என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    இன்றைய பெண்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறி வரும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க அதிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
    உடலில் சுரக்கும் இன்சுலின் போதுமான அளவு இல்லாமல் போவதால் நீரிழிவு நோய் வருகிறது. குடும்பத்தில் அம்மா அல்லது அப்பாவுக்கு நீரிழிவு நோய் இருந்தாலோ, உடல் பருமனாக இருந்தாலோ நீரிழிவு நோய் பாதிப்பதற்கான சாத்தியம் அதிகம்.

    பெண்களையும் அதிகம் தாக்கும் இந்த நோயின் பின்விளைவுகள் பலருக்குத் தெரிவதில்லை. அடிக்கடி சிறுநீர் கழித்தல், பிறப்புறுப்பில் அரிப்பு, அதிக தாகம் எடுத்தல், நாக்கு வறட்சி, அதிக பசி, சோர்வு, எடை குறைதல், தோலில் அரிப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும் பெண்கள் உடனடியாக ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த பெண் மட்டுமல்லாமல் அவரை சார்ந்திருப்பவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    முறையான உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். நீரிழிவு நோய் உள்ள பெண்கள் நேரம் தவறாமல் சாப்பிடாவிட்டால் சர்க்கரை அளவு குறைந்து நினைவிழக்கும் அபாயம் உள்ளது. அளவுக்கு அதிகம் சாப்பிடுபவர்கள், இனிப்பு சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாமல் பல தொந்தரவுகளை கொடுக்கும்.



    ஒரு பெண்ணுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால் அவர் மட்டுமல்லாமல் அவருடன் இருப்பவர்களுக்கும் பொறுப்பு அதிகம். ஏனென்றால் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் பெண்கள், தங்களை கவனித்துக் கொள்வதில்லை. இந்த வழக்கத்தை பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    சர்க்கரை நோய் பெண்களையே அதிகம் தாக்குவதாகவும், மாதவிடாய் நின்ற பெண்களிடம் நீரிழிவு நோய் அதிகமாக காணப்படுவதாகவும் மருத்துவ ஆய்வு சொல்கிறது. இந்த நோய்க்கு 1923-ம் ஆண்டு இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதை கண்டுபிடித்த கனடா நாட்டு மருத்துவர் பிரெட்ரிக் பேன்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி, உலக நீரிழிவு நோய் நாளாக 1991-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய பெண்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறி வரும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க அதிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நமக்கான வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்காமல் நாமே இழுத்துப்போட்டு செய்தாலே சர்க்கரை நோயில் இருந்து பாதி விடுபடலாம். 
    பெண்களின் வித்தியாசமான உயிரில் கட்டமைப்பும், ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன.
    நாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநலப் பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு அதிகம். பெண்களின் வித்தியாசமான உயிரில் கட்டமைப்பும், ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன.

    உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி, பெண்கள் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சனைகளில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது மன இறுக்கமாகும். அதே சமயம் ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் ஏராளமாக இருக்கலாம். இதற்குக் காரணம், பெரும்பாலான சமயங்களில் அவை வெறும் திடீர் மனநிலை மாற்றங்களாக வந்து சென்றுவிடுகின்றன, ஏதோ சில நாட்கள் நீடிக்கும் மன இறுக்கமாகக் கருதப்படுகின்றன, அவை தானாக சரியாகிவிடும் என்று கண்டுகொள்ளப்படுவதில்லை.

    உண்மையில், மனதை வருத்தும் சோகமும், நம்பிக்கையின்மையும் இருக்கும் நிலையே மன இறுக்கமாகும். தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாகத் தூங்குவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது, நம்பிக்கை இழந்த உணர்வோடு காணப்படுவது, தன்னைப் பற்றிய மதிப்பின்றி இருப்பது, சோர்வாக இருப்பது போன்றவை மன இறுக்கத்தின் பிற அறிகுறிகளாகும்.

    மேலே குறிப்பிட்ட அறிகுறிகளும், திடீர் மனநிலை மாற்றங்களும், எரிச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவையும் மன இறுக்கம் உள்ளது என எச்சரிக்கும் அடையாளங்களாகும்.

    இந்த அறிகுறிகளில் ஒன்றோ, சிலவோ இரண்டு வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடித்தால், உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியமாகும். 
    பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையின் அறிகுறிகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் பார்க்கலாம்.
    பெண்களுக்கு எந்த வயதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையின் அறிகுறிகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் பார்க்கலாம்.

    * பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில், சீரான ரத்தப்போக்கு இருக்காது. முதல் இரண்டு நாள்களிலேயே ரத்தப்போக்கு நின்றுவிடுவது அல்லது மாதவிடாய்க் காலம் முடிந்தும் அதிகமான ரத்தப்போக்கு வெளியேறுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    * திருமணமான பெண்களுக்கு, ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். கருத்தரிப்பதில் சிக்கல், கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படும். முப்பது வயதைக் கடந்தவர்களுக்கு இதன் அறிகுறியாக உடல் பருமன் ஏற்படும். இதை, ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை பெறுவது அவசியம்.



    * ஹார்மோன் குறைபாட்டால், பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படும் நோய் – தைராய்டு! இந்த நோயில், இரண்டு வகைகள் உண்டு – ஹைபர்தைராய்டு (Hyperthyroidism) மற்றும் ஹைபோதைராய்டு (Hypothyroidism). ஆனால், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படுவது தைராய்டு சுரப்பிக் குறைபாட்டால் ஏற்படும் ஹைபோதைராய்டு. ஆரம்பக் காலத்திலேயே, தகுந்த மாத்திரைகள் மூலம் இதைச்  சரிசெய்துவிட முடியும்.

    * ஹார்மோன் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு நோய் பிசிஓடி என்கிற பாலிசிஸ்டிக் ஓவரி நோய் (Polycystic Ovarian Disease). இந்த நோயின் தாக்கத்தால், முகத்திலும் கைகளிலும் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், மன உளைச்சல், முடி உதிர்வது, எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    * பச்சைக் காய்கறிகளை அதிகமாக உண்பதும் பீட்சா, பர்கர் பதப்படுத்திய குளிர்பானங்கள், துரித உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்ப்பதும் இன்றைய காலகட்டத்தில் ஹார்மோன் சமநிலையின்மையில் இருந்து ஓரளவு காக்கும்.
    குடும்ப வாழ்க்கையில் செக்ஸ் சிக்கலே பல அடிப்படை பிரச்சினைகளுக்கான காரணமாக இருக்கிறது. எனவே செக்ஸ் சிகிச்சை குடும்ப வாழ்க்கையை வளப்படுத்தும்.
    தள்ளிப்போடக்கூடாத தாம்பத்திய சிகிச்சைக்கான விளக்கம்

    “குடும்ப வாழ்க்கையில் செக்ஸ் சிக்கலே பல அடிப்படை பிரச்சினைகளுக்கான காரணமாக இருக்கிறது. எனவே செக்ஸ் சிகிச்சை குடும்ப வாழ்க்கையை வளப்படுத்தும்” என்கிறார்கள் பாலியல் வல்லுனர்கள்.

