என் மலர்
அழகுக் குறிப்புகள்
தாடி வளர்க்கும்போது சூரியனிடம் இருந்துவரும் கதிர்வீச்சுகள் நேரடியாக சருமத்தை பாதிக்காது என்பதால் இளமையான தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்.
காதலில் தோல்வி அடைபவர்கள்தான் தாடி வளர்ப்பார்கள் என்ற நிலை இப்போது இல்லை. ஸ்டைலுக்காக தாடி வளர்ப்பவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். தாடியை முறையாக பராமரித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். புற்று நோயை தடுக்கும் தன்மை தாடிக்கு உண்டு என்று சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் முகத்தை நேரடியாக தாக்காதவாறு தாடி பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. அதனால் தாடி வளர்ப்பவர்களுக்கு சரும புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வயதான தோற்றத்தை தடுக்கும் தன்மையும் தாடிக்கு உண்டு. ஏனெனில் தாடி வளர்க்கும்போது சூரியனிடம் இருந்துவரும் கதிர்வீச்சுகள் நேரடியாக சருமத்தை பாதிக்காது என்பதால் இளமையான தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். அதாவது தாடியுடன் பார்க்கும்போது வயது அதிகரித்திருப்பது போல் தோன்றும். ஆனால் சருமமோ இளமையுடன் மிளிரும்.
மழைக்காலம் தாடி வளர்ப்புக்கு ஏதுவானது. தாடி எந்த அளவுக்கு அடர்த்தியாக உள்ளதோ அந்த அளவுக்கு குளிருக்கு இதமளிக்கும். குளிரை கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. மழைக்கால நோய் பாதிப்புகளில் இருந்தும் தாடி பாதுகாப்பு வழங்கும். பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
தாடி வளர்ப்பவர்களை விட ‘ஷேவிங்’ செய்து பளிச்சென்ற தோற்றத்துடன் காணப்படுபவர்கள் மழைக்காலத்தில் சரும நோய்த்தொற்று பாதிப்புகளுக்கு ஆளாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஷேவிங் செய்யும்போது கவனமாக செயல்படாவிட்டால் வெட்டுக்காயங்கள் ஏற்படக்கூடும். பருக்கள், சரும அரிப்பு போன்ற பிரச்சினைகளும் சிலருக்கு உருவாகும். ஆனால் தாடி வளர்ப்பவர்கள் அதனை முறையாக பராமரித்தால் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை.
சருமம் ஈரப்பதமாக இருந்தால்தான் சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். சரும அழகை தக்கவைத்துக்கொள்வதற்கு உலர்வடையாமல் பேணி பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால் தாடி வளர்ப்பவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படாது. தாடி வளர்க்கும்போது இயற்கையாகவே ஈரப்பதம் படர்ந்திருக்கும்.
சருமம் உலர்வடைவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் சரும பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதேவேளையில் தாடியை ஸ்டைலாக வளர்ப்பதற்கு ஏற்ப பராமரிப்பும் அமைய வேண்டும். அப்போதுதான் சரும அழகை தாடி பிரதிபலிக்கும்.

மாம்பழங்களை ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். இப்போது மாம்பழ பேஸ் பேக் போடுவது எப்படி என்று பார்க்கலாம்...
மாம்பழங்களை ருசித்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சரும அழகை மேம்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒருசிலருக்கு தோலின் நிறம் சீரற்ற தன்மையுடன் காணப்படும். அவர்கள் சரும அழகை சீராக்குவதற்கு மாம்பழத்தை கூழாக தயாரித்து பயன்படுத்தலாம். மாம்பழத்தின் தோல் மற்றும் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் கூழாக அரைத்து சருமத்தில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.
மாம்பழக் கூழுடன் கடலை மாவு, தேன், அரைத்த பாதாம் சேர்த்தும் பயன்படுத் தலாம். ஒரு பவுலில் மாம் பழக்கூழை கொட்டி அதனுடன் இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கூழ் கலவையுடன் பாதாமை அரைத்து சேர்த்து முகத்தில் பூச வேண்டும். கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் நல்ல மாற்றம் தென்படும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மாம்பழத்துடன் தயிர் கலந்து உபயோகிக்கலாம். மாம்பழத்தை கூழாக்கி அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் பூசி வரலாம்.
முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம். மாம்பழ தோலை உலரவைத்து பொடித்து அதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

கூந்தல் வறண்டு இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து, வாரத்தில் இரண்டு முறை கூந்தலில் தேய்த்து குளித்துவரலாம்.
காலங்கள் மாறினாலும் பெண்கள் தங்களது கூந்தல் மீது கொண்டிருக்கும் ஈர்ப்பு என்றுமே மாறாது. ஆரம்ப காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கைப் பொருட்களின் காரணமாக, வயதான பின்னரும் கூந்தலின் கருமை நிறம் மாறாமல், முடி உதிர்வு பிரச்சினை இல்லாமல் கூந்தல் அடர்த்தியாக இருந்தது.
