என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    சிலருக்கு கழுத்து பகுதியில் கருமையான திட்டுக்கள் காணப்படும். அல்லது நிறமிகளால் பாதிப்பு நேரும். கழுத்து கருமையாக காட்சியளிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
    சருமம் மிகவும் மென்மையானது. பருவ கால நிலை, உணவு முறை, சரும பராமரிப்பு வழக்கத்தில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் சருமத்திலும் அதன் தாக்கம் வெளிப்படும். கழுத்தை சுற்றியுள்ள தோல் கருமையாக இருந்தால் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு கழுத்து பகுதியில் கருமையான திட்டுக்கள் காணப்படும். அல்லது நிறமிகளால் பாதிப்பு நேரும். கழுத்து கருமையாக காட்சியளிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

    * கழுத்தைச் சுற்றியுள்ள கருமையான சருமம் ‘அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்’ எனப்படும். இது சருமத்தை கருமையாக்கும் தன்மை கொண்டது. ‘வெல்வெட்டி ஹைப்பர் பிக்மென்டேஷன்’ என்றும் வகைப்படுத்தப்படும். இதற்கு மரபணுக்கள் காரணமாக இருக்கலாம். குழந்தைக்கு பெற்றோர் மூலம் பாதிப்பை உண்டாக்கலாம்.

    * உடல் பருமன் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதும் கழுத்து, அக்குள் பகுதி கருமையாவதற்கு பொதுவான காரணமாகும்.

    * ரத்தத்தில் இன்சுலின் அதிகமாக இருப்பதும் கழுத்து கருமையாக மாறுவதற்கு காரணமாக அமையலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து, நீரிழிவு நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது.

    * ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்.) எனப்படும் நோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் ரத்தத்தில் இன்சுலின் அதிக அளவில் இருக்கும். அதன் காரணமாக கழுத்தின் பின்புறம், கைகள் மற்றும் இடுப்பு பகுதியில் கருமை தோன்றும்.

    * கழுத்தின் பின்புறத்தில் உள்ள தோலில் கருமையான திட்டுகள் தென்படுவது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகும். அதனை அலட்சியப்படுத்தக்கூடாது.

    * கழுத்து உள்பட உடல் பகுதியில் கருமையான திட்டுகளை ஏற்படுத்தும் ‘அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ்’ நிலை, தைராய்டு அல்லது உடல் பருமனுடன் தொடர்புடையது. இவை சருமத்தை கருமையாக்கிவிடும்.

    * வாசனை திரவியங்கள், ஹேர் டை போன்ற சில பொருட்கள் ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தலாம். அதனால் எந்தவொரு அழகு சாதன பொருளை பயன்படுத்துவதற்கு முன்பும் பரிசோதித்து பார்க்க வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேரம் வரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

    * கழுத்தில் கருமை படர்வதை தடுப்பதற்கு முதலில் செய்ய வேண்டியது உடல் எடையை குறைப்பதுதான். உடல் எடை அதிகரிக்கும்போது இயல்பாகவே கருமை தென்படத் தொடங்கிவிடும்.

    * கழுத்தை சுத்தமாக வைத்திருங்கள். லாக்டிக் அமிலம் சார்ந்த கிரீம்கள், லோஷன்களை பயன்படுத்துங்கள்.

    * வாசனை திரவியங்களை தோலில் தெளிப்பதை தவிருங்கள். சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்.
    சாப்பிடும் உணவுகள் மூலமே சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க முடியும். அப்படிப்பட்ட உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.
    சருமத்தை அழகுபடுத்துவதற்கு பேஷியல், பேஸ் கிரீம்கள், மாய்ஸ் சுரைசர் போன்றவற்றையே அதிகம் பேர் நாடுகிறார்கள். சாப்பிடும் உணவுகள் மூலமே சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க முடியும். அப்படிப்பட்ட உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.

    வால்நட்: இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், துத்தநாகம், வைட்டமின் ஈ, செலினியம், புரதம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை வால் நட்டை ஆரோக்கியமான உணவு பொருளாக மட்டுமின்றி சருமத்திற்கு அழகு சேர்க்கும் பொருளாக மாற்றுகின்றன. அடிக்கடி பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு இது சிறந்த சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலோஜன் உற்பத்திக்கு உதவுகின்றன. மன அழுத்தத்தையும், அதன் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தி சரும நலனை பேணுவதற்கு உதவுகின்றன. வால்நட்டில் இருக்கும் துத்த நாகம் சருமத்தில் ஏற்படும் வீக்கம், காயங்களை கட்டுப்படுத்த துணை புரிகின்றன.

    அவகேடோ: இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றன. அவகேடோவில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் பி தொற்றுநோயை எதிர்த்து போராடும் வலிமையை அளிக்கக்கூடியது. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, சருமத்திற்கு பாதுகாவலனாக செயல்படக்கூடியது. இது தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து சருமம் சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல் களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவை. சரும சுருக்கங்கள், புள்ளிகள், வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் நுண்ணிய கோடுகள் போன்றவற்றிற்கு எதிராக செயல்பட்டு சருமத்திற்கு புத்துணர்ச்சி தரக்கூடியவை.

