என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த ரெசிபியை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
முட்டை - 1
வேகவைத்த முட்டை - 4
உருளைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய் பால் - அரை கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
ரொட்டித்தூள் - தேவையான அளவு

செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேக வைத்து முட்டைகளை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்து வைக்கவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும்.
இதனை முட்டை கலவையில் முக்கி, ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
முட்டை - 1
வேகவைத்த முட்டை - 4
உருளைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய் பால் - அரை கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
ரொட்டித்தூள் - தேவையான அளவு
பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேக வைத்து முட்டைகளை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்து வைக்கவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும்.
இதனை முட்டை கலவையில் முக்கி, ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
சுவைாயன முட்டை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெத்திலி மீன் - கால் கிலோ
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 4
மிளகாய் - 4
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம், வெந்தயம் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் பால் - கால் கப்

செய்முறை:
நெத்திலி மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
புளியை நீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்.
கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
பிறகு வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் உப்பு தூவி கிளறவும்.
பின்னர் கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
கொதிக்க தொடங்கியதும் நெத்திலி மீன், தேங்காய் பால் சேர்க்கவும்.
நெத்திலி மீன் - கால் கிலோ
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 4
மிளகாய் - 4
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம், வெந்தயம் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் பால் - கால் கப்
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:
நெத்திலி மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
புளியை நீரில் கரைத்துக்கொள்ள வேண்டும்.
கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
பிறகு வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் உப்பு தூவி கிளறவும்.
பின்னர் கரைத்து வைத்த புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
கொதிக்க தொடங்கியதும் நெத்திலி மீன், தேங்காய் பால் சேர்க்கவும்.
கெட்டியாகி தொக்கு பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது. தால் மக்கானியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை வராமல் தற்காத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து - 1 கப்
கடலை பருப்பு - கால் கப்
சி.வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 5 (நறுக்கவும்)
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
வெண்ணெய் - 5 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உளுந்தையும், கடலை பருப்பையும் நீரில் நன்கு கழுவிவிட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
குக்கரில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் பருப்பு, உளுந்தை கொட்டி வேகவைத்து இறக்கவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகத்தை போட்டு தளித்த பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தக்காளி, மிளகாய், இஞ்சி - பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வேகவைத்த பருப்பு, உளுந்தை கொட்டி நன்றாக கிளறி எல்லாம் வெந்ததும் இறக்கவும்.
அதில் வெண்ணெய், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
இதற்கு பெயர்தான் தால் மக்கானி. தால் என்றால் பருப்பு. மக்கானி என்றால் வெண்ணெய்.

தால் மக்கானியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை வராமல் தற்காத்துக்கொள்ளலாம். கருப்பு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, தோசை, இட்லி, நாண், இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முட்டை குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 5
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
தக்காளி - 1
பெ.வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
சோம்பு, கிராம்பு, கசகசா - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு
சாம்பார் பொடி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்துக்கொள்ளுங்கள்.
சோம்பு, கிராம்பு , கசகசா, தேங்காய் துருவல் போன்றவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், சாம்பார்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.
நன்கு கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த முட்டைகளை துண்டுகளாக நறுக்கி போட்டு உடையாத அளவுக்கு லேசாக கிளறிவிடுங்கள்.
அதனுடன் மிக்சியில் அரைத்துவைத்துள்ள மசாலா கலவையை கொட்டி கிளறுங்கள்.
நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
சூப்பரான முட்டை குருமா
முட்டை - 5
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
தக்காளி - 1
பெ.வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
சோம்பு, கிராம்பு, கசகசா - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு
சாம்பார் பொடி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை :
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்துக்கொள்ளுங்கள்.
சோம்பு, கிராம்பு , கசகசா, தேங்காய் துருவல் போன்றவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், சாம்பார்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.
நன்கு கொதிக்க தொடங்கியதும் வேகவைத்த முட்டைகளை துண்டுகளாக நறுக்கி போட்டு உடையாத அளவுக்கு லேசாக கிளறிவிடுங்கள்.
அதனுடன் மிக்சியில் அரைத்துவைத்துள்ள மசாலா கலவையை கொட்டி கிளறுங்கள்.
நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
சூப்பரான முட்டை குருமா
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். இன்று இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - இரண்டு கப்
வெல்லம் - ஒன்றை கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - நான்கு கப்
துருவிய தேங்காய் - அரை மூடி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறவும்.
ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொழுக்கட்டை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பிள்ளையார் தான். அத்தகைய கொழுக்கட்டையை நாளை விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் செய்து, விநாயகரை வரவேற்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 2 கப் (வறுத்தது)
எள் - 2 கப்
வேர்க்கடலை - 2 கப்
பொட்டுக்கடலை - 2 கப்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மண்டை வெல்லம் - 100 கிராம்
உப்பு - சிறிது
செய்முறை:
பூர்ணம் செய்ய...
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
மண்டை வெல்லத்தை நன்கு நைஸாக இடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும்.
பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் மண்டை வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கொழுக்கட்டை செய்ய...
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, சிறிது லேசான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப்போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும்.

