என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி நடை பாதையில் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு- பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்
    X

        

    திருப்பதி நடை பாதையில் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு- பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

    • 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நடைபாதையில் புகுந்து படிக்கட்டில் படம் எடுத்து ஆடியது.
    • தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஒப்பந்த ஊழியர் பாஸ்கர் நாயுடு சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்தார்.

    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நடைபாதையில் புகுந்து படிக்கட்டில் படம் எடுத்து ஆடியது.

    இதனைக் கண்ட பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு பக்தர்கள் தகவல் தெரிவித்தனர்.

    தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஒப்பந்த ஊழியர் பாஸ்கர் நாயுடு சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்தார்.

    இதேபோல் திருமலையில் உள்ள பில்டர் ஹவுஸ் பகுதியில் 7 அடி நீளமுள்ள ஜெர்ரி போர்டு வகை பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது அதையும் பாஸ்கர் நாயுடு பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டார்.

    Next Story
    ×