    எத்தனையோ பிரச்சினைகளுக்காக மருத்துவரை நாடுகிறோம். ஆனால் செக்ஸ் சிகிச்சைக்காக மருத்துவரை நாடுவதற்கு எப்போதுமே தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. “குடும்ப வாழ்க்கையில் செக்ஸ் சிக்கலே பல அடிப்படை பிரச்சினைகளுக்கான காரணமாக இருக்கிறது. எனவே செக்ஸ் சிகிச்சை குடும்ப வாழ்க்கையை வளப்படுத்தும்” என்கிறார்கள் பாலியல் வல்லுனர்கள்.

    இரவு 10 மணியை தாண்டிவிட்டாலே தொலைக்காட்சிகளில் செக்ஸ் தொடர்பான ஆலோசனைகள் அலைமோதுகின்றன. முகம் காட்டிக் கொள்ளாமல் கலந்துரையாடும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் தங்கள் பாலியல் சந்தேகங்களை கேட்கத்தான் செய்கிறார்கள். நேயர்கள் நேரடியாக கேட்கத் தயங்கும் செக்ஸ் பிரச்சினைகள் பற்றி மருத்துவ நிபுணரும், தொகுப்பாளரும் பேசித்தான் வருகிறார்கள். ஆனாலும் செக்ஸ் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு தம்பதிகளிடம் முழுமையாக ஏற்படவில்லை என்கிறார்கள் பாலியல் மருத்துவ நிபுணர்கள்.

    தம்பதியர் ஒவ்வொருவரும் வாழ் நாளில் சிலமுறை செக்ஸ் சிகிச்சைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என்கிறார்கள் அவர்கள். தள்ளிப்போடாமல் செக்ஸ் சிகிச்சை எடுத்துக் கொள்வது தாம்பத்தியத்திற்கு நல்லது என்கிறது ஆய்வு.

    பெரும்பாலான தம்பதிகளுக்கு இடையே தாம்பத்திய பிரச்சினைகள் தலைதூக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் சிகிச்சைக்கு செல்ல தயங்குபவர்களே அனேகம். நெருக்கமான நட்பு வட்டாரத்தில் செக்ஸ் அரட்டைகள் அரங்கேறினாலும், சொந்த செக்ஸ் பிரச்சினை பற்றி அலசுவதில்லை. எங்கே ரகசியம் கசிந்துவிடுமோ என்ற அச்சமும், தவறாக புரிந்து கொள்வார்களோ, வேறுவித பிரச்சினைகளை உருவாக்குமோ? என்ற தயக்கமும் அதற்கு காரணம்.

    ஆனால் செக்ஸ் பிரச்சினைகள் மூடி மறைக்கக்கூடியவை அல்ல. சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியவை. செக்ஸ் தெரபி எனப்படும் செக்ஸ் சிகிச்சை பற்றிய கண்ணோட்டம் இன்றைய தம்பதிகள் பலருக்கு தெரிந்திருப்பதில்லை. தம்பதிகள் மிகவும் அரிதாகவே செக்ஸ் சிகிச்சைக்கு வருகிறார்கள். செக்ஸ் தொடர்பான அறியாமையே இந்த தயக்கத்திற்கு காரணம்.



    செக்ஸ் தெரபி என்பது தயக்கமும், தடுமாற்றமும் கொண்டது அல்ல. அந்த சிகிச்சையை நினைத்து இஷ்டத்திற்கு கற்பனை செய்துகொண்டு கஷ்டப்படவேண்டியதில்லை. அதுவும் ஒரு உளவியல் சிகிச்சை முறைதான். பேச்சு மூலமாகவும், பழக்க வழக்கம் மூலமாகவும், அணுகுமுறை மூலமாகவும், தம்பதியரிடையே இணக்கத்தை வளர்ப்பதே செக்ஸ் தெரபி. பாலியல் நிபுணர் மற்றும் உளவியல் வல்லுனர்கள் இந்த சிகிச்சையை தருகிறார்கள்.

    “தம்பதிகளின் உறவில் இச்சை, வேட்கை, உச்சம் ஆகிய மூன்று கட்டங்கள் உண்டு. ஆண்-பெண் விருப்பத்தில் இருக்கும் மாற்றங்களால் ஒவ்வொரு கட்டத்திலும் இருவருக்கும் திருப்தியின்மை, பிரச்சினைகள் ஏற்படலாம்” என்கிறார்கள் பாலியல் மருத்துவ நிபுணர்கள்.

    பொதுவாக எந்தெந்த மாதிரியான பிரச்சினைகள் இருக்கும் என்பதையும் அவர்கள் விளக்கு கிறார்கள். ஆண்களுக்கு விரைப்புத்தன்மை, விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். விருப்பமில்லாமை பெண்களுக்கு பலவிதங்களில் பாதிப்பை உருவாக்கலாம்.

    “மூன்றில் ஒரு பங்கு பெண்களே உச்சம் அடைதல் (ஆர்கசம்) என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள், அனுபவித்து உள்ளார்கள். மற்றவர்கள் அது என்னவென்றே அறியாமலேயே தாம்பத்தியம் அனுபவிக்கிறார்கள்” என்கிறது ஒரு செக்ஸ் ஆய்வு. முழுமையற்ற முறையில் நடைபெறும் தாம்பத்தியங்களே இதற்கு காரணம்.

    பெண்களுக்கு உறவின்போது வலி ஏற்படலாம். ஆரம்பகால உறவின்போது ஏற்படும் வலியல்ல இது. மருத்துவ உலகம் இந்த வலியை ‘வாஜினிஸ்மஸ்’ என்று குறிப்பிடுகிறது. மனமும், உடலும் சரிவர ஒத்துழைக்காமல் ஏற்படும் உறவு இந்த வலியை உருவாக்கும்.

    பொதுவாகவே பெண்கள் செக்ஸ் பிரச்சினைகள் பற்றி பேச மிகவும் தயங்குவார்கள். மூடிய கதவுகளுக்கு பின்னால் நடக்கும் விஷயம் இதுவென்பதால் தீர்வுகளும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. அவர்கள் உச்சம் அனுபவிக்கவில்லை என்றாலும், அதுபற்றி கணவரிடம் பேசி பிரச்சினையை தீர்க்க விரும்புவதில்லை என்பதே உண்மை. இன்பம் அளிப்பது தனது கடமை, கணவர் திருப்தி அடைந்தால் போதும் என்றே பெண்கள் நினைத்துக் கொள்கிறார்கள். கணவரும், மனைவியின் உணர்வை புரிந்து கொள்வதில்லை.

    “ஆனால் பெண்களின் இந்த மன அடக்கம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டியதல்ல. செக்ஸ் சிகிச்சை தேவைப்படும் தருணம் அது.” என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்கள்.



    ஒருவரின் செக்ஸ் ஆசையால் மற்றவர் தூண்டப்பட்டு ஏற்படும் உறவே செக்ஸ் சிகிச்சைக்கு அடித்தளம் அமைக்கிறது. இருவரின் இணக்கம் இல்லாமல் ஏற்படும் உறவுகள் எப்போதும் திருப்தி தருவதில்லை. வெளிப்படுத்த முடியாவிட்டாலும் அது உண்மையே. இத்தகைய தருணத்தில்தான் செக்ஸ் சிகிச்சை அவசியம்.

