என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    முகத்திற்கு கடைகளில் விற்கப்படும் ஸ்கரப்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வீட்டுச் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே அற்புதமான ஸ்கரப்புகளை செய்யலாம்.
    மூக்கிற்கு மேலே சிலருக்கு சொரசொரப்பாகவும், கருமையான புள்ளிகளாகவும் இருக்கும். அதிலும் மூக்கிற்கு பக்கவாட்டில் அத்தகைய கரும்புள்ளிகளால், அவ்விடமே கருமையாகவும், அசிங்கமாகவும் காணப்படும். இப்படிப்பட்ட கரும்புள்ளிகள் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளால் வரக்கூடியது. இதற்கு அவ்வப்போது முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவதோடு, முகத்தை துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஸ்கரப்கள் பயன்படுத்த வேண்டும்.

    அதற்கு கடைகளில் விற்கப்படும் ஸ்கரப்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வீட்டுச் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே அற்புதமான ஸ்கரப்புகளை செய்யலாம். சரி இப்போது அந்த ஃபேஸ் ஸ்கரப்புகளை எப்படி செய்வதென்று பார்ப்போமா..!

    உப்பை நீரில் கலந்து, மூக்கின் மேல் தடவி, மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவினால், மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பு நீங்கும்.

    கடலை மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை மூக்கின் மேல் தடவி, கீழிருந்து மேலாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

    பட்டை பொடியை எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி உலர வைத்து, பின் தண்ணீர் தொட்டு ஸ்கரப் செய்து கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.

    சர்க்கரையை எலுமிச்சை சாற்றில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

    முட்டையின் வெள்ளைக் கருவை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் மறையும்.

    தயிரில் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து, கோடையில் முகத்தை தேய்த்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மட்டுமின்றி கரும்புள்ளிகளும் நீங்கும்.

    தக்காளியில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மை, கரும்புள்ளிகளை எளிதில் வெளியேற்ற உதவும். அதற்கு தக்காளியை இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.

    பேக்கிங் சோடாவில் தண்ணீர் சேர்த்து, அதனைக் கொண்டு முகத்தில் சொரசொரப்பாக உள்ள இடத்தில் தேய்த்து கழுவினால், சொரசொரப்பு நீங்கிவிடும்.

    எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும்.

    வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக்குகள் உங்கள் பார்வைக்கு...
    குளிர் காலத்தில் சரும பராமரிப்புக்கு கூடுதல் நேரமும், கவனமும் செலுத்த வேண்டியிருக்கும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள்தான் அதிக அவஸ்தைகளை அனுபவிக்க நேரிடும். ஏனெனில் முகத்தில் படியும் எண்ணெய் பசை சரும துளைகளை அடைத்துவிடும். இறுதியில் முகப்பரு பிரச்சினையை உண்டாக்கிவிடும். சருமத்திற்கு ஒவ்வாத ரசாயனம் அதிகம் கலந்த அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் பாதிப்பு அதிகமாகிவிடும். வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக்குகள் உங்கள் பார்வைக்கு...

    கடலை மாவு-மஞ்சள்:

    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு -1 கப்

    பொடித்த மஞ்சள்: சிறிதளவு

    பால்- சிறிதளவு

    செய்முறை:

    மஞ்சளை நன்கு தூளாக்கிக்கொள்ளவும். கடலை மாவு, மஞ்சளுடன் பால் சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதியை நன்கு கழுவவும். பின்னர் ஜெல் அல்லது ஈரப்பதமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். குளிர் காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வரலாம். எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவுடன் காட்சி தரும்.

    தேன் - ஓட்ஸ்-தயிர்-பாதாம்:

    ஓட்ஸ் சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கும். சரும துளைகள் அடைபடாமல் காக்கும். தயிர், சரும புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க உதவும். தேன் அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டது. பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது சருமத்தை மென்மையாக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ் - தேவையான அளவு

    தேன் - 2 டேபிள்ஸ்பூன்

    பாதாம்- 5

    தயிர்- 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    ஓட்ஸ், பாதம் இரண்டையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அதனுடன் தேன், தயிர் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.

    இந்த பேஸ் பேக்குகளை வாரத்தில் ஓரிரு நாட்கள் பயன்படுத்தி வரலாம். எண்ணெய் பசை தன்மை கொண்ட சரும பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.


    கேரட்-தேன்:

    இந்த பேஸ் பேக் சருமத்தை ஈரப்பதமாக்க உதவும். இறந்த செல்களை நீக்க துணை புரியும். சோர்வை போக்கி சருமத்திற்கு பொலிவு சேர்க்கும்.

    ஒரு கேரட்டை நன்றாக துருவி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் 2:1 என்ற விகிதத்தில் தேன் சேர்த்துக்கொள்ளவும். அதாவது கேரட் இரு பங்கு, தேன் ஒரு பங்காக இருக்க வேண்

    டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு கை விரல்களை தண்ணீரில் முக்கி வட்ட வடிவத்தில் முகத்தில் தேய்த்து கலவையை அப்புறப்படுத்தவும். பின்பு முகத்தை கழுவி விடலாம்.
    தலைக்கு குளித்தவுடன் தலைமுடியை துவட்டுவதற்கு, கடினமான துண்டு பயன்படுத்தாமல், பருத்தியால் தயாரிக்கப்பட்ட பழைய டி-ஷர்ட்டுகளை உபயோகிக்கலாம்.
    தலைமுடியில், நீளமானது, குட்டையானது, சுருட்டையானது என பலவிதம் இருந்தாலும், எல்லாவற்றிலும் பொதுவான பிரச்சினை முடி உதிர்வுதான். முடி கொட்டுவது இயல்பானது என்றாலும், உதிரும் முடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும், கொட்டிய இடத்தில் முடி வளராமல் இருப்பதும் கவலைக்குரியதாகும்.

    முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதும், தலைமுடியை சரியாக பராமரிப்பதும், முடி உதிர்வை நிறுத்தி வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கான சில எளிய வழிகளை இங்கே தெரிந்துகொள்வோம்.

