என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    தடைகளை தகர்த்து, பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும்.
    ஆண், பெண் இடையேயான நட்பு, காதலாவதை சமூகம் ஏற்றுக்கொள்கிறது. அவர்களுக்கு ‘காதலர்கள்’ என்று பெயர்சூட்டி கவுரவமாகத்தான் பார்க்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டு அதன் பின்பே தாம்பத்யத்தில் இணையவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அந்த எதிர்பார்ப்பை நிராசையாக்கும் சம்பவங்கள் தற்போது இந்தியாவில் அதிகம் நடக்கிறது. அதனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் இளம் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    இதனால் சமூகத்தில் மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. பெண்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடுகிறது. கல்லூரிக்கோ, வேலைக்கோ செல்லும் பெண்கள் அங்கு தன் வேலை என்ன என்பதை மறந்து, எல்லைமீறிய காதலில் ஈடுபடுவதுதான் இந்த பரிதாபத்தின் மையமாக இருக்கிறது.

    காதலிக்க தூண்டுவது ஒரு ஹார்மோன் விளையாட்டுத்தான். ஆனால் அதை புரிந்துகொண்டு பக்குவமாகவும், பாதுகாப்பாகவும் காதலிக்கத் தெரியவேண்டும். ‘என் அழகிற்கும் அறிவுக்கும் என் பின்னால் இத்தனை பேர் வருகிறார்கள் பார்’ என்று, மற்றவர்களிடம் சொல்லவேண்டும், அதன் மூலம் மற்றவர்களை பொறாமைப்பட செய்யவேண்டும் என்று சில பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி ஆழம் தெரியாமல் காதலில் காலை விட்டுவிட்டு தடுமாறும் பெண்களே கர்ப்பக் கவலைக்கு உள்ளாகிறார்கள்.

    கவனமாக கையாளவேண்டிய கண்ணாடி போன்றது பெண் களின் இளமைப்பருவம். சிறிய தவறு நேர்ந்தாலும் எதிர்காலம் சுக்குநூறாகிவிடும். எத்தகையோ சமூக மாற்றங்களுக்குப் பிறகும் இந்தியா இன்னும் பழமையை பாதுகாக்கும் நாடாகவே இருந்து கொண்டிருப்பதற்கு காரணம், இங்குள்ள பெண்களின் தாய்மை உணர்வும், பெண்மையும்தான். பெண்கள், ஆண்களுக்கு சமமாக வளர்கிறார்கள். வாழ்கிறார்கள். அந்த ‘சமம்' அவர்கள் அறிவை விசாலப்படுத்தவேண்டும். அதன் மூலம் தனக்கும்- தன் ஆண் நண்பனுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி தேவை என்பதை அவள் உணரவேண்டும். அந்த இடைவெளியை உருவாக்க தெரிந்த பெண்கள் மட்டுமே பிரச்சினைகள் இன்றி வாழ்கிறார்கள். இடைவெளியை குறைக்கும் பெண்கள் பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கிறார்கள்.

    தடைகளை தகர்த்து, பெண்கள் சாதனைகளை நோக்கி வளர்ந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் போன்ற செயல்கள் அவர்களை மீண்டும் இருட்டில் கொண்டுபோய் தள்ளிவிடும். ‘திருமணத்திற்கு பின்புதான் உடல் வழி பந்தம்’ என்ற பாரம்பரியத்தை முன்னோர்கள் வகுத்துவைத்திருக்கிறார்கள். அது பெண்மைக்கு மதிப்பும், மரியாதையும் பெற்றுத்தரும். அவர்கள் எதிர்காலமும் நன்றாக இருக்கும். அதைவிடவும் சுத்தமான மனதோடு அவர்கள் இறுதிக்காலம் வரை வாழ முடியும்.

    பெற்றோர்களும், சமூகமும் சுதந்திரம் தந்துவிட்டன என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் இன்றைய இளைய தலைமுறையினர் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும். பெற்றோர்கள் நம் சந்தோஷத்திற்கு தடையாக இருப்பவர்கள் அல்ல. அதே நேரத்தில் தவறான வழியில், முறையற்ற சந்தோஷத்தை தேட நினைக்கும் பெண்கள் பெற்றோர்களுக்கு பெரியபாரமாகி விடுகிறார்கள். திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம் தரும் வலியை சொல்லிமாளாது. அது கஷ்டம், குழப்பம், சிக்கல், அவமானம் போன்ற அனைத்தையுமே சேர்த்து தரும். அந்த வலியையும், அவமானத்தையும் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமல்ல, அந்த குடும்பமே சேர்ந்து அனுபவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அவமானத்தை பணத்தால் மறைக்க இயலாது.

    திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகிவிடுகிறவர்கள் பெரும்பாலும் பாலியல் சார்ந்த விழிப்புணர்வு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். திடீர் கர்ப்பம் அவர்களை பலவிதங்களில் குழப்பி, அடுத்து என்ன செய்வது என்று சரியான முடிவினை எடுக்க முடியாத அளவுக்கு தயங்கவைத்துவிடுகிறது. எந்த மருத்துவரிடம் போய் ஆலோசனை கேட்பது என்று தெரியாமல், தவறானவர்களிடம் போய் நின்று கொண்டு கொடூர கருக்கலைப்பிற்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.



    பிரபல மருத்துவர் ஒருவரின் அனுபவம் இது:

    “திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடையும் பெண்களில் பலர் என்னிடம் கருக்கலைப்பு செய்ய வருகிறார்கள். மருத்துவரீதியாக, மனோதத்துவரீதியாக நான் சொல்வதை புரியும் நிலையில் அவர்கள் இல்லை. முதன்முதலில் உருவாகும் கருவை கலைப்பது பெண்ணின் உடலுக்கு மிகவும் ஆபத்தான விஷயம். அதை கவனமாக கையாளாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்த பெண்ணுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போய்விடக்கூடும். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி, முரண்பாடான முறையில் கலைத்துவிட்டு, திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைய வாய்ப்பில்லாமல் போனவர்கள் அதிகம்.

    திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான டீன்ஏஜ் பெண் ஒருத்தி என்னிடம் ஆலோசனைக்கு வந்தாள். கர்ப்பமாகி மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அதனால் ‘கருவை கலைக்க வாய்ப்பில்லை’ என்று நான் கூறிவிட்டேன். உடனே அவள் அம்மா என் காலைப்பிடித்துக்கொண்டு கதறியழுதார். ‘என்னால் கருவை கலைக்க முடியாது. மருத்துவ விஞ்ஞான முறைகளை மீறி நான் ஏதாவது செய்தால், உங்கள் பெண்ணின் உயிருக்கு ஆபத்தாக முடியும்’ என்று கூறி விட்டேன். எவ்வளவு பணம் கேட்டாலும் தருவதாக சொன்னார். ‘கர்ப்பத்திற்கு காரணமானவன் என்னை தவிக்க விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டான்’ என்று அந்த பெண்ணும் அழுதாள். நான், ‘காலம் கடந்து வந்திருக்கிறீர்கள். எது கிடைத்தாலும் அதை துணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறி அனுப்பிவைத்தேன்.

    அவர்கள் நான் சொன்னதை கருத்தில்கொள்ளாமல் வேறொரு மருத்துவரை பார்த்து கருக்கலைப்பு செய்துவிட்டு வீடு திரும்பிவிட்டனர். பிறகு எதுவுமே நடக்காதது போல் அந்தப் பெண்ணுக்கு திருமணமும் முடித்துவிட்டார்கள். அதன்பிறகு தான் ஆரம்பமானது வினையே. முதலில் கருவை கலைத்ததால் கர்ப்பப்பை வெகுவாக பாதிக்கப்பட்டு, அதை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன்பு அவளுக்கு நடந்த கொடூரமான கருக்கலைப்பின் காரணமாக அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே இருட்டாக்கிவிட்டார்கள்” என்கிறார், அவர்.

    பெண்கள் தங்கள் உடலுக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்கவேண்டும். எந்த சூழ்நிலையிலும் எல்லைமீறமாட்டேன் என்ற உறுதியோடு நட்பையும், காதலையும் தூரத்தில் வைத்திருக்கவும் தெரிந்திருக்கவேண்டும். ஒரு பெண்ணுடைய நட்பு கிடைத்துவிட்டால் அவளை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கைவிடும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. பெண்கள்தான் அப் படிப்பட்ட ஆண்களின் மனநிலையை புரிந்துகொண்டு கவனமாக இருக்கவேண்டும்.

    ஒரு பெண், திருமணத்திற்கு முன்பே கர்ப்பிணியாகிவிடும்போது அதில் சம்பந்தப்பட்ட ஆண் கூடுமானவரை தப்பிக்கவே முயற்சி செய்கிறார். ஒரு சிலர் அந்தப் பெண்ணை கருக்கலைப்பிற்கு கட்டாயப்படுத்துகிறார்கள். மறுக்கும் பட்சத்தில் கொலை செய்யக்கூட துணிகிறார்கள். ஆனால் திருமணத்திற்கு மட்டும் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. ‘உன்னை திருமணம் செய்துகொள்ள என் பெற்றோர் சம்மதிக்கவில்லை’ என்று கூறிவிடு கிறார்கள்.

    திருமணத்திற்கு முன்பு ஏற்படும் கர்ப்பத்தை தனி மனிதர்களும், சமூகமும் அவமானமாகவே கருதுகிறது. அதனால் அந்த அவமான செயலுக்கு பெண்கள் இடம்கொடுக்காமல் இருப்பதே நல்லது

    மனித ஜென்மம் மகத்துவம் நிறைந்தது. மனித உடல் புனிதமானது. அந்த புனிதத்தை காக்கவே சமூகம் சில நியதிகளை வகுத்துவைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டு வாழ்வதே முறையான வாழ்க்கை. இஷ்டத்திற்கு வாழ்வது கஷ்டத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். அப்போது கைகொடுக்கவோ, காப்பாற்றவோ யாரும் முன்வருவதில்லை. 
    கர்ப்பமடைய முயற்சி செய்யும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல்ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.

    பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.

    பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ovulation) என்று பெயர்.

    கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை: எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (Fallopian tube) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (sperm) சராசரியாக 3 - 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

    உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

    பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உபயோகிக்கிறார்கள். இதை Vaginal Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். நீங்கள் கர்ப்பம் அடைய நினைக்கும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.
    பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகளை தாய்ப்பால் குடிப்பதில் இருந்து நிறுத்திவிடலாம்.
    பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறுத்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் குறுநடை போடும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது மிக முக்கியம். கடினமான செயல் எனினும், சில முயற்சிகள் கொண்டு கீழே உள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குறுநடை போடும் குழந்தைகளை தாய்ப்பாலில் இருந்து நிறுத்திவிடலாம்.

    முதலில் தாய்ப்பால் நிறுத்த நினைக்கும் போது தாயானவள், தன்னையே முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் உடலில் ஏற்படும் சில மாற்றங்களால், தாய்ப்பாலை இயற்கையாகவே நிறுத்தப்படலாம். இது தாயின் உடல்வாக்கை பொறுத்து அமையும். எப்படி சில உணவு முறைகளால் தாய்ப்பாலை அதிகரிக்கலாமோ, அதே போல் குறைக்கவும் செய்யலாம். புரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம் இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். இல்லையெனில், முட்டைகோஸ் இலையை மார்பக பகுதிகளில் சில மணி நேரங்கள் வைத்து கொள்வதன் மூலமும் பால் குறைய வாய்ப்புள்ளது.



    படிப்படியாக மெதுவான முறையில் தாய்ப்பாலை விடுவித்தலால் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நல்லது. ஏனெனில் திடீரென நிறுத்துவதால் குழந்தை மற்றும் அம்மா இருவருக்கும், உடலில் சில உபாதைகள் ஏற்படும். முக்கியமாக திடீரென நிறுத்தினால், தாயின் மார்பக குழாயானது அடைபட்டு, வீக்கம் அடைவது அல்லது மார்பக வலி போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே குழந்தைகளுக்கு முன்பு அடிக்கடி கொடுப்பதை நிறுத்திவிட்டு, மதிய வேளையில் இருமுறை கொடுத்தால், அந்த நேரம் ஒரு முறை வேறு ஏதாவது உணவு கொடுத்தும், மறுமுறை தாய்ப்பால் கொடுத்தும் வர வேண்டும். இதை செய்யும் போது, போக போக தாய்ப்பாலை நிறுத்திவிட்டு, உணவுகளைக் கொடுத்து மறக்க வைக்கலாம்.

    குழந்தையை உங்கள் மார்பகங்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம். அவர்கள் முன்னிலையில் உடை மாற்றுவது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. குழந்தையுடன் சேர்ந்து குளியல் கொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தாயின் மார்பகம் பார்ப்பதால், மீண்டும் அவர்களுக்கு தாய்ப்பால் நினைவுக்கு வரும் வாய்ப்புள்ளது.

    மேலும் குழந்தையை தூக்கி நடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களை மார்பக பகுதியை தொடாதவாறு பார்த்து கொள்ளவும். அவ்வாறு தூக்கும் போது குழந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டு, அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். இதனால் அவர்களை தாய்ப்பாலில் இருந்து மறக்கடிக்கலாம்.

    ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். கவனமாக இருந்தால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
    தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம்.

    குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.

    * மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.

    * குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக அறிவுறுத்தப்படும்.

    * கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும் விளக்கப்படும்.

    * வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.

    * அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.

    * பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.

    * எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.



    * கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    * நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.
    * குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு
    * சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    * எடை கூடுதல்
    * உயர் ரத்த அழுத்தம்
    * கரு கலைதல்
    * மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்
    * டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    * வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்
    * ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்
    * நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்
    * கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்
    * கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.
    பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம்.
    நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல பொருட்களுக்கு நாம் உரிய மரியாதையை வழங்குவதில்லை. அவைகளை தேவையற்றவைகளாக நினைத்து ஒதுக்கிவிடவும் செய்வோம். அப்படி ஒதுக்கப்பட்ட ஒரு பொருள் தான் சுண்ணாம்பு.

    முன்பு எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள். குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை. வீடுகளில் சுண்ணாம்பும் இருப்பதில்லை. கடைகளில்கூட அரிதாகத்தான் கிடைக்கிறது.

    சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள். ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும்.

    இது ஆண்மை விருத்திக்கு நல்லது என்று கூறப்படுகிறது. விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்கள் கரும்பின் சாற்றில் சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம்.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக கால்சியம் தேவை. அந்த தேவையை சுண்ணாம்பு பூர்த்தி செய்யும். மாதுளம் பழம் சாற்றில், ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து தினமும் குடிக்கலாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு அதாவது கால்சியம் கிடைப்பதுடன், பிரசவமும் எளிமையாகலாம். அதுமட்டுமல்ல அந்த கால்சியம் குழந்தைக்கும் போய் சேர்ந்து மூளை வலுப்பெற்ற நிலையில் குழந்தை பிறக்கும்.

    இப்பொழுதெல்லாம் சுண்ணாம்புக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் கடையில் கால்சியம் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். எந்த மாத்திரையானாலும் அது பக்கவிளைவுகளை தரக்கூடியதுதான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இயற்கை முறையில் நாம் சாப்பிடும் கால்சியம் நம் உடலுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதிகப்படியாக உள்ளதை வெளியேற்றிவிடும். ஆனால் மாத்திரைகள் அப்படியில்லை. தேவையில்லாத தொந்தரவுகளை உருவாக்கிவிடும்.

    பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வு தரும். ரத்தக் குறைபாடு, அதிக ரத்தப் போக்கு, உடல்வலி, வயிற்று வலி, குறைந்த ரத்தப் போக்கு, உடல் உஷ்ணம், சோர்வு இவையனைத்திற்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வாக இருக்கும். கரும்பு ஜூஸ், ஆரஞ்சு பழரசம், மாதுளம் பழச்சாறு இவற்றுடன் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பை கலந்து குடித்து வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும்.

    அது போன்று கீழாநெல்லிக்கீரை, வெள்ளை கீரை, கறிவேப்பிலை ரசம் ஆகியவற்றுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடவேண்டும். பற்கள், ஈறுகளில் பிரச்சினை இருந்தால் வெற்றிலை, துளசியுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடலாம். மிக குறைந்த அளவில் சுண்ணாம்பு கலந்த நீரில் தினமும் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள், பற்கள் பலம்பெறும். தோள்பட்டை வலி, மூட்டு வலி இவற்றிற்கு சிறிது சுண்ணாம்பை துளசி சாற்றில் கலந்து தேய்த்துவிட்டால் வலி மறையும். விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் சிறிது சுண்ணாம்பு வைத்தால் விஷம் நீங்கும்.

    நல்லெண்ணெய்யில் சிறிது சுண்ணாம்பு கலந்து உடலில் பூசிவிட்டால் கொசுக்கடி, வேர்குரு தழும்புகளிலிருந்து விடுபடலாம். பல்லில் கூச்சம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு, சுண்ணாம்பு கலந்து கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் மறையும். பல்லில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்றவைகளுக்கும் இது நல்ல மருந்து. தொண்டை இனிமையாக இருக்க சுண்ணாம்பு துணைபுரிகிறது. அந்த காலத்தில் பாட்டுப்பாடும் பாகவதர்கள் வெற்றிலைப் பெட்டியை கையோடு வைத் திருப்பதற்கு இதுதான் காரணம்.

    பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடைநாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது. வெற்றிலையில், தேன் தடவி, கிராம்புடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மென்று சாற்றை தொண்டையில் பரவவிட்டால் தொண்டை வளமாகும். அந்தச் சாறு நுரையீரல் முழுவதும் பரவி சளி தொந்தரவை போக்கும். மேடையில் பாடுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணி.
    30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள்.
    இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான ஒரு சந்தேகம் நமக்கு தாம்பத்திய உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தேவையில்லை என்று உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    35 வயதைத் தாண்டிய பல பெண்களின் மனதில் இனி நம்மால் செக்ஸில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாதா என்ற எண்ணம் பரவலாக தோன்றுகிறதாம். மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.

    தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப்படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனில் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும். மேலும் 35 வயதிற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்சநிலையை உணர்வதில் பிரச்சனை ஏற்படும்.

    நீரிழிவினால் பெண்களுக்கு நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் முதுகெலும்பில் பிரச்சனை என்றாலும் அவர்களால் இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடமுடியாது. அதேபோல் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை என்றாலும் பெண்கள் தங்களின் உச்ச நிலையை உணர்வதில் சிக்கல்கள் எழுகின்றன என்கின்றனர் நிபுணர்கள்.



    30 வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவுசெய்து விட்டொழியுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதேபோல 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம். அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வது மட்டுமே. உண்மையில் 30 வயதுக்கு மேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரிபூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடுபட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

    அதேசமயம், சில பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் உறவில் ஆர்வம் குறைவது இயல்பு தான். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் இது வித்தியாசப்படும். பொதுவான காரணம் என்று எதுவும் கிடையாது. உச்ச நிலையை அடைவதில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு என்றில்லை, 20களில் இருக்கும் பெண்களுக்கும் கூட பிரச்சனை வருவதுண்டு.

    30 வயதைத் தாண்டிய, விவாகரத்து செய்த அல்லது கணவரை இழந்த பல பெண்களுக்கும் கிளைமேக்ஸ் வரும். செக்ஸ் உணர்வும் அதிகமாக இருக்கும். இதை நினைத்து பல பெண்கள் கவலைப்படுவார்கள். நாம் தவறு செய்கிறோமோ என்ற எண்ணமும் அவர்களிடம் எழலாம். ஆனால் இது நிச்சயம் தவறான ஒன்றில்லை. இது இயல்பான ஒன்றுதான். பெண்களின் உடலியல் அப்படி. எனவே நாம் செக்ஸ்குறித்து சிந்திப்பது தவறு என்று இந்தப் பெண்கள் நினைக்கத் தேவையில்லை. இதுபோன்ற பெண்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த பல வழிகள் உள்ளன. அவற்றில் ஈடுபடலாம்.
    மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. இது குறித்துவிரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர். மசக்கையின் போது இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    ‘‘கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.



    கர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது. உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு.

    கர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாக தயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.’’
    நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களை வைத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்யலாம்.
    நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் சில சமயங்களில் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களை வைத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்யலாம்.

    • எலுமிச்சையானது தழும்புகளை மறைய வைக்கும் முக்கியமான பொருளாகும். எலுமிச்சையை சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து வைத்துக் கொண்டு சிசேரியன் செய்த காயத்தழும்பின் மீது தேய்க்கவும். 6 மாதங்கள் வரை தொடர்ந்து இவ்வாறு செய்து வர தழும்புகள் மறைந்து விடும். எலுமிச்சை சாறு காய்ந்த உடன் 5 நிமிடத்திற்குள் குளிர்ச்சியான தண்ணீரை விட்டு கழுவிவிடுங்கள். வறண்ட சருமத்தினர் எலுமிச்சையை தவிர்க்கவும்.

    • தக்காளியை தோல் உறித்து அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். அந்த பேஸ்ட்டை எடுத்து சிசேரியன் தழும்பு உள்ள பகுதிகளில் அப்ளை செய்யவும். இரவு நேரத்தில் தக்காளி சாஸ் அப்ளை செய்து விட்டு காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த தக்காளி சாஸ் தடவி வர பலன் தெரியும்.

    • சோற்றுக்கற்றாழை மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். சோற்றுக்கற்றாழையை நன்றாக உரித்து அதன் ஜெல்லினை எடுத்து காய தழும்புள்ள இடத்தில் தடவலாம். இரவில் தடவி வைத்திருந்து பகலில் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவிவிட்டு நன்றாக துடைத்து விடவும். அதன் பின்னர் பேபி லோசனை அந்த இடத்தில் அப்ளை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இவ்வாறு செய்து வர தழும்புகள் மறையும்.

    • ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து காய்ந்த உடன் அதன் மேல் வெதுவெதுப்பான நீரை ஊற்றி கழுவவும். இது சில மாதங்களிலே காயத்தழும்பை மறையச் செய்து விடும்.
    ஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.
    லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை. 20ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்று காரணங்களுக்காக பெண்கள் பயன்படுத்தினார்கள். உடலை அழகாகக் காட்டுவதற்கு... சுத்தமாக, பளிச்செனக் காட்டுவதற்கு... அடக்கமும் கண்ணியமும் கொண்டவர்களாக தெரிவதற்கு!

    கவர்ச்சியான உள்ளாடைகளில் மனைவியைப் பார்ப்பதை பல கணவர்கள் விரும்பத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இதனால் ஒரு  ஃபேன்டஸியும் செக்ஸுக்கான அகத்தூண்டலும் கிடைக்கிறது.