    அது சரி, செக்ஸ் சிகிச்சை எப்படி நடைபெறும்?

    “பொதுவாகவே செக்ஸ் சிகிச்சையின்போது முதலில் மருத்துவ நிபுணர்கள், தகவல்களின் ரகசியத்தன்மை குறித்து உறுதி அளிப்பார்கள். ஆலோசனை கேட்பவரின் பிரச்சினை பற்றி முதலிலேயே எந்த மதிப்பீடும் செய்யமாட்டார்கள். நம்பிக்கையும், இணக்கத் தன்மையும் உருவாக்க மேலும் தகவல்களை கேட்டுப் பெறுவார்கள். பின்னர் சிகிச்சை முறை பற்றி தீர்மானிப்பார்கள். அதுபற்றி ஆலோசனை கேட்பவரிடமும் விளக்கம் தருவார்கள். சம்மதத்தின் பெயரிலேயே பிரச்சினைக்கேற்ற சிகிச்சையை தொடங்குவார்கள்.

    பொதுவாக சிகிச்சையின் ஆரம்பத்தில் செக்ஸ் தொடர்பான தவறான எண்ணங்களை விளக்கி, அதிலிருந்து விடுபட ஆலோசனை தருவார்கள். ஆடைகளை அகற்றி, உடலுறவு முறைகள் பற்றிய செயல்முறை விளக்கம் எதுவும் சிகிச்சையில் கிடையாது, துணையுடன் கூட உறவு கொள்ள வைத்து பாடம் நடத்தமாட்டார்கள்.

    ரகசியத் தன்மையை பாதுகாத்து, கூச்சத்தையும், பயத்தையும் போக்கி தம்பதிக்குள் இணக்கம் ஏற்பட வைப்பதே செக்ஸ் சிகிச்சை. திருப்தியான தாம்பத்தியமே சிகிச்சையின் நோக்கம்.

    தம்பதியரில் ஒருவர் மட்டும் செக்ஸ் சிகிச்சை பெறுவதால் பயன் கிடைப்பதில்லை. இருவருமே தங்களை சிகிச்சைக்கு உட்படுத்தும்போது சிறந்த பலன் கிடைக்கும்” என்பது மருத்துவர்களின் விளக்கம்.

    திறமையான மருத்துவரிடம், செக்ஸ் சிகிச்சை பெற்று தாம்பத்திய திருப்தியை ஏற்படுத்துவது குடும்பத்திற்கும் நல்லது. சமூகத்திற்கும் நல்லது.
    ‘படுக்கை அறையில் டி.வி. இருந்தால், அவர்களுக்குள் தாம்பத்திய ஆசை குறைந்துவிடும்’ என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    ‘படுக்கை அறையில் டி.வி. இருந்தால், தம்பதிகள் அதில் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டே இருந்தால், அவர்களுக்குள் தாம்பத்திய ஆசை குறைந்துவிடும்’ என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    ‘நாள் முழுவதுமான பரபரப்பான வேலைக்குப் பின்பு வீட்டில் படுக்கையில் சாய்ந்தபடி டி.வி. நிகழ்ச்சியை கண்டுகளிப்பது போல ரிலாக்ஸ் அளிப்பது எதுவும் இல்லை’ என்று சிலர் சொல்வார்கள். அப்படி சொல்பவர்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் திருமணமானவராய் இருந்தால்தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

    இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், ‘ படுக்கையறையில் டி.வி. இல்லாத தம்பதிகளுடன் ஒப்பிடும்போது, படுக்கையறையில் டி.வி. உள்ள தம்பதிகள் பாதி எண்ணிக்கையில்தான் தாம்பத்தியம் வைத்துக்கொள்வதாக’ தெரியவந்திருக்கிறது. அங்கே அவர்களது மனம் கவர்ந்த டி.வி., தாம்பத்திய சங்கீதத்தில் குறுக்கீடு செய்துவிடு கிறது.

    இங்கிலாந்து ஆய்வு முடிவை பல்வேறு நாட்டினர் ஒத்துக்கொள்ளவே செய்கிறார்கள். இதில் இந்தியர்கள் நிலை என்னவாம்?



    வீட்டில் எங்கு வேண்டுமானாலும் டி.வி.யைவைத்து நிகழ்ச்சிகளை பாருங்கள். ஆனால் அதை படுக்கை அறைக்குள் மட்டும் நுழையவிடாதீர்கள். படுக்கை அறையில் உள்ள டி.வி., உங்கள் தாம்பத்திய வாழ்க்கையைச் சிதைத்து விடுகிறது. வீட்டில் ஒவ்வொரு அறையிலும் ஒரு டி.வி. வைப்பது இப்போது பேஷனாகிவிட்டது. அதன் விளைவு, தம்பதிகளுக்கு டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குத்தான் நேரம் இருக் கிறதே தவிர, தங்களுக்குள் பேச நேரம் இல்லாமல் ஆக்கிவிடு கிறது. பேசவே நேரம் இல்லாத படுக்கை அறையில் தாம்பத்தியம் திருப்தியாக அரங்கேறுவது கடினம்.

    படுக்கையறையில் கொஞ்ச நேரம் ரிலாக்சாக டி.வி. பார்ப்பதில் தவறில்லையே? சொல்லப் போனால் பாலியல் ஆர்வத்தை தூண்டும் படம் ஒன்றை பார்த்தால் ‘மூடு’ வருமே என்று சிலர் வாதிடுகிறார்கள். நிஜத்தில் அவ்வாறு நடப்பதில்லை என்பதே உண்மை.

    படுக்கை அறையில் இருந்து டி.வி.யை அப்புறப்படுத்துவது சரியான முடிவுதான். டி.வி.யும் மதுபானம் போலத்தான். ஆசையைத் தூண்டும், ஆனால் செயல்பட விடாது. நீங்கள் டி.வி.யை பொது அறையிலேயே வையுங்கள். அப்போதுதான் நீங்கள் குடும்பத்தினருடன் அதைப் பகிர்ந்துகொள்வீர்கள். படுக்கையறை நீங்கள் மட்டுமே ஆசை என்கிற பசியை போக்கும் இடமாக இருக்கட்டும். நீங்கள் சராசரியாக ஒருநாளைக்கு 6 மணி நேரம் டி.வி. பார்க்கிறீர்கள் என்றால், அதை 3 மணி நேரமாகக் குறைக்கலாம். டி.வி.க்கு ஒதுக்கும் நேரத்தைக் குறைத்து, ஜோடியாக கழிக்கும் நேரத்தைக் கூட்டுங்கள்.

    இது தம்பதிகள் மிகவும் கவனிக்கவேண்டிய விஷயம்தான்!
    45 சதவீதம் பெண்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சிறுநீர் கசிவின் பாதிப்பு ஏற்பட்டு விடுவதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    வயது சற்று கூடிய சிலர் கூறும் குறைபாடு சிறுநீர் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாகவே கசிவது. இதனால் அவர்களுக்கு அதிக சங்கடம் ஏற்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுகின்றனர். 45 சதவீதம் பெண்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டு விடுவதாகக் கூறப்படுகின்றது. இந்த பாதிப்பு ஏற்பட இரண்டு முக்கிய பிரிவு இருக்கின்றது.

