என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    நாம் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு போன்றவற்றில் அல்வா செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இன்று சுவை மிகுந்த சுரைக்காய் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சுரைக்காய் - 3 கப்
    நெய் - 3 டேபிள் ஸ்பூன்
    பால் - 3 கப்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    சர்க்கரை - 3/4 கப்
    பாதாம் - 7

    சுரைக்காய் அல்வா

    செய்முறை


    முதலில் சுரைக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

    அடுத்து வாணலியில் நெய் ஊற்றி சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பால் ஊற்றி, வேக விட்டு ஏலக்காய் சேர்த்து வேகவிடவும்.

    சுரைக்காய் வெந்ததும் இறுதியாக சர்க்கரை மற்றும் பாதாம் சேர்த்து இறக்கினால், சுரைக்காய் அல்வா ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மூங்கில் அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த அரிசியை வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மூங்கில் அரிசி - கால் கப்,
    பால் - 4 கப்,
    வெல்லத்தூள் - அரை கப்,
    தேங்காய்த் துருவல் - அரை கப்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    உலர் திராட்சை, முந்திரி. - தேவையான அளவு
    ஏலக்காய்த்தூள்- சிறிதளவு

    மூங்கில் அரிசி பாயாசம்

    செய்முறை:

    மூங்கில் அரிசியை கழுவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து, மிக்சியில் சேர்த்து தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    பாலை பாதியாகும் வரை சுண்டக்காய்ச்சவும்.

    அடிகனமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து நன்கு வேகவைக்கவும்.

    வாணலியில் நெய்யைச் சூடாக்கி முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

    பிறகு, அதே நெய்யில் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    வேகவைத்த மூங்கில் அரிசி மாவுடன், பால், வெல்லத்தூள், தேங்காய்த் துருவல், முந்திரி, திராட்சை சேர்த்து, ஒரு கொதி விட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

    சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

    சூப்பரான மூங்கில் அரிசி பாயாசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் மோதகத்தைச் செய்வதற்கு பதினைந்து நிமிடங்களே போதுமானதாகும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    டார்க் சாக்லேட்- ¾ கப்,
    ஃப்ரெஷ் க்ரீம் - ½ கப்,
    கன்டென்ஸ்டு மில்க் - ½ கப்,
    நறுக்கப்பட்ட பிஸ்கெட் துண்டுகள் - 2 கப்,
    நறுக்கப்பட்ட பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் - ¼ கப்,
    நெய் - சிறிதளவு.

    சாக்லேட் மோதகம்

    செய்முறை:

    அகலமான நான் ஸ்டிக் வாணலியில் ஃப்ரெஷ் க்ரீம், கன்டென்ஸ்டு மில்க் மற்றும் டார்க் சாக்லேட்டை ஒன்றாகப் போட்டு கலக்கவும்.

    அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் வைத்துள்ள இவற்றைக் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

    இரண்டு நிமிடங்களுக்குப்பிறகு ஒரு கெட்டியான பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன் நறுக்கப்பட்ட பிஸ்கட் மற்றும் முந்திரி, பாதாம் போன்றவற்றையும் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கிளற வேண்டும்.

    இந்தக் கலவை மேலும் கெட்டியாகி மாவுப்பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு வேறொரு தட்டில் இந்தக் கலவையை மாற்றி முற்றிலுமாக ஆறவைக்க வேண்டும்.

    ஆறிய பின் மோதக அச்சில் நெய் தடவி இந்த கலவையை கெட்டியாக அடைத்து பின்பு அதிகப்படியாக இருக்கும் மாவை எடுத்தோமானால் அழகான, சுவையான சாக்லேட் மோதகங்கள் தயார்.

    இந்த மோதகத்தைச் செய்வதற்கு பதினைந்து நிமிடங்களே போதுமானதாகும்.

    குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் இந்த மோதகங்களை காற்றுப்புகாத டப்பாக்களில் வைத்து ஒருவாரம் வரையிலும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை காலை வேளையில் சாப்பிடக் கொடுத்தால் அவர்களின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    உதிரியாக வடித்த பாசுமதி அரிசி - 1 கப்
    தக்காளி - 1
    தக்காளி கெட்சப் - 2 ஸ்பூன்
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    முட்டை - 3
    பூண்டு - 10 பல்
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 2 ஸ்பூன்
    வினிகர் - 2 ஸ்பூன்
    கொத்தமல்லி இலை – சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    முட்டையை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தாள், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    பின்னர் வெங்காயத்தாள் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    பின் வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

    அதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சோஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு கிளறி விட வேண்டும். பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். 

    பின் அந்த சாதத்தை நன்றாக கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும். 

    இப்போது சுவையான தக்காளி முட்டை சாதம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது.
    தேவையானப் பொருட்கள் :

    கொய்யாப்பழம் நறுக்கியது  - 1 கப்
    நாட்டு சர்க்கரை  - சுவைக்கேற்ப
    பால் - 2கப்
    தண்ணீர் - 1கப்
    வெண்ணிலா எசன்ஸ்  - 1 ஸ்பூன்
    ஜஸ் கட்டி - தேவையான அளவு

    செய்முறை:

    கொய்யாப்பழம், நாட்டு சர்க்கரை இரண்டையும் மிக்சியில்போட்டு அரைக்கவும்.

    அதனுடன்  பால் , தண்ணீர்  வெண்ணிலா எசன்ஸ் இவை அனைத்தையும்  மிக்ஸியில்போட்டு நன்றாக அடிக்கவும்.

    கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.

    இது குழங்தைகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை தூண்டும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் உன்னக்காய் ரெசிபி மிகவும் பிரபலம். இந்த ஸ்நாக்ஸை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - ஒன்று
    சர்க்கரை - 2 தேக்கரண்டி
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
    தேங்காய் துருவல் - கால் கப்
    நெய் - ஒரு தேக்கரண்டி
    உடைத்த முந்திரி பருப்பு - 6
    திராட்சை - 5
    நேந்திரம் பழம் - 3

    உன்னக்காய்

    செய்முறை :

    நேந்திரம் பழத்தை தோலோடு குக்கரில் போட்டு 2 கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசிலுக்கு வேக விடுங்கள். பின் ஆவி அடங்கியதும் எடுத்து நன்கு மசித்துக் கொள்ளுங்கள். கட்டியில்லாது மசித்தால் சப்பாத்தி மாவு போல் வரும். பழம் நன்கு பழுத்தால் சரியாக வராது. மசித்த பழத்தை தனியே வையுங்கள்.

    நெய்யை சூடாக்கி திராட்சை, முந்திரி போட்டு சிவந்ததும் முட்டை உடைத்து ஊற்றி சற்று கிளறியவுடன் தீயை அணைத்து விட்டு தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து கலக்கி வையுங்கள்.

    பிறகு கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மசித்த பழத்தில் பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து கையில் வைத்து தட்டையாக தட்டவும்.

    அதன் நடுவில் 1/2 தேக்கரண்டி பூரணத்தை வைத்து ஓரத்தை உள்ளிழுத்து மூடி கொழுக்கட்டை போல் மென்மையாக கையால் அழுத்தி ரக்பி பந்து (egg shape)ஷேப்புக்கு கொண்டு வரவும்

    அதேபோல் மாவு அனைத்திலும் செய்யவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த வற்றை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கேரளா உன்னக்காய் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் பீட்ரூட் கோலா உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் - 1
    தேங்காய் - 2 டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 10
    பொரிக்கடலை - 4 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
    பூண்டு - 5 பர்
    இஞ்சி - சிறுதுண்டு
    பட்டை - 1
    ஏலக்காய் - 1
    சீரகம் - சிறிதளவு
    சோம்பு - சிறிதளவு
    கிராம்பு - 1
    ஏலக்காய் - 1
    உப்பு - தேவையான அளவு
    பொரிக்க தேவையான எண்ணெய்

    பீட்ரூட் கோலா உருண்டை

    செய்முறை

    ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாகநறுக்கி கொள்ளவும்.

    பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    மிக்சியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அதனுடன் துருவிய துருவிய பீட்ரூட், சின்ன வெங்காயம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பீட்ரூட் கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு அடுப்பை மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்

    சுவையான மற்றும் சத்தான பீட்ரூட் கோலா உருண்டை ரெடி

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அனைவருக்கும் மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாம்பழத்தை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் மோதகம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோவா - 1 கப்,
    சர்க்கரை - ¼ கப்,
    மாம்பழ விழுது - ½ கப்,
    ஏலக்காய் பொடி - சிறிதளவு,
    சிறிதளவு நெய்,
    குங்குமப்பூ - சிறிதளவு

    மாம்பழ மோதகம்

    செய்முறை:

    அடிகனமான வாணலியை அடுப்பில் சிறு தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு கப் கோவாவைப் போட்டு அது இளகும் வரை ஒன்று இரண்டு நிமிடங்கள் கிளற வேண்டும். கோவா இளகியதும் கால்கப் சர்க்கரையோ அல்லது இனிப்புச்சுவை அதிகம் தேவைப்பட்டால் அரைகப் சர்க்கரையோ சேர்த்துக் கொள்ளலாம்.

    சர்க்கரை கரைந்து கோவாவுடன் நன்கு கலந்து வரும்பொழுது மாம்பழ விழுதை அத்துடன் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிலிருந்து எட்டு நிமிடங்கள் வரை கிளறும் பொழுது இந்தக் கலவையானது கெட்டியாக திரண்டு வரும்.

    அப்போது ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூவைச் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் சிறுதீயில் கிளற வேண்டும்.

    சிறிது நேரத்திலேயே மாவின் நிறமும், பதமும் மாறும். இப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு இந்தக் கலவையை மாற்றி வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது சிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.

    நெய் தடவிய மோதக அச்சில் இந்தச் சிறுஉருண்டைகளை அழுத்தி எடுத்தால் அருமையான மாம்பழ மோதகங்கள் தயார்.

    மாம்பழ சீசன் இல்லாத சமயங்களில் மாம்பழ விழுதுகள் கடைகளில் ரெடிமேடாக டப்பாக்களில் விற்பனை செய்வதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் ருசியான உணவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இன்று எரிசேரி ரெசிபிவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேனை - 100 கிராம்
    நேந்திரங்காய்- ஒன்று
    கறிவேப்பிலை- தேவைக்கு
    மிளகு தூள்- ஒரு தேக்கரண்டி
    உப்பு- தேவைக்கு
    தேங்காய் எண்ணெய்- 100 கிராம்
    தேங்காய் துருவல்- ஒரு கப்
    சீரகம்- ஒரு தேக்கரண்டி
    நெய்- 25 கிராம்
    கடுகு- ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை- தேவைக்கு

    செய்முறை:

    சேனையையும், நேந்திரங்காயையும் துண்டுகளாக்கி இரண்டாவது எண்ணில் உள்ள பொருட்களில் சேர்த்து நன்றாக வேகவையுங்கள்.

    கால் கப் தேங்காய் துருவலில் சீரகம் சேர்த்து அரைத்து அதை வேகவைத்த காய்கறியில் சேருங்கள்.

    மீதமுள்ள தேங்காய் துருவலை நன்றாக அரைத்து, எண்ணெயை சூடாக்கி அதில் கொட்டி வறுத்து பிரவுன் நிறமாகும்போது எடுத்து குழம்பில் சேருங்கள்.

    நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கலந்து பரிமாறலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் அன்று செய்யும் ஸ்பெஷல் ரெசிபியான அடை பிரதமன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1/2 டம்ளர்
    தேங்காய்ப்பால் - 4 டம்ளர்
    வெல்லம் - 2 டம்ளர்
    ஏலக்காய் தூள் - சுவைக்கு
    பால் - 1 டம்ளர்
    நெய் - தேவைக்கு
    தேங்காய் துண்டுகள் - கைப்பிடியளவு
    முