என் மலர்tooltip icon

    பீகார்

    • பாட்னாவில் வாக்குச்சாவடி மற்றும் பிற ஏற்பாடுகளை டிஎஸ்பி அனு குமாரி ஆய்வு செய்தார்.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. காலை 11 மணி நிலவரப்படி 27.7 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மதியம் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கை பதிவு செய்தார். பீகார் சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவ் பாட்னா சாஹிப் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    பாட்னாவில் வாக்குச்சாவடி மற்றும் பிற ஏற்பாடுகளை டிஎஸ்பி அனு குமாரி ஆய்வு செய்தார்.

    பீகாரில் நடைபெற்று வரும் முதல்கட்ட வாக்குப்பதிவை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கண்காணித்து வருகிறார். ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு மந்தமாக நடப்பது போல தேர்தல் ஆணையம் வேண்டும் என்று வாக்குப்பதிவு எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம்சாட்டி உள்ளது.

    எதிர்க்கட்சி கூட்டணிகள் வலுவுடன் இருக்கும் பகுதிகளில் எல்லாம் வேண்டுமென்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    மின்வெட்டு குறித்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. அது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று கூறி உள்ளது.

    • 18 முதல் 19 வயதுடைய முதல் முறை வாக்காளர் எண்ணிக்கை 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் ஆகும்.
    • மொத்தம் 45,341 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த 121 தொகுதிகளிலும் 1374 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    மொத்தம் 119 கட்சிகள் 851 வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர். 463 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர். பெண் வேட்பாளர்கள் 122 பேரும் களத்தில் உள்ளனர்.

    இவர்களின் வெற்றி-தோல்வியை 3.75 கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1.98 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 1.76 கோடி பேர்.

    இவர்களில் 10.72 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவர். 18 முதல் 19 வயதுடைய முதல் முறை வாக்காளர் எண்ணிக்கை 7 லட்சத்து 38 ஆயிரம் பேர் ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 45,341 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், 121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 27.7 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 

    • முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
    • வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், 121 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    மாநிலத்தில் அதிகபட்சமாக சஹர்சா மாவட்டத்தில் 15.27 சதவீதம் வாக்குப்பதிவும், லக்கிசராய் மாவட்டத்தில் 7 சதவீத மந்தமான வாக்குப்பதிவும் பதிவாகி உள்ளது. 

    • ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி வாக்களித்தனர்.
    • அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருடன் சென்று வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, மகாபந்தன் (இந்தியா கூட்டணி) முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    பாட்னாவில் வாக்களித்த பின்னர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும். வளர்ச்சிக்கு வாக்களிக்க வேண்டும். வேலைவாய்ப்புகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

    பீகார் மக்கள் தங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வி, நல்ல சுகாதார பராமரிப்புக்காக வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். பீகார் வெற்றி பெறப் போகிறது. நவம்பர் 14-ந் தேதி புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று கூறினார்.

    • இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.
    • இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

    பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது.

    இன்று மற்றும் 11-ந்தேதி பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்படுகிறது. 



    • பீகாரில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
    • கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையடுத்து, தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.

    பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி பாட்னாவில் மெகா ரோடுஷோ நடத்தினார். தலைவர்கள் முற்றுகையால் பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது.

    இந்நிலையில், பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பலத்த பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளன.

    • நாளை முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி நாளை முதல் கட்டமாக 121 தொகுதிகளில் நடைபெற உள்ள வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக 122 தொகுதிகளுக்கு 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், பிர்பெயின்தி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான லலன் குமார் இன்று அக்கட்சியில் இருந்து திடீரென விலகி லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் இணைந்தார்.

    அவர் கட்சியில் இருந்து விலகியது பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்திருந்த அவர், ஆர்.ஜே.டி.யில் இணைந்துள்ளார். அவர் பீகார் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல் மந்திரி ராப்ரி தேவி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

    • வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
    • அவர் எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியலமைப்பு அமைப்புகளை டார்கெட் செய்கிறார்.

    பீகார் மாநில தேர்தலுக்கான பிரசாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    வாக்குகளுக்காக பிரதமர் மோடி நடனம் கூடி ஆடுவார். வாக்காளர்கள் கேட்டுக்கொண்டால் யோகா கூட செய்வார் என விமர்சனம் செய்திருந்தார். மேலும், மீனவர்களுடன் குளத்தில் குதித்து நீச்சல் அடித்ததுடன், மீன் பிடித்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் செய்துள்ளார். "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குளத்தில் குதிப்பதைவிட வேறு வழியில்லை. வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார். அவர் எந்த அடிப்படையும் இல்லாமல் அரசியலமைப்பு அமைப்புகளை குறிவைக்கிறார்" என்றார்.

