
கருணைக்கிழங்கு - கால் கிலோ
மிளகாய் தூள், மிளகு தூள் - தேவைக்கு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
ரொட்டித் தூள் - தேவைக்கு
தனியா தூள், கரம் மசாலா - சிறிதளவு
புளி, புதினா தழை - தேவைக்கு

செய்முறை:
கருணைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கவும்.
புளியை நீரில் ஊற வைத்து அந்த நீரில் கருணைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து கிளறிவிடவும்.
அதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம் மசாலா, புதினா தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கீழே இறக்கவும்.
ஆறியவுடன் கருணைக்கிழங்கை அதில் போட்டு பிசையவும்.
பின்னர் உருண்டைகளாக பிடித்து மைதா மாவிலும், ரொட்டித்தூளிலும் புரட்டியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சுவைக்கலாம்.