரத்தில் உள்ள ஷாஹாபாத்தில் ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட தடியடி பிரயோகம், விவசாயிகளின் மீது கட்டார் அரசாங்கத்திற்கு உள்ள வெறுப்பையே காட்டுகிறது என தெரிவித்தார்.

    • விபத்தில் 4 எருமை மாடுகளும் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரியானா மாநிலம், டெல்லி- மும்பை- விரைவுச்சாலையில் உள்ள இப்ராஹிம் பாஸ் கிராம பகுதியில் நேற்று 20-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த விபத்தில் 4 எருமை மாடுகளும் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஐந்து பேருடன் பயணித்த லாரியின் டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நசீர் (27) மற்றும் இம்ரான் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    படுகாயமடைந்த மற்ற மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலியானவர்கள் ஜெய்பால், நரேந்திரன் மற்றும் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    • விஷ வாயு தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள சஹர்வா கிராமத்தில் கிணற்றை சுத்தம் செய்தபோது நச்சு வாயுவை சுவாசித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், கிணற்றுக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டனர். பலியானவர்கள் ஜெய்பால், நரேந்திரன் மற்றும் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கிணற்றை சுத்தம் செய்ய 4 தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் முதலில் ஜெய்பாலும், நரேந்திரனும் கிணற்றின் உள்ளே இறங்கியுள்ளனர். இவர்கள் கிணற்றுக்குள் ஏற்பட்ட நச்சு வாயுவை சுவாசித்து சுயநினைவை இழந்துள்ளனர். பின்னர், சுரேஷூம், விக்ரமும் உள்ளே இறங்கினர். இதில் சுரேஷூம் விஷ வாயுவை சுவாசித்து மயங்கினார். இதனால், விக்ரம் உடனடியாக கிணற்றில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் அசாம் அரசு அறிவித்தது.
    • குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடற்தகுதி மிகவும் முக்கியமானது.

    அசாம் மாநிலத்தில் போலீசார் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா கடந்த வாரம் உத்தரவிட்டார்.

    அடுத்து வரும் 3 மாதங்களுக்குள் உடல் எடையை குறைக்க முடியாத போலீசாருக்கு விருப்ப ஓய்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்படும் என்றும் அசாம் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்நிலையில், அசாம் மாநிலத்தை தொடர்ந்து அரியானாவிலும் உடல் எடை அதிகம் கொண்ட போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    உடல் எடை அதிகம் கொண்ட போலீசார் களப் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வரும் வரை காவலில் நிற்க வைக்கும் பணிக்கு மாற்றப்படுவார்கள் எனவும் அரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.

    குற்றங்களைத் தடுக்க காவல் துறையினரின் உடற்தகுதி மிகவும் முக்கியமானதாக குறிப்பிட்டிருக்கும் உள்துறை அமைச்சர் அனில் விஜ், இதன்மூலம் குற்றமல்லதா மாநிலமாக மாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

    உடல் பருமனை கட்டுக்குள் கொண்டு வராத காவல்துறையினர் 3 மாதங்களில் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அசாம் அரசு அறிவித்திருந்த நிலையில் அரியானா அரசும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நடைமுறை ஜூன் 12ல் அமலுக்கு வருகிறது.
    • ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் பீர், ஒயின் மற்றும் குடிப்பதற்கு தயாராக உள்ள பானங்களை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சலுகைகளும் அறிமுகப்படுத்துகிறது.

    நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்நடைமுறை ஜூன் 12ல் அமலுக்கு வருகிறது.

    இந்த சலுகையை பெற அலுவலகத்தில் குறைந்தது 5 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் ஒரு வாளகத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவை வைத்திருக்க வேண்டும் என்றும் அது சுயமானதாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டதாகவோ இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாரதியஜனதா மூத்த தலைவராகவும் விளங்கி வந்தார்.
    • முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரியா நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அரியானா மாநிலம் அம்பாலா பாராளுமன்ற தொகுதி பாரதியஜனதா எம்.பி ரத்தன்லால் கட்டாரியா உடல்நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. ரத்தன் லால் கட்டாரியா 3 முறை எம்.பியாக பதவி வகித்தவர்.

    பாரதியஜனதா மூத்த தலைவராகவும் விளங்கி வந்தார். அவரது உடலுக்கு அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரியா நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். ரத்தன்லால் கட்டாரியா உடலுக்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது இறுதி சடங்கு இன்று பிற்பகல் நடக்கிறது.

    • சிறுமியை கடந்த ஏப்ரல் 18ம் தேதி அன்று குருகிராமில் இருந்து சந்தீப் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர் கடத்திச் சென்றுள்ளனர்.
    • இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

    சிறுமியை கடந்த ஏப்ரல் 18ம் தேதி அன்று குருகிராமில் இருந்து சந்தீப் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர் கடத்திச் சென்றுள்ளனர்.

    பின்னர், சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சிறுமி அளித்து வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இருவர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (கற்பழிப்பு), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டம் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • அரோகா- அடம்பூர் சாலையில் கிஷன்கர் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியானா மாநிலம் ஹிசர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 7 இளைஞர்கள் காரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அரோகா- அடம்பூர் சாலையில் கிஷன்கர் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் காரில் இருந்த சாஹர் (வயது 23), சோபித் (22), அரவிந்த் (24), அபினவ் (22), தீபக் (23) உள்பட 6 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த புனேஷ் என்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், அதிவேகமாக வந்ததே கார் விபத்திற்குள்ளானதற்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவரை விவாகரத்து செய்வதன் மூலம் பெரிய அளவில் இழப்பீடு தொகை கிடைக்காது என்றும், குழந்தையின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் உறவினர்கள் முதல் மனைவிக்கு அறிவுரை கூறினார்கள்.
    • மனைவிகள் இருவரையும் தனித்தனியாக வீடு எடுத்து குடித்தனம் வைக்க என்ஜினீயர் முடிவு செய்தார்.

    அரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த சீமா என்ற பெண்ணை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்கள் குருகிராமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பின் போது சீமா, தனது குழந்தையை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றார். என்ஜினீயர் மட்டும் குருகிராமில் இருந்தார். அதன்பிறகு சீமா திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் சீமாவின் கணவருக்கும், அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.

    இதையடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் என்ஜினீயர், தனது அலுவலகத்தில் வேலை பார்த்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே கணவருக்கு 2-வது திருமணம் நடந்த விஷயம் சீமாவுக்கு தெரியவந்தது. அவர் கணவரை சந்தித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் சேர்ந்து வாழ மறுத்து வக்கீல் மூலம் விவாகரத்து நோட்டீசு அனுப்பினார். அதன்பிறகு சீமாவுக்கும் அவரது கணவருக்கும் சமரச பேச்சு வார்த்தைகள் நடந்தன.

    கணவரை விவாகரத்து செய்வதன் மூலம் பெரிய அளவில் இழப்பீடு தொகை கிடைக்காது என்றும், குழந்தையின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் உறவினர்கள் அவருக்கு அறிவுரை கூறினார்கள்.

    மேலும் என்ஜினீயரின் 2-வது மனைவி மூலம் சீமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சீமா விவாகரத்து முடிவை கைவிட்டார். இதையடுத்து மனைவிகள் இருவரையும் தனித்தனியாக வீடு எடுத்து குடித்தனம் வைக்க என்ஜினீயர் முடிவு செய்தார். அதற்கு இருவரும் ஒத்துக் கொண்டனர்.

    அதன்பிறகு முதல் மனைவியின் வீட்டில் வாரத்தில் 3 நாட்களும், 2-வது மனைவியின் வீட்டில் 3 நாட்களும் தங்குவதற்கு என்ஜினீயர் முடிவு செய்தார். ஒரே ஒரு நாள் மட்டும் அவருக்கு விடுதலை. அன்று அவரது விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் மூலம் 2 மனைவிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.

    • அரியானாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 923 பெண்கள் உள்ளனர்.
    • சர்வதேச மகளிர் தினத்தை 'மகிளா சம்மன் திவாஸ்' ஆக கொண்டாட வேண்டும் .

    அரியானா மாநிலம் கர்னாலில் மாநில அளவிலான 'சம்மான் சமரோ' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், கல்வி, கலாச்சாரம், பாதுகாப்பு, பாடல், மருத்துவம், சமூக நலம், விளையாட்டு, விமானப் போக்குவரத்து மற்றும் மலையேற்றம் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த பெண்களை கவுரவித்தார்.

    சில பெண்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது, இந்திரா காந்தி மகிளா சக்தி விருது மற்றும் கல்பனா சாவ்லா சௌர்ய புரஸ்கார் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    மேலும், பாலின விகிதத்தை மேம்படுத்தியதற்காக ஃபதேஹாபாத், அம்பாலா மற்றும் ஜிந்த் ஆகிய மாவட்ட துணை ஆணையர்களுக்கும் அவர் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மனோகர் லால் கட்டார், ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலைக்கு பெயர் போன அரியானா, இப்போது ஒவ்வொரு பெண் குழந்தை பிறப்பையும் கொண்டாடி வருவதாகவும், இன்று மாநிலத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 923 பெண் குழந்தைகள் இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    அரியானாவில் பாலின விகிதத்தை மேம்படுத்த மாநில அரசு, சமூக அமைப்புகள், காப் பஞ்சாயத்துகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சுகாதாரத் துறைகள் அயராத முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மேலும், பெண் சிசுக்கொலையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    இந்த அர்ப்பணிப்பு முயற்சியால்தான் இன்று அரியானாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 923 பெண்கள் உள்ளனர். 2014ல், 1,000 ஆண் குழந்தைகளுக்கு 871 பெண்கள் இருந்தனர்.

    ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலைக்கு பெயர் போன அரியானா, இப்போது ஒவ்வொரு பெண் குழந்தை பிறப்பையும் கொண்டாடுகிறது.

    கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி பானிபட்டில் தொடங்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் 'பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' பிரச்சாரத்தால் இவை அனைத்தும் சாத்தியமானது.

    2014ல் 6 சதவீதமாக இருந்த காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்று 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இதை 15 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வெற்றிகரமான ஆணின் பின்னும் ஒரு பெண் இருப்பதாக கூறுவார்கள். எனது வெற்றியில் என் அம்மாவின் பங்கு பெரியது.

    நான் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்று மேற் கல்வி படிக்க விரும்பியபோது அதை எனது தந்தை ஆதரிக்கவில்லை. ஆனால் என் தாய் தனது கல்லூரி சேர்க்கைக்கு ரூ.300 கொடுத்தார்.

    எனது வெற்றியை எனது தாயாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் எனக்கு மேற்படிப்புக்கான பணத்தை வழங்கவில்லை என்றால் நான் இந்த நிலையை எட்டாமல் இருந்திருக்கலாம்.

    சர்வதேச மகளிர் தினத்தை 'மகிளா சம்மன் திவாஸ்' ஆக கொண்டாட வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×