    * முதல் பிரிவு இருமல், தும்மல், உடற்பயிற்சி, ஓடுதல், இவற்றின் பொழுது பலவீனமடைந்த இடுப்பு தசை சதைகளால் சிறுநீர் கசிவு ஏற்படலாம்.

    * சில சமயங்களில் பகலோ, இரவோ கட்டுப்படாத அவசரம் சிறுநீர் வெளிப் போக்கில் ஏற்படலாம். இது அதிக எடையுள்ள பெண்கள், நரம்பு பாதிப்பு உடையோர், சர்க்கரை நோய் மற்றும் பக்க வாத பாதிப்பு உடையோர் ஆகியோரிடம் காணப்படும் வாய்ப்புகள் அதிகம். அதிக கேபின், சில வகை மருந்துகள் இந்த பாதிப்பினை அதிகரிக்கச் செய்யலாம்.

    * இத்தகைய பாதிப்புகளின் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுங்கள். மருத்துவ ஆலோசனை பெற்றே இதனை சரி செய்ய முடியும். தொடைகளில் புண், அரிப்பு, அலர்ஜி இல்லாது கவனம் செலுத்த வேண்டும். கசிவுகளுக்காக சில பாதுகாப்பு முறைகளை அறிந்து வெளியில் செல்லும் பொழுது அதனை பின்பற்றலாம். உட்கொள்ளும் நீரின் அளவினை தேவையான அளவே எடுத்துக் கொள்ளுங்கள்.

    * எடையினை குறையுங்கள்.

    * உடற்பயிற்சி செய்யுங்கள். சுறுசுறுப்பாக இருக்கும் பெண்ணிற்கு இப்பாதிப்புகள் அதிகம் ஏற்படாது. மருத்துவ உதவியும், பயிற்சி முறைகளுமே இந்த பாதிப்பிற்கு சிறந்த முன்னேற்றத்தினை அளிக்கும்.



    செல்களை புதுப்பிக்கும். பொழுது இந்த ஹார்மோன் அளவு குறையும். சில முயற்சிகளை எடுப்பதன் மூலம் ஹார்மோன் அளவினை காக்க முடியும்.

    அதிக அளவு இன்சுலின் வளர்ச்சி ஹார்மோனை குறைக்கும். அதுவும் அதிக எடை உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு கூடும். ஆக அதிக சர்க்கரை உணவுகளை தவிருங்கள். சர்க்கரை பாதிப்பு சிறிது இருக்கும் பொழுதே வாழைப்பழம், திராட்சை போன்ற உணவுகளைத் தவிருங்கள். பதிலாக மெல்லிய புரதங்கள், முழு தானிய உணவு, பச்சை கீரை, காய்கறி உணவுகள் இவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள். எடை குறையும் பொழுது வளர்ச்சி ஹார்மோன் அளவு கூடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை. 8 மணி நேர தொந்தரவு இல்லா தூக்கம் அவசியம். இது குறையும் பொழுது வளர்ச்சி ஹார்மோன் அளவும் குறையும். நீங்கள் தூங்கும் பொழுதே உங்கள் உடல் அதிக வளர்ச்சி ஹார்மோனை உருவாக்கும்.

    தொடர்ந்து மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு ஹார்மோன் தாறுமாறாக இருக்கும். அதிக மனஉளைச்சலை உருவாக்கும். கார்டிசால் வளர்ச்சி ஹார்மோன் அளவை குறைத்து இன்சுலின் எதிர்ப்பினை உருவாக்கி எடையையும் கூடச்செய்து உடல் பாதிப்பினையும் ஏற்படுத்தி விடும். ஆக மன உளைச்சலினை யோகா, தியானம் மூலம் எடுத்துவிடுவது மிகுந்த உடல் ஆரோக்கியத்தினை அளிக்கும்.

    அவ்வப்போது உபவாசம் இருக்க வேண்டும். அவ்வப்போது ஒரு வேளை உண்ணாவிரதம் இருப்பது உங்களது வளர்ச்சி ஹார்மோனை உயர்த்தும். பொதுவில் எளிதான உணவு சைவ உணவு, பழ, காய்கறி உணவுகளை உண்பதே நல்லது. முடிந்தால் மாதம் ஒருநாள் வெறும் நீர் அல்லது திரவ உணவு கொண்டு 24 மணி நேரம் உண்ணாமல் இருக்கலாம்.

    உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் வளர்ச்சி ஹார்மோனை உயர்த்தி விடும். சற்று வேகமான பயிற்சிகள் கூட பயிற்சியாளர் அறிவுரைப்படி செய்யலாம்.

    தரமான புரதம், மீன் உணவு இவை மிகவும் சிறந்தது.

    மேற்கூறிய முறைகளை கடை பிடித்தால் ஆரோக்கியம் என்றும் நம் கையில் தான்.
    கர்ப்ப காலத்தில், உடல் எடை கூடுவது குறித்து, நிறைய பெண்களுக்கு கவலை இருக்கிறது. இயற்கை முறையில் உடல் எடையை குறைக்கும் வழிகளை பார்க்கலாம்.
    கர்ப்ப காலத்தில், சராசரியாக, ஏழு முதல், 15 கிலோ உடல் எடை அதிகரிக்கும். குழந்தை பிறந்த பின், தாய்க்கு போதிய கவனிப்பு கிடைப்பதில்லை. அடிக்கடி தாய்ப்பால் தர வேண்டியிருப்பதால், தாய்க்கு போதிய துாக்கமும் இருக்காது. குழந்தை பிறந்தவுடன், தானாகவே ஐந்து முதல் ஆறு கிலோ உடல் எடை குறைந்துவிடும்.

    டெலிவரிக்குப் பின் உணவு ரொம்ப முக்கியம். காரத்திற்கு பதில் மிளகு, சுத்தமான பசு நெய், உணவில் சேர்த்து சாப்பிடலாம். அதிக கொழுப்பு சேர்க்கக் கூடாது. பால் சுரப்பிற்கு உதவும் பூண்டு, உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பத்திய சாப்பாடு என, செய்து தருவர். அது, இந்த சமயத்தில் மிகவும் நல்லது. காய்கறி, பழங்கள், பால் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்; அது துாங்கும் நேரத்தில் தான் துாங்க முடியும் என்பதால், நிறைய பெண்கள், ஆறு மாதங்கள் கழித்து, உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம் என, விட்டு விடுவர். இது தவறு. நார்மல் டெலிவரி என்றால், 10 நாட்கள் கழித்து, சிசேரியன் என்றால், ஒரு மாதம் கழிந்தவுடன் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.



    வட மாநில குடும்பங்களில், பசு நெய் அல்லது கோதுமை வைத்து மசாஜ் செய்வர். இது மிகவும் நல்லது. குறைந்தது, வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்யலாம். சிசேரியன் டெலிவரிக்குப் பின் உடற்பயிற்சி செய்தால், ஹெர்னியா வருமா என, நிறைய பெண்கள் கேட்கின்றனர். வயிற்றை அதிகம் சிரமப்படுத்தாமல், உடற்பயிற்சி செய்யலாம்.