    பராமரிப்பு:

    வறண்ட, மென்மை குறைந்த, சுருட்டை முடி கொண்டவர்கள்  தலைமுடியை வாரிவிடுவதற்கு சாதாரண சீப்பைப் பயன்படுத்தினால், முடி உதிர்வு அதிகமாக இருக்கும். ஆகையால் இவர்கள், பெரிய பற்கள் கொண்ட, மரத்தால் தயாரிக்கப்பட்ட சீப்பு பயன்படுத்துவதே சிறந்தது.

    தலைக்கு குளித்தவுடன் தலைமுடியை துவட்டுவதற்கு, கடினமான துண்டு பயன்படுத்தாமல், பருத்தியால் தயாரிக்கப்பட்ட பழைய டி-ஷர்ட்டுகளை உபயோகிக்கலாம். ஹேர் ட்ரையர் பயன்படுத்தாமல், கூந்தலை மின்விசிறிக் காற்றிலேயே உலர விட வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

    தலையில் அதிகமாக எண்ணெய் பூசிக்கொண்டு வெளியே சென்றால், தூசி, புழுதி போன்றவை ஒட்டிக்கொண்டு பொடுகு உருவாகும். எனவே, எண்ணெய் தேய்த்த ஒரு மணி நேரத்திலேயே, அதை ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு முழுவதுமாக சுத்தப்படுத்த வேண்டும்.

    அரிசி ஊற வைத்த தண்ணீரைத் தலையில் பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்துக் குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

    முடி வளர்ச்சிக்கான பானம்:

    இரண்டு நெல்லிக்காய்கள் மற்றும் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். இதை தினமும் தொடர்ந்து பருகி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

    கறிவேப்பிலையை நிழலில் உலர வைத்து, பொடியாக்கி, சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், முடி உதிர்வு குறையும்.

    முடி வளர்ச்சியை அதிகரிக்கும் கூந்தல் எண்ணெய்:

    நெல்லிக்காய்கள் - 3
    கறிவேப்பிலை (உலர்ந்தது) - ஒரு கைப்பிடி
    கரிசலாங்கண்ணி கீரை - ஒரு கைப்பிடி
    செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட தேங்காய்
    எண்ணெய் - ஒரு டம்ளர்
    செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட
    விளக்கெண்ணெய் - அரை டம்ளர்

    மேலே குறிப்பிட்ட அனைத்தையும் இரும்புச் சட்டியில் போட்டு மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். கலவையில் இருந்து நுரை பொங்கி வந்ததும், அடுப்பை அணைத்து விடலாம். இதை இரும்புச் சட்டியிலேயே ஒரு நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின்பு வடிகட்டி பயன்படுத்தலாம்.
    குறிப்பிட்ட கால இடைவெளியில் பால் குளியல் போடுவது கரும்புள்ளிகள் மற்றும் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை மேம்படுத்த உதவும் என்ற கருத்து நிலவுகிறது.
    சருமம் உரிதல்: பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. உடலில் இருந்து இறந்த செல்களை நீக்குவதற்கு பாலில் இருந்து தயாரிக்கப்படும் மோரை அதிகம் பயன்படுத்தலாம். அத்தகைய ஈரப்பதத் துடன் இறந்த செல்களை நீக்குவதால் சருமத்தில் பளபளப்பை தக்கவைத்துக்கொள்ளலாம்.

    பாலை பருகுவதோடு சரும அழகை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பாலில் உள்ள கொழுப்புகள் சருமத்தில் படர்ந்திருக்கும் எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு உதவும்.

    அதில் காணப்படும் லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு துணைபுரியும். பால் குளியல் உடலையும், மனதையும் தளர்வாக்கும். சருமத்தை புத்துணர்ச்சி அடையச்செய்யும். பல்வேறு உளவியல் நன்மைகளையும் வழங்கும்.

    அழற்சி: பால் குளியலானது சரும வறட்சி, தோல் தடிப்பு, தோல் அழற்சி, அரிப்பு போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்று நம்பப் படுகிறது. இருப்பினும் அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்யப்படவில்லை. ஆகையால் ஏதேனும் தோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் சரும மருத்துவரை அணுகுவது நல்லது.

    வெயிலுக்கு இதமளிக்கும்: பால் குளியல் சருமத்திற்கு ஊட்டமளிக்கக்கூடியது. சூரிய கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும பாதிப்புகளை சரி செய்ய உதவும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பால் குளியல் போடுவது கரும்புள்ளிகள் மற்றும் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை மேம்படுத்த உதவும் என்ற கருத்து நிலவுகிறது.
    பாலில் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை இருப்பதால் உள் மற்றும் வெளிப்புற சரும அடுக்கை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். வயதாகும் தோற்றத்தையும் தள்ளிப்போட வழிவகுக்கும்.
    பால் குளியலுக்கு பாலை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. குளிக்கும் நீரில் ஒன்றரை முதல் இரண்டு கப் பாலை கலந்தால் போதுமானது. பசும்பாலை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். பாலுடன் ரோஜா இதழ்கள், ஓட்ஸ், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் சிறிதளவு கலந்து கொள்ளலாம். பால் குளியல் மூலம் குழந்தைகளை குளிப்பாட்டுவது சிறந்தது.

    மன அழுத்தம்: வெதுவெதுப்பான நீரில் பால் சேர்த்தும் குளியல் போடலாம். இது தசைகளை மட்டுமின்றி மனதையும் தளர்வடைய செய்ய உதவும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். பால் குளியலுக்கு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது தலைவலி பிரச்சினையை போக்கவும் உதவும்.

