என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் சட்டமன்றத் தேர்தல்: ஓய்ந்தது இறுதிக்கட்ட பிரசாரம் !
    X

    பீகார் சட்டமன்றத் தேர்தல்: ஓய்ந்தது இறுதிக்கட்ட பிரசாரம் !

    • 2 கட்டங்களில் மாநிலம் முழுவதும் 200 பேரணிகளில் உரையாற்றி தேஜஸ்வி முதலிடத்தில் உள்ளார்.
    • பிரதமர் நரேந்திர மோடி 16 தேர்தல் பேரணிகளையும், ஒரு ரோடு ஷோவும் நடத்தியுள்ளார்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் 65.08 என்ற சாதனை சதவீத வாக்குகள் பதிவாகின.

    நேபாளம், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை ஒட்டியுள்ள 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

    நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் நிதிஷ் அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.

    முதற்கட்டத்தை போல் இரண்டாம் கட்டத்திலும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் 2ஆம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.

    ஒட்டுமொத்தமாக 2 கட்டங்களில் மாநிலம் முழுவதும் 200 பேரணிகளில் உரையாற்றி தேஜஸ்வி முதலிடத்தில் உள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 16 பேரணிகளையும், பிரியங்கா காந்தி 13 பேரணிகளையும், மல்லிகார்ஜுன கார்கே நான்கு பேரணிகளையும் நடத்தினர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில், பிரதமர் நரேந்திர மோடி 16 தேர்தல் பேரணிகளையும், ஒரு ரோடு ஷோவும் நடத்தியுள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 36 பேரணிகளில் உரையாற்றி, ஒரு ரோடு ஷோவும் நடத்தினார்.

    மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 21 பேரணிகளையும், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா 15 பேரணிகளையும் நடத்தினர். முதல்வர் நிதிஷ் குமார் 71 தேர்தல் பேரணிகளை நடத்தினார்.

    Next Story
    ×