search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Natural ways"

    சிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் கூந்தல் வளராது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் 3 மாதங்களில் நல்ல பலனை காணலாம்.
    சிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் கூந்தல் வளராது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் 3 மாதங்களில் நல்ல பலனை காணலாம்.

    அரைமுடி தேங்காயுடன், இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து அரைத்து, சாற்றை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். பின், வழக்கமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலைக்கு குளியுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு குளிக்கலாம். வெறும் தேங்காய்ப் பாலை தலைக்கு தேய்த்து ஊற வைத்தும் குளிக்கலாம்.

    * கற்றாழையின் நடுவில், கத்தியால் நீளமாக ஒரு கீறல் போடுங்கள். உள்ளே உள்ள கொழ கொழப்பான சோற்று பகுதியில், கையளவு வெந்தயத்தைப் போட்டு, கற்றாழையை பழையபடி மூடி, நூலால் கட்டி விடவும். உள்ளே இருக்கும் சோற்றில் ஊறும் வெந்தயம், இரண்டு நாட்களில் முளை கட்டியிருக்கும். அதனுடன் கற்றாழையின் சோற்றையும் எடுத்து, நன்றாக அரைத்து வடையாக தட்டி வெயிலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊறவிட்டு தலைக்கு தினமும் பூசி வர, முடி நன்றாக வளரும். மேலும் தலைக்கு ஆயில் மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம்.

    * புதினா இலைகளை சுத்தமான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் கிடைக்கும் டிகாஷனை தலைக்கு பூசி, ஊறவைத்தும் குளிக்கலாம். இதேபோல, செம்பருத்தி இலைகளை கொதி நீரில் போட்டு, டிகாஷனை எடுத்தும் குளிக்கலாம். செம்பருத்தி பூவை, தேங்காய் எண்ணெயில் ஊற போட்டு தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.
    வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை அதிகரிக்கலாம். இயற்கையான முறையில் நம் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை அதிகரிக்கலாம்.  இயற்கையான முறையில் நம் அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    1. இயற்கை முறையிலேயே ப்ளீச் செய்ய முடியும். ஒரு டீஸ்பூன் பார்லி பவுடருடன் எலுமிச்சைசாறும் பாலும் கலந்து, ப்ளீச்சாக உபயோகிக்கலாம். இது, முகத்தை பளிச் என மாற்றும். வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கும்.

    2. கிளிசரினுக்குப் பதிலாகப் பால் உபயோகித்து மசாஜ் செய்யலாம். இது சருமத்துக்கு ஊட்டத்தையும் குளிர்ச்சியையும் ஏற்படுத்தி, முகப்பொலிவை அதிகப்படுத்தும்.

    3. ரவையைத் தயிரில் ஊறவைத்து, ஸ்கர்ப்பாக உபயோகிக்கலாம். இது, முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இளமையுடன்  இருக்கவும், முக அழகை அதிகரிக்கவும் செய்கிறது. ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

    4. இப்போது பலருக்கும் இருக்கும் பிரச்சனை, வொய்ட் மார்க்ஸ், பிளாக் மார்க்ஸ். இதற்கு, வீட்டிலேயே தினமும் சூடான தண்ணீரில் 30 நிமிடங்கள் ஆவி பிடிக்கலாம். இது, முகத்தில் தூசியினால் ஏற்படும் அழுக்கையும் கிருமியையும் அகற்றி, புதிய செல்களை உருவாக்கும். முகத்துக்குப் புத்துணர்வை அளிக்கும்.

    5. முகப்பருக்களால் ஏற்படும் குழியைச் சரிசெய்ய, கடலைமாவுடன் தண்ணீர் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக்காகப் போட்டு முகம் கழுவலாம்.

    6. சென்ஸிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், லெமன் மாய்ஸ்டரைஸிங் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக, ஐஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். இது, முகத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தைப் பட்டுபோல வைத்திருக்கும்.

    7. டிரை ஸ்கின் உடையவர்கள், அதிமதுரமும் பாலும் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக் போட்டு முகம் கழுவுங்கள். சருமம் மென்மை பெறுவதுடன், பருக்கள் வராமல் காக்கும்.

    8. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, கோரைக்கிழங்கும் மஞ்சளும் சேர்த்து, முடிக்கு எதிர்ப்பக்கமாக தேய்க்கவும். நாளடைவில் தானாகவே முடிகள் உதிர்ந்துவிடும்.
    ×