    மென்மையான முடி: பால் இயற்கையான மாய்ஸ்சுரைசராக செயல்படக் கூடியது. தலையில் சிறிது பாலை தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு தலை முடியை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். பாலில் இருக்கும் புரதங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

    வயதான தோற்றம்: விரைவில் வயதான தோற்றத்தை எதிர்கொள்வதை எதிர்க்கும் பண்புகள் பாலில் இருப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் பாலில் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை இருப்பதால் உள் மற்றும் வெளிப்புற சரும அடுக்கை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். வயதாகும் தோற்றத்தையும் தள்ளிப்போட வழிவகுக்கும்.
    உங்களுக்கு எதனால் முடி கொட்டுகிறது என்கிற காரணத்தை முதலில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நம் உணவிலும் பண்புகளிலும் சிறுசிறு மாற்றங்கள் செய்தால், முடி கொட்டுதலுக்கு முடிவு கட்டிவிடலாம்.
    இன்று மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகள் அதிகம் இருக்கின்றன. அவற்றில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது, தலைமுடி உதிர்வதும், வழுக்கை விழுவதும்! இன்று ஆண்களுக்கு மட்டுமல்ல…. பெண்களுக்கும் முடி உதிர்வு அதிகமாகி, வழுக்கை விழுவது அதிகமாகி வருகிறது.

    உங்களுக்கு எதனால் முடி கொட்டுகிறது என்கிற காரணத்தை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதிலிருந்து விடுபட அதற்கேற்ப நம் உணவிலும் பண்புகளிலும் சிறுசிறு மாற்றங்கள் செய்தால், முடி கொட்டுதலுக்கு முடிவு கட்டிவிடலாம்.

    முடி உதிர்வுக்கான காரணங்கள்…..

    பரம்பரையாக முடி கொட்டுதல் என்பது ஒரு காரணம் என்றாலும், நாம் நமது பண்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம் நிச்சயமாக இதை ஜெயிக்க முடியும். ஆம், பரம்பரையாக செய்த சில தவறுகளை முத்திரைகள் மூலமே சரி செய்ய முடியும்.

    உடல் சூடு
    உடலில் அதிகமான உஷ்ணம் காரணமாக பிட்யூட்டரி, பீனியல் சுரப்பி ஒழுங்காக சுரக்காமல், அதில் சில குறைபாடுகள் ஏற்படுவதால் முடி கொட்டுகிறது.

    அதிக சிந்தனை

    தொடர்ந்து காலை முதல் இரவு வரை அதிகமாக சிந்தித்த வண்ணம் இருப்பவர்களுக்கு முடி கொட்டும். பொதுவாக பெரிய நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளவர்களின் தலை முடி முழுக்கக் கொட்டி, வழுக்கையாகத்தான் இருக்கும். இவர்கள் தொடர்ந்து மூளைக்கு அதிக வேலை கொடுப்பதால் மூளை நரம்புகள் கொதிப்படைந்து இப்படி நிகழ்கிறது.

    தூக்கமின்மை

    பலருக்கும் ஆழ்ந்த நித்திரை இருக்காது. அதனால் மன அழுத்தம், மனச்சோர்வு, நரம்பு பலவீனம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இதனால் முடி கொட்டும். உதிர்ந்த முடியானது வளராமல் இருக்கும்.

    உணவு

    நாம் சாப்பிடும் உணவு மிகவும் காரமாக இருந்தாலோ, எண்ணெய்ப் பண்டங்கள் அதிகமாக எடுத்தாலோ, மாமிசம் அதிகமாக உட்கொண்டாலோ, உடலில் நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக சுரக்காது. இதனால் முடி கொட்டக்கூடிய நிலை ஏற்படுகிறது.

    பகல் தூக்கம்

    பகலில் சாப்பிட்டதும் பலருக்கும் தூங்குவது வழக்கம். இதனாலும் முடி கொட்டும். அதேபோல் கணவன் / மனைவி அளவுக்கு மீறி அடிக்கடி தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டாலும் சுரப்பிகளில் மாறுபாடு ஏற்பட்டு, முடி கொட்டும்.

    எண்ணெய் தேய்த்துக் குளித்தல்

    ஆண்கள் வாரம் ஒருமுறை சனி / புதனும், பெண்கள் செவ்வாய் / ​வெள்ளியும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அப்படிக் குளிக்காதவர்களுக்கு உடல் மற்றும் மன உஷ்ணத்தினால் சுரப்பிகள் சரியாக சுரக்காமல் முடி கொட்ட ஆரம்பிக்கும்.

    குளிக்கும் தண்ணீர்

    உப்புத் தண்ணீரில் தொடர்ந்து குளிப்பதாலோ, அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் தண்ணீரை மாற்றி மாற்றி குளிப்பதாலோ அவர்களின் உடலில் சுரப்பிகளின் மாற்றத்தால் தலைமுடி கொட்டும்.
    மெஹந்தி கோன் வாங்கும் போது அதன் தயாரிப்புத் தேதியைப் பார்த்து வாங்கவும். ரெடிமேட் கோனை குறைந்தது 3 மாதங்கள் மட்டுமே வைத்திருந்து உபயோகப்படுத்த முடியும்.
    மருதாணியை தேர்ந்தெடுப்பது முதல் மருதாணி வைப்பதால் உண்டாகிற நன்மைகள் வரை பல விஷயங்களையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மெஹந்தி டிசைன்கள் பற்றி, ரெடிமேட் மெஹந்தி கோன் உபயோகிக்கிற போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, மெஹந்தி அலர்ஜி வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி பற்றி... இன்னும் ஏராளமான மெஹந்தி தகவல்களைப் பார்க்கலாம்.

    விதம் விதமான மெஹந்தி டிசைன்கள் குஜராத்தி மெஹந்தி டிசைன்: நெருக்கமான கோடுகள், பூக்கள், மயில், மணப்பெண், முரசு போன்ற டிசைன்களை வரைவது. அரபிக் மெஹந்தி டிசைன்: பெரிய பூக்கள், இலை, கொடிகளை வரைவது. பாகிஸ்தானி மெஹந்தி டிசைன்: இது இந்தியன், அரபிக் டிசைன்கள் இரண்டையும் கலந்து வரைவது.

    இந்தோ அரபிக் மெஹந்தி டிசைன்: பட்டையான கோடுகளால் அவுட் லைன் வரைந்து, இந்தியன் டிசைன்களில் உள்ளே உள்ள இடங்களை நிரப்புவது. கிளிட்டர் மெஹந்தி: ஆஸ்துமா, வீஸிங் இருப்பவர்களுக்கு மெஹந்தி குளிர்ச்சி என்பதால், அவர்களுக்கு கிளிட்டர் மெஹந்தி பரிந்துரைக்கப்படும். உடைக்கு மேட்ச்சாக ஜிகினா கலந்து பூக்கள், டாட்டூ போல பெரிய டிசைன்களாக வரைவதுதான் இதன் சிறப்பு. பார்ட்டி பிரியர்கள் அதிகம் விரும்பி போட்டுக் கொள்வதும் இந்த ஒரு நாள் மெஹந்திதான்!

    பிளாக் மெஹந்தி: இது இஸ்லாமிய நாடுகளில் பிரபலம். பூக்கள் நிறைய கொண்ட டிசைனில் வெளிக்கோடுகள் கருப்பு நிறத்திலும், உள் பக்கம் சிவப்பு நிறத்திலுமாக வரைவார்கள். கருப்பு-சிவப்பு காம்பினேஷனில் அந்த டிசைன் கண்களைக் கவரும். எப்போதுமே தரமான மருதாணி இலையைப் பறித்து, பதமாக அரைத்து வீட்டிலேயே மெஹந்தி கோன் தயாரித்து உபயோகிப்பதுதான் பாதுகாப்பானது. இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் யாருக்கும் அதற்கு நேரமும் பொறுமையும் இல்லை. எனவே, ரெடிமேட் மெஹந்தி கோன்களையே உபயோகிக்கிறார்கள்.

    ரெடிமேட் கோன் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

    * லெமன் மெஹந்தி கோன், இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன் என்று பல வகை மெஹந்தி கோன்கள் கிடைக்கின்றன.

    * மெஹந்தி கோன் வாங்கும் போது அதன் தயாரிப்புத் தேதியைப் பார்த்து வாங்கவும். ரெடிமேட் கோனை குறைந்தது 3 மாதங்கள் மட்டுமே வைத்திருந்து உபயோகப்படுத்த முடியும். நல்ல தரமான மெஹந்தி கோன்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அந்த மெஹந்தி கோன் பெட்டியின் மேல் தயாரிக்கும் நிறுவனம், அதன் விலாசம் உள்ள பிராண்டுதான் சிறந்தது.

    * இன்ஸ்டன்ட் மெஹந்தி கோன், டிசைன் வரைந்த பத்து நிமிடங்களுக்குள், டார்க் மெரூன் கலர் வந்துவிடும். இந்த மாதிரி மெஹந்தி கோன்களில் கண்டிப்பாக PPD என்று சொல்லக் கூடிய Para Phenyl Diamin கலந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

    மெஹந்தி அலர்ஜி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

    * சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், பொதுவாகவே ரெடிமேட் மெஹந்தி கோன்ஸ் உபயோகப்படுத்த வேண்டாம். முதல் முறை ரெடிமேட் கோன் வைத்து மெஹந்தி போட்டுக் கொள்கிறவர்கள் அதில் சிறிதளவை எடுத்து பேட்ச் டெஸ்ட் (Patch test) செய்துவிட்டு உபயோகிப்பது பாதுகாப்பானது. தரமான மெஹந்தி கோனால் அலர்ஜி வர வாய்ப்பில்லை. அப்படியே மெஹந்தியால் அலர்ஜி
    வந்தால் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.

    * சில தரமற்ற மெஹந்தி கோன்களில் நல்ல நிறம் வர வேண்டும் என்பதற்காக குங்குமம், சுண்ணாம்பு போன்றவற்றைக்கூட சேர்க்கிறார்கள். இவையும் நிறைய பேருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். மெஹந்தியால் அலர்ஜி ஏற்பட்டது தெரிந்தால் உடனடியாக அதை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். சரும மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    மருதாணி சிவக்க என்ன செய்ய வேண்டும்?

    * மெஹந்தி டிசைன் போட்ட இடத்தில், எலுமிச்சையும் சர்க்கரையும் கலந்த கரைசலை பஞ்சினால் தொட்டு டிசைன் மேல் ஒற்றி வரவும்.
    * டிசைன் காய்ந்து எடுத்த பின், தண்ணீர் படாமல் 4 மணி நேரம் பார்த்துக் கொள்ளவும்.
    * சுடுநீரில் 15 - 20 கிராம்பு போட்டு அதில் இருந்து வரும் ஆவியில் கையை காட்டினால், அதிக நிறம் வர வாய்ப்பு இருக்கிறது.
    * கையில் லோஷன், எண்ணெய், பிளீச் படாமல் பார்த்துக் கொண்டால், மெஹந்தி கலர் மாறாமல் இருக்கும்.
    இன்றைய நவீன உலகில், மாடர்ன் உடை அணிந்து கொண்டு செல்லும் போது பலரும், தங்கள் அக்குள் கருமை, அக்குள் துர்நாற்றம் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்.
    இன்றைய நவீன உலகில், மாடர்ன் உடை அணிந்து கொண்டு செல்லும் போது பலரும், தங்கள் அக்குள் கருமை, அக்குள்  துர்நாற்றம் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். அக்குள்களில் படிந்திருக்கும் கருமையை நீக்குவது அவசியம். அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இல்லை என்றால் மிகவும் கருப்பாக மாறிவிடும்.

    கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில் மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.  

    “கருமையான தோல் நிறம் உள்ளவர்கள், அவர்களின் தோலில்’ மெலனின் அல்லது மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அக்குள் கருமையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தோல் மருத்துவர் சில வழிமுறைகளை கூறுகின்றனர்.

    சில டியோடரண்டுகள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம், மேலும் சருமம் கருமையாவதற்கும் வழிவகுக்கும்.

    தோல் மருத்துவரின் கூற்றுப்படி, அக்குள் பிக்மென்டேஷனை தடுக்க, பின்வருவனவற்றைச் செய்யலாம்.