    மேலும், "ராகுல் காந்திக்கு என்ன நிகழ்ந்தது. அவர் பாதுகாப்புப்படையில் இடஒதுக்கீடு பிரச்சினையை எழுப்புகிறார். பாதுகாப்புப்படைகளில் இடஒதுக்கீடு கோரிக்கை வைத்து நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்" என்றார்.

    • மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14 அன்று ரூ.30,000 ஒரே தவணையாக வழங்கப்படும்.
    • முன்னதாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட வாக்குறுதிகளையும் தேஜஸ்வி அறிவித்திருந்தார்.

    பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பினரும் கண்கவர் திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் பேசுகையில், 'மை பஹின் மான் யோஜனா' என்ற திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14 அன்று ரூ.30,000 ஒரே தவணையாக வழங்கப்படும்.

    விவசாயிகளுக்கு நெல்லுக்கு குவிண்டாலுக்கு 300 ரூபாயும், கோதுமைக்கு 400 ரூபாயும் போனஸ் தொகையாக வழங்கப்படும். பாசனத்துக்காக இலவச மின்சாரம் வழங்கப்படும்.

    விவசாயிகளுக்குஅனைத்து முதன்மை விவசாய கடன் சங்கங்கள், முதன்மை சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களுக்கும் மாநிலத்தில் மக்கள் பிரதிநிதிகள் அந்தஸ்து வழங்கப்படும்.

    ஆசிரியர்கள், காவல்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலிருந்து 70 கி.மீ.க்குள் இடமாற்றங்கள் செய்யப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்" என்று வாக்குறுதி அளித்தார்.

    முன்னதாக வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட வாக்குறுதிகளையும் தேஜஸ்வி அறிவித்திருந்தார்.

    இதற்கிடையே ஆளும் என்டிஏ கூட்டணி 'முக்கியமந்திரி மகிளா ரோஸ்கர் யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் கணக்குகளில் ஏற்கனவே ரூ.10,000 டெபாசிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குவதற்கு அடியமாக்க மோடி விரும்புகிறார்.
    • கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் தனது அரசை கேள்வி கேட்க கூடாது என்று விரும்புகிறார்.

    கல்வி, வேலைவாய்ப்பு பிரச்சினை குறித்து கேள்வி கேட்காமல் இருக்க இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அடிமையாக வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    பீகார் தேர்தலை முன்னிட்டு அவுரங்காபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் சமூக ஊடகங்களில் போதை பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார்.

    உங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குவதற்கு அடியமாக்க மோடி விரும்புகிறார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் தனது அரசை கேள்வி கேட்க கூடாது என்பதற்காக மோடி இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்க விருப்புகிறார்.

    நிதிஷ் குமாரும் நரேந்திர மோடியும் இந்த மாநில இளைஞர்களை வேலையின்மையில் தள்ளியுள்ளனர். மீண்டும் மீண்டும் வினாத்தாள் கசிவுகள், தகுதியான ஏழை மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்கின்றன" என்று தெரிவித்தார். 

    • இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களை எடுத்துப் பாருங்கள்.
    • அதில் நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள்தான் இருப்பார்கள் என்றார்.

    பாட்னா:

    பீகார் சட்டசபை தேர்தலுக்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று குடும்பா என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டில் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால் (உயர்ஜாதியினர்) ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னிப்பாக கவனித்து பார்த்தால் இது தெரியும்.

    நம் நாட்டில் தலித், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் என்று பார்த்தால் 90 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் வருகின்றனர்.

    இந்தியாவில் உள்ள 500 பெரிய நிறுவனங்களை எடுத்துப் பாருங்கள். அதில் பிற்படுத்தப்பட்டோர் அல்லது தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.

    நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள் (உயர் ஜாதியினர்)தான் இருப்பார்கள். அனைத்துப் பணிகளும் அவர்களுக்கு தான் செல்கிறது. அவர்கள்தான் ஆயுதப்படையை கட்டுப்படுத்துகின்றனர். உங்களால் மற்ற 90 சதவீத மக்கள் எங்கு உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியாது.

    நாட்டின் 90 சதவீத மக்கள் தொகைக்கு உரிய இடமளிக்க வேண்டும். அவர்கள் கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம்.

    காங்கிரஸ் எப்போதும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டுள்ளது. இனியும் அதனை செய்வோம் என தெரிவித்தார்.

    ராகுல் காந்தியின் இந்தக் கருத்தை பா.ஜ.க.வினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். ராகுல் காந்தி உயர்ஜாதியினரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    • பீகாரில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
    • இதையடுத்து தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இரண்டாவது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையடுத்து, தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.

    பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி பாட்னாவில் மெகா ரோடுஷோ நடத்தினார். தலைவர்கள் முற்றுகையால் பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது.

    இந்நிலையில், பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

    நாளை மறுதினம் அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    ×