இப்போது பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
பால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகை. இதை கட்டாயம் விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
இடியாப்ப மாவு - 1 கப்
தேங்காய் பால் - 2 கப்
பசும் பால் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

செய்முறை
முதலில் ஒரு கப் இடியாப்ப மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரை, கால் கப் அளவு துருவிய தேங்காய், மற்றும் ஒரு சிட்டிகை உப்பை தூவி நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு இந்த மாவில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு மாவை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் அதை சிறிது சிறிதாக ஒரு மேஜைக்கரண்டி மூலம் இந்த மாவில் சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து சிறிது நேரம் ஆற விடவும்.
மாவு சிறிது ஆறிய பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 கப் அளவு தேங்காய் பால், அரை கப் அளவு பசும் பால், மற்றும் எடுத்து வைத்திருக்கும் மீதமுள்ள இடியாப்ப மாவை போட்டு நன்கு கலக்கி சுட வைக்கவும்.
பால் கொதித்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் கொழுக்கட்டை உருண்டைகளை மெதுவாக ஒரு கரண்டி மூலம் இந்த பாலில் சேர்த்து 15 லிருந்து 20 நிமிடம் வரை அதை அப்படியே வேக விடவும்.
15 நிமிடத்திற்கு பிறகு அதில் முக்கால் கப் அளவு சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை பொறுமையாக கிண்டவும்.
சர்க்கரை கரைந்ததும் அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூளை தூவி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரத்திற்கு பிறகு பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
கடலைப்பருப்பு மற்றும் உளுந்தில் புரதச் சத்து அதிகம் உள்ளது. அவ்வப்போது மாலைச் சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் உடல் வளர்ச்சிக்கு ஏற்றது. மேலும் கீரையில் இரும்புச் சத்து உள்ளதால் ரத்தசோகை வராமல் தடுக்க உதவும்.
தேவையான பொருட்கள்
முளைக்கீரை - 1 கட்டு
கடலைப்பருப்பு, உளுந்து - தலா 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
ப.மிளகாய் - 1
பெருங்காய தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப்பருப்பு, உளுந்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக ஊறியதும் வடை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், ப.மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான முளைக்கீரை வடை ரெடி.

இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கபாப் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம். இன்று கருணைக்கிழங்கை வைத்து கபாப் தயார் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கருணைக்கிழங்கு - கால் கிலோ
மிளகாய் தூள், மிளகு தூள் - தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
ரொட்டித் தூள் - தேவைக்கு
தனியா தூள், கரம் மசாலா - சிறிதளவு
புளி, புதினா தழை - தேவைக்கு

செய்முறை:
கருணைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கவும்.
புளியை நீரில் ஊற வைத்து அந்த நீரில் கருணைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து கிளறிவிடவும்.
அதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம் மசாலா, புதினா தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கீழே இறக்கவும்.
ஆறியவுடன் கருணைக்கிழங்கை அதில் போட்டு பிசையவும்.
பின்னர் உருண்டைகளாக பிடித்து மைதா மாவிலும், ரொட்டித்தூளிலும் புரட்டியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சுவைக்கலாம்.
கருணைக்கிழங்கு - கால் கிலோ
மிளகாய் தூள், மிளகு தூள் - தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
ரொட்டித் தூள் - தேவைக்கு
தனியா தூள், கரம் மசாலா - சிறிதளவு
புளி, புதினா தழை - தேவைக்கு
மைதா, உப்பு - தேவைக்கு

செய்முறை:
கருணைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கவும்.
புளியை நீரில் ஊற வைத்து அந்த நீரில் கருணைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து கிளறிவிடவும்.
அதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம் மசாலா, புதினா தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கீழே இறக்கவும்.
ஆறியவுடன் கருணைக்கிழங்கை அதில் போட்டு பிசையவும்.
பின்னர் உருண்டைகளாக பிடித்து மைதா மாவிலும், ரொட்டித்தூளிலும் புரட்டியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சுவைக்கலாம்.
சூப்பரான கருணைக் கிழங்கு கபாப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 200 கிராம்,
பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
கடுகு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
சர்க்கரைவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி மீடியமான துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து குழையாமல் வேகவிடவும்.
பாசிப்பருப்பையும் குழையாமல் தனியாக வேக வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு போட்டு சிறிது வெடித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போட்டு வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் தண்ணீர் வடித்துப் போட்டு, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்கவும்.
இதனுடன் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: சர்க்கரைவள்ளிக்கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்தும் சாப்பிடலாம். கரி அடுப்பைப் பயன்படுத்தி சுட்டும் சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சேமியாவில் பாயாசம், உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சேமியாவை வைத்து சூப்பரான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வறுத்த சேமியா - ஒரு கப்,
கெட்டி தயிர் - ஒரு கப்,
அரிசிமாவு - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,

செய்முறை:
சேமியாவை தயிரில் (தண்ணீர் விடாமல்) 20 நிமிடம் ஊறவிடவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு சிறிது வதக்கி ஊறும் சேமியாவில் சேர்த்துக் கொள்ளவும்.
இதில் மிளகாய்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்தக் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து, தோசைக்கல்லில் சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தும் மெதுவாக பரப்பி, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
வறுத்த சேமியா - ஒரு கப்,
கெட்டி தயிர் - ஒரு கப்,
அரிசிமாவு - ஒரு கப்,
பெரிய வெங்காயம் - 1,
மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை:
சேமியாவை தயிரில் (தண்ணீர் விடாமல்) 20 நிமிடம் ஊறவிடவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு சிறிது வதக்கி ஊறும் சேமியாவில் சேர்த்துக் கொள்ளவும்.
இதில் மிளகாய்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்தக் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து, தோசைக்கல்லில் சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தும் மெதுவாக பரப்பி, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான்.. சுவையான சேமியா அடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த மிளகு போண்டா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உளுந்து - ஒரு கப்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஒன்று,
பல்லு பல்லாக கீறிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவைக்கேற்ப,

செய்முறை:
உளுந்தை 40 நிமிடம் ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, நைஸாக அரைத்து கொள்ளவும்.
அரை மாவுடன் பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கீறிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பெரிய பெரிய போண்டாக்களாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:
உளுந்தை 40 நிமிடம் ஊறவைத்து... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, நைஸாக அரைத்து கொள்ளவும்.
அரை மாவுடன் பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கீறிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை பெரிய பெரிய போண்டாக்களாகப் பிடித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான மிளகு போண்டா ரெடி.