இன்று கூந்தல் பராமரிப்புக்கு எண்ணற்ற பொருட்கள் வந்தபோதிலும், இளம் பருவத்திலேயே இளநரை ஏற்படுகிறது. இதற்கு காரணம் கூந்தல் பராமரிப்பு பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள். மேலும் உண்ணும் உணவு, ஹார்மோன் சுரப்பில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாகவும் இளநரை ஏற்படுகிறது.
இவ்வாறு இளநரை, கூந்தல் உதிர்தல், கூந்தல் வறட்சி, கூந்தல் நுனியில் வெடித்தல், பொடுகுத் தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல், கூந்தல் பட்டுப்போல் மின்னுவதற்கான இயற்கை குறிப்புகளை பார்க்கலாம்.
வெந்தயத்தை நன்றாக ஊறவைத்து, பசைபோல அரைத்து கூந்தலில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் குளுமை அடைவதோடு, கூந்தலும் பளபளப்பாகும்.
மாதம் ஒரு முறை வேப்பிலை மற்றும் துளசி இலை சேர்த்து அரைத்து தலையில் தடவலாம். அரை மணிநேரம் கழித்து தலைக்கு குளிப்பதன் மூலம் பொடுகுத் தொல்லை மற்றும் பேன் தொல்லையில் இருந்து விடுபடுவதோடு கூந்தலும் பளபளப்பாகும்.
கற்றாழையின் சதைப்பகுதியுடன் சிறிதளவு தயிர் கலந்து, கூந்தலின் வேர்க்கால்களில் நன்றாக படும் படி அழுத்தித் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்பு பிரச்சினையும் நீங்கி கூந்தல் பளபளப்பாகும்.
கூந்தல் வறண்டு இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து, வாரத்தில் இரண்டு முறை கூந்தலில் தேய்த்து குளித்துவரலாம். இதன் மூலம் வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்கும்.
தலா 50 மில்லி அளவு கறிவேப்பிலை சாறு மற்றும் மருதாணி சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து, 150 மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். இந்த எண்ணெய்யை இளம் சூட்டில் தலைமுடியில் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும். முடி உதிர்தல் குறையும். கூந்தல் பளபளப்பாகும்.
அரை மூடி தேங்காயில் இருந்து தேங்காய் பால் எடுக்கவும். அதன் முதல் பாலை கூந்தலில் நன்றாக தேய்க்கவும். ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கூந்தலை கழுவுவதன் மூலம், பளபளப்பான கூந்தலைப் பெறலாம்.
நெல்லிக்காய் எண்ணெய்யை தினமும் தலையில் தேய்ப்பதன் மூலம், முடி உதிர்வது குறைந்து கூந்தல் வலுவாகும்.
சின்ன வெங்காயச் சாறினை முடியின் வேர்க்கால்களில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்தல், புழுவெட்டு மற்றும் தலையில் உள்ள நுண் கிருமிகள் அனைத்தும் நீங்கும்.

தளர்ந்த சருமம் இறுகி புதுத்தோற்றம் பெற காபி உதவும். மேலும், சருமத்தில் மேல் படிந்திருக்கும் இறந்த செல்களை உரித்து நீக்கும்.
முகத்தில் இளமையான, உடனடி பொலிவு வேண்டுமா? காபியை இப்படி யூஸ் பண்ணுங்க! காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் சருமத்தில் உள்ள கொலோஜன் என்று கூறப்படும் சருமத்தை இருக்கி பிடிக்கும் தசையை மேன்படுத்த உதவும். இதனால் தளர்ந்த சருமம் இறுகி புதுத்தோற்றம் பெற காபி உதவும். மேலும், சருமத்தில் மேல் படிந்திருக்கும் இறந்த செல்களை உரித்து நீக்கும்.
* இரண்டு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் அப்லை செய்து 10 நிமிடம் காயவிட்டு பின் கழுவினால் சருமமானது பொலிவோடும், மென்மையாகவும் தோன்றும்.
* பளிச்சென்று முகம் தோன்ற, கடலை மாவுடன் காபி பவுடரை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக்கி, முகத்தில் அப்லை செய்து காய்ந்தவுடன் கழுவி விடவும்.
* காபி பவுடர், சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து சிறிது தண்ணீர் இட்டு, முகத்தில் ஸ்கிரப் போன்று பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் இறந்த செல்ஸ் நீங்கி முகம் இன்ஸ்டன்ட் பொலிவுபெறும்.
