search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானாவில் யமுனை ஆற்றின் அருகே வசித்த 90 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
    X

    அரியானாவில் யமுனை ஆற்றின் அருகே வசித்த 90 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

    • யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ளதால் மக்கள் மீட்பு.
    • கிராம பகுதிக்கு சென்று மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற உத்தரவிட்டனர்.

    டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. யமுனை ஆற்றின் நீர் வெளியேறி சாலைகளுக்கு வரும் புகைப்படங்களும் வெளியேறி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல், அரியானா மாநிலம் பரீதாபாத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அபாயத்தைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் வசிக்கும் குறைந்தது 90 பேரை காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெளியேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அமிபூர் கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் அங்குள்ள பண்ணைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ளதால், இந்த மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வருவதற்காக, பரிதாபாத் காவல்துறையுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மீட்புப் பணியில் ஈடுபட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுபே சிங் கூறினார்.

    மேலும், பரிதாபாத் துணை கமிஷனர் விக்ரம் சிங் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் (மத்திய) பூஜா வசிஷ்ட், மாவட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து, கிராம பகுதிக்கு சென்று மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற உத்தரவிட்டனர்.

    Next Story
    ×