என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகள் எவை? அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது போன்றவற்றை தெரிந்து கொண்டால் அழகோடும், தன்னம்பிக்கையோடும் ஜொலிக்கலாம்.
    அணியும் ஆடை நமக்கு பொருத்தமாகவும், அழகாகவும் இருப்பதாக உணரும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். கச்சிதமான ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் பலருக்கு சந்தேகங்கள் வரலாம். உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகள் எவை? அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது போன்றவற்றை தெரிந்து கொண்டால் அழகோடும், தன்னம்பிக்கையோடும் ஜொலிக்கலாம். அதற்கான ஆலோசனைகளை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

    ஒல்லியாக இருப்பவர்களுக்கு... மெலிந்த தோகம் கொண்டவர்களுக்கு பெரும்பாலான உடைகள் பொருத்தமானதாக இருக்கும். பென்சில் வகை பேண்ட்கள் கால்களை அழகாக காட்டும். ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் நீளமான பாவாடைகள் அணியலாம். சுடிதான் மற்றும் ரவிக்கை அணியும் போது குட்டையான கைப்பகுதிகளை கொண்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

    உயரமாக இருப்பவர்களுக்கு..

    உயரமாக இருப்பவர்கள் அவர்களின் உயரத்தை காட்டும் வகையில் இருக்கும் நீளமான ஆடைகளை அணியலாம். லெகங்கா, நீளமான பாவாடைகள், கவுன் போன்றஉடைகள் பொருத்தமாக இருக்கும். கால் பாதம் வரை மறைக்கும் போஹோ ஸ்கர்ட் அழகை அதிகரிக்கும். உயரத்தை குறைத்துக்காட்ட விரும்புபவர்கள் பாவாடை கிராப் டாப் போன்றவற்றை அணியலாம்.

    உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு...

    உயரம் குறைவாக இருப்பவர்கள் டாப் ஒரு வண்ணத்திலும், பாட்டம் மற்றொரு வண்ணத்திலும் இருக்குமாறு உடை அணியலாம். ஸ்கர்ட். கிராப் டாப் என்று பிரித்து அணியக்கூடிய உடைகள் உயரத்தை குறைத்து காட்டும் அணிவது உயரத்தை அதிகரித்து காட்டும். கால்கள் தெரிவது போன்ற ஆடைகளும் உயரத்தை அதிகரித்து காட்டும்.

    பருமனாக இருப்பவர்களுக்கு..

    அடர்ந்த நிறம் கொண்ட ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிவதன் மூலம் ஒல்லியாகத்தெரியலாம். பச்சை, கருப்பு, மெரூன் போன்ற நிறங்கள் பருமனான தோற்ம் கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடைகள், பல லேயர்கள் கொண்ட ஆடைகள், பருத்தி ஆடைகள் மேலும் பருமனாக காட்டும் என்பதால் அவற்றை தவிர்த்துவிடலாம். கிரேப் சில்க், ஷிபான் போன்ற உடலோடு ஒட்டும் ஆடைகளை அணியலாம்.

    இவ்வாறு எடைக்கும், தோற்றத்தைக்கும் ஏற்றவாறு உடை அணிவதன் மூலம், அழகோடும், தன்னம்பிக்கையோடும் மிளிரலாம்.
    மாதம் ஒருமுறை, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், மருக்கள் போன்றவை வராமல் இருக்கும்.
    வெயில், மாசு போன்றவற்றால் சருமம் பெரிதும் பாதிப்படைகிறது. அதற்காக வெளியில் செல்வதை நாம் தவிர்க்க முடியாது. சில பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் சரும ஆரோக்கியத்தை அதிகரித்து அழகை மேம்படுத்தலாம். அதற்கான குறிப்புகள் இங்கே...

    இறந்த செல்களை நீக்குதல்:

    மாதம் ஒருமுறை, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், மருக்கள் போன்றவை வராமல் இருக்கும். வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு இறந்த செல்களை நீக்கலாம்.

    சீத்தாப்பழம்

    சீத்தாப்பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ சரும வறட்சியை நீக்கும். சீத்தாப்பழத் தோலை முகத்தில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு நீரைக்கொண்டு முகம் கழுவுங்கள். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் இறந்த செல்கள் நீங்கும். சீத்தாப் பழச்சாற்றை வாரம் 3 நாட்கள் பருகி வந்தால் சரும பிரச்சினைகள் ஏற்படாது.

    கூந்தல் அழகிற்கு:

    தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தும்போது ‘கண்டிஷனிங்’ செய்வது முக்கியமானது. குறிப்பாக ‘முடி பிளவு’ உடையவர்கள் கண்டிஷனிங் செய்துவந்தால் அந்தப் பிரச்சினை நீங்கும். வறண்ட கூந்தல் உடையவர்கள் ‘கிரீம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும். சுருட்டை முடி கொண்டவர்கள் ‘ஜெல்’ வகை கண்டிஷனரை தேர்வு செய்யலாம்.

    நேரான முடி கொண்டவர்கள் ‘கிரீம்’ அல்லது ‘போம்’ வகை கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். இயற்கையான முறையில், சாதம் வடித்த கஞ்சி, மருதாணி, செம்பருத்தி போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

    நகங்கள் பராமரிப்பு:

    நகங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் மூலம் தொற்று ஏற்படாது. வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு, எலுமிச்சம் பழச்சாறு போன்றவை கலந்து, அதில் கைவிரல் நகங்களை சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.

    வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்டக்கொழுப்பு கரையும். சருமம் பொலிவாகும். ரசாயனப்பொருட்கள் நிறைந்த கிரீம்கள், முகப் பூச்சுகளை அதிகம் பயன்படுத்தினால் சருமம் பாதிக்கப்படும். கூந்தல் அழகு பெற இயற்கையான முறையில் தயார் செய்த கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
    பெண்களின் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தங்க நகை அணிவது தீர்வாகிறது. தங்க நகைகளை பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் நன்மைகளை நாம் இங்கே காணலாம்:
    இயற்கையாகவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக தங்கம் பயன்படுகிறது. பழங்காலத்தில் உடலில் காயங்களும், புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள்.

    பெண்கள் தங்க நகைகள் அணிவதற்குப்பின்னால் பல அறிவியல் மற்றும்  உடலியல் சார்ந்த நன்மைகள் அடங்கியுள்ளன. பெண்களின் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தங்க நகை அணிவது தீர்வாகிறது. தங்க நகைகளை பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் நன்மைகளை நாம் இங்கே காணலாம்:

    உடல் வெப்பத்தை சீராக்குகிறது:

    மனித உடலின் வெப்ப நிலை,  சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும். இதனால் சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. தங்க நகை அணியும்போது இயற்கையாகவே உடலின் வெப்பத்தை சீராக்குகிறது. உதாரணத்துக்கு, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும். தங்க நகை அணிவதன் மூலம் வெப்ப நிலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

    காயங்களுக்கான சிகிச்சை:

    இயற்கையாகவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக தங்கம் பயன்படுகிறது. பழங்காலத்தில் உடலில் காயங்களும், புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள். இதன் மூலம் காயங்களும் குணமாகும், அவற்றால் ஏற்படும் நோய் தொற்றும் தடுக்கப்படும்.

    வாதத்தை தடுக்கும் மருந்து:

    வாத நோய் ஏற்படும்போது, விரல்களையும் கால்களையும் அசைப்பது சிரமமாக இருக்கும். தங்க நகை அணிவதன் மூலம் உடம்பில் நேர்மறை
    சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல், வாதத்தால் ஏற்படும் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தும். சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதனை பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்கள்.

    மனக்கவலையை குறைக்கிறது:

    பெண்கள் அதிக அளவில்  மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். பதற்றமும், பயமும் ஏற்பட்டு நீண்ட கால கவலையாக உருவாகிறது. தங்க நகைகளை அணிவதன் மூலம், அவர்கள் உடலில் ‘நேர்மறை சக்தி’ பரவுகிறது. இதனால் உடலில் அமைதியான நிலை ஏற்பட்டு ரத்த நாளங்களை சீராக்குகிறது.சுவாசக் காற்றை உடல் உறுப்புகளுக்கு சரி சமமாக அனுப்பி நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது.

    சருமத்தின் பராமரிப்பு:

    சருமம் வயதாவதை தடுக்கும் எதிர்ப்பு சக்தியாக தங்கம் செயல்படுகிறது. பல அழகுசாதனப் பொருட்களிலும், சரும பராமரிப்புப் பொருட்களிலும் தங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.

    மருத்துவ பயன்பாடு:

    புற்றுநோயை கண்டுபிடிக்கவும் தங்கம் உதவுகிறது. மது போன்ற உடலுக்கு தீங்கு தரும் பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுக்க தங்கம் பயன்
    படுத்தப்படுகிறது. தங்க நகை அணிவதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகி,  நரம்புகள் வலுவாகிறது. உதாரணத்திற்கு காதில் உள்ள நரம்பு கண்களுடன் இணைக்கப்பட்டிருப்பதனால் காதில் தங்க நகை அணிவதால் கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.

     அதுபோல, தங்க மூக்குத்தி அணிவதன் மூலம் குறிப்பிட்ட நரம்பு வலுவாகி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் வயிற்றில் தங்க ஒட்டியானம் அணிவதால் வயிற்றுப் பகுதியில் நரம்புகள் வலுவாகி குழந்தை நலமாக பிறப்பதற்கு உதவுகிறது.
    தலையில் எண்ணெய் தடவுவதால் தோற்றத்தில் மாறுபாட்டை உணர்ந்தாலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
    இன்றைய இளம் தலைமுறையினர் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. ‘தலையில் எண்ணெய் தடவினால் முகம் பளிச்சென்று பிரகாசமாக தெரியாது. எண்ணெய் பிசுக்கு முகத்தில் வழிந்தோடும். புத்துணர்ச்சியை உணர முடியாது’ என அடுக்கடுக்கான காரணங்களை அடுக்குவார்கள்.

    தலையில் எண்ணெய் தடவுவதால் தோற்றத்தில் மாறுபாட்டை உணர்ந்தாலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். தலைமுடி பிரச்சினையால் பலரும் கவலைப்படுகிறார்கள். முடி உதிர்வுக்கு அதன் வேர் கால்கள் வலிமை இல்லாமல் இருப்பதுதான் முதன்மை காரணமாக அமைந்திருக்கிறது. தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யும்போது வேர்கள் எண்ணெய்யை நன்கு உறிஞ்சிக்கொள்ளும். மேலும் மசாஜ் செய்யும் வழக்கத்தை பின் தொடரும்போது ரத்த ஓட்டம் சீராகி முடியின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் முடியின் வேர் கால்கள் வலிமை அடைந்து முடி உதிர்வது குறைந்துவிடும்.

    பொடுகு தொல்லை, பேன் தொல்லை, முடி வறட்சி அடைதல், முடி உடைதல் என தலைமுடியை பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. தலைக்கு முறையாக எண்ணெய் தடவி பராமரிப்பதுதான் இதற்கு ஒரே தீர்வாக அமையும். தலைக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்வது வேர்களுக்கு ஊட்டமளித்து முடியை உறுதியாக்கும்.

    பொடுகு தொல்லையும் நீங்கிவிடும். ஏனெனில் பொடுகு தொல்லைக்கு முக்கிய காரணம் தலை முடி வறட்சியாக இருப்பதுதான். அதற்கு தலையில் எண்ணெய் வைக்காததுதான் முக்கிய காரணமாகும். தலைமுடிக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு கால் மணி நேரம் கழித்து குளிக்கலாம். அப்போது சீயக்காய் பயன்படுத்துவது நல்லது.

    குளித்து முடித்ததும் தலை முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மின்னுவதை காணலாம். காலை பொழுதில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க விரும்பாதவர்கள் இரவில் தூங்க செல்லும்போது தலைக்கு எண்ணெய் தேய்க்கலாம். காலையில் எழுந்ததும் குளித்துவிடலாம். அப்படி செய்வது தலையில் எண்ணெய் பிசுக்கு இருப்பது போல் தோன்றாது. எண்ணெய் வழிந்து முகத்திலும் படராது.

    இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் ஹேர் கண்டிஷனர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவை மாய்ஸ்சுரைசர் போல் செயல்பட்டு தலைமுடிக்கு பளபளப்பை அளிக்கின்றன. சிக்கு விழாத கூந்தலை பெறவும் உதவுகின்றன. ஆனால் தலைமுடிக்கு சிறந்த இயற்கை மாய்ஸ்சுரைசர் எண்ணெய்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    சூரிய ஒளி பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. அதில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் சூரிய ஒளி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். மன ஆரோக்கியத்திற்கும் வித்திடும். இருப்பினும், அதிகப்படியான சூரிய ஒளி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். தோல் விரைவில் வயதான தோற்றத்தை அடைந்து விடும். சரும புற்றுநோயையும் எதிர்கொள்ள வைத்துவிடும்.

    கோடை காலத்தில்தான் சூரிய கதிர்வீச்சுகள் உமிழும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானது. சன்ஸ்கிரீன் கிரீம்கள் பயன்படுத்துவதுதான் சிறந்த வழிமுறையாக அமையும். சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சரும சுருக்கம், மந்தமான தன்மையை போக்குவதோடு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் சன்ஸ்கிரீனுக்கு முக்கிய பங்கு உண்டு. சன்ஸ்கிரீன் சருமத்தின் வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உட்புறத்திலும் பாதுகாப்பு கவசமாக செயல்படும்.

    மடிக்கணினிகள், கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்கள் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. அவை நீல நிறத்தை வெளியிடுகின்றன. சன்ஸ்கிரீன் இவற்றில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. எனவே, நல்ல தரமான சன்ஸ்கிரீன் உபயோகிப்பது முக்கியம்.

    சன்ஸ்கிரீனில் எஸ்.பி.எப் அளவு குறைந்தபட்சம் 15 முதல் 20 வரை மட்டுமே இருக்க வேண்டும். இதுதான் தோல் புற்றுநோயை உண்டாக்கும் யூ.வி.பி. கதிர்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் அளவீடு ஆகும்.

    சன்ஸ்கிரீன் சருமத்துடன் ஒட்டாமல் இருக்க வேண்டும். அதுதான் சிறந்த சன்ஸ்கிரீனாக கருதப்படும். மேலும் பயன் படுத்தும்போது வெள்ளை நிறம் சட்டென்று நீங்கிவிடக்கூடாது. முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசுவதற்கு அரை டீஸ்பூன் சன்ஸ்கிரீன் போதுமானது. மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீனை மீண்டும் சருமத்தில் தடவுவது நல்லது. அதிலும் வெயில் அதிகம் இருக்கும் சமயத்தில் அடிக்கடி உபயோகித்து வர வேண்டும். வெளியே செல்வதற்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு முன்பு சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அது சருமத்தில் சரியாக உறிஞ்சப்படாது. வெயில் சருமத்தில் அதிகம் படர்வதற்கான வாய்ப்பும் உருவாகிவிடும். அதற்கு இடமளிக்கக்கூடாது.

    கோடை வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன் ஸ்கிரீனுக்கு மாற்று ஏதுமில்லை. இருப்பினும், சூரிய ஒளியில் இருந்து தப்பிக்க வேறு சில வழிகள் உள்ளன.

    உதடுகளும் சூரிய ஒளியால் பாதிப்புக்குள்ளாகலாம். எனவே, சன்ஸ்கிரீன் பண்புகளை கொண்ட லிப் பாம் தடவலாம். கூடுமானவரை உடல் பகுதிகளை மூடும்படியான ஆடைகளை அணிவது நல்லது. வெயிலில் இருந்து உச்சந்தலையைப் பாதுகாக்க அகலமான விளிம்பு கொண்ட தொப்பியை அணியலாம். குடையை உடன் எடுத்துச் செல்லலாம்.

    முடிந்தவரை நிழலான பகுதியில் நடமாடலாம். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்த்துவிடலாம்.
    சிறப்பு வாய்ந்த சிறுமுகை பட்டில் புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை கவரும் வகையில், மணமக்களின் புகைப்படங்கள் பொறித்த சேலைகளை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
    பெண்களுக்கு மிகவும் பிடித்தமானது என்றால் அது புடவை தான். அப்படிப்பட்ட புடவைக்கு பெயர் போன ஊர் தான் கோவை மாவட்டம் அருகே உள்ள சிறுமுகை. இந்த சிறுமுகை நகரத்தில் நெசவு செய்யும் புடவைகளான காட்டன் பட்டு, மென்பட்டு, பட்டு உள்ளிட்டவை தமிழகத்தின் பிற பகுதிகள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. உலக மக்களையும் சிறுமுகை பட்டானது கவர்ந்திழுத்து வருகிறது.

    அப்படிப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த சிறுமுகை பட்டில் புதிதாக திருமணம் ஆகும் மணமக்களை கவரும் வகையில், சிறுமுகையை சேர்ந்த டிசைனர் தர்மராஜ், நெசவு தொழிலாளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மணமக்களின் புகைப்படங்கள் பொறித்த சேலைகளை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த புடவைகள் மக்கள் மத்தியில் மிகவும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் ஆர்டர் கொடுத்து இந்த புடவைகளை வாங்கி செல்கிறார்கள்.

    இதுகுறித்து தர்மராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:-

    எல்லோரும் திருமண புடவைகள் வாங்கும் போது அதனை பார்த்து பார்த்து வாங்குவார்கள். அதனை தங்கள் நினைவாக வைத்து கொள்வார்கள். எல்லோரும் புடவைகள் நெசவு செய்தாலும், நாங்கள் செய்வதில் சற்று வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.

    அதற்காக புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகளின் புகைப்படங்கள் பொறித்த புடவைகளை நெசவு செய்ய ஆரம்பித்தோம். இது தற்போது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆர்டர்களும் கணிசமாக வருகிறது. புடவையின் முந்தானை பகுதியில் தான் மணமக்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். ஒரு புடவையை நெசவு செய்வதற்கு 30 நாட்கள் ஆகும். ஒரு புடவை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறோம்.

    நாங்கள் இதுதவிர அனைத்து திருக்குறள்கள் பொறித்த புடவைகள், காந்தியடிகளின் தண்டி யாத்திரை சென்ற படங்கள் பொறித்த புடவைகள் என மக்கள் எந்த மாதிரி கேட்கிறார்களோ அந்த வகையில் வடிவமைத்து கொடுத்து வருகிறோம். இதுதவிர சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்த போது அவரது உருவம் பொறித்த சால்வையும் நெசவு செய்து வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    நாம் சாப்பிடும் உணவுகள் மூலமே சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க முடியும். அப்படிப்பட்ட உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.
    சருமத்தை அழகுபடுத்துவதற்கு பேஷியல், பேஸ் கிரீம்கள், மாய்ஸ் சுரைசர் போன்றவற்றையே அதிகம் பேர் நாடுகிறார்கள். சாப்பிடும் உணவுகள் மூலமே சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க முடியும். அப்படிப்பட்ட உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.