    பிரசவத்திற்கு பின் பழைய உடல் எடைக்கு திரும்புவதற்கு, ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகலாம். தினமும் குறைந்தது, 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம். ஒரு நாளுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மூச்சுப் பயிற்சி, யோகா, நீச்சல் போன்றவற்றை செய்யலாம். பிரசவத்திற்கு பின், முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாவிட்டால், கர்ப்ப காலத்தில் அதிகரித்த, உடல் எடையை குறைப்பது சிரமம். ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பும் தனித் தன்மையானது. எனவே, உங்கள் டாக்டரின் ஆலோசனைகளைக் கேட்டு, பொருத்தமான வழிகளை பின்பற்றினால், நிச்சயம், அதிகரித்த எடையை குறைக்க முடியும்.
    என்னதான் பரபரப்பான வாழ்க்கை முறை என்றாலும், பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டியது மிகவும் அவசியம்.
    தலைவலி, முதுகுவலி போன்ற சாதாரண உடல் உபாதைகள் தொடங்கி மனநலம் சார்ந்த பிரச்னைகள், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகிய தீவிர நோய்கள் வரை பணிக்குச் செல்லும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் பலர், தங்களுக்கு ஒரு நோயின் அறிகுறி ஏற்பட்ட பின்னர்கூட, நேரமின்மை அல்லது அலுவலகப் பணிச்சுமை காரணமாக மருத்துவரிடம் செல்வதில்லை. ஆனால், என்னதான் பரபரப்பான வாழ்க்கை முறை என்றாலும், பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டியது மிகவும் அவசியம்.

    * வேலைக்குச் செல்லத் தொடங்கும் ஆரம்பகாலத்தில், உணவைப் பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடப் பழகுவது நல்லது. இதை, `ஸ்ப்ளிட் – மீல் ப்ளான்’ (Split-meal plan) என்று கூறுவோம். காலையில் இட்லி, தோசை போன்ற உணவுகள், 11 மணியளவில் பழரசங்கள் அல்லது பழங்கள் சாப்பிடுவது, மதியம் கொஞ்சம் சாதம், நிறைய காய்கறிகள், மாலை நேரத்தில் சுண்டல் போன்ற ஸ்நாக்ஸ், இரவு உணவாக வரகு, சாமை உணவுகளைச் சாப்பிடலாம்.

    * இன்று பெரும்பாலான பெண்கள் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து அப்படி ஒரே பொசிஷனில் அமர்வது நல்லதல்ல. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஐந்து நிமிடங்களுக்கு நடந்துவிட்டு வரலாம். இது உடலை உற்சாகமாக வைத்திருக்கும்.

    * தினமும் அரைமணி நேரம் யோகா அல்லது தியானம் செய்வது நல்லது.



    * இரவு நேரம் ஷிஃப்ட் முறையில் வேலை பார்க்கும் பெண்கள், விழித்திருப்பதற்காக அடிக்கடி காபி, டீ அருந்துவார்கள். இதனால், உடல் எடை கூடுவதற்கு வாய்ப்புண்டு என்பதால் இவற்றைத் தவிர்க்கவும்.

    * ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் மூன்று கிலோமீட்டர்  அல்லது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது கட்டாயம்  நடக்க வேண்டிய தூரம். தவிர, குறைந்த தூரமுள்ள இடங்களுக்கு டூ வீலர் பயன்படுத்தாமல், நடந்தே செல்வது அல்லது  சைக்கிளில் செல்வது எனப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம்.

    * நைட் ஷிஃப்ட் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அவர்களின் வேலை நேரம், மொத்த ‘பயலாஜிக்கல் நேரத்தை’யும் மாற்றும்போது மாதவிடாய்ப்  பிரச்சனை ஏற்படலாம். உடற்பயிற்சி, சத்தான உணவுகள் மூலம் இதை ஓரளவு சீராக்க முடியும்.

    * சில பெண்களுக்குத் தொடர்ச்சியாகக் கணினித் திரையைப் பார்த்துக்கொண்டிருப்பது கண் எரிச்சலைத் தரும். இதைத் தவிர்க்க, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கணினியின் ஒளி உமிழும் திரையில் இருந்து கண்களை விலக்கி, உள்ளங்கைகளால் கண்களை மூடி, அந்தச் சில நிமிட அடர் இருட்டின் மூலம் அவற்றுக்கு ஓய்வு கொடுக்கலாம்.



    * அலுவலகத்தில் கர்ப்பிணிகள் நீண்ட நேரம் கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தால், கால்கள் லேசாக வீங்கும். டீ டைம், ஸ்நாக்ஸ் பிரேக் போன்ற நேரங்களில் சிறிது நேரம், சிறிது தூரம் நடந்துவிட்டு வந்தாலே சரியாகிவிடும்.

    * கர்ப்பிணிகள் சிலருக்கு எந்த மாதம் வரை வேலையைத் தொடரலாம் என்ற குழப்பம் வரும். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தும் மாறுபடும். வேலை செய்யும்போது உடலில் பெரிதாகச் சிரமங்கள், அசௌகரியங்களை எதிர்கொள்ளவில்லை எனில் ஒன்பதாவது மாதம்வரைகூட வேலைக்குச் செல்லலாம்.

    * வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் மற்றுமொரு முக்கியப் பிரச்சனை, முதுகுவலி. அலுவலகத்தில் அமரும்போதும் டூ வீலர் ஓட்டும்போதும் முதுகுப்பகுதி, நேராக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். நடப்பதும் தேவைப்பட்டால் மசாஜ் செய்துகொள்வதும் முதுகுவலிக்குத் தீர்வு தரும்.

    * பெண்களுக்கு ஏற்படும் தலைவலிக்கு, மாதவிடாய் காலம், மன அழுத்தம், சரியாகச் சாப்பிடாதது எனப் பல காரணங்கள் இருக்கும். உரிய மருத்துவ ஆலோசனையுடன் அந்தக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்கவும்.

    மாதவிலக்கு பற்றி மகள் எழுப்பப்படும் கேள்விகளும், தாய்மார்கள் அதற்கு அளிக்கவேண்டிய பதில்களும் விரிவாக இங்கே தரப்படுகின்றன.
    பெண் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்துக்கொண்டிருக்கும் அம்மாக்களின் மனதில், அந்த குழந்தைகள் வளரும்போது சில கேள்விகளும் வளருகின்றன. அவற்றில், ‘மகள் வயதுக்கு வரும்போது, முதல் மாத விலக்கை எதிர்கொள்ள அவளை எப்படி தயார்ப்படுத்துவது?’ என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது.

    பெண் குழந்தைகளின் வாழ்வில் மிக முக்கியமான தருணம், அவள் பூப்படைந்து பெண்ணாக மாறுவது. இயற்கையாக அவர் களது உடலில் ஏற்படும் அந்த முக்கிய திருப்பம், அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவேண்டும். மனக்கலக்கத்தை கொடுத்துவிடக்கூடாது.

    அவர்கள் கலக்கமடையாமல் இயல்பாக இருக்கவும், முதல் மாதவிலக்கை தயக்கமின்றி எதிர்கொள்ளவும், தாய்மார்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். மகளுக்கு அதை சொல்லிக்கொடுப்பது தாயாருக்கு எளிதான காரியம்தான். அது எப்படி என்பதை இங்கே விளக்குகிறேன்.