* காபி பவுடரை எலுமிச்சை சாற்றோடு கலந்து முகத்தில் பேக் போன்று பயன்படுத்தினால் ஃபேசியல் செய்தது போல் முகம் மின்னும். சென்சிடிவ் ஸ்கின் இருப்பவர்கள் எலும்மிச்சைக்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்.
* கால், கையில் டேன், கருமையை போக்க கடல் உப்புடன் காபி பவுடர் சேர்த்து ஏதேனும் எண்ணெயில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும்.

சுடுநீரில் குளிக்க விரும்புகிறவர்கள் முதலில் தண்ணீரில் தலையை கழுவி சுத்தம் செய்துவிட்டு, தலையையும் துவட்டிய பின்பு உடலை சுடுநீரில் கழுவவேண்டும்.
தினமும் குளிப்பவர்களுக்கு, குளியல் என்பது ஒரு சாதாரண விஷயமாகவே தெரியும். ஆனால் ஆயுர்வேத மருத்துவம் குளியலை உடலுக்கு தேவையான முக்கியமான விஷயமாக குறிப்பிடுகிறது. எந்த நீரில், எப்படி, எந்த நேரத்தில் குளிக்கவேண்டும் என்றெல்லாம் விலாவாரியாக விளக்குகிறது.
கோடை காலம் உடல் உஷ்ணத்தால் அவதிப்படும் காலமாகும். அதனால் உடல் எதிர்கொள்ளும் அசவுகரியங்களை ஓரளவு கட்டுப்படுத்த குளியல் உதவுகிறது. அதோடு உடலின் புறப்பகுதியில் உள்ள அழுக்கை போக்கவும் துணைபுரிகிறது.
எப்போது குளிக்க வேண்டும்?
காலையில் குளிப்பது மிக நல்லது. காலைக்கடன்களை முடித்துவிட்டு, உடற்பயிற்சி செய்து வியர்வை வெளிப்பட்ட உடலோடு குளிக்கவேண்டும். காலை உணவுக்கு முன்பாக குளித்திடுவது சரியானது. அதிக பசியோடு இருக்கும்போதும், சாப்பிட்ட உடனேயும் குளிப்பது உடலுக்கு ஏற்றதல்ல. காலையில் தலைக்கு குளிப்பதும், இரவில் தலைக்கு கீழ் கழுவுவதும் உஷ்ணத்தை வெளியேற்றும் வழிமுறையாகும்.
தினமும் உடலைக் கழுவும் நீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து எடுத்த சாறு சேருங்கள். கோடை காலத்தில் அது உடலுக்கு உற்சாகத்தை தரும். சரும நோய்களும் அகலும். வெட்டி வேர், சந்தனம் மற்றும் துளசி, வேப்பிலை போன்றவைகளை கலந்த நீரிலும் குளிக்கலாம்.
எப்படி குளிக்கவேண்டும்?
தலைக்கு குளிக்கும்போது முதலில் தலையில்தான் தண்ணீரை ஊற்றவேண்டும். சுடுநீரில் குளிக்க விரும்புகிறவர்கள் முதலில் தண்ணீரில் தலையை கழுவி சுத்தம் செய்துவிட்டு, தலையையும் துவட்டிய பின்பு உடலை சுடுநீரில் கழுவவேண்டும். குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, பிடித்தமான எண்ணெய்யை உடலில் தேய்த்துவிட்டு குளிக்கவேண்டும். அதனால், கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் தொந்தரவுகள் குறையும்.
சோப் பயன்படுத்தலாமா?
சோப் பயன்பாடு சருமத்தை வறட்சி்க்குள்ளாக்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதனால் தினமும் ஒரு தடவை மட்டும் சோப் பயன்படுத்துங்கள். அதற்கு மாற்றாக பயறு தூள், கடலை மாவு போன்றவைகளை உபயோகிக்கலாம். குளிக்கும்போது பயன்படுத்த ஆயுர்வேத சூரணம் உள்ளது. அதனை பயன்படுத்தலாம். அது எல்லா சீதோஷ்ணநிலைக்கும் ஏற்றது.
தலையில் ஷாம்புவுக்கு பதில் செம்பருத்தி தாழி பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. கோடை உஷ்ணத்தால் முடியில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை அது போக்கும். நெல்லிக்காயை உலரவைத்து தயாரித்த தூள், பயறு தூள் போன்றவைகளாலும் கூந்தலை கழுவலாம். உடல் அதிகமாக சூடானாலும் முடி உதிர்தலும், பொடுகு பிரச்சினையும் தோன்றும். கூந்தலை மேற்கண்ட முறையில் பராமரித்தால் அந்த தொல்லைகள் அகலும்.