    1. வாசனை இல்லாத டியோடரண்டின் பிராண்டுக்கு மாறவும்

    2. ரேசர்கள் எரிச்சலை ஏற்படுத்தும், எனவே நீங்கள் ஷேவ் செய்யும் போது, ​​அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

    3. சன்ஸ்கிரீன், இந்த அதிசய தயாரிப்பு அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது மற்றும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

    4. தளர்வான ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஆடைகள் ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தும்.

    5. சுறுசுறுப்பாக இருங்கள், உடற்பயிற்சி மற்றும் எடை குறைப்பு ஆகியவை அக்குள் பிக்மென்டேஷனை குறைக்க உதவும்.

    வீட்டு உபயோக குறிப்புகள்:

    உங்கள் கைகளின் அக்குள்களில் உள்ள கருமையை நீக்க பேக்கிங் சோடா உதவும். இதற்கு நீங்கள் பேக்கிங் சோடாவுடன், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை அக்குள்களில் தடவி உலர விட்டு, ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    உருளைக்கிழங்கு, எலுமிச்சை சாறு போன்றவையும் பலன் அளிக்கும். வாரம் 4 நாட்கள் அரை எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை உருளைகிழங்கு மசியலில் பிசைந்து நன்கு ஸ்க்ரப் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறைந்துவிடும்.
    இயற்கைளாக சாயமிடப்பட்ட புடவைகள் மற்றும் துணிகளை உள் பக்கமாக மடித்து பழைய வேட்டிகள் அல்லது அவெள்ளை துப்பட்டாக்களில் பொதிந்து வைக்கலாம்.
    வேர்கள், இலைகள், பூக்கள், காய்கறிகள் பழங்களின் தோல்கள், மண்ணுக்கு அடியில் கிடைக்கும் தாதுக்கள் போன்றவற்றில் இருந்து பெறப்படும் சாயங்களை இயற்கை சாயங்கள் என்கிறோம். இந்த சாயங்கள் துணிகளுக்கு வண்ணமேற்றப்பயன்படுகின்றன.

    கடுக்காயை பதப்படுத்தி ஒரு விதமான மஞ்சள் நிறம் உருவாக்கப்படுகிறது. இண்டிகோ எனும் செடியில் இ ருந்து நீலநிறசாயம் பெறப்படுகிறது. வெல்லத்தையும், இரும்பு துகள்களையும் நொதிக்க வைத்து கருப்பு நிறச்சாயம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு முற்றிலும் இயற்கையான மூலப்பொருட்களை கொண்டும தயாரிக்கப்படும் இயற்கை சாயங்களால் வண்ணமேற்றப்பட்ட சேலைகள் பராமரிப்பது சற்றே கடினமான செயல்தான்.

    துவைப்பது, இஸ்திரி செய்வது அலமாரியில் வைத்து பாதுகாப்பது போன்ற அனைத்து செயல்களிலும் கவனத்தோடு இருக்க வேண்டும். முறையாக பராமரிக்காவிட்டால் இயற்கை சாயம் ஏற்றப்பட்ட சேலைகள் விரைவாகவே பொலிவு இழந்து விடும சரியான முறையில் பராமரித்தால் இத்தகைய சேலைகள் பல வருடங்கள் புதுப்பொலிவுடன் இருக்கும்.

    இயற்கை சாயங்களுக்கு ஒளியே முதல் எதிரி நேரடி சூரிய ஒளியின் வெளிப்பாடு வீடுகளிலோ அல்லது அலமாரிகளிலோ பிரகாசமான ஒளிபடும் இடங்களில் இவற்றை வைப்பது நிறத்தை மங்கசெய்யயும். இயற்சை சாயம் ஏற்றப்பட்ட சேலைகள் நேரடி சூரிய ஒளியில் உலர்த்தக்கூடாது.

    இயற்கைளாக சாயமிடப்பட்ட புடவைகள் மற்றும் துணிகளை உள் பக்கமாக மடித்து பழைய வேட்டிகள் அல்லது அவெள்ளை துப்பட்டாக்களில் பொதிந்து வைக்கலாம்.

    இந்த வகை புடவைகள் சலவை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். ஆரம்பகாலத்தில் சலவை செய்யும் போது இரண்டு அல்லது மூன்று முறை சாயம் போக நேரிடும். இதன் மூலம் துணியில் ஏற்றப்பட்டிருக்கும் அதிகப்படியான சாயம் வெளியேறும். சில நேரங்களில் அடர்த்தியான நிறங்கள் வெளிர் நிறங்களாக மாறக்கூடும்.

    இயற்கையான சோப்புகள் அல்லது கூந்தலுக்கு பயன்படுத்தும் மென்மையான ஷாம்பு உபயோகித்து இந்த துணிகளை துவைக்கலாம். பட்டுத்துணிகளை உலர் சலவைக்கு கொடுப்பதே சிறந்தது.

    சலவை செய்ய தூய்மையான நீரை பயன்படுத்துவது நல்லது. உப்பு நீர் இந்த வகை துணிகளுக்கு ஏற்றது அல்ல.

    இயற்கை சாயம் இடப்பட்ட புடவைகளை மிதமான வெப்ப நிலையில் மட்டுமே இஸ்திரி செய்ய வேண்டும். உள் பக்கமாக திருப்பி போட்டு இஸ்திரி செய்ய வேண்டும்.
    சில குர்தாக்கள் எளிமையாகவும், சில குர்தாக்கள் பிளெயின் அல்லது பிரிண்டட் செய்யப்பட்டும், இன்னும் சில குர்தாக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டு மிகவும் அழகாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
    தென் இந்திய ஆண்களின் விருப்பமான ஆடைகளில் ஒன்றாக இவை மாறிவிட்டன. காட்டன், சில்க்-காட்டன், தூய பட்டு மற்றும் டஸ்ஸர் பட்டில் குர்தாக்களானது வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சில குர்தாக்கள் எளிமையாகவும், சில குர்தாக்கள் பிளெயின் அல்லது பிரிண்டட் செய்யப்பட்டும், இன்னும் சில குர்தாக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டு மிகவும் அழகாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

    காட்டன் குர்தாக்கள்

    இவை அணிந்து கொள்ள லேசாக, வசதியாக இருப்பதோடு செமி ஃபார்மல் உடையாக அணிந்து கொள்வது போலும் வருகின்றது. இவற்றை அன்றாடம் வீட்டில் அணியும் உடையாகவும் வைத்துக்கொள்ளலாம். பலவித வண்ணங்களில் பிளெயினாகவும், கழுத்து மற்றும் பட்டன் துளைகளைச் சுற்றி எம்பிராய்டரி செய்யப்பட்டு நேர்த்தியான வடிவமைப்புடன் வருகின்றது.

