என் மலர்
ஆந்திர பிரதேசம்
- 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நடைபாதையில் புகுந்து படிக்கட்டில் படம் எடுத்து ஆடியது.
- தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஒப்பந்த ஊழியர் பாஸ்கர் நாயுடு சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்தார்.
திருப்பதி:
திருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நடைபாதையில் புகுந்து படிக்கட்டில் படம் எடுத்து ஆடியது.
இதனைக் கண்ட பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு பக்தர்கள் தகவல் தெரிவித்தனர்.
தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஒப்பந்த ஊழியர் பாஸ்கர் நாயுடு சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்தார்.
இதேபோல் திருமலையில் உள்ள பில்டர் ஹவுஸ் பகுதியில் 7 அடி நீளமுள்ள ஜெர்ரி போர்டு வகை பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது அதையும் பாஸ்கர் நாயுடு பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இஸ்ரவேல் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- வாலிபர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயநகரம், கஜுலரேகா பகுதியை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது22).
இவர் நேற்று தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்.
திடீரென சூறாவளி காற்று இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த இஸ்ரவேல் மீது மின்னல் தாக்கியது. இதில் அவரது உடலில் மின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவருடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த அகில், சுரேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இஸ்ரவேல் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாளை சித்தூரில் நடைபெறும் போலீஸ் தேர்வில் இஸ்ரவேல் தயாராக இருந்தார்.
இந்த நிலையில் அவர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- திருப்பதி மாநகராட்சி கூட்டத்தில் ரோப் கார் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
- திருப்பதி ரெயில் நிலையத்திற்கு வரும் பக்தர்கள் சிலர் பஸ் நிலையத்தில் இருந்து திருமலைக்கு பஸ்களில் செல்கின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் 2.5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
இதனால் பக்தர்களுக்கு ரோப் கார் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. திருப்பதி மாநகராட்சி கூட்டத்தில் ரோப் கார் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
அரசும் ரோப் காருக்கான திட்டத்தை தயாரித்து வருகிறது. திருப்பதி ரெயில் நிலையத்திற்கு வரும் பக்தர்கள் சிலர் பஸ் நிலையத்தில் இருந்து திருமலைக்கு பஸ்களில் செல்கின்றனர்.
மற்றவர்கள் அலிபிரியில் இருந்து வேண்டுதலின்படி நடந்தே திருமலைக்கு செல்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை ஒரு வழி தடமும், பஸ் நிலையத்தில் இருந்து அலிபிரிக்கு மற்றொரு வழிதடத்தில் ரோப் கார் அமைத்து பயணத்தை எளிதாக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
பஸ் நிலையத்தில் இருந்து ரோப் கார் பாதை அமைக்கப்பட உள்ளது. அதன் அருகில் ஹெலிபேடும் அமைக்கப்பட உள்ளது.
ஆரம்ப கட்ட பணிகள் முடிந்ததும் விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- போலி இணையதளங்களை நம்ப வேண்டாம்.
- பக்தர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தலாம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
பக்தர்கள் ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம். போலி இணையதளங்களை நம்ப வேண்டாம்.
பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான URL https://tirupatibalaji.ap.gov.in என்ற முகவரியை பயன்படுத்தலாம். பக்தர்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியான "TTDevasthanams" மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர் பில் சால்ட் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரர் வார்னர் 21 ரன்னிலும், அதிரடியாக ஆடிய மார்ஷ் 25 ரன்னும் சேர்த்தனர். சர்பராஸ் கான் 10, அமன் ஹகிம் கான் 4 என விரைவில் விக்கெட்டை இழந்தனர்.
62 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன. அதன்பின் மணீஷ் பாண்டே, அக்சர் பட்டேல் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் தலா 34 ரன்கள் சேர்த்தனர். ரிபால் பட்டேல் 5 ரன், அன்ரிச் நோர்ட்ஜே 2 ரன்களில் ரன் அவுட் ஆக, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.
ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட், நடராஜன் ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
இதில் அதிகபட்சமாக மயாங்க் அகர்வால் 49 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ஹெயின்ரிச் க்ளாசன் 31 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்களும், ராகுல் திரிபாதி 15 ரன்களும், ஹாரி ப்ரூக் 7 ரன்களும், அபிஷேக் சர்மா 5 ரன்களும், எய்டன் மர்க்ரம் 3 ரன்களும், மார்கோ ஜான்சன் 2 ரன்களும் எடுத்தனர்.
இந்த ஆட்டத்தின் முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வருகிற 25-ந்தேதி ராமானுஜர் பிறந்தநாள் விழா நடக்கிறது.
- 25-ந்தேதி ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாள் விழா நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகாசி மாதத்தில் நடக்கும் விழாக்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வைகாசி மாதம் ஒரு புனித மாதமாகும். அனுமன், ராமானுஜர், கர்நாடக சங்கீத மேதை தியாகராஜசுவாமி, தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார், தரிகொண்டா வெங்கமாம்பா ஆகியோர் வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆவர். அவர்களை போற்றும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பாக விழாக்களை கொண்டாடி வருகிறது.
வருகிற 25-ந்தேதி ராமானுஜர் பிறந்தநாள் விழா நடக்கிறது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் 1017-ம் ஆண்டு பிங்கலநாம மாதம் ஆருத்ரா நட்சத்திர நாளில் ஆதிசேஷ அவதாரமாக பிறந்தார். இவர் 1137-ம் ஆண்டு உயிரிழந்தார். தனது 120 ஆண்டுகால வாழ்வில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வைஷ்ணவத்தை மேம்படுத்தினார். அதன் மூலம் உயர்சாதியினர் மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட சாதியினரும் வைணவ மதத்தைத் தழுவும் வாய்ப்பைப் பெற்றனர்.
நாட்டில் உள்ள பல வைஷ்ணவ ஷேத்திரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கோவில் வழிபாட்டு நிகழ்ச்சிகள் முறையாக நடப்பதை உறுதி செய்ய ஏற்பாடு செய்தார். அவரை போற்றும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா நட்சத்திர நாளில் ராமானுஜர் பிறந்தநாளை கொண்டாடுகிறது.
தியாகராஜசுவாமி
வருகிற 25-ந்தேதி ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அத்வைத சித்தாந்தத்துடன் இந்தியாவில் சனாதன தர்மத்தைப் பரப்பிய முதல் குரு இவர் தான்.
வருகிற 26-ந்தேதி தியாகராஜசுவாமியின் பிறந்தநாள் நடக்கிறது. இவர், 1767-ம் ஆண்டு பிறந்தார். இவரின் வழித்தோன்றல்கள் பிரகாசம் மாவட்டம் காகர்லா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இளம் வயதிலேயே தியாகராஜசுவாமியின் பக்தி, அறிவு ஆகியவற்றால் மகிழ்ந்த நாரத மகரிஷி ஸ்வரர்ணவம் என்ற இசை கட்டுரையை வழங்கினார்.
தியாகராஜசுவாமி சுமார் 180 ஆண்டுகளுக்கு முன் திருவையாறில் இருந்து திருமலை ஷேத்திரத்துக்கு வருகை தந்தார். ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டார். அவர் 1847-ம் ஆண்டு உயிரிழந்தார். தியாகராஜசுவாமியை போற்றும் வகையில் 26-ந்தேதி திருமலையில் அவரின் பிறந்தநாள் விழா நடத்தப்படுகிறது. திருப்பதியில் உள்ள எஸ்.வி. இசை கல்லூரியிலும், திருமலை உள்ள நாதநீராஞ்ஜன மண்டபத்திலும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிரமாண்ட ஏற்பாடுகளை மேற்கொள்கிறது.