    கருப்பு சாக்லேட்: பொதுவாக சாக்லேட் சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேர வழி வகுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் ஆரோக்கியமான உணவுகளை பொறுத்தவரை, டார்க் சாக்லேட் இதயத்திற்கும், சருமத்திற்கும் நலம் சேர்க்கக்கூடியது.

    அதில் கார்டியோபிராக்டிவ் பண்புகள் உள்ளன. அவை பல வகையான நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்கக்கூடியவை. மேலும் டார்க் சாக்லேட், பயோ ஆக்டிவ் சேர்மங்களால் நிரம்பியுள்ளது. இது சருமத்திற்கு உகந்த உணவாக அமைகிறது.மேலும் அதில் உள்ள பிளவோனால்கள் சூரிய கதிர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் அறிகுறிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சருமத்தின் அடர்த்தியை அதிகரிக்க உதவும்.

    தக்காளி: சரும துளைகள் பெரியதாக இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளி உபயோகிக்கலாம். இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். மேலும் தக்காளியில் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை சருமத்திற்கு தேவையான சத்துக்களையும், பளபளப்பையும் தரும். தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதோடு ‘ஸ்க்ரப்பாக’ சருமத்திற்கு பயன் படுத்தலாம். தக்காளி, சருமத்திற்கு மேலும் பல நன்மைகளை தரக்கூடியது.
    பலவீனமான முடியை சரி செய்து முடி உதிர்வை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை கடைப்பிடித்தாலே போதுமானது.
    நீண்ட கூந்தல் முடியை விரும்பும் பெண்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை முட்டுக்கட்டையாக அமையும். முடிகள் வலிமையை இழந்து, மெலிந்து பலவீனமடைவதுதான் முடி உதிர்வுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும்.

    முடிக்கு வண்ணம் தீட்டுதல், முடியை நேராக்குதல், முடியை உலர வைப்பதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்துதல், நெருக்கமான பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்துதல் உள்ளிட்டவையும் முடி உதிர்வுக்கு வித்திடுகின்றன. இத்தகைய பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், மிகவும் குறைவான கலோரிகளை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளுதல், நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் கோளாறு ஏற்படுதல் போன்றவையும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. பலவீனமான முடியை சரி செய்து முடி உதிர்வை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை கடைப்பிடித்தாலே போதுமானது.

    1. ஆப்பிள் சிடேர் வினிகர்

    ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகர், இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் மூன்று முட்டைகளின் வெள்ளைக்கரு கலந்து தலைமுடியில் தேய்க்கவும். பின்பு ‘பிளாஸ்டிக் ராப்’ அல்லது ‘ஷவர் கேப்’பை கொண்டு தலையை மூடி அரை மணி நேரம் ஊறவிடவும். பின்பு ஷாம்பு போட்டு தலைமுடியை அலசி விடலாம். பலவீனமான முடியை சீர்படுத்த இது சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது.

    2. முட்டை

    முட்டையில் கலந்திருக்கும் புரதம் முடியை வலுப்படுத்த உதவும். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். தலையில் எண்ணெய் தேய்ப்பது போல் தண்ணீரை லேசாக தடவவும். பின்பு முட்டை கலவையை கூந்தலில் தடவிவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம். முட்டையில் இருக்கும் புரதம் தலைமுடியை கடினமாக்கும் தன்மை கொண்டது என்பதால் மாதம் ஒருமுறை மட்டும் பயன்படுத்துவது நல்லது.

    3. அவகோடா

    நன்கு பழுத்த அவகோடா பழத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து ஈரமான தலைமுடியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை தண்ணீரில் அலசிவிடலாம். அவகோடா பழத்தில் வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை தலைமுடிக்கு பொலிவு சேர்க்கக் கூடியவை. முடி உதிர்வு பிரச் சினையை எதிர்கொள்பவர்கள் இந்த கலவையை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம். ஆரோக்கியமான கூந்தல் கொண்டவர்கள் மாதம் ஒரு முறை உபயோகிக்கலாம்.

    4. ஆலிவ் எண்ணெய்

    வறண்ட தலைமுடியில் மீண்டும் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி தலையில் தடவி விடவும். பின்பு ‘ஷவர் கேப்’ கொண்டு தலையை மூடிவிடவும். முக்கால் மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசி விடலாம். வறண்ட கூந்தல் கொண்டவர்கள் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது சிறப் பானது.

    5. கற்றாழை சாறு:

    75 ஊட்டச்சத்துக்கள், 20 தாதுக்கள், 12 வைட்டமின்கள் மற்றும் 18 அமினோ அமிலங்களை கொண்ட நம்பமுடியாத கண்டிஷனிங் ஏஜெண்டாக கற்றாழை செயல்படுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மையும் கொண்டது. கற்றாழையில் இருந்து ஜெல் எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலக்கவும். இந்த கலவையை கூந்தலில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசி விடலாம்.

    6. சந்தன எண்ணெய்:

    ஆலிவ் எண்ணெய், சந்தன எண்ணெய் இரண்டையும் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்க்கவும். பின்பு தலைமுடியின் நுனியில் லேசாக தடவவும். தலைமுடி சேதம் அடைவதை தடுப்பதற்கு சந்தன எண்ணெய் உதவும்.