    உங்கள் மகளுக்கு எட்டு வயதாகிவிட்டால் பூப்படைதல் பற்றி அவளிடம் பேசத் தொடங்கிவிடுங்கள். ‘கடந்த தலைமுறையான நாங்களெல்லாம் 15, 16 வயதில் வயதுக்கு வந்தோம். இப்போது சிறுமிகள் 10 முதல் 15 வயதுக்குள் மாதவிலக்காகும் பருவத்தை எட்டிவிடுகிறார்கள். இப்போது உனக்கு எட்டு வயதாகியிருக்கிறது.

    இனி உனது உடல் வளர்ச்சியில் சில மாற்றங்கள் ஏற்படும். மார்பகங்கள் வளரத் தொடங்கும். அக்குள் மற்றும் சில பகுதிகளில் ரோமம் வளரும். இயற்கையான அந்த மாற்றங்கள் உன் உடலில் ஏற்படத்தொடங்கிவிட்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நீ பூப்படைந்துவிடுவாய்’ என்று சொல்லவேண்டும்.

    எட்டு வயது சிறுமி, மூன்று அல்லது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பாள். அவளுக்கு பள்ளி ஆசிரியை ஒருவர் பாடத்தை விளக்குவதுபோன்று இந்த தகவல்களை சொல்லாமல் தோழி போன்று நட்புடன் பக்குவமாக சொல்லிக்கொடுக்கவேண்டும்.



    ரத்தம் என்பது சிறுமிகளை பயப்படுத்தும் விஷயம். அதனால் ‘முதல் மாதவிலக்கில் ரத்தம் சிறிதளவு வெளிப்படும். அதை நினைத்து பயம்கொள்ள வேண்டாம்,’ என்று கூறவேண்டும். இப்போது பெரும்பாலான மாணவிகள் இரு பாலர்கள் பயிலும் பள்ளிகளில்தான் படித்துக்கொண்டிருக் கிறார்கள். பத்து வயதுக்கு மேல் வகுப்பில் வைத்து குறிப்பிடத்தக்க விதத்தில் அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், அது பூப்படைதலுக்கான அறிகுறியாக இருக்கலாம். அந்த அறிகுறி தென்பட்டதும் எந்த தயக்கமுமின்றி பாடம் நடத்தும் ஆசிரியரிடமோ, ஆசிரியையிடமோ அதை தெரிவிக்கவேண்டும். இது இயற்கையானது என்பதால் பதற்றமின்றி ஆசிரியையை அணுக ஊக்குவியுங்கள்.

    மகளிடம் பூப்படைதல் பற்றி பேசி, அவளது சந்தேகங்களுக்கு தாய் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், தாய்-மகள் இடையே நெருக்கமான உறவு தோன்றும். அப்போது அவள் தாயிடம் தனது உடல் வளர்ச்சி மாற்றங்கள் பற்றி பேசத்தொடங்கிவிடுவாள். அப்படிப்பட்ட தருணத்தில் அவளது பூப்படையும் காலகட்டத்தை தாயாரால் ஓரளவு கணிக்க முடியும். அப்போதிருந்து மகளின் புத்தகப்பைக்குள் ஒரு ‘சானிட்டரி பேடை’ வைத்து அனுப்பவேண்டும். அதன் மூலம் அவளிடம் வயதுக்கு வருதலுக்கான எதிர்பார்ப்பை உருவாக்கிவிடலாம். உடனே ‘பேடு’ பயன்படுத்தினால் உடையில் கறைபடுவதை தவிர்த்திடவும் முடியும்.

    மாதவிலக்கு பற்றி மகளிடம் பேசத் தொடங்கிவிட்டாலே அவளுக்கு நிறைய சந்தேகங்கள் வரும். பொதுவாக அவர்களால் எழுப்பப்படும் கேள்விகளும், தாய்மார்கள் அதற்கு அளிக்கவேண்டிய பதில்களும் இங்கே தரப்படுகின்றன.

    மகள்: சில சிறுமிகள் எட்டு வயதிலே வயதுக்கு வந்துவிடுவார் களாமே அப்படியா?

    தாய்: ஆமாம். ஆனால் எட்டு வயதுக்கு முன்பு வயதுக்கு வந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். அதுபோல் 16 வயதுவரை வயதுக்கு வராவிட்டாலும் டாக்டரின் ஆலோசனை அவசியம்.

    மகள்: மாதவிலக்கு என்பது என்ன?

    தாய்: பெண் பருவ வளர்ச்சியின் மிக முக்கிய கட்டத்தை அடைந்து விட்டாள் என்பதை உணர்த்துவது மாதவிலக்கு. அப்போது சினைமுட்டை முதிரும் தன்மை பெறும். கருப்பையும் வளர்ந்து கர்ப்பமடைவதற்கான தகுதியை பெற்றிடும். பெண்களின் கருப்பையின் உள்ளே என்டோமெட்ரியம் என்ற பஞ்சுப்பொதி போன்ற பகுதி உண்டு. ஒவ்வொரு மாதமும் ஹார்மோன்களின் செயல்பாட்டால் அது தடித்து வளர்ந்து, கர்ப்பத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராகும். கர்ப்பம் அப்போது உருவாகாததால், என்டோமெட்ரியத்திற்கு அங்கே வேலை இருக்காது. அதனால் அது மாதத்திற்கு ஒருமுறை இளகி, ரத்தத்தோடு உருகி வெளியேறும். இதைதான் நாம் மாத விலக்கு என்று சொல்கிறோம்.



    மகள்: மாதவிலக்கு உதிரப்போக்கு எத்தனை நாட்கள் வரை நீடிக்கும்?

    தாய்: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கும் என்டோமெட்ரியத்தின் தன்மையைப் பொறுத்து உதிரப்போக்கின் கால அளவு இருக்கும். கெட்டியான என்டோமெட்ரியத்தை கொண்டவர்களுக்கு உதிரப்போக்கு நீளும். பொதுவாக மூன்று முதல் ஐந்து நாட்கள் இது வெளிப்படும். அரிதாக ஒருவாரம் வரைகூட நீளலாம். அதற்கு மேலும் தொடர்ந்தால் டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும்.

    மகள்: மாதவிலக்கில் சராசரியாக எவ்வளவு ரத்தம் வெளியேறும்? அதிக உதிரப்போக்கு என்றால் என்ன?

    தாய்: ஒரு தடவை மாதவிலக்கு ஏற்படும்போது 30 முதல் 60 மி.லி. உதிரம் வெளியேறும். சிலருக்கு இதன் அளவு 80 மி.லி. வரை இருக்கும். அதற்கு மேல் வெளியேறினால் அது அதிக ரத்தப்போக்காக கருதப்படும். அப்போது கூடுதலாக பேடு மாற்றவேண்டியதிருக்கும். உத்தேசமாக ஒரு நாள் 5 பேடுக்கு மேல் மாற்ற வேண்டியது இருந்தால், அதிக உதிரப்போக்கு இருப்பதாக கருதிக்கொள்ளலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

    மகள்: ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சரியாக வந்து விடுமா?

    தாய்: முதன் முதலில் வரும் மாதவிலக்குக்கு பிறகு பலருக்கு இரண்டு, மூன்று மாதங்கள் கழித்துதான் அடுத்த மாதவிலக்கு வரும் நிலை ஏற்படலாம். சிலருக்கு ஒன்றிரண்டு வருடங்கள் முறையாக மாதந்தோறும் வருவதில்லை. அதன் பின்பே சரியாக வரத்தொடங்கும்.