    வால்நட்: இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், துத்தநாகம், வைட்டமின் ஈ, செலினியம், புரதம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை வால் நட்டை ஆரோக்கியமான உணவு பொருளாக மட்டுமின்றி சருமத்திற்கு அழகு சேர்க்கும் பொருளாக மாற்றுகின்றன. அடிக்கடி பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு இது சிறந்த சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலோஜன் உற்பத்திக்கு உதவுகின்றன. மன அழுத்தத்தையும், அதன் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தி சரும நலனை பேணுவதற்கு உதவுகின்றன. வால்நட்டில் இருக்கும் துத்த நாகம் சருமத்தில் ஏற்படும் வீக்கம், காயங்களை கட்டுப்படுத்த துணை புரிகின்றன.

    அவகேடோ: இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றன. அவகேடோவில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் பி தொற்றுநோயை எதிர்த்து போராடும் வலிமையை அளிக்கக்கூடியது. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, சருமத்திற்கு பாதுகாவலனாக செயல்படக்கூடியது. இது தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து சருமம் சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல் களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவை. சரும சுருக்கங்கள், புள்ளிகள், வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் நுண்ணிய கோடுகள் போன்றவற்றிற்கு எதிராக செயல்பட்டு சருமத்திற்கு புத்துணர்ச்சி தரக்கூடியவை.

    கருப்பு சாக்லேட்: பொதுவாக சாக்லேட் சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேர வழி வகுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் ஆரோக்கியமான உணவுகளை பொறுத்தவரை, டார்க் சாக்லேட் இதயத்திற்கும், சருமத்திற்கும் நலம் சேர்க்கக்கூடியது.

    அதில் கார்டியோபிராக்டிவ் பண்புகள் உள்ளன. அவை பல வகையான நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்கக்கூடியவை. மேலும் டார்க் சாக்லேட், பயோ ஆக்டிவ் சேர்மங்களால் நிரம்பியுள்ளது. இது சருமத்திற்கு உகந்த உணவாக அமைகிறது.மேலும் அதில் உள்ள பிளவோனால்கள் சூரிய கதிர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் அறிகுறிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சருமத்தின் அடர்த்தியை அதிகரிக்க உதவும்.

    தக்காளி: சரும துளைகள் பெரியதாக இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளி உபயோகிக்கலாம். இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். மேலும் தக்காளியில் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை சருமத்திற்கு தேவையான சத்துக்களையும், பளபளப்பையும் தரும். தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதோடு ‘ஸ்க்ரப்பாக’ சருமத்திற்கு பயன் படுத்தலாம். தக்காளி, சருமத்திற்கு மேலும் பல நன்மைகளை தரக்கூடியது.
    சரும பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப் பயன்படுத்துவது சிறந்தது.
    முன்பெல்லாம் குளியலுக்கு வீட்டிலேயே பாரம்பரிய முறைப்படி அரைத்த ‘நலுங்கு மாவு’ எனும் குளியல் பொடியைப் பயன்படுத்தி வந்தார்கள். முழுவதும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரித்த அந்தப் பொடியின் மூலம் சருமம் ஆரோக்கியமாக இருந்தது. தற்போது பலரும் ‘சோப்’ உபயோகித்து வருகிறோம். அவரவர் சருமத்துக்கு ஏற்ற வகையில் சோப்பைத் தேர்வு செய்வது முக்கியமானது. இதில் கலக்கப்படும் ரசாயனங்கள், ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, சருமத்தில் பாதிப்பை உண்டாக்கும். எனவே இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப் பயன்படுத்துவது சிறந்தது. சருமத்துக்கு ஏற்ற வகையில் சோப்பை தேர்வு செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

    வறண்ட சருமம்

    சருமம் அதிகமாக வறண்டு இருந்தால் அதில் எண்ணெய் சுரப்பு குறைவாக இருக்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் கிளிசரின் கலந்த சோப்களை பயன்படுத்தலாம். ஆட்டுப்பால் கலந்த சோப்கள் வறண்ட சருமத்துக்கு ஏற்றது. கலப்பட பொருட்கள் கலந்து தயாரிக்கப்படாத சோப்பை பயன்படுத்தலாம்.