    7. வாழைப்பழம்:

    2 வாழைப்பழங்கள், 2 டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் 4 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலைமுடியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசி விடலாம். வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் சிலிகா முடி வளர்ச்சியை தூண்டிவிடும்.
    மாஸ்க் எதுவாக இருந்தாலும் வியர்வையும், உஷ்ணமும் அதிகமானால் சரும பிரச்சினைகள் தோன்றும். தளர்வான, இளம் நிறத்திலான ஆடைகள் கோடைக்கு ஏற்றது.
    கோடைக்கு ஏற்ற உடை எது என்றுதான் முன்பெல்லாம் யோசிப்போம். இப்போது கோடைக்கு ஏற்ற மாஸ்க் எது என்று யோசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். காட்டன் மாஸ்க் மற்றும் என்- 95 மாஸ்க் போன்றவையும் கோடைக்கு ஏற்றவைதான். ஏர்வால்வ் கொண்ட மாஸ்க்கும் அணியலாம். மாஸ்க் எதுவாக இருந்தாலும் வியர்வையும், உஷ்ணமும் அதிகமானால் சரும பிரச்சினைகள் தோன்றும்.

    அதிக நேரம் மாஸ்க் அணிந்த நிலையில் இருப்பதால் முகத்தில் எண்ணெய்த்தன்மை அதிகரித்து, வியர்வை வடிந்து, தூசு படியும் நிலை ஏற்படும். இதனால் முகப்பரு தோன்றும். மாஸ்க் ஓரங்கள் சருமத்தோடு பதியும் பாகங்களில் சிவந்துபோகுதல், சொறி போன்றவையும் ஏற்படலாம். அதனால் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.

    கோடைகாலத்தில் உங்களோடு எப்போதும் இரண்டு மாஸ்க்குகளை வைத்திருங்கள். ஒன்றில் அதிகமாக வியர்வை பதிந்துவிட்டால், அடுத்ததை பயன்படுத்தவேண்டும். முகத்தில் சன்ஸ்கிரீன் அல்லது மாய்ஸ்சரைசர் பூசுவது நல்லது. அது சருமத்திற்கும்- மாஸ்க்குக்கும் இடையே ஒரு பாதுகாப்பு வேலி போன்று செயல்படும். மாஸ்க் அதிக நேரம் பயன்படுத்தும் சூழ்நிலை இருந்தால், இடைஇடையே முகத்தை கழுவிக்கொள்வது நல்லது.

    தளர்வான, இளம் நிறத்திலான ஆடைகள் கோடைக்கு ஏற்றது. உள்ளாடைகள் இறுக்கிப்பிடிக்கும் பகுதியில் வியர்வை படிந்து பூஞ்சை ஏற்படலாம். அதிலே தொடர்ந்து வியர்வை உருவாகும்போது சொறி தோன்றும். உள்ளாடை, மேலாடை எதையும் இறுகிய நிலையில் அணியவேண்டாம். இரவில் உள்ளாடைகளை அகற்றிவிடலாம். சொறி ஏற்படும் இடத்தில் ஆன்டிபங்கல் பவுடர் போட்டுக்கொள்ளுங்கள். சரும பிரச்சினை அதிகரித்தால், சரும நோய் நிபுணரை சந்தித்து தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.

    ஷூ அணியும் வழக்கம் கொண்டவர்களுக்கு கோடைகாலத்தில் விரல்களுக்கு இடையில் சொறி ஏற்படக்கூடும். வியர்வை தங்குவதால் பங்கஸ் உருவாகுவதே இதற்கு காரணம். ஆன்டி பங்கல் பவுடர், கிரீம் போன்றவைகளை இதற்கு பயன்படுத்தலாம். கோடைகாலத்தில் காட்டன் சாக்ஸ் அணிவது சிறந்தது.

    அதிக அளவில் வியர்வை உருவாகுவதால் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களுக்கு முடி உதிர்வு தோன்றும். வியர்வையில் பூஞ்சை வளர்ந்து, பொடுகு தோன்றுவதே அதற்கு காரணம். காட்டன் துணியால் தலையை மூடிக்கொண்டு அதற்கு மேல் ஹெல்மெட் அணிந்துகொள்வது நல்லது. ஹெல்மெட்டை கழற்றியதும் தலையை நன்றாக துவட்டிவிட்டு காற்றுபடும்படி செய்யவேண்டும். தலையில் அதிக வியர்வை படிவதால், வாரத்தில் இரண்டு நாட்கள் பொருத்தமான ஷாம்புவை பயன்படுத்தி கூந்தலை கழுவி சுத்தம் செய்யலாம். கோடை காலத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம்.
    தலைமுடி வளர்ச்சியை துரிதப்படுத்திலும் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. வாரம் ஒருமுறை தயிரை தலையில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    கூந்தல் மிகவும் வறண்டு காணப்படுபவர்கள், தயிரை கூந்தலில் தடவினால் நல்ல பயன் பெறலாம். ஆனால் தயிரை எப்போது, எவ்வளவு நேரம் தலைமுடியில் தடவ வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.