    மகள்: மாதவிலக்கு நாட்களில் எவ்வாறு சுத்தத்தை கடைப் பிடிக்கவேண்டும்?

    தாய்: அதிக ஈரம்படாவிட்டாலும் அந்த நாட்களில் நான்கு மணி நேரத்திற்கு ஒரு பேடு மாற்றிவிட வேண்டும். ஒரே பேடை அதிக நேரம் வைத்திருந்தால் சருமத்தில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். ஒவ்வொரு முறை அதை மாற்றும்போதும் பேடு வைத்திருந்த பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு இளம் சுடுநீரே போதுமானது. அதை ஊற்றி கழுவித் துடைத்துவிட்டு அடுத்த பேடு வைக்கவேண்டும். அதிக ஈரப்பதம் இருக்கும் என்று கருதி இரண்டு பேடுகளை ஒன்றாகவைக்கக்கூடாது. பேடு மாற்றியதும் கையை சோப்பிட்டு கழுவிவிட வேண்டும். மாதவிலக்கு நாட்களில் தினமும் இருமுறை மிதமான சுடுநீரில் குளிக்க வேண்டும். அது சுத்தத்தோடு, உடல் வலியையும் போக்கி இதமளிக்கும்.



    மகள்: மாதவிலக்கு நாட்களில் எந்த மாதிரியான மன-உடல் அவஸ்தைகள் தோன்றும்?

    தாய்: இப்போது சிறுமிகள் சமச்சீரான சத்துணவுகளை சாப்பிடுவதில்லை. உடல் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டுகளிலும் ஈடுபடுவதில்லை. படிப்பு தொடர்புடைய மன அழுத்தமும் அவர்களுக்கு ஏற்படுகிறது. அதனால் மாத விலக்கு நாட்களில் அவர்களுக்கு பல்வேறுவிதமான உடல் ரீதியான அவஸ்தைகள் ஏற்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது வயிற்றுவலி. இதனை டிஸ்மெனோரியா என்கிறார் கள். வயதுக்கு வந்து ஒரு வருடம் கழித்து மாதவிலக்கு சுழற்சி சரியான பின்பு இந்த வகை வயிற்று வலி தோன்றும். அதோடு முதுகுவலி, தலைவலி, தலைசுற்றுதல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கை கால் குடைச்சல் போன்றவைகளும் ஏற்படும். ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு இந்த பாதிப்புகள் அதிகமாக இருக்கும். மாதவிலக்கு தோன்றுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிரி மென்ஸ்சுரல் சிண்ட்ரோம் எனப்படும் தாக்கங்கள் தோன்றும். அப்போது உறக்கமின்மை, அதிக பசி, தலைவலி, சோர்வு, மார்பகங்களில் வலி போன்றவை தோன்றலாம்.

    மகள்: பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பூப்படையும் முதல் மாதவிலக்கை எதிர்கொள்ள என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் செய்யலாம்?

    தாய்: பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் ‘பீரியட் கிட்’ ஒன்றை தங்கள் புத்தகபையில் வைத்துக்கொள்ளலாம். மாதவிலக்கு எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள அது உதவும். அந்த கிட்டில் இரண்டு பேடுகள், சிறிய டவல், டிஸ்யூ, சிறிய சோப், ஆன்டி செப்டிக் ஆயில் போன்றவைகளை வைத்துக்கொள்ளவேண்டும்.

    இத்தனை விஷயங்களை தாய், மகளுக்கு கற்றுக்கொடுத்தாலும், முக்கியமான இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தரவேண்டும். உடலுறவு பற்றியும் கர்ப்பம் பற்றியும் பக்குவமாக புரியும் விதத்தில் எடுத்துரைக்கவேண்டும். பாலியல் வன்முறைகளும், பாலியல்ரீதியான தவறுகளும் எப்படி நடக்கின்றன என்பதையும் புரியவைத்து, ஆண்-பெண் நட்பின் எல்லை களையும் வரையறுக்க வேண்டும்.

    வயதுக்கு வருதல் பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம். அப்போது அவர்களை சரியாக வழிநடத்தவேண்டியது தாய்மார்களின் பொறுப்பு.

    கட்டுரை: டாக்டர் கே.ஜெ.நிவேதிதா,

    மகப்பேறு மருத்துவ நிபுணர், சென்னை.
    திருமணமானதும், தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்துத் தெளிவாகப் பேசித் திட்டமிட வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    'கருத்தரித்தல்' என்னும் அதிசய நிகழ்வினை, அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டும். கரு உருவானதும் அதை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் பெண்களின் கருப்பையும் உடலும் எப்படித் தயாராகிறதோ, அதேபோல மனதளவிலும் தயாராக வேண்டும். நேர்மறை எண்ணங்களும் ஆரோக்கியமான சூழலும் ஊட்டமிக்க உணவுகளும், ஒரு பெண்ணுக்கு பிரசவத்தை இனிய அனுபவமாக மாற்றுகின்றன.

    திட்டமிடுதலில் தொடங்கி, கருத்தரித்தல், பரிசோதனைகள், பிரசவம் வரையிலான 10 மாத கால 'பரவச அனுபவத்தை' பாதுகாப்பானதாக மாற்ற இந்தக் கையேடு உதவும்.

    திருமணமானதும், தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்துத் தெளிவாகப் பேசித் திட்டமிட வேண்டும். கணவனும் மனைவியும் கலந்துபேசி மகிழ்ச்சியான மனநிலையில் ஒன்று கலந்து கருத்தரிக்கும் போது தான் தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பார்கள். குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரம், கணவன் - மனைவி உடல் நலம் அடிப்படையில் இந்தத் திட்டமிடுதல் இருக்க வேண்டும்.



    குழந்தை பெற்றுக்கொள்ளலாம்' என்று தம்பதியர் முடிவுசெய்துவிட்டால், உடனே உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி, சில மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். முதல் மூன்று மாதங்களில்தான் குழந்தையின் உடல் உறுப்புக்கள் தோன்றுகின்றன. இந்தக் காலத்தில் தாய்க்கு எந்த உடல்நலப் பிரச்னைகளும் ஏற்பட்டுவிடக்கூடாது. அப்படி ஏற்பட்டால் அதற்கு மாத்திரை எடுத்துக்கொள்வதும், எடுக்காமல் இருப்பதும்கூட குழந்தையைப் பாதிக்கும்.

    இருவரும் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பி.எம்.ஐ. 25-க்குள் இருக்க வேண்டும். முட்டை மற்றும் விந்தணு தரத்துடன் இருக்க உடல் எடை கட்டுக்குள் இருப்பது அவசியம். சராசரி உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் கர்ப்பக் காலத்தில் ஏற்படக்கூடிய உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக எடையுடன் குழந்தை பிறப்பது, சிசேரியன் போன்றவற்றைத் தவிர்க்கலாம். தைராய்டு, சர்க்கரை, ருபெல்லா, சின்னம்மை, ஹெபடைடிஸ் பி, டி.பி., எச்.ஐ.வி. பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்.