வெயிலில் செல்லும்போது முகம் கறுத்துப்போகாமல் இருக்க மல்லியை பயன்படுத்தலாம். ஒரு பிடி மல்லியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். கோடைகாலத்தில் பெண்கள் கூந்தல் மற்றும் சரும அழகில் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

ஒவ்வொரு ஒப்பனை பொருளிலும் பல வகையான வாசனைப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று தங்களை அழகுபடுத்தி கொள்வது. இதற்காக உபயோகிக்கும் அழகு சாதனப்பொருட்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். சந்தையில் பலவிதமான ஒப்பனை பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றில் எதை வாங்குவது என்பதில் குழப்பம் ஏற்படலாம். எதை வாங்குவதாக இருந்தாலும் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. அதை பற்றி இங்கே பார்க்கலாம்.
ஒப்பிடுதல்
சந்தையில் கிடைக்கும் மற்ற ஒப்பனை பொருட்களுடன் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருள் எந்த வகையில் சிறந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எதை வாங்குவதற்கு சிறந்த இடம் எது? அதற்கான தகுந்த விலை என்ன? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் குறைந்த விலையில் கூட தரமான பொருட்களை வாங்க முயும்.
எளிமையாகவும், நீடித்தும் இருத்தல்
ஒப்பனை பொருட்கள் எளிமையாக கையாளும் வகையில் இருக்க வேண்டும். வெளியில் செல்லும் சில மணி நேரத்திற்குள்ளாகவே ஒப்பனை கலைந்து விடக்கூடாது. நீண்ட நேரம் நீடித்து இருக்கும் வகையிலான ஒப்பனை பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக ஐ-லைனர் வாங்கும் போது நீர்த்த வடிவத்தில் இருப்பதை வாங்குவதை தவிர்த்து பென்சில் ஐ-லைனர் வாங்குவது சிறந்தது.
சருமத்திற்கு உகந்ததை தேர்ந்தெடுத்தல்
ஒவ்வொரு ஒப்பனை பொருளிலும் பல வகையான வாசனைப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே சருமத்துக்கும் சரியாக பொருந்தும் வகையிலான ஒப்பனை பொருட்களை தேர்வு செய்ய வேண்டும், வெயிலில் செல்லும் போது புற ஊதாக்கதிர்களால் சருமம் பாதிக்காமல் இருப்பதற்கு எஸ்.பி.எப் தன்மை கொண்டதை கவனித்து வாங்க வேண்டும்.
பொருத்தமானதை தேர்வு செய்தல்
ஒவ்வொருவருக்கும் முகம், கண், உதடு, சருமம் தனித்தன்மை கொண்டதாக இருக்கும். எனவே அதற்கு ஏற்ற வகையான ஒப்பனை பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். பேக்கேஜ் முறையில் பவுண்டேஷன் முதல் லிப்ஸ்டிக் வரை அனைத்தையும் ஒன்றாக வாங்கலாம்.
பரிசோதித்தல்
எந்தவிதமான ஒப்பனை பொருளையும் வாங்கியவுடன் நேரடியாக பயன்படுத்தாமல் முதலில் அதை சிறிது எடுத்து கையில் தடவிப்பார்க்க வேண்டும். அதனால் சருமத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.
இயற்கைக்கு முதலிடம்
இயற்கையான மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் அவற்றிலும் ரசாயனப்பொருட்கள் கலந்திருக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து ஒப்பனை பொருட்களை தேர்வு செய்து வாங்குவது சிறந்தது.

கவனக்குறைவாக, நீண்ட நேரம் பயன்படுத்தும் பேஸ் மாஸ்க் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
அழகு பெற பெண்கள் என்ன செய்ய மாட்டார்கள் இந்த நடவடிக்கைகளில் ஒன்று ஃபேஸ் மாஸ்க் ஆகும், இதன் உதவியுடன் பெண்கள் அழகான சருமத்தை விரும்புகிறார்கள். ஆனால் கவனக்குறைவாக, நீண்ட நேரம் பயன்படுத்தப்பட்ட முகமூடி உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே நீங்கள் என்ன சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
தோல் இறுக்கமாக
பலர் தங்கள் சுருங்கிய சருமத்தை இறுக்கமாக்க விரும்புகிறார்கள். ஆனால் முகத்தின் முகமூடியை அதிக நேரம் விட்டுவிடுவதால் ஏற்படும் முகத்தில் வலி நீட்டுவதை யாரும் விரும்பவில்லை. உங்கள் சருமம் எண்ணெய் நிறைந்ததாக இருந்தால், முகமூடியை நீண்ட நேரம் விட்டுவிடுவது சரியானது. ஆனால் தோல் ஏற்கனவே வறண்டுவிட்டால் அது முகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஒவ்வாமை
எந்தவொரு முகமூடியையும் தோலில் தடவுவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். முகமூடியைப் பயன்படுத்திய பிறகு சருமத்தில் ஒவ்வாமை ஏற்படலாம். இது சருமத்தில் பருக்கள் மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தும். ஃபேஸ் மாஸ்க் தடவிய பின் சருமத்தில் எரியும் உணர்வு இருந்தால், அதை உடனடியாக தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள்.