    இந்தியப் பருவநிலைக்கு ஏற்றவையாக இவ்வகைக் காட்டன் குர்தாக்கள் உள்ளன.

    சில்க்-காட்டன் குர்தாக்கள்

    இவ்வகைக் குர்தாக்கள் காட்டன் குர்தாக்களைவிட சற்று கனமானதாகவும், பளபளப்பாகவும், விரிவான எம்ராய்டரி வேலைப்பாடுகளுடன் பணக்காரத் தோற்றத்தை தருபவையாக உள்ளன.

    இவை ஃபார்மல் விருந்துகள் மற்றும் சமூக விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக உள்ளன. கைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்ட சாந்தா வடிவங்களைக் கொண்ட சில்க்-காட்டன் குர்தாக்கள் ஒரு சிறப்பான வகையாக உள்ளன.

    மேற்கு வங்காளத்தில் உள்ள போல்பூரைச் சேர்ந்த கிராமப்புற கைவினைஞர்களால் இவ்வகை காந்தா வேலைபாடுகள் செய்யப்படுகின்றன.

    ஜமீன்தார் பாணியிலான குர்தாக்கள் மற்றொரு சிறப்பான வகையைச் சேர்ந்தவை. இவற்றில் முன்புறம் பட்டன்களுக்குப் (பொத்தான்களுக்கு) பதிலாக உடலின் பக்கவாட்டில் திறப்பைக் கொண்டுள்ளன. கயிறுகளால் அவற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு பட்டன்கள் இல்லாமல் கயிறுகளால் கட்டுவது பிரமாண்டமான, ஜமீன்தார் வகை தோற்றத்தைக் கொடுக்கின்றன.

    தூயபட்டு குர்தாக்கள்

    இவை மென்மையான, மல்பெரி பட்டினால் தயாரிக்கப்படுவதால் அணிந்துகொள்ள இலகுவாகவும், வசதியாகவும் உள்ளன. இவை பிரகாசமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் கிடைக்கின்றன. சிக்கலான எம்பிராய்டரி வடிவங்கள் இந்த பட்டு குர்தாக்களின் அழகை உயர்த்திக் காட்டுகின்றன. திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு அணியப் பொருத்தமானவையாக இவை உள்ளன.

    டஸ்ஸர் பட்டு குர்தாக்கள்

    இவை பழுப்பு, கிரீம், தேன் மற்றும் தங்க நிறங்களில் அழகாக உள்ளன. இவ்வகை குர்தாக்களின் துணியானது காகிதம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. வழக்கமாக எம்பிராய்டரி வடிவங்களால் இவ்வகைக் குர்தாக்கள் அலங்கரிப் படுகின்றன. கழுத்தைச் சுற்றி மிகவும் லேசான எம்பிராய்டரி வடிவங்களும், குர்தாவின் முன்பக்கம் முழுவதையும் கனமான எம்பிராய்டரி அலங்கரிப்பது போலவும் வடிவமைக்கிறார்கள். இந்த குர்தாக்கள் பூஜைகள் மற்றும் திருமணங்கள் போன்ற விழாக்களுக்கு அணியப் பொருத்தமானவையாக உள்ளன.

    டஸ்ஸர் பட்டு குர்தா மற்றும் டோத்தி என்பது பெங்காலி திருமணத்தில் மணமகனின் வழக்கமான உடையாகும்.

    பாரம்பரியமாக, பைஜாமாக்கள் அல்லது டோத்திகளுக்கு மேல் குர்தாக்களை அணிந்து வந்திருக்கிறார்கள். சமீபகாலமாக கால்சட்டைகள் அல்லது ஜீன்ஸ்களுக்கு மேலும் குர்தாக்களை அணிவதை நடுத்தர ஆண்கள் விரும்புகிறார்கள்.

    ஸ்டைலிஷ் குர்தாக்கள்

    * ஏ சிமெட்ரிக் குர்தாக்கள்:- இவை சமச்சீரற்ற தோற்றத்தைத் தருபவை. கழுத்தின் பக்கவாட்டில் இரண்டு பொத்தான்கள் (பட்டன்கள்) வைக்கப்பட்டு இரண்டு அடர்த்தியான கலர்கள் சேர்ந்து வருவதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கும் இவை நவீன பாணியில் கண்கவரும் விதத்தில் இளைஞர்களின் விருப்ப ஆடைகளில் ஒன்றாக உள்ளன.

    * மாண்டரின் குர்தாக்கள்:- உயரமான மற்றும் மெலிதான ஆண்களுக்கு ஏற்ற நேர்த்தியான குர்தாக்கள் இவை. முன்புறம் பட்டன்கள் வைத்து காலருடன் வந்திருக்கும் இவை மாண்டரின் குர்தாவிற்கு சிறப்பு சேர்க்கின்றன.

    சைடு-ஸ்லிட் குர்தாக்கள்:- குர்தாவின் முன்புற பக்கவாட்டில் ஒரு புறம் ஸ்லிட்டும் மறுபுறம் பாக்கெட்டானது வைக்கப்பட்டு அதற்கு வெள்ளை அல்லது மென்மையான வண்ண லைனிங் கொடுத்திருப்பது கண்களை கவர்ந்து இழுக்கின்றது.

    ப்ரோகேட் குர்தாக்கள்:- ப்ரோகேட் வேலைபாடுகளானது குர்தா முழுவதுமிருக்க பிளெயின் நிறத்தில் முழுக்கை அதன் பார்டர் உடல் டிசைனில் சிவப்பு, நீலம், தங்க நிறம் மற்றும் பழுப்பு நிறங்களில் அட்டகாசமாக உள்ளது.