    தயிரை 30 நிமிடங்கள் முடியில் தடவினால் போதும், தயிரின் பலன்கள் குறைந்த நேரத்திலேயே தெரிந்துவிடும். எனவே, நீண்ட நேரம் தடவினால்தான் அதிக பலன் கிடைக்கும் என்பது தவறான நம்பிக்கை.

    தலையில் தயிரைப் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு, அதன்பிறகு சாதாரண நீரில் முடியைக் கழுவினால் போதும். குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை தயிரை தலைமுடியில் தடவி வந்தால், முடி பளபளப்பாக இருப்பதோடு, வளர்ச்சியும் அதிகரிக்கும்.

    தலைமுடி மிகவும் வறண்டு இருப்பவர்கள் கண்டிப்பாக தயிரை சாப்பிட வேண்டும். அதோடு, வாரம் இருமுறை தலைக்கு தயிர் ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்துவந்தால், தலைமுடி அழகாக மாறுவதோடு, உடல் சருமமும் அழகாக மாறும்.

    தலைமுடி வளர்ச்சியை துரிதப்படுத்திலும் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. வாரம் ஒருமுறை தயிரை தலையில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    பொடுகு பிரச்சனைக்கும் தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தலையில் பொடுகு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக தயிரை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து  கழுவுவது நல்ல பலனளிக்கும்.

    நரைமுடி பிரச்சனைக்கும் தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இளநரையால் முடி வெள்ளையாக மாறுபவர்களும், தயிரை பேஸ்டைப்போல தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவலாம்.

    தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவாக உடலுக்குள் வேலை செய்தால், தலையில் போடப்படும் தயிர் வெளிப்புறமிருந்து வேலை செய்து அழகை மேம்படுத்தும். தயிரை  தலையில் தடவி இந்த குறிப்பை முயற்சித்துப் பார்த்து பயனடையவும்.
    கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல சருமத்துக்கும் குளிர்ச்சி தன்மையை தக்க வைப்பது அவசியமானது.
    கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல சருமத்துக்கும் குளிர்ச்சி தன்மையை தக்க வைப்பது அவசியமானது. அவை நீரிழப்பு, உலர் சருமம் போன்ற கோடை கால சரும பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

    பழங்கள் சாப்பிடுவது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். அதுபோல் பழங்களை பயன்படுத்தி முகத்திற்கு பேஷியல் செய்வதும் சரும அழகை மெருகேற்றும். பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை பயன்படுத்தி பேஷியல் மேற்கொள்ளலாம். பப்பாளியில் என்சைம்கள் அதிகமாக உள்ளன. அவை இறந்த செல்களை அகற்ற உதவும். வாழைப்பழம் சரும செல்களை இறுக்கமாக வைத்திருக்க உதவும். ஆப்பிளில் இருக்கும் பெக்டின் சருமத்தை சுத்தப்படுத்த துணை புரியும். ஆரஞ்சு பழம் சருமத்தின் அமில-கார சம நிலையை மீட்டெடுக்க உதவும்.

    செய்முறை: வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, ஆரஞ்சு போன்ற பழங்களை ஒன்றாக சிறு துண்டு களாக நறுக்கி விழுதாக அரைக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20-30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடலாம். கோடை காலத்தில் சருமத்தில் எரிச்சல் ஏற்படுவது இயல்பானது. அதற்கு இடம் கொடுக்காமல் முகத்திற்கு புத்துணர்வு அளிக்க இந்த ‘பழ பேஸ்பேக்’ உதவும்.
    காளஹஸ்தி கோவிலில் உள்ள தேர்களை அலங்கரிக்கப் பயன்படுத்தும் திரைச்சீலைகளை அழகுபடுத்துவதற்காகத்தான் முதலில் ‘கலம்காரி கலை’ பயன்படுத்தப்பட்டது.
    ஆடைகளில் இடம்பெறும் அழகிய வேலைப்பாடுகளை உருவாக்கும் பல கலைகள் இந்திய கலாசாரத்தில் உள்ளன. அதில் ஒன்று ‘கலம்காரி’. சமீப காலமாக கலம்காரி ஓவியங்கள் தாங்கிய ஆடைகளுக்கு, அனைத்து தரப்பு மக்களிடமும் தனி வரவேற்பு கிடைத்துள்ளது. கலம்காரி கலை 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

    ஆந்திர மாநிலம்தான், கலம்காரி கலைக்கான பூர்வீகம். ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில், மசூலிப்பட்டினத்தில் உள்ள ‘பெத்தனா’ கிராமம்தான் இதற்கான தாய்வீடு.

    ‘கலம்’ என்றால் ‘பேனா’ என்றும், ‘காரி’ என்றால் ‘கலை வடிவம்’ என்றும் பொருள். காளஹஸ்தி கோவிலில் உள்ள தேர்களை அலங்கரிக்கப் பயன்படுத்தும் திரைச்சீலைகளை அழகுபடுத்துவதற்காகத்தான் முதலில் ‘கலம்காரி கலை’ பயன்படுத்தப்பட்டது. இதனாலே, இந்தக் கலையில் ஒரு பாணியாக ‘திருகாளத்தி பாணி’ இன்றும் பின்பற்றப்படுகிறது. இது கோவில்களில் அதிகளவில் அலங்கரிக்கப் படுகிறது.