    பொதுவாக ஆணுக்கு, அழகான பெண்ணை பார்த்தவுடனேயே பாலியல் தூண்டுதல் கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு அப்படியல்ல... மனம் ஓர் ஆணை விரும்பினால்தான் செக்ஸுக்கான அகத்தூண்டுதல் பெண்ணுக்குக் கிடைக்கும். ஒரே வித உடைகளில் மனைவியைப் பார்க்கும் ஆண்களுக்கு காலப்போக்கில் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டுவிடும். அந்த சலிப்பை விரட்ட, கவர லாஞ்சரி பெண்களுக்கு உதவும்.



    இது நவீன யுகம்... பெண்கள், ஆண்களுக்கு இணையாக எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்... பல துறைகளில் பிரகாசிக்கிறார்கள்... எல்லாவற்றையும் அறிந்தும் வைத்திருக்கிறார்கள். மனைவி படுக்கையறைக்குள் லாஞ்சரி அணிந்து வருகிறாரா? கணவனிடம் உறவுக்கு ‘ஓ.கே.’ சொல்கிறார் என்று அர்த்தம். பெண்கள் லாஞ்சரியை தாராளமாக அணியலாம்.

    அதே நேரத்தில், வெறும் உள்ளாடை சார்ந்து மட்டும் கவர்ச்சி அமையாது என்பதையும் நினைவில் கொள்ளவும். பெண்களின் உடலமைப்பில்தான் கவர்ச்சி இருக்கிறது. பேக்கிங் அழகாக இருந்தால் போதுமா? உள்ளே இருக்கும் பொருள் தரமாக இருக்க வேண்டாமா? எனவே, பெண்கள் கணவனைக் கவரும் விதமாக உடலழகைப் பராமரிப்பது அவசியம். ஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.

    ‘கவர்ச்சியான உள்ளாடைகளோடு பார்ப்பதால் மட்டுமே மனைவி மீது செக்ஸ் ஈர்ப்பு வருகிறது’ என்று ஒருவர் சொல்கிறாரா? அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்சனை இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை காரணமாக ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், தவிக்கிறார்கள்.
    இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை காரணமாக ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், தவிக்கிறார்கள். இதனால், பிடித்த உணவு முதல் உடை வரை அனைத்தையும் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    உடல் பருமன் அளவுக்கு அதிகமாக அதிகரிக்க மிக முக்கிய காரணம் ஊட்டச்சத்து இல்லாத இனிப்புகள் தான். செயற்கை இனிப்பூட்டிகள் அல்லது ஊட்டச்சத்து இல்லாத இனிப்புகள் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால், உடல் பருமன் மற்றும் இடுப்பின் அளவு வெகுவாக அதிகரிக்கிறது.

    அதுவும் அஸ்பார்டேம், சுக்ரல்ஸ் மற்றும் ஸ்டீவியா போன்ற செயற்கை இனிப்புகளை உட்கொள்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் தொடர்பான ஆபத்தை சந்திக்க நேரிடுகிறது.

    மேலும் செயற்கை இனிப்பூட்டிகளை அதிகமாக உட்கொள்வதால் எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். உடற் பருமன் குறைய வேண்டும் என்றால் உடனே அசெயற்கை இனிப்பூட்டிகளை தவிர்ப்பது நல்லது.

    இது ஒரு புறம் எனில், எப்படியோ இடுப்பில் சதை அதிகரித்து உடல் எடை அதிகரித்துவிட்டால் என்ன செய்து என்று பலர் தவிக்கிறார்கள். அவர்கள் தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம் செய்யலாம். அதில் 10 நிமிடங்களாவது, பிராணாயாமம் செய்ய வேண்டும். இது தவிர நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு கோரும் செயல்களைச் செய்யவேண்டியது அவசியம்.



    காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சைப் பழத்தை ஜூஸாகவும் குடிக்கலாம். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். அதேபோல சோம்பு-வை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்கும்.

    திட உணவை அரை வயிற்றுக்கும் திரவ உணவை கால் வயிற்றுக்கும், மீதமுள்ள கால்வாசி உணவை வாயுக்கும் விட்டுவைத்தால் நோய் அண்டாது. எனவே இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

    வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சாப்பிடும்போது, வெந்நீர் குடிப்பது அவசியம். இது, செரிமானத்தை சீராக்குவதுடன், கொழுப்புச் சேருவதைக் குறைக்கும்.

    மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் உட்கொள்ள வேண்டும். இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, உடல் கழிவுகளை நீக்கும்; வாயுவைத் தங்க விடாது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யும். 
    தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். மார்பக புற்றுநோய்க்கு மருத்துவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.
    தற்போதைய கணக்குப்படி பார்த்தால் எட்டு பெண்களில் சுமார் ஒரு பெண் மார்பக புற்று நோயால் அவதிப்படுகிறார். இந்தியாவை பொருத்த வரை மார்பக புற்று நோய் என்பது சாதாரணமாக பரவி காணப்படுகிறது. கருப்பை வாய் புற்று நோய்களும் இங்குள்ள பெண்களிடையே அதிகமாக காணப்படுகின்றன. சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம்.

    * முளைகளில் மாற்றம் - முளைகளில் ஒருவிதமான வறட்டுத்தன்மையுடனான ரெட்டிஷாக இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்ளவும்.

    * நரம்புகள் வளர்தல் - பால் சுரக்கும் காலம் இல்லாமல் மார்பகங்களில் புதிதாக நரம்புகள் தடிமனாவதைப் பார்த்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் கேன்சர் கட்டி உருவாகி அதற்கான ரத்தத்தை ரத்த ஓட்டப்பாதையை மாற்றி பெற்றுக்கொள்வதன் அறிகுறியாக இருக்கலாம்.

    * நீர் அல்லது ரத்தம் சுரத்தல் - பால் சுரப்பு  அல்லாத காலங்களிலும் மார்பகங்களில் வெள்ளையாக பால் போன்றோ, நீரோ, ரத்தமோ வெளிவருவது புற்றுநோயின் முக்கியமான அறிகுறி.

    * மார்பகங்களில் தோன்றும் ரெட்டிஷ்னஸ் - மார்பகங்களில் ரெட்டிஷாக இருப்பது பால் கொடுக்கும் போது இயல்வானது. ஆனால் அதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டும் அந்தத்தன்மை மாறாமல் தொடர்ந்தால் மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.



    * முளைகள் உள்றே குழிதல் - முளைகள் உங்கள் மார்பங்களுக்கு உள்ளே குழிவதை கண்டால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.

    * வெளிப்பகுதியில் கட்டி - மார்பகத்தில் வெளிப்பக்கத்தில் கட்டி உருவானால் அது உங்களுக்கு இயல்பானது இல்லை என்று தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும், சிலருக்கு சூட்டின் காரணமாகவோ, வேறு சில இயல்பான காரணங்களாலோ அப்படிக் கட்டிகள் வரலாம்.

    * பெரிய கட்டி - மார்பகங்களில் பெரிய கட்டி தென்பட்டால், அது மார்பகப் புற்றுநோயின் தீவிரமான அறிகுறியாக இருக்கலாம்.

    * மார்பகத்தோல் தடிமனாதல் - பால் சுரக்கும் போதும் மாதவிடாய் காலங்களிலும், மார்பகம் கடினமாவது இயல்பானது. ஆனால் எல்லா நேரங்களிலும் தோல் தனிமனாக இருப்பதோ, மார்பகத்தினுள் இருக்கும் அந்தத் தடிமனான பகுதி பெரிதாகிக்கொண்டோபோவதோ மார்பகப்புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

    * மார்பகத்தோல், ஆரஞ்சுப்பழத்தோல் போன்று மாறுதல் - நிறைய சிறிய சிறிய குழிதல்களுடன் மார்பகத் தோல், ஆரஞ்சுப் பழத்தின் தோல் போன்று தோற்றம் அளித்தல், மார்பகப் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும்.
    பெண்கள் இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.
    கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும் பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான். முக்கியமாக சாதாரண மெலிந்த தேகத்துடன் இருக்கும் பெண்கள் கூட, திருமணத்திற்கு பின் எடை அதிகரித்து கூடுதல் உடல் பருமனை பெற்று விடுகிறார்கள்.

    சந்தோஷமான சூழ்நிலை, விசேடமான விருந்து உபசரிப்பு முதலியவை காரணமாக பெண்கள் திருமணத்திற்கு பின் உடல் பருமனை பெறுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது. இதனை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையோடு கூடிய உணவு பழக்கவழக்கங்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அத்துடன் உடலில் கொழுப்பு சேரக்கூடிய உணவு பதார்த்தங்களை பெரிதும் தவிர்த்தலும் வேண்டும்.

    முதல் பிரசவத்திற்கு முன்பாக உடல் பருமன் அதிகமாவதால் பெண்கள் பலவிதத்திலும் உடல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே திருமணத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் ஒரே சீரான உடல் பருமன் கொண்டு விளங்குவதற்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெறுவதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக மிக அவசியமாகும்.

    கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் அவசியமான, உணவிலிருக்கும் ஒரு முக்கியமான மூலக்கூறு. ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தி தரும் (கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தானது 4¾ கலோரியை மட்டுமே தரும்).

    கொழுப்புச் சத்தானது கொழுப்பு அமிலங்களாக (Fatty Aci ds) கிளிசரால் ஆகவும் கிளைகோஜென் ஆகவும் சேமித்து வைக்கப்படுகிறது.

    இப்படியாக கொழுப்பு, உடலில் சேமித்து வைக்கும் தன்மை உடையதாகவே உள்ளது. உடனடி எனர்ஜி தேவைக்கு அவசியமான மாவுச் சத்தைவிட அதிகப்படியான மாவுச்சத்தும் (அரிசிப் பதார்த்தங்கள்) கொழுப்பாகவே சேமிக்கப்படுகிறது.

    அதனால், உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பது மட்டுமே பிரச்சனை அல்ல. நம் மக்களின் உணவில் அரிசிப் பதார்த்தங்கள், பெரிய வாழைப்பழம், மாம்பழம், இனிப்பு போன்ற மாவுச்சத்து அதிகமாக இருப்பதும் இதற்குக் காரண மாகலாம். கொழுப்பு உடலுக்கு சக்தியையும் சூட்டையும் தருவது மட்டுமல்ல. சிறு உறுப்புகளையும் நரம்புகளையும் பாதுகாக்கும் உறைகளுக்கும் அவசியம்.



    விட்டமின்கள் A, D, E- K போன்ற முக்கியமான விட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடியவை. இதனாலும், கொழுப்பு மிக முக்கியமானது. அட்ரீனல் மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கும் கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியமானவை.

    கொழுப்பில் கரையும் விட்டமின்களை விட்டமின் D என்று கூறுவார்கள். இவை குறைந்தால் பலவித சரும நோய்கள், பித்தப்பை கல், தலைமுடி உதிர்தல், வளர்ச்சி குறைவு, மலட்டுத்தன்மை, சிறுநீரக ப்ராஸ்டேட் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் உருவாகும்.

    குடலில் விட்டமின் B உருவாவதற்கும் கொழுப்புச்சத்து அவசியம். மூளையின் நினைவாற்றலுக்கும் கொழுப்பு மூலக்கூறுகள் முக்கியம்.

    ஆனால் இவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது, ஏனென்றால் அதிகப் படியான கொழுப்பு சேரும் போது அது தொடர்பான பலவித உடல் உபாதைகளும் தொற்றிக் கொள்ளும்.

    ஒருவரது உணவில் 65% மாவுச்சத்தும் 25% புரதச்சத்தும் 5-10% கொழுப்புச்சத்தும் இருந்தாலே போதுமானது. இவற்றோடு, காய்கறிகள், பழம், பருப்பு (Nuts) என இருப்பதையே சமச்சீர் உணவு என்கிறோம்.

    துரித உணவு (Fast Food), வாரக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போகாமல் இருக்கும்படி தயாரிக்கப்படும் உணவு (Frozen Food), ஹொட்டேல் உணவுபோலவே வீட்டுச் சமையலில் எண்ணெய் அதிகமாக்கி வறுத்தவை (Fried food), அதிகம் பொரித்த உணவுகள் (Deep Fried Food), நெய்யும் இனிப்பும் அதிகமுள்ள உணவுகள் ஆகியவையும் கூட, இப்போது பாரம்பரிய உணவுமுறையிலும் ஊடுருவி விட்டது.

    இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்கச் செய்யும் வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனப் பயன்பாடு போன்றவையும் சேர்ந்து, கொழுப்பை அதிகரித்து உடல் நலத்தை பாதிக்கிறது.

    ஒவ்வொரு நாள் உணவிலும் 5 சத விகிதம் கொழுப்பு, நிறைய காய்கறிகள், குறைவான அளவில் பழம் ஆகியவை அவசியம். மிகக்குறைவான ஆல்ஹகால் மற்றும் தவிர்க்கப்பட்ட புகைப்பழக்கம் ஆகியவை நல்லது. எடை குறைப்பு மற்றும் ரத்தக்கொ திப்பு, சர்க்கரை நோய், சரியான கட்டுப்பாடு என்பது மிக அவசியம்.

    நோய் என்று வருமுன்பே பூமியிலே கால் பதியுங்கள். சுத்தமான காற்றைச் சுவாசித்து, மற்ற மனிதர்களையும் நேரில் கண்டு, உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் அசைவே உயிர்! இது உடற்பயிற்சியினால் மட்டுமே சாத்தியம். உணவினாலோ, மருந்தின் மூலம் மட்டுமோ சாத்தியமில்லை!

    ×