search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    காபியும்.. சரும சுருக்கமும்..
    X
    காபியும்.. சரும சுருக்கமும்..

    காபியும்.. சரும சுருக்கமும்..

    காபின் சருமத்திற்கும் கெடுதல் தரக்கூடியது. சரும அழகை மெருகேற்ற விரும்பும் பெண்கள் காபி அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.
    உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு அடுத்த படியாக வர்த்தக ரீதியான புழக்கம் அதிகம் கொண்ட இரண்டாவது பொருளாக காபி விளங்குகிறது. காலையில் எழுந்ததும் காபி பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். மாலை நேரங்களிலும் காபியை ருசிப்பவர்களும் இருக்கிறார்கள். காபி பருகுவதில் நன்மைகள் இருந்தாலும் கெடுதல் இல்லாமல் இல்லை. அதிலிருக்கும் காபின் அளவுக்கு அதிகமாக சேரும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். காபின் சருமத்திற்கும் கெடுதல் தரக்கூடியது. சரும அழகை மெருகேற்ற விரும்பும் பெண்கள் காபி அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

    * காபின் சரும வறட்சியை உருவாக்கி, நீரிழப்பை ஏற்படுத்தும் என்பது அறிவியல் ரீதியான உண்மையாகும். காபியை அதிகம் பருகும்போது உடலில் நச்சுக்களும் அதிகம் உருவாகும். அது நேரடியாக சருமத்தை பாதிக்கும். தினமும் காபியை அதிகம் பருகினால் சருத்தில் முதுமை விரைவாக எட்டிப்பார்க்கும் என்று சரும நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    * பால் கலந்த காபி பருகுவதும் சிலருடைய சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாது. பால் மற்றும் பால் பொருட்களை அதிகம் சேர்க்கும்போது சீபம் என்னும் எண்ணெய்ப்பசையின் உற்பத்தி குறையும். அதனால் சருமத்தின் ஜொலிப்பு குறையும்.

    * சருமத்தில் ஏதேனும் பிரச்சினைகளுக்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பால் பொருட்களின் உபயோகத்தை தவிர்த்துவிட வேண்டும். அதன் மூலம் சரும பாதிப்பை குறைக்கலாம்.

    * இரவில் அதிக நேரம் வேலை செய்துவிட்டு காலையில் தாமதமாக எழுபவர்களாக இருந்தால் காபி பருகும் அளவை கணிசமாக குறைக்க வேண்டும். காபி பருகுவது அவர்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். அதே நேரத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும். மன அழுத்த ஹார்மோன்களில் ஒன்றான கார்டிசோல் அளவு அதிகரித்து, எண்ணெய் சுரப்பிகளின் அளவையும் உயர்த்திவிடும். அதன் மூலம் தேவையற்ற சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

    * காபியில் சேர்க்கப்படும் சர்க்கரை கிளைகேஷன் எனப்படும் செயல்முறையின் மூலம் சருமத்தில் உள்ள கொலோஜனுடன் நிரந்தரமாக இணைகிறது. எனவே சர்க்கரையை அதிகம் சேர்க்கும்போது விரைவாகவே சருமம் வயதான அறிகுறிகுறிகளை வெளிப்படுத்தும். முகப்பருவும் தோன்றும்.

    * தினமும் நான்கு கப்களுக்கு மேல் காபி பருகும்போது ஒற்றைத்தலைவலி, உடல் நடுக்கம் போன்ற பிரச்சினைகள் நாளடைவில் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். காபி அதிகம் பருகுபவர்களாக இருந்தால் இடையிடையே காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் சுடுதண்ணீர் பருகும் பழக்கத்தை பின்தொடரலாம். அது காபி பருகும் அளவை குறைக்க உதவும். மூலிகை பானத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

    * நீண்ட காலமாக காபி அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் வழக்கமான நேரத்தில் காபி அருந்த முடியாமல் போகும்போது எரிச்சல் ஏற்படலாம். தலைவலி, உடல் இயக்க செயல்பாடுகளில் தொய்வு, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது போன்று தோன்றலாம். அதனால் காபிக்கு அடிமையாகிவிடாமல் முதலில் இருந்தே பருகும் அளவை குறைத்துக்கொள்ளவேண்டும்.

    * காய்ச்சிய பால் மற்றும் வறுத்த காபி கொட்டைகளை கொண்டு தயாராகும் ‘லேட்டி’ என்ற காபியில், ஒரு கப்பில் 500-க்கும் அதிகமான கலோரி இருக்கிறது. அத்தகைய காபியை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை பருகினால் சுமார் 1500 கலோரிகள் உடலுக்குள் சென்றுவிடும். இவ்வளவு கலோரிகள் உடலில் சேர்வது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
    Next Story
    ×