    சென்சிடிவ் அல்லது உணர்திறன் சருமம்

    உணர்திறன் கொண்ட சருமத்தினர் வண்ணம் மற்றும் வாசனை இல்லாத சோப்களை பயன்படுத்தலாம். சரும மருத்துவரின் ஆலோசனையோடு இந்த சோப்களை வாங்குவது நல்லது.

    எண்ணெய் பசை சருமம்

    சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருப்பவர்கள் ஆன்டி பாக்டீரியல் சோப் வகைகளை பயன்படுத்தலாம். குறிப்பாக வேப்பிலை, சாலிசிலிக் அமிலம் இருக்கும் சோப் வகைகள் சருமத்தில் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும்.

    அதிகமான எண்ணெய் பசை கொண்டவர்கள், சருமத்துளைகளிலும் அடைப்பு இருப்பதை உணரலாம். இவர்கள் லாவெண்டர் மற்றும் டீ ட்ரீ ஆயில் கலந்த சோப்களை பயன்படுத்தலாம். முகத்தில் சோப்புக்கு மாற்றாக பேஸ் வாஷ் பயன்படுத்தலாம்.

    மூலிகை சோப்

    ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே பலர் சோப் தயாரித்து விற்கிறார்கள். இந்த வகை சோப்பில் தேங்காய் எண்ணெய் அதிகம் சேர்க்கப்படுகிறது. இது சருமத்துக்கு சிறந்த ஊட்டச்சத்தை வழங்கும். தழும்புகள் நீக்க வைட்டமின் ‘ஏ’ சருமத்தில் இருக்கும் தழும்புகளை நீக்கவும், வைட்டமின் ‘பி’ சருமப் பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே சருமத்தில் இருக்கும் தழும்புகளை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் வைட்டமின்கள் கலந்த சோப்களை பயன்படுத்தலாம்.

    ஸ்கிரப் சோப்

    சருமத்தில் படிந்து இருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ஸ்கிரப் சோப் பயன்படும். இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கும் இந்த சோப் வகைகளை உடலுக்கு தேய்த்துக் குளிக்கலாம். பாதுகாப்பான சோப் அதிக வாசனை இல்லாமல் இருக்க வேண்டும். வாசனைக்காக ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டிருக்ககூடும். இயற்கையான நிறத்தில் அல்லது லேசான நிறத்தில் இருக்கும் சோப்புகளை மட்டும் பார்த்து வாங்குங்கள். அடர்த்தியான நிறம் கொண்ட சோப்களை தவிர்ப்பதே நல்லது.
    வெளியில் சென்றாலும், வீட்டிற்குள் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் நம்மை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். இப்படியான சூழலில், நாம் அணியும் ஆடைகள் மூலம் சிறிதளவு குளிர்ச்சியை உணர முடியும்.
    அக்கினி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த நாட்களில், பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. வெளியில் சென்றாலும், வீட்டிற்குள் இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் நம்மை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். இப்படியான சூழலில், நாம் அணியும் ஆடைகள் மூலம் சிறிதளவு குளிர்ச்சியை உணர முடியும். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சருமத்தை காப்பதில், ஆடைகளின் வகை மற்றும் வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

    கோடையில் வெளிர் நிற ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இது உடலின் வெப்பத்தை எளிதில் வெளியேற்றும். வெளிப்புற வெப்பத்தை, உடல் அதிகமாக உட்கிரகிக்காமல் தடுக்கும். இதனால் உடலின் இயல்பான குளுமையை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியும். வெளிர் நிற ஆடைகள் கண்களுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன், வெப்பத்தால் ஏற்படும் எரிச்சலை நீக்கும்.