தோல் எரிச்சல்
கிரீம் அல்லது முகமூடியைப் பயன்படுத்திய பின் தோலில் திடீரென எரியும் உணர்வு இருக்கிறதா? இல்லையென்றால், முகமூடியை தோலில் தடவலாம். உண்மையில், சந்தையில் விற்கப்படும் ஃபேஸ்மாஸ்கில் பல வகையான ரசாயனங்கள் உள்ளன, அவை சிவப்பு தோல் மற்றும் தோல் எரியும் சிக்கலை ஏற்படுத்தும்.
சிவப்பு குறி
உங்கள் முகம் கடினமானதாக இருந்தால், முகமூடியைப் பயன்படுத்துவதால் முகத்தில் வீக்கம், அரிப்பு மற்றும் சிவத்தல் ஏற்படலாம். எந்த முகமூடியையும் பயன்படுத்துவதற்கு முன், பாக்கெட்டில் எழுதப்பட்ட திசைகளைப் படிக்கவும். காலாவதியான முகமூடியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இயற்கை எண்ணெய் தப்பிக்கிறது
முக தோலின் மேற்பரப்பில் எண்ணெய் ஒரு அடுக்கு உள்ளது. இந்த அடுக்கு சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. முக முகமூடிகளை நீண்ட நேரம் விட்டுவிட்டால் இயற்கை எண்ணெய்கள் மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் நீங்கும். இதன் காரணமாக சருமத்தின் துளைகள் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இது சருமத்தின் பி.எச் அளவை சமநிலையற்றது மட்டுமல்லாமல் முகத்தை சிவப்பாகவும் மாற்றும்.

பெண்கள் நகைகள் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை, அவற்றை பராமரிப்பதிலும் காண்பிக்க வேண்டும். எந்த வகை நகைகளை, எவ்வாறு பராமரிப்பது என்று பார்க்கலாம்.
நகைகளை விரும்பாத பெண்கள் மிகவும் குறைவு. விலை ஏறினாலும், இறங்கினாலும் தங்க நகைகள் மீதான ஈர்ப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும். நகைகள் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை, அவற்றை பராமரிப்பதிலும் காண்பிக்க வேண்டும். எந்த வகை நகைகளை, எவ்வாறு பராமரிப்பது என்று பார்க்கலாம்.
தங்க நகைகள்
தங்க நகைகளை ஓரிரு முறை அணிந்து கழற்றிய பின்பு, சோப்பு அல்லது சிறிது ஷாம்பூ பயன்படுத்தி சுத்தமாகக் கழுவி மென்மையாக துடைத்து வைக்க வேண்டும். இதன் மூலம் வியர்வை, மேக்கப் கிரீம்கள் போன்றவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கலாம். தங்க நகைகளை தனித்தனியாக பெட்டிகளில் வைப்பதே சிறந்தது. இதன் மூலம், நகைகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் பாதுகாப்பாக இருக்கும்.
வெள்ளி நகைகள்
வெள்ளி நகைகள் கறுத்துப் போகாமல் இருப்பதற்கு, அவற்றை மரத்தால் செய்யப்பட்ட நகைப்பெட்டியில் வைத்து பாதுகாப்பதே சிறந்தது. வெள்ளி நகைகள் கறுத்து விட்டால் அவற்றை சூடான தண்ணீரில் ஷாம்பூ அல்லது பற்பசை கொண்டு தேய்த்து சுத்தம் செய்து துணியால் துடைக்க வேண்டும். இதன் மூலம் வெள்ளி நகைகள் பளபளப்பாக மாறும். வெள்ளிப் பாத்திரங்களில் கற்பூரத்தை போட்டு வைத்தால் கறுத்து போகாமல் இருக்கும்.
வைர நகைகள்
வைர நகைகளில் உப்பு தண்ணீர் மற்றும் குளோரின் கலந்த நீர் படும்போது, கற்களின் பளபளப்பு மங்கிவிடக்கூடும். வைரங்கள் மீது மேக்கப் பொருட்களின் ரசாயனங்கள் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மேக்கப் போட்டு முடித்த பின்பே கடைசியாக வைர நகைகளை அணிய வேண்டும்.
வைர நகைகளை மற்ற நகைகளுடன் கலந்து வைக்காமல், தனி பெட்டியில் வெல்வெட் துணியில் பொதிந்து வைப்பதன் மூலம் வைரக்கற்கள் விரைவில் கறுக்காமல் பாதுகாக்கலாம்.