    இவ்வாறான கலம்காரி கலை, மெல்ல நகர்ந்து ஐதராபாத் நிஜாமுதீன்களின் உடைகளையும் அலங்கரிக்கத் தொடங்கியது. ‘பேனா’ கொண்டு இந்தக் கலை துணிகளில் மிளிர்ந்தாலும், இயற்கை வண்ணங்கள்தான் அதிக அளவில் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. தற்போது, இந்தியா முழுவதும் கலம்காரி ஓவியங்கள் கொண்டு ஆடைகள் வடிவமைக்கப்பட்டாலும், தென் மாநிலங்களில்தான் இந்த ஓவியங்கள் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படுகின்றன.

    காலங்கள் பல கடந்தாலும், இன்றும் கூட ஆந்திர கிராமங்களில் கலம்காரி ஓவியங்களைத் தொழிலாகச் செய்கின்றனர். இதில், வரையப்படும் அனைத்து ஓவியங்கள், கோலங்கள், பல நுணுக்கங்கள் அனைத்துக்கும் ஆந்திராதான் இன்றும் வித்திட்டு வருகிறது.

    18-ம் நூற்றாண்டில் இந்தியாவில், இந்தக் கலை சற்று நலிவுற்ற போதிலும், வெளிநாடுகளில் இதற்கு ஆதரவு கிடைத்து அங்கு தன் கொடியை நாட்டியுள்ளது.

    சாதாரண வெள்ளைப் பருத்தி காடாத் துணியில், கடுக்காயைப் பயன்படுத்தி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊற வைப்பார்கள். இதன் மூலம் சொரசொரப்பாக இருக்கும் துணி, வழுவழுப்பாக மாறும். இதில், நன்றாகக் கொதிக்க வைக்கப்பட்ட வெல்லம், நீர் கலந்த கலவையில் கூரான மூங்கில் குச்சியை நனைத்து, துணியின் விளிம்பு வரை கோடுகளாக ஓவியம் வரையப்படுகிறது.

    அந்தக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டு, விரும்பிய ஓவியங்கள், விரும்பிய வண்ணங்களில் பூர்த்தி செய்யப்படுகின்றன. எந்த நிறம் தேவையோ, அந்த நிறம் தனித்தனியாக வரையப்படும். முழுவதும் பூர்த்தி செய்த வண்ணங்கள் அடங்கிய துணியை, நீரில் அலசி முழுமையாக்கப்படும். இதுபோல் 20 முறை ஒரு துணியில் கலம்காரி ஓவியத்தை உருவாக்குகின்றனர்.

    இந்த ஓவியத்தை ஒரு ஆடையில் புகுத்த குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை ஆகும்.

    இன்றும் ஆந்திராவில் உள்ள கிராமங்களில், மலர்கள், அவுரி, மஞ்சள் கிழங்கு, மாதுளம் பழம் என இயற்கை வண்ணங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

    இதில், வரையப்படும் ஓவிய கதாபாத்திரங்கள் நமக்கு பல கதைகள் சொல்லும். தற்போது, கலம்காரி ஓவியங்கள் பெண்களின் சேலை, சுடிதார் என அனைத்து விதமான ஆடைகள், திரைச்சீலைகள், கைப்பைகள், ஆண்களின் சட்டைகள், லுங்கிகள் என அனைத்திலும் பிரதிபலிக்கின்றன.
    கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், ஒரு திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கிவிடும்.
    உடல் சருமத்தின் அழகை மெருகேற்றி பொலிவடையச் செய்யும் வலிமை திராட்சை பழத்தில் உள்ளது. முகம் கருத்துவிட்டதா கவலை வேண்டாம். திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும். திராட்சை சாறில் அதிக அளவு ஆண்ட்டிஆக்சிஜன் உள்ளது. அது சருமத்தை சுத்திகரித்துவிடும். இரத்தத்தில் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்துவிடும்.

    திராட்சை பழச்சாற்றில் சூரிய வெப்பத்தால் தாக்கக்கூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் வெப்பக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளது. திராட்சை சாறு சருமப் பிரச்சனைகளைத் தடுக்கும் சக்தி கொண்டது. வெயில் காலத்தில் தினமும் ஒரு கப் திராட்சை சாறு அருந்தினால் சருமச் சிக்கலை தவிர்க்கலாம்.
    திராட்சை பழச்சாறு இறந்த செல்களை நீக்கும் திறன் கொண்டது. இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்டதால், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வரட்சியிலிருந்து காக்கிறது.

    திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம்.

    கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், ஒரு திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கிவிடும்.