    பேக் எம்பிராய்டரி குர்தாக்கள்:- முதுகுப்புறம் காலர் மற்றும் கை பார்டர்களில் எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கும் இவ்வகைக் குர்தாக்கள் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள் சேர்த்து வரும்பொழுது அவை நிச்சயம் ஸ்டைலான தோற்றத்தை தரும். கலாச்சார மற்றும் சமூக விழாக்களுக்கு பாட்டியாலா பேன்ட்டுகளுக்கு மேலும், நவீன விருந்துகளுக்கு ஜீன்ஸ் பேன்ட்டுகளுக்கு மேலும் அணியலாம்.

    இவை மட்டுமல்லாமல் ஓப்பன் காலர் குர்தாக்கள், பட்டன் ஸ்லீவ் குர்தாக்கள், சைனீஸ் காலர் குர்தா, கெளல் ட்ரேப்டு குர்தா, மஃப்ளர் ஸ்டைல் குர்தா, குர்தா ஜாக்கெட் டிசைன், பிளெயிட் குர்தா, கான்க்ரீட் டிசைன் குர்தா, குஜராத்தி ஸ்டைல் குர்தா, பதானி குர்தா எனப்பல வகைகள் குர்தாக்களில் உள்ளன.
    நமது அன்றாட வாழ்வில் சில உணவு முறைகளை கடைபிடிப்பதன் மூலமும், சில எளிமையான சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலமும் கோடைக்கால சரும பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பாக வாழலாம்.
    கோடைக்காலம் தொடங்கிய உடனேயே பலரும் மனதளவில் அச்சம் கொள்வது கோடையின் வெப்பமும் அதனால் ஏற்படும் பல சரும பாதிப்புகளும் குறித்து தான். சிறுகுழந்தைகள், நடுத்தர வயதினர் மற்றும் வயதானோர் உட்பட அனைத்து வயதினரும் இந்த கோடையின் வெப்பத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.
    புவியியல் அமைப்பின் அடிப்படையில் நமது இந்திய நாடு ஒரு வெப்ப மண்டல பிரதேசமாகவே கருதப்படுகிறது. பொதுவாக மார்ச் முதல் ஜூன் வரை கோடைக் காலமாக இருந்தாலும் ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    ஆனால் தற்போது புவிவெப்பமயமாதல் போன்ற காரணங்களால் வெயிலின் தாக்கம் கோடைக்காலத்தின் தொடக்கம் முதலே அதிகப்படியாக உள்ளது. கடந்த சில வருடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரையும், சில நேரங்களில் அதற்கு மேலும் கூட வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்த அதிகப்படியான வெப்பநிலை நமது உடல் நிலையை வெகுவாக பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக பல சரும பாதிப்பு கோடைக்காலத்தில் அதிகமாக தோன்றுகின்றது.

    கோடைக்காலத்தில் சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிப்பதால், அந்த வெப்பநிலை மாற்றம் நமது உடலை பாதிக்காத வகையில் இயற்கையாகவே வியர்வை சுரப்பு அதிகமாகிறது. இதனால் உடலின் வெப்பநிலை அதிகரிக்காமல் நடுநிலையாக பராமரிக்கப்படுகிறது.

    ஆனால் இந்த அதிகப்படியான வியர்வையுடன் சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகள்  சேர்ந்து துர்நாற்றம் மற்றும் அரிப்பு  தோன்றுகிறது. மேலும் எண்ணை பசை சருமம் உடையவர்களுக்கு வியர்வையுடன், எண்ணை சுரப்பும் அதிகப்பட்டு, அவை இரண்டும் சேர்ந்து எண்ணை சுரப்பிகளை அடைப்பதால் முகப்பரு  தோன்றுகிறது.

    அடுத்ததாக, கோடைக்காலத்தில் தோன்றும் முக்கியமான சரும பிரச்சினை வேர்க்குரு. இது பெரும்பாலும் குழந்தைகளுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இவை சீழ் சேர்ந்த வேனல் கொப்புளங்களாக மாறி வேதனை மற்றும் வலியை தருகின்றன.

    மேலும் அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தால் உடலின் நீர்சத்து குறைகிறது. இதனால் சோர்வு, தோல் வறட்சி, அரிப்பு , மனக்குழப்பம் , மயக்கம் , தலைச்சுற்றல், தலைவலி போன்றவை ஏற்படுகின்றன.

    மேலும் வெயிலில் அதிகமாக செல்வதால் சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களால் தோல் பாதிக்கப்பட்டு, தோலில் வெப்ப புண், தோல் கருமையாதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிகப்படியான வியர்வையினால் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுகளான படர்தாமரை , தேமல் போன்ற சரும நோய்கள் ஏற்படுகின்றன.

    கோடை வெயிலோடு சில நேரங்களில் கோடை மழையும் சேர்ந்து கொள்வதால் வெப்பமும் குளிர்ச்சியும் சேர்ந்த இந்த புறச்சூழ்நிலை ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்’ என்பதற்கு இணங்க, நம் உடலிலும் பித்தத்துடன் கபம் சேர்ந்து உடலின் நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்திருக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் சின்னம்மை போன்ற வைரஸ் தொற்று நோய்கள் உடலில் தோன்றுகின்றன.

    நமது அன்றாட வாழ்வில் சில உணவு முறைகளை கடைபிடிப்பதன் மூலமும், சில எளிமையான சரும பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலமும் மேலே கூறப்பட்ட கோடைக்கால சரும பாதிப்புகளான வேர்க்குரு, வேனல் கொப்புளம், முகப்பரு , தேமல், படர்தாமரை, தோல் வறட்சி, அரிப்பு, வெப்ப புண் , வெயிலினால் தோல் கருமையடைதல், சின்னம்மை போன்றவற்றில் இருந்து பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பாக வாழலாம்.