வைர நகைகளை சோப்பு, ஷாம்பூ தண்ணீர் கலந்து சுத்தப்படுத்தும் போது கவனமாக பாத்திரத்தில் வைத்து வீட்டிற்குள் சுத்தப்படுத்துங்கள். நகை கழுவிய நீரை கீழே ஊற்றுவதற்கு முன்பும் அந்த நீரில் கற்கள் ஏதேனும் தவறுதலாக விழுந்து இருக்கிறதா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில், உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மையாக்கும் வகையில், பல வித குளியல் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்தில், உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மையாக்கும் வகையில், பல வித குளியல் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றை மாதம் ஒரு முறை செய்து வந்தால், ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பது ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்ட உண்மையாகும்.
என்னென்ன குளியல் வகைகள் உள்ளன? அவற்றின் பயன்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
மண் குளியல்:
ஆயுர்வேதத்தில் ஆண்-பெண் உட்பட அனைத்து வயதினருக்கும் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவது ‘மண் குளியல்’. இதற்குக் கரையான் புற்று மண் பயன்படுத்தப்படுகிறது. இந்த மண்ணை, நீரில் குழைத்து தலை முதல் கால் வரை உடல் முழுவதும் பூசுவார்கள். பின்பு, ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வைப்பார்கள். சேறு காய்ந்தபின் குளித்து விடலாம். இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். தோல் வியாதிகள் குணமடையும். உடலின் வெப்பம் குறையும். தோலில் உள்ள துளைகளின் அடைப்புகள் அகற்றப்பட்டு, உடலில் உள்ள தேவையற்ற நீர் வியர்வையாக வெளியேறும்.
வாழை இலைக் குளியல்:
நண்பகல் வெயிலில் மொட்டை மாடியில், பாய் விரித்து அதன் மேல் முழு தலைவாழை இலையைப் பரப்பி வைப்பார்கள். இந்த இலை மேல், சம்பந்தப்பட்ட நபரைப் படுக்க வைத்து, காற்று புகாதபடி, மற்றொரு முழு வாழை இலையை வைத்து முழுவதுமாக மூடி கட்டிவிடுவார்கள். இதில் சுவாசிப்பதற்கு மட்டும் சிறு வழியை ஏற்படுத்துவார்கள். 20 நிமிடம் வரை அதே நிலையில் படுத்திருக்க வேண்டும். இதன் மூலம், உடலில் தேங்கியிருக்கும் நாள்பட்ட வியர்வைக் கழிவுகள் வெளியேறும். சுவாசக் கோளாறு, கை, கால் வீக்கம், சிறுநீரகக் கோளாறு, தசை மற்றும் நரம்பு பாதிப்புகள் சீராகும். உடலில் உள்ள கெட்ட நீர் முழுவதும் எளிதில் வெளியேறும்.
நீராவிக் குளியல்:
நீராவி வெளியேறும் ஒரு பெட்டிக்குள் தலைப் பகுதியை வெளியே நீட்டி, உடல் முழுவதும் உள்ளே இருக்குமாறு உட்கார வேண்டும். 20 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை இந்த நீராவிக் குளியல் நடைபெறும். இதன் மூலம், உடல் முழுவதும் உள்ள சருமத்தில் சிறிய துவாரங்கள் திறக்கப்பட்டு, அடைப்புகள் நீங்கும். அந்தத் துவாரங்கள் வழியே தேவையற்ற கழிவுகள் வியர்வையாக வெளியேறும். உடல் வலி, மூட்டு வலி உள்ளவர்களுக்கு இந்தக் குளியல் பரிந்துரைக்கப்படுகிறது.
நீராவிக் குளியல் முடிந்ததும், குளிர்ந்த நீரால் மீண்டும் ஒரு முறை குளிப்பது நல்லது.
இதேபோல் சுளுக்கு, தசைப்பிடிப்பு ஆகிய பிரச்சினைகளுக்காக ஆயில் மசாஜ் செய்து, உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்ற முதுகுக்குளியல், உடல் முழுவதும் மிதமான சுடு நீரில் இருக்கும் வகையில் செய்யப்படும் முழுதொட்டிக் குளியல், இடுப்புக்கு வலு சேர்க்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இடுப்புக் குளியல் என ஆயுர்வேதத்தில் அந்தந்த பிரச்சினைகளுக்கு ஏற்ப பல குளியல் வகைகள் உள்ளன.
இவ்வாறு குளித்த பின்பு, அன்று ஒரு நாள் இயற்கை உணவு மட்டுமே சாப்பிடுவது சிறந்தது. சர்க்கரை சேர்க்காத, காய்கறி மற்றும் பழச்சாறு, சாலட் வகைகள், மோர் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். உணவில் உப்பு, புளிப்பு, காரம் தவிர்க்க வேண்டும்.