    சிறிதளவு திராட்சை சாருடன், சிறிதளவு பாசிப்பயிறு மாவை சேர்த்து நன்றாக கலந்து, அதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதகாலம் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறைந்துவிடும்.
    நீச்சல் அடித்து குளித்துவிட்டு வந்தாலோ, உடற்பயிற்சி செய்தாலோ அல்லது வெப்பத்தின் தாக்கம் காரணமாக வியர்வையில் நனைந்தாலோ தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு மீண்டும் சன்ஸ்கிரீன் தடவ வேண்டும்.
    மற்ற பருவ காலங்களை விட கோடையில், சருமத்தைப் பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சூரிய ஒளி கதிர் வீச்சில் இருந்து சருமத்தை தற்காத்துக்கொள்வதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதே சிறந்த வழி. ஆனால் சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதும் முக்கியமானது. அதற்கு உதவும் டிப்ஸ்கள் உங்கள் கவனத்திற்கு...

    * சன்ஸ்கிரீனை முகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றில்லை. அப்படி பயன்படுத்துவதும் தவறானது. உடலில் சூரிய ஒளி படும் இடங்கள் எல்லாவற்றிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டும். வெளியே செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும்.

    * சன்ஸ்கிரீன் அல்லது லோஷனைப் பயன்படுத்தும்போது முகத்தில் அடர்த்தியாக தடவி விடக்கூடாது. உள்ளங்கையில் குவித்துவிட்டு பின்னர் முகத்தில் ஆங்காங்கே புள்ளி போல் வைக்க வேண்டும். பின்பு விரல் நுனியை கொண்டு முகம் முழுவதும் தடவ வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் சன்ஸ்கிரீன் விரைவாகவும், சமமாகவும் உறிஞ்சப்படும்.

    * சன்ஸ்கிரீனை சருமத்தில் தடவும்போது திட்டுக்களாக எங்கும் படிந்திருக்கக்கூடாது. அதன் எச்சம் எதுவும் காணப்படாமல் உறிஞ்சப்படும் வகையில் வெளிப்புற சருமம் முழுவதும் தடவ வேண்டும்.

    * காதுகள், கழுத்து, பாதங்கள் மற்றும் முதுகு போன்ற பகுதிகள் முகத்தை விட சற்று கடினமானவை. அந்த பகுதிகளில் சன்ஸ்கிரீன் தடவுவதற்கு மறந்துவிடாதீர்கள்.

    * கோடை காலத்தில் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் தடவ வேண்டும். நீச்சல் அடித்து குளித்துவிட்டு வந்தாலோ, உடற்பயிற்சி செய்தாலோ அல்லது வெப்பத்தின் தாக்கம் காரணமாக வியர்வையில் நனைந்தாலோ தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு மீண்டும் சன்ஸ்கிரீன் தடவ வேண்டும்.

    * 30 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுங்கள். அது யூ.வி.ஏ மற்றும் யூ.வி.பி கதிர்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும். நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை வழங்கும் என்பதை மறவாதீர்கள்.
    ‘பொஹேமியன் பேஷன்’ பிரான்சு நாட்டில் இருந்து உலகம் எங்கும் பிரபலமானது. இந்த முறையில் அணியும் ஆடைகளில் பலவிதங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே.
    ‘பொஹேமியன் பேஷன்’ என்பது இயற்கை இழைகளால் ஆன துணிகள் மற்றும், பழங்கால முறையிலான பாணியைக் கொண்டது. இவ்வகை ஆடைகளுக்கு அணியும் நகைகள், கைப்பைகள், காலணிகள் என அனைத்தும் அதே பாணியில்தான் இருக்கும்.   

    ‘பொஹேமியன் பேஷன்’ பிரான்சு நாட்டில் இருந்து உலகம் எங்கும் பிரபலமானது. இந்த முறையில் அணியும் ஆடைகளில் பலவிதங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே.

    பாவாடை:

    முதல் பாணியில், இடம் பெறுவது தற்போது அனைவருக்கும் பிடித்த பாவாடை, சட்டை. பிளாட்ச் பிரிண்ட்டுடன் கூடிய பாப்ளின் சட்டையும், கெட்டியான ஏ-லைன் நீண்ட பாவாடையும்தான் இதன் ஸ்டைல். இந்த ஸ்டைலில் அணியும் ஆடைகள் ஏக்கம் நிறைந்த அழகை சித்தரிப்பதாக இருக்கும். இதற்குப் பெரிய அளவிலான நகைகள் எதுவும் அணிய வேண்டாம். கிளாடியேட்டர் காலணி, ஷூ என எந்த வகையான காலணியும் இந்த பாணிக்கு பொருத்தமாக இருக்கும்.

    கவுன்:

    பொஹேமியன் பாணியில் இரண்டாவது கவுன் வகை. இதில் பருத்தி துணியில், இயற்கையான வண்ணங்களால் சாயம் ஏற்றப்பட்டுத் தயாரிக்கப்படும் கவுன் வகைகள் அடங்கும். இந்த கவுனில் சிறிய சிறிய வடிவங்கள், பூக்கள் இடம் பெற்றிருக்கும். கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடை என்று இதைக் குறிப்பிடலாம். இதில் இடம்பெறும் டிசைன்களும் கைகளால்தான் வடிவமைக்கப்படுகிறது. அனார்கலி வகை ஆடைகளின் மேல்பக்கம் சற்று இறுக்கமாகவும், கீழ் பகுதியில் தளர்வாகவும் இருக்கும். இதற்கு, சிறிய அளவிலான நகைகளை அணியலாம். கிளாடியேட்டர் வகை காலணிகள் இதற்கு பொருத்தமானவை.

    சிக் ஆடை:

    இந்த ஆடையின் மேல்பகுதி, முறுக்கு போன்று க்ராப் செய்யப்பட்ட மேலாடையையும், போர்வை போன்ற தளர்வான நீண்ட பாவாடையையும் கொண்டிருக்கும். இயற்கை வண்ணங்களால் சாயமேற்றப்பட்ட துணியால் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருக்கும். ராஜஸ்தானில் உள்ள கைவினைக் கலைஞர்களால் இவ்வகை ஆடைகள் தயாரிக்கப் படுகின்றன. இது ஆப்ரோ லேபிள் மரபுகளைச் சார்ந்து இருப்பதால், சர்வதேச அழகுடன் மிளிர்ந்திருக்கும். இதற்கு அதிக ஆடம்பரம் இல்லாத எளிமையான நகைகள் அணியும் போது, பார்க்க அழகாய் தோன்றும். மேலும், ஹீல்ஸ் ஸ்டைல் காலணியை அணியலாம்.

    ஜம்ப் சூட்:

    இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரபலமாக இருந்த ஸ்டைல். இதில், பேகி பாட்டம் கொண்ட ஜம்ப் சூட், இகாட் துணியால் தைக்கப்பட்டிருக்கும். அணிவதற்கு மிகவும் எளிதான ஆடை. கோடையில் மலையேற்றம், டிரக்கிங் செல்ல விரும்பும் போது, இந்த வகையான ஆடையைத் தேர்வு செய்யலாம். இதற்கு எளிமையான நகைகளையும், கிளாடியேட்டர் ரக காலணிகளையும் அணியலாம்.

    ஹால்டர்:

    கோடைக்கேற்ற ஆடைகளில் முக்கியமான ரகம். இதுவும் நீண்ட கவுன் வடிவத்தில்தான் இருக்கும். இளம்பெண்களை கவரும் ஆடைகளில் இதற்கு எப்போதும் தனி இடமுண்டு. இந்த வகை ஆடை கடினத்தன்மை இல்லாமல், மென்மையாக இருக்கும் என்பதால், கோடைக்காலத்தில் எளிதாக அணிய முடியும். இதற்கு ஷூவை காலணியாக அணியலாம். ஆடம்பரம் இல்லாத எளிமையான நகைகள் இதற்கு ஏற்றவையாக இருக்கும்.
    உடல் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நகங்கள் விளங்குகின்றன. அவற்றை சீராக பராமரிப்பதற்கான வழிகளை இங்கே பார்க்கலாம்.
    நகங்கள் நன்றாக வளர்வதற்கும், வலிமையாக இருப்பதற்கும் இரும்புச்சத்து கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

    வீட்டு வேலைகள் செய்யும் போது நகங்கள் உடைவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் நகங்களை நீளமாக வளர்ப்பதை தவிர்க்கலாம். கைகளை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம் நகங்களை தூய்மையாக பராமரிக்கலாம்.

    நகங்கள் பளபளப்புடன் இருப்பதற்கு..

    மல்லிகை பூவின் இதழ்களை அவ்வப்போது நகங்கள் மீத தேய்த்து வந்தால் அவை பளபளப்பாகும்.

    ஒரு பாத்திரத்தில் இளஞ்சூடான நீரை எடுத்துகொள்ளவும். அதில் சிறிதளவு திரவ சோப்பு அல்லது ஷாம்பு, 2 தேக்கரண்டி எலுமிச்சசம் பழச்சாறு, அரை தேக்கரண்டி உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலநது கொள்ளவும். இந்த கரைசலில் கைகளை 15 நிமிடங்கள் வரை மூழ்கி இருக்குமாறு வைக்கவும்.

    பின்பு நகங்களின் இடுக்குகளில் மென்மையான பிரஷ் கொண்டு தூய்மைப்படுத்தவும். இதன் மூலம் அழுக்குகள் இறந்த செல்கள் போன்றவை நீங்கும். இவ்வாறு மாதத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம்.

    அடிக்கடி விரல்கள் மற்றும் நகங்களின் மீது தேங்காய் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து வரலாம்.

    தரமற்ற நகப்பூச்சுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நகப்பூச்சை அகற்றுவதற்கு உபயோகப்படுத்தும் திரவத்தில் சிறிதளவு கிளிசரின் கலந்து பயன்படுத்தலாம்.

    கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதன் மூலம் நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். இதற்காக ரசாயனங்கள் கலந்த கிரீம்களுக்கு பதிலாக வீட்டிலேயே இயற்கையான முறையில் கிரீம் தயாரித்து பயன்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    3 தேக்கரண்டி ஷியா வெண்ணெய், 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 2 தேக்கரண்டி வைட்டமின் ஈ எண்ணெய், 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய், 3 தேக்கரண்டி மரவள்ளிக்கிழங்குத்தூள் ( ஆரோரூட் பொடி) விருப்பமான நறுமண எண்ணெய் 1 தேக்கரண்டி

    செய்முறை

    ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஷியா வெண்ணெய் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு மேலே குறிப்பிட்டுள்ள எண்ணெய்களை ஒவ்வொன்றாக ஊற்றி கலக்கவும். சிறிது நேரத்தில் அந்த கலவை கிரீம் பதத்திற்கு வரும். கடைசியாக அதில் கற்றாழை ஜெல் மற்றும் மரவள்ளிக்கிழங்கு தூளை சேர்த்து கலக்கவும். இந்த கிரீமை காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து உபயோகிக்கலாம்.

    இதை கைகளுக்கும், நகங்களுக்கும் பூசலாம். இந்த கிரீம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். இதை குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அறையின் வெப்ப நிலையிலேயே வைத்து பயன்படுத்தலாம்.
    காபின் சருமத்திற்கும் கெடுதல் தரக்கூடியது. சரும அழகை மெருகேற்ற விரும்பும் பெண்கள் காபி அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
    உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு அடுத்த படியாக வர்த்தக ரீதியான புழக்கம் அதிகம் கொண்ட இரண்டாவது பொருளாக காபி விளங்குகிறது. காலையில் எழுந்ததும் காபி பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். மாலை நேரங்களிலும் காபியை ருசிப்பவர்களும் இருக்கிறார்கள். காபி பருகுவதில் நன்மைகள் இருந்தாலும் கெடுதல் இல்லாமல் இல்லை. அதிலிருக்கும் காபின் அளவுக்கு அதிகமாக சேரும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். காபின் சருமத்திற்கும் கெடுதல் தரக்கூடியது. சரும அழகை மெருகேற்ற விரும்பும் பெண்கள் காபி அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

    * காபின் சரும வறட்சியை உருவாக்கி, நீரிழப்பை ஏற்படுத்தும் என்பது அறிவியல் ரீதியான உண்மையாகும். காபியை அதிகம் பருகும்போது உடலில் நச்சுக்களும் அதிகம் உருவாகும். அது நேரடியாக சருமத்தை பாதிக்கும். தினமும் காபியை அதிகம் பருகினால் சருத்தில் முதுமை விரைவாக எட்டிப்பார்க்கும் என்று சரும நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    * பால் கலந்த காபி பருகுவதும் சிலருடைய சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாது. பால் மற்றும் பால் பொருட்களை அதிகம் சேர்க்கும்போது சீபம் என்னும் எண்ணெய்ப்பசையின் உற்பத்தி குறையும். அதனால் சருமத்தின் ஜொலிப்பு குறையும்.

    * சருமத்தில் ஏதேனும் பிரச்சினைகளுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பால் பொருட்களின் உபயோகத்தை தவிர்த்துவிட வேண்டும். அதன் மூலம் சரும பாதிப்பை குறைக்கலாம்.

    * இரவில் அதிக நேரம் வேலை செய்துவிட்டு காலையில் தாமதமாக எழுபவர்களாக இருந்தால் காபி பருகும் அளவை கணிசமாக குறைக்க வேண்டும். காபி பருகுவது அவர்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். அதே நேரத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும். மன அழுத்த ஹார்மோன்களில் ஒன்றான கார்டிசோல் அளவு அதிகரித்து, எண்ணெய் சுரப்பிகளின் அளவையும் உயர்த்திவிடும். அதன் மூலம் தேவையற்ற சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

    * காபியில் சேர்க்கப்படும் சர்க்கரை கிளைகேஷன் எனப்படும் செயல்முறையின் மூலம் சருமத்தில் உள்ள கொலோஜனுடன் நிரந்தரமாக இணைகிறது. எனவே சர்க்கரையை அதிகம் சேர்க்கும்போது விரைவாகவே சருமம் வயதான அறிகுறிகுறிகளை வெளிப்படுத்தும். முகப்பருவும் தோன்றும்.

    * தினமும் நான்கு கப்களுக்கு மேல் காபி பருகும்போது ஒற்றைத்தலைவலி, உடல் நடுக்கம் போன்ற பிரச்சினைகள் நாளடைவில் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். காபி அதிகம் பருகுபவர்களாக இருந்தால் இடையிடையே காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் சுடுதண்ணீர் பருகும் பழக்கத்தை பின்தொடரலாம். அது காபி பருகும் அளவை குறைக்க உதவும். மூலிகை பானத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

    * நீண்ட காலமாக காபி அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் வழக்கமான நேரத்தில் காபி அருந்த முடியாமல் போகும்போது எரிச்சல் ஏற்படலாம். தலைவலி, உடல் இயக்க செயல்பாடுகளில் தொய்வு, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது போன்று தோன்றலாம். அதனால் காபிக்கு அடிமையாகிவிடாமல் முதலில் இருந்தே பருகும் அளவை குறைத்துக்கொள்ளவேண்டும்.

    * காய்ச்சிய பால் மற்றும் வறுத்த காபி கொட்டைகளை கொண்டு தயாராகும் ‘லேட்டி’ என்ற காபியில், ஒரு கப்பில் 500-க்கும் அதிகமான கலோரி இருக்கிறது. அத்தகைய காபியை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை பருகினால் சுமார் 1500 கலோரிகள் உடலுக்குள் சென்றுவிடும். இவ்வளவு கலோரிகள் உடலில் சேர்வது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
    ×