    எச்சரிக்கை: ருபெல்லாவுக்கான தடுப்பு ஊசியை, ஒரு பெண் போட்டிருந்தால், அதிலிருந்து ஒரு மாதத்துக்கு தாய்மை அடையக் கூடாது.
    பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய உறுப்பாக கர்ப்பப்பை உள்ளது. முக்கிய உறுப்பான கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன.
    பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய உறுப்பாக கர்ப்பப்பை உள்ளது. இந்த கர்ப்பப்பையானது ஹார்மோன்களின் தூண்டுதலால் பருவமடையும் வயதிலிருந்து மெனோபோஸ் பருவம் வரைக்குமான காலப்பகுதியில் ஒழுங்கான மாதவிடாயை ஏற்படுத்துகிறது. ஆனாலும் இதே கர்ப்பப்பைதான் சிலவேளைகளில் பெண்களுக்கு வேதனைகளையும் சோதனைகளையும் கொடுக்கும் ஒரு அங்கமாகவும் காணப்படுகின்றது.

    இதனால் சில சந்தர்ப்பங்களில் இந்தக் கர்ப்பப்பையை சிகிச்சை மூலம் அகற்றவேண்டி ஏற்படுகின்றது.

    இந்த சிகிச்சையில் கர்ப்பப்பையும் அதன் வாய்ப்பகுதியான சேர்விக்ஸ் உம் (VAGINA) அகற்றப்படுகின்றன. ஆனால் யோனி வாசல் பகுதி (VAGINA) அகற்றப்படுவதில்லை. இதனால் கர்ப்பப்பை அகற்றப்பட்டவர்களில் மாதவிடாய் வருவதில்லை. ஆனால் தாம்பத்திய உறவில் தொடர்ந்து ஈடுபட முடியும். அத்துடன் கர்ப்பப்பை அகற்றப்படும் போது கட்டாயம் சூலகங்கள் அகற்றப்படவேண்டியதில்லை.

    இது சூலகங்களில் காணப்படும் அசாதாரண தன்மைகளைப் பொறுத்து அவை கட்டாயம் அகற்றப்பட வேண்டுமா என்பதனை முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் சூலகங்கள் தான் பெண்ணில் பெண்மைக்குரிய தன்மைகளைப் பேணிப் பாதுகாக்கும் ஹார்மோன்களைச் சுரக்கின்றது. எனவே சூலகங்களை அகற்றும் போதுதான் ஒரு பெண் பலவீனமடைகின்றாள். ஆனால் கர்ப்பப்பையை அகற்றும் போதல்ல.



    கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கான காரணங்கள் :

    1. அதிகப்படியான மாதவிடாய்ப் போக்கு நீண்டகாலமாக இருக்கும்போது மருந்துகள் யாவும் பாவித்து அவற்றால் பலன் கிடைக்காவிட்டால் குழந்தைப் பாக்கிய தேவைகள் அனைத்தும் முடித்துக் கொண்ட 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் கர்ப்பப்பை அகற்றப்படும்.

    2. கர்ப்பப்பையில் வளரும் தசைக் கட்டிகளான பைபுரோயிட் (Fibroids) மிகப்பெரிதாக இருக்கும் போதும், நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கும் போதும் குழந்தைப் பாக்கியத் தேவைகள் முடித்துக் கொண்ட பெண்ணில் கர்ப்பப்பை அகற்றப்படுகின்றது.

    3. கர்ப்பப்பையின் உட்சுவர்பகுதி கர்ப்பப்பையின் வெளியே வளருகின்ற எண்டோ மெற்றியோசில் (Endometriosis) மற்றும் அடினோமயோசில் (Adenomyosis) நோய் உடையவர்களில் மருந்து மூலம் சிகிச்சை பலனளிக்காது போனால் குழந்தைப் பாக்கியத் தேவைகளை நிறைவு செய்த பெண்ணில் கர்ப்பப்பை மற்றும் சூலகங்கள் அகற்றப்படும்.

    4. கர்ப்பப்பையில் அல்லது கர்ப்பப்பையின் வாசல்ப் பகுதியில் அல்லது சூலகங்களில் ஏற்படும் புற்று நோய்களுக்காக கர்ப்பப்பை மற்றும் சூலகங்கள் அகற்றப்படும்.

    5. வயது கூடிய பெண்களில் ஏற்படும் கர்ப்பப்பை இறக்கம் (Prolapse) போன்ற சிகிச்சைகளுக்குத் தீர்வாகவும் கர்ப்பப்பை அகற்றப்படும்.

    6. சிலவேளைகளில் சாதாரண பிரசவத்தின் போதோ, சிசேரியன் பிரசவத்தின் போதோ, கட்டுப்படுத்த முடியாதவாறு குருதிப்பெருக்கு ஏற்பட்டால் இறுதிச் சந்தர்ப்பத்தில் பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்காக திடீரென கர்ப்பப்பையை அகற்றும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
    கர்ப்பிணி பெண்கள் தகுதி வாய்ந்த பயிற்சியாளர் ஒருவர் உதவியுடன் சுகப்பிரசவத்துக்கு உதவும் யோகப் பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளலாம்.
    கர்ப்பிணியின் அடிவயிற்றுத் தசைகளையும் தசைநார்களையும் தளர்த்துவதில் யோகாசனப் பயிற்சிகளுக்கு முக்கிய இடமுண்டு. தகுதி வாய்ந்த பயிற்சியாளர் ஒருவர் உதவியுடன் சுகப்பிரசவத்துக்கு உதவும் யோகப் பயிற்சிகளை முறையாக மேற்கொள்ளலாம்.

    பிராணாயாமம் உடலின் அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்கக்கூடியது. கருப்பைத் தசைகளுக்கு ஆக்ஸிஜன் குறையாமலிருக்க இது அதிகம் உதவும்.

    வழக்கத்தில் நடைப்பயிற்சி, யோகப்பயிற்சி, பிற தசை வலுவூட்டப் பயிற்சிகள், தசை நெகிழ்வூட்டப் பயிற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு உடற்பயிற்சித் திட்டத்தை மகப்பேறு மருத்துவர், உடற்பயிற்சியாளர், யோகப் பயிற்சியாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து மேற்கொள்வது சரியாகவும் முறையாகவும் இருக்கும்; கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் எவ்வித ஆபத்தும் வராமல் பாதுகாக்கும். அயல்நாடுகளில் கர்ப்பிணிகளுக்கு நீச்சல் பயிற்சிகளையும் கற்றுத்தருகின்றனர்.

    தவிர்க்க வேண்டிய பயிற்சிகள் குதித்து ஓடும் பயிற்சிகள், துள்ளும் படியான உடற்பயிற்சிகள், கால் மூட்டுகளைப் பாதிக்கும் பயிற்சிகள் ஆகியவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதிகமாக வியர்த்துக்கொட்டும் பயிற்சிகளும் ஆகாது. தீவிரமான தரை விளையாட்டுகளிலும் ஆழ்கடல் விளையாட்டுகளிலும் ஈடுபடக்கூடாது.

    கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு உள்ளவர்கள், பனிக்குட நீர்க்கசிவு உள்ளவர்கள், பிரசவ நாளுக்கு முன்பே கருப்பை சுருங்கிவிடும் கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
    ×