கோடைகாலத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களால் பெருமளவு பாதிக்கப்படும் சருமத்தை காக்கும், பக்க விளைவு ஏற்படுத்தாத ‘மாய்ஸ்சுரைசர்’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
கோடைகாலத்தில் சூரியனில் இருந்து அதிகப்படியாக வரும் புற ஊதாக் கதிர்களால் பெருமளவு பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே சருமத்தைக் குளிர்ச்சியாக வைப்பது முக்கியமானது. இதற்கு மாய்ஸ்சுரைசர் உதவும். ரசாயனங்கள் சேர்க்காமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என அனைத்து சருமத்திற்கும் ஏற்ற வகையில், பக்க விளைவு ஏற்படுத்தாத ‘மாய்ஸ்சுரைசர்’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
கிரீன் டீ மாய்ஸ்சுரைசர்:
தேவையான பொருட்கள்
கிரீன் டீ - 3 தேக்கரண்டி
பாதாம் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் - 3 தேக்கரண்டி
தேன் மெழுகு - 2 தேக்கரண்டி
கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு சிறிய பாத்திரத்தில் பாதாம் எண்ணெய், தேன் மெழுகு இரண்டையும் கலந்து, கொதிக்கும் நீரின் மேல் வைக்கவும். தேன் மெழுகு உருகியதும் சிறிது குளிரவைத்து, கிரீன் டீ, கற்றாழை ஜெல், கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கிரீம் பதம் வரும்வரை கலந்து குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்கவும்.
கிரீன் டீ, கற்றாழை ஆகியவை வெயிலால் வறண்ட சருமத்தைக் குளிர்ச்சியாக்கும் தன்மை ெகாண்டவை. தேன் மெழுகு சருமத்தை மென்மையாக மாற்றும். பாதாம் எண்ணெய் சருமத்தைப் பொலிவாக்கும்.
குங்குமப்பூ மாய்ஸ்சுரைசர்
தேவையான பொருட்கள்
குங்குமப்பூ - 1 தேக்கரண்டி
பன்னீரில் ஊறவைத்த பாதாம் - 4
கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
கிளிசரின் - 1 தேக்கரண்டி
வைட்டமின் ஈ எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஊறவைத்த பாதாமை தோல் நீக்கி, சிறிது பன்னீர் சேர்த்து அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் கற்றாழை ஜெல், குங்குமப்பூ, வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் கிளிசரின் சேர்த்துக் கலந்து ஒரு சிறிய கண்ணாடி குமிழில் வைக்கவும்.
குங்குமப்பூ, வெயிலால் ஏற்படும் சிறு சிறு கட்டிகளை குணமாக்கும், சரும சுருக்கங்களை நீக்கும். மேலும் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். கிளிசரின் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க முக்கியப் பங்காற்றும்.
செம்பருத்தி மாய்ஸ்சுரைசர்
தேவையான பொருட்கள்
செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி
ரோஜா பொடி - 1 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
சிறிய பாத்திரத்தில் செம்பருத்திப்பூ தூள், ரோஜா பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும். பின்பு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கண்ணாடி குமிழில் மூடி வைக்கவும்.
வறண்ட சருமத்தை குணப்படுத்துவதில் செம்பருத்திப்பூ மற்றும் ரோஜா முக்கியப் பங்காற்றும். கற்றாழை ஜெல், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் உடலை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்.

மூக்குக் கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும்.முக அமைப்புக்கேற்ற மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
மூக்குக் கண்ணாடி தேர்ந்தெடுப்பின்போது அணிந்து பார்த்து, நீண்ட நேர முயற்சிக்குப் பின் நமக்குப் பிடித்ததை எடுப்போம். எனினும், அந்த கண்ணாடி நம் முகத்துக்கு ஒத்துப்போகாமல் காட்சியளிக்கும்போது நேரம் மற்றும் முயற்சி வீணாகும். முக அமைப்புக்கேற்ற மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கண்ணாடியின் அளவைக் கண்டறிதல்:
தலையை நேராக உயர்த்தி, ஒரு ஏ.டி.எம். கார்டின் பக்கவாட்டுப் பகுதியை கண்களுக்குக் கீழ், மூக்கின் நடுப்பகுதியில் இருக்கும்படி வைக்கவும். ஏ.டி.எம். கார்டு முழுவதுமாக உங்கள் கண்களுக்குள் மறைந்தால் உங்கள் கண்ணாடியின் அளவு ‘எல்’, கார்டும் கண் அளவும் சரிசமமாக இருந்தால் கண்ணாடி அளவு ‘எம்’, கார்டை விட கண் அளவு சிறிதாக இருந்தால் கண்ணாடி அளவு ‘எஸ்’ ஆகும்.
சதுர வடிவ முக அமைப்புக்கு..
பரந்த நெற்றி, எலும்பு தெரியும்படியான கன்னம் ஆகியவையே சதுர வடிவ முக அமைப்புக்கான முக்கிய அம்சம். இவ்வித அமைப்பு உள்ளவர்கள் வட்ட வடிவம் அல்லது ‘D’ வடிவ கண்ணாடி பயன்படுத்தினால், முக அமைப்பு மென்மையாக காட்சியளிக்கும். மேலும், ஏவியேட்டர் வகை கண்ணாடிகள் கன்னத்தில் உள்ள சதை மற்றும் எலும்புகளை சமப்படுத்த உதவும். முக அமைப்பை சிறிதாகக் காட்ட ‘ஓவல்’ வடிவ கண்ணாடிகளையும் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் கூர்மையான மூலைகளைக் கொண்ட சதுர கண்ணாடிகளைத் தவிர்ப்பது நல்லது.
வட்ட வடிவ முக அமைப்புக்கு..
பரந்த கன்ன எலும்புகள், சதைப்பிடிப்பான கன்னம் மற்றும் சற்று குறுகிய நெற்றி வட்ட முக அமைப்பாக வகைப்படுத்தப்படுகிறது. இவர்கள், வட்ட வடிவக் கண்ணாடிகளைத் தவிர்ப்பது சிறந்தது. மாறாக, ‘கிளாசிக் ரெட்ரோ ஸ்டைல் வைபெரர்கள்’ அல்லது நீள் செவ்வக வடிவ கண்ணாடிகளை முயற்சிக்கலாம். இவை வட்ட முக வடிவத்திற்கு அற்புதமாகப் பொருந்தும்.
நீள்வட்ட வடிவ முக அமைப்புக்கு...
நீள்வட்ட முகம் கொண்ட ஒருவருக்குப் பொருந்தும் ஒரு கண்ணாடி, மற்றொரு நீள்வட்ட முகம் உள்ள நபருக்குப் பொருந்தாது. எனவே கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். சதுரம் மற்றும் செவ்வக பிரேம்கள் நீள்வட்ட வடிவ முக அம்சங்களை மெருகூட்டி காட்டும். ஆகையால், பெரிய சதுர கண்ணாடிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இதய வடிவ முக அமைப்பினருக்கு..
கிளாசிக் ‘ஏவியேட்டர்’ கண்ணாடிகள் இதய வடிவ முக அமைப்பினருக்கு கச்சிதமாக பொருந்தும். உங்கள் முக வடிவத்தை இன்னும் மெருகேற்ற ‘ரிம்லெஸ்’ கண்ணாடிகளையும் அணியலாம். இந்த வகை கண்ணாடிகள் அணிய எளிதாக இருக்கும். அதேசமயம் அழகாகவும் இருக்கும். மூக்குப் பட்டைகள் கொண்ட உலோக பிரேம்கள் மற்றும் மெல்லிய பிரேம் கண்ணாடிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பிரேம்கள் உங்கள் முகத்தின் வசீகரத்தை அதிகரிக்கும். எந்த வகை பிரேமாக இருந்தாலும், லென்ஸின் அடிப்பகுதி அகலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒரு விஷயம் முகப்பருக்கள். இந்த முகப்பருக்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் இயற்கை வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
மஞ்சள் மற்றும் தயிர்
மஞ்சள், தயிர் இரண்டுமே மருத்துவ மற்றும் காயங்களை குணமாக்கும் தன்மைகள் உடையது. அவை பருக்களை விரட்டி தூய்மையான சருமத்தை அளிக்கும். இதை உபயோகிக்கும் முறை :
இரண்டையும் குழைத்து பேஸ்ட் ஆக்கவும். முகத்தில் சமமாக பூசவும். 15-20 நிமிடங்கள் கழித்து, கழுவவும்.
சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் பேஸ்ட்
சந்தனத்திற்கு வலியை குறைக்கும் தன்மையும் பரு மற்றும் மாசுவை நீக்கும் சக்தியும் உண்டு. அதை பின் வருமாறு உபயோகிக்கவும்:
சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டருடன் கலந்து குழைக்கவும். உங்கள் நெற்றி மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.
வேப்பிலை
வேப்பிலை உங்களுக்கு தூய்மையான, அப்பழுக்கற்ற சருமத்தை அளிக்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி. அதை உபயோகிக்கும் முறை:
சில வேப்பிலைகளை எடுத்து நன்கு கழுவவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் அந்த இலைகளைப் போட்டு, அடுப்பை லேசாக எரிய விட்டு சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். அந்த நீரின் நிறம் மாறத் தொடங்கும் பொழுது அடுப்பை அணைத்து விடவும். அந்த நீரை ஆற விடவும் பின் வடிகட்டி அந்த நீரில் தினமும் முகத்தை கழுவவும்.