தரிகொண்டா வெங்கமாம்பா
தரிகொண்டா வெங்கமாம்பா 1730-ம் ஆண்டு பிறந்தார். அவர் ஏழுமலையான் மீது அசைக்க முடியாத பக்தியைக் காட்டினார். திருமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் சேவையை தொடங்கிய முதல் பெண் பக்தர் இவர் தான். திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் வெங்கமாம்பா ஜெயந்தியை கொண்டாடி வருகிறது. அதன்படி அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி திருமலையில் வெங்கமாம்பா ஜெயந்தி விழா நடக்கிறது. அன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி உற்சவமும் கொண்டாடப்படுகிறது.
தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார்
தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் ஏழுமலையானை போற்றி 32 ஆயிரம் பக்தி கீர்த்தனைகளை எழுதி பாடியவர். இவர் 1408-ம் பிறந்தார். அவர் 1503-ம் ஆண்டு உயிரிழந்தார். இவர், முதல் தெலுங்கு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆவார்.
அன்னமாச்சாரியார் ஜெயந்தியையொட்டி மே மாதம் 6-ந்தேதி திருமலை, திருப்பதி மற்றும் தாளப்பாக்கத்தில் இசை, கலாசாரம், இலக்கிய ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
அதேபோல் 22-ந்தேதி பரசுராம ஜெயந்தி விழா, 23-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம், சீனிவாச தீட்சிதர் வருட திருநட்சத்திரம், மே மாதம் 4-ந்தேதி மதுரகவியாழ்வார் ஜெயந்தி விழா, அனந்தாழ்வார் ஜெயந்தி விழா, மே 5-ந்தேதி கூர்ம ஜெயந்தி, மே 7-ந்தேதி பராசரபட்டர் வருட திருநட்சத்திரம், மே 14-ந்தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கல்லூரி மாணவியும், அனுதீப்பும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
- அனுதீப்பிடம் இருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், துக்கிராலாவை சேர்ந்தவர் அனுதீப் (வயது 25). இவரது தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். தாய் வெளியூரில் தங்கி வீட்டு வேலை செய்து வருகிறார். இதனால் அனுதீப் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இவரது பக்கத்து ஊரை சேர்ந்த 23 வயது மாணவி காக்கிநாடாவில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
கல்லூரி மாணவியும், அனுதீப்பும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி கல்லூரி மாணவியின் விடுதிக்கு சென்ற அனுதீப் மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அப்போது உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி ஆசைக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தினார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை ஒரு அறையில் தள்ளி பூட்டினார்.
இதையடுத்து வெளியே சென்ற அனுதீப் மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு மாணவியை வற்புறுத்தினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்த எண்ணெய்யை கொதிக்க வைத்து மாணவியின் கை கால்களில் ஊற்றினார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். பின்னர் மாணவியை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து 13 நாட்களாக பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார்.
அனுதீப்பிடம் இருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். மாணவியை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஏலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அனுதீப்பை கைது செய்து விசாரணை நடத்தினர்.
தனியாக இருந்ததால் போதைக்கு அடிமையாகி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
போதைக்கு அடிமையான அவர் பல பெண்களை மயக்கி பலாத்காரம் செய்து அவர்களது வாழ்க்கையை சீரழித்து உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை செய்து கொண்டிருந்த மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.
- போலீசார் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், கூடூர், வரத நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ஷிரவாணி.
இவர்களுக்குள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
ஷிரவாணிக்கு காந்திநகரை சேர்ந்த வெங்கடேஸ்வரலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இருவரும் கூடூர் அடுத்த நெர்னூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்தனர். அவர்கள் மிளகு தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.
மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை நாகராஜால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
நேற்று மாலை கத்தியை எடுத்துக்கொண்டு ஷிரவாணி வேலை செய்யும் மிளகு தோட்டத்திற்கு சென்றார்.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ஷிரவாணி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.
வெங்கடேஸ்வரலு ஓடி வந்து நாகராஜை தடுத்து நிறுத்தினார்.
இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ் வெங்கடேஸ்வரலுவையும் வெட்டினார்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஷிரவாணி பரிதாபமாக இறந்தார்.வெங்கடேஷ் வரலுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த கூடூர் போலீசார் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாட்ஸ் அப்-பில் இரண்டு நடிகர்களின் படம் வைப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்ப்பட்டது
- தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிகுமாரை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஏலூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் பவன் கல்யாண் ரசிகர்.
அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஹரிகுமார். இவர் பிரபல நடிகரான பிரபாஸ் ரசிகர் மன்றத்தின் செயலாளராக உள்ளார்.
ஓவியர்களான இருவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் அத்திலிக்கு வேலை தேடி வந்தனர். நேற்று மாலை இருவரும் வேலை முடிந்து மது குடித்தனர். அப்போது ஹரிக்குமாரின் செல்போனில் நடிகர் பிரபாசின் படம் வைத்து இருந்தார்.
இதனைக் கண்ட கிஷோர் உன்னுடைய ஸ்டேட்டஸில் நடிகர் பவன் கல்யாண் படத்தை வைக்க வேண்டும் என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகுமார் இரும்பு கம்பி மற்றும் கற்களால் கிஷோரை தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரி குமாரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஏற்கனவே 40 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
திருமலை :
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள முகவரியை போல், போலி இணையதள முகவரியைத் தொடங்கி பலர் பக்தர்களிடம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் திருமலையிலேயே செயல்பட்டு வந்த ஒரு போலி இணையதளத்தைக் கண்டு பிடித்து திருமலை 1-டவுன் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதற்கான தகவல் அறிக்கையை ஆந்திர மாநில சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்துள்ளனர். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள முகவரியின் பெயரில் சில மாற்றங்களை ஏற்படுத்தி தொடங்கிய போலி இணையதளம் குறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே 40 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய புகாரை தொடர்ந்து போலி இணையதள எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தவிர திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்பையும் பயன்படுத்தலாம். ஆனால், போலி இணையதளங்களை நம்ப வேண்டாம், எனப் பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.
- முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக தோல்வி அடைந்த டெல்லி கேப்பிட்டல் அணி கடந்த ஆட்டத்தில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ள ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.
இதேபோல், முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக தோல்வி அடைந்த டெல்லி கேப்பிட்டல் அணி கடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், தனது சொந்த மண்ணில் விளையாடும் ஐதராபாத் அணிக்கு வெற்றி கிடைக்குமா அல்லது டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- தமிழகத்தை சேர்ந்த 3 வாகனங்கள் வழங்கியதும், 7 பேர் கூலி தொழிலாளர்களாக மரம் வெட்ட அழைத்து வரப்பட்டுள்ளனர்.
- கடத்தப்பட்ட செம்மரங்கள் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பாக்ராபேட்டை இன்ஸ்பெக்டர் துளசிராம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது எர்ரகுண்டபாளயம் வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் செம்மரம் வெட்டி கடத்தி செல்வது தெரிய வந்தது.
இந்த காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த கடத்தல்காரர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதில் காரில் இருந்த 21 செம்மரங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்த சங்கர் செம்மரக்கடத்தல் கும்பல் தலைவராவார். இவர் மீது 30 வழக்குகள் உள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறைக்கு சென்று வந்த பிறகும் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளான்.
தமிழகத்தை சேர்ந்த 3 வாகனங்கள் வழங்கியதும், 7 பேர் கூலி தொழிலாளர்களாக மரம் வெட்ட அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் செம்மரங்களை வேலூரை சேர்ந்த காஞ்சி என்கிற சந்தோஷ் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தசாமிக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட செம்மரங்கள் சென்னைக்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. சந்தோஷ் மற்றும் கோவிந்தசாமியும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக செம்மரங்களை வெட்டுவதற்கு கூலி தொழிலாளர்களை பஸ்கள் மற்றும் லாரிகளில் அழைத்து வருவது வழக்கம்.
ஆனால் போலீசார் சோதனை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து பைக்கில் கூலி தொழிலாளர்களை அழைத்து வந்து செம்மரங்களை வெட்டி செல்வது தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 21 செம்மரக்கட்டைகள் மற்றும் ஒரு கார், 6 பைக்குகள் ரூ.71 லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. பரமேஸ்வர் தெரிவித்தார்.