    தினமும் 2 முறை குளிப்பது நல்லது. இதன் மூலம் உடலின் வியர்வை நாற்றம் நீங்குவதோடு கிருமிகளின் தொற்றும் நீக்கப்படுகிறது. குறைந்தது 2&- 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது நல்லது. இதனால் உடலின் நீர் இழப்பு தவிர்க்கப்படுகிறது.

    மேலும் ஒரு சிறு துண்டு கற்றாழையை தோல் சீவி அதன் சதை பகுதியை  நன்றாக நீரில் கழுவி பின் தோலில் தேய்ப்பதன் மூலம் தோல் வறட்சி ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

    முகத்தினை அடிக்கடி நீரில் கழுவுவதன் மூலமும், எண்ணையில் பொரித்த உணவுகள் மற்றும் காரமான உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் முகப்பரு வராமல் தடுக்க முடியும்.

     சந்தனத்தை தண்ணீரில் கலந்து வேர்க்குருவிற்கு பூசலாம். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இறுக்கமான ஆடைகளை அணிவதால் வியர்வையின் காரணமாக படர்தாமரை, தேமல் போன்ற தோல் நோய்கள் ஏற்படுகின்றன. எனவே பருத்தியாலான மற்றும் தளர்வான ஆடைகளை அணிவது சிறந்தது.

    காபி, டீ போன்ற பானங்களை தவிர்த்து மோர், இளநீர், பானகம், நன்னாரி சர்பத் போன்ற பானங்களையும், வெள்ளரி, தர்பூசணி, முலாம் பழம், நுங்கு போன்ற நீர்ச்சத்துள்ள பழ வகைகளையும், மேலும் சருமத்திற்கு பாதுகாப்பு தரக்கூடிய பப்பாளி, கேரட், ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்றவற்றையும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

    மேலும் மஞ்சள் தேய்த்து குளிப்பது நம் தென்னாட்டு பெண்மணிகளின் வழக்கம். அவ்வாறு குளிப்பதனால் வியர்வை, கற்றாழை நாற்றம், முகத்தில் உண்டாகும் நோய்கள் நீங்கும் என நமது மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

    இதை தவிர சோப்பிற்கு பதிலாக நலங்கு மாவினை பயன்படுத்தலாம் என நம் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. நலங்கு மாவில் பாசிப்பயறு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, கிச்சிலிக்கிழங்கு, சந்தனம் போன்றவை சேர்த்து செய்யப்படுகிறது. சோப்பிற்கு பதிலாக இதனை பயன்படுத்தும் போது, தோலை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைக்கிறது. உடல் துர்நாற்றத்தை நீக்குகிறது.

    மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக் கூடிய நேரமான மதியம் 12 முதல் மாலை 3 மணி வரை நேரடியாக வெயில் படுமாறு வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. வாரத்திற்கு 2 முறை எண்ணைய் குளியல் செய்வதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும். சருமம் பளபளப்பு பெறும். இருப்பினும் ஆஸ்துமா, சைனஸ் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு உடையோர் மருத்துவரின் ஆலோசனைப்படி எண்ணைய் குளியல் செய்வது நல்லது.

    மேலும் உணவில் உளுந்து, அரைக்கீரை, பருப்பு கீரை, கீரைத்தண்டு, பறங்கிக்காய், புதினா, புடலங்காய், பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி, மாதுளை, வெண்டைக்காய், வெந்தயக்கீரை போன்றவற்றை கோடை காலத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இவை இயல்பாக உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியை தரும் உணவுப் பொருள்கள். இவை கோடையின் வெப்பத்தால் உடலில் ஏற்படும் பல சரும நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.

    கடந்த சில வருடங்களாக கோடை காலத்தில் வெயில் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உடலின் நீர்ச்சத்து இழப்பே ஆகும். எனவே உடலின் தேவைக்கு ஏற்ப நீர் அருந்துதல், மேற்கூறிய வழிமுறைகள் மற்றும் உணவு முறைகளை கடைபிடிப்பதன் மூலம் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சருமத்தையும் நமது உடலினையும் பாதுகாத்து நலமோடு வாழலாம்.
    சரும அழகை மேம்படுத்துவதற்கு வைட்டமின் இ அவசியமானதாக இருக்கிறது. அதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.
    உடலின் சீரான இயக்கத்திற்கு வைட்டமின்களின் பங்களிப்பு முக்கியமானது. உடல் உள் உறுப்புகள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின்கள் உறுதுணையாக இருக்கின்றன. சரும அழகை மேம்படுத்துவதற்கு வைட்டமின் இ அவசியமானதாக இருக்கிறது. வைட்டமின் இ மாத்திரைகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றலாம். அதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்.

    * சூரிய வெப்பத்தாக்கத்தை பிரதிபலிக்கும் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை காப்பதற்கு வைட்டமின் இ உதவுகிறது. சரும சுருக்கத்திற்கும் நிவாரணம் அளிக்கிறது. இரண்டு வைட்டமின் இ மாத்திரைகளுடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சருமத்தில் தடவிக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    * பிரசவத்தின்போது வயிற்றில் உருவாகும் கோடுகளை வைட்டமின் இ மாத்திரையால் போக்கலாம். ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை எடுத்து லேசாக சூடுபடுத்தி அதனுடன் வைட்டமின் இ மாத்திரையை சேர்த்து குழப்பி தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்துவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் மறைய தொடங்கும்.

    * சிறிதளவு எலுமிச்சை சாறுடன் ஐந்து வைட்டமின் இ மாத்திரைகளை சேர்த்து குழைத்தும் தழும்புகளில் தடவி மசாஜ் செய்யலாம். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெ துப்பான நீரில் கழுவ வேண்டும்.

    * வெது வெதுப்பான நீரில் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் மற்றும் வைட்டமின் இ மாத்திரையை கலந்துகொள்ள வேண்டும். அந்த நீரில் கை, கால்களை 15 நிமிடம் முக்கி வைக்க வேண்டும். பின்னர் விரும்பிய மாய்ச்சரைசரை தடவிக்கொள்ளலாம். தினமும் அவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    ×