
மன அழுத்தம்: வெதுவெதுப்பான நீரில் பால் சேர்த்தும் குளியல் போடலாம். இது தசைகளை மட்டுமின்றி மனதையும் தளர்வடைய செய்ய உதவும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். பால் குளியலுக்கு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது தலைவலி பிரச்சினையை போக்கவும் உதவும்.
மென்மையான முடி: பால் இயற்கையான மாய்ஸ்சுரைசராக செயல்படக் கூடியது. தலையில் சிறிது பாலை தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு தலை முடியை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். பாலில் இருக்கும் புரதங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வயதான தோற்றம்: விரைவில் வயதான தோற்றத்தை எதிர்கொள்வதை எதிர்க்கும் பண்புகள் பாலில் இருப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் பாலில் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை இருப்பதால் உள் மற்றும் வெளிப்புற சரும அடுக்கை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். வயதாகும் தோற்றத்தையும் தள்ளிப்போட வழிவகுக்கும்.