    வெளிர் நிற சருமம் கொண்டவர்கள், பேஸ்டல் நிறங்களின் கலவையான டார்க்காய்ஸ், கேண்டி பிங்க், லெமன் யெல்லோ மற்றும் பெய்ஜ் போன்ற வண்ணங்கள் கொண்ட பருத்தி ஆடைகளை உடுத்துவது நல்லது.

    அடர் நிற சருமத்தினர், வெளிர் நிறங்களான இளஞ்சிவப்பு, லாவண்டர் புளூ, காட்டன் கேண்டி பேபி புளூ, இளந்தளிர் பச்சை, கிரீம் யெல்லோ, லிப்லாஸ் பிங்க், இளநீர் வெள்ளை மற்றும் டால்பின் கிரே போன்ற நிறங்களில் ஆடைகள் அணியலாம். தவிர, பருத்தி, லினன், ராயன், டிமின் போன்ற ஆடை வகைகளை கோடையில் பயன்படுத்தலாம்.
    சிலருக்கு பற்களின் மேல் மஞ்சள் கறை இருக்கும். அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றினால் படிப்படியாக நீங்கும்.
    அன்றாட உணவில் கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு உறங்கும் முன் பல் துலக்க வேண்டும். இதனால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

    கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

    இரவு தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை பற்களில் தேய்த்துவிட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பற்களின் மேற்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

    வெள்ளை எள்ளு விதையை, நன்றாக பொடி செய்து பற்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

    பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

    கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

    மிக முக்கியமாக உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
    வாழைப்பழம் உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். வாழைப்பழத்தை இவ்வாறு செய்வதால் தோலின் கருமை மற்றும் கண்ணைச் சுற்றி உள்ள கருவளையமும் நீங்கும்.
    வாழைப்பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும்.

    சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை வாழைப்பழத்திற்கு உள்ளது. இது சரும சுருக்கங்களை தவிர்க்க பயன்படுகிறது. மேலும் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

    ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து பிசைந்து கொள்ளவும். பிறகு முகத்தில் கண்களைத் தவிர பிற பகுதிகளில் நேரடியாக தடவவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்.

    பழுத்த வாழைப் பழம் ஒன்றை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதில் காய்ச்சாத பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து முகத்தில் கருமை படிந்த இடத்தில் தடவுங்கள். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

    நன்கு பழுத்த வாழைப் பழத்தை பிசைந்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதால் தோலின் கருமை மற்றும் கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் நீங்கும்.
    கஸ்தூரிமஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.
    சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், வெறும் மஞ்சளை பூசாமல், இதனுடன் பால், தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் தரும்.. எண்ணெய் சருமம் உள்ளவர்கள், கஸ்தூரி மஞ்சளோடு பன்னீர் கலந்து உபயோகித்தால் நல்லது.

    வீட்டில் எப்போதும் கஸ்தூரி மஞ்சள் பொடி வைத்துக்கொள்வது நல்லது. கஸ்தூரி மஞ்சளை எலுமிச்சை சாறு, முல்தாணிமட்டி, வேப்பிலை விழுது, துளசி விழுது, கடலைமாவு, பைத்தம்மாவு, கசக்கசா விழுது, பார்லி விழுது, தேன், பப்பாளி பழம், தக்காளி என எவற்றோடும் சேர்த்து பயன்படுத்தலாம்.

    கஸ்தூரி மஞ்சளை தொடர்ந்து பயன் படுத்தி வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும், பருக்கள் வராது. தொடர்ந்து செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும். பரு, சூடுக்கட்டிகள், காயங்களை குணப்படுத்தும்.

    கஸ்தூரிமஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

    கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ்பேக் ஆகும்.

    முகத்தில் இயற்கை அழகு பேண, கஸ்தூரிமஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்யலாம். அல்லது வாரம் 4 முறை செய்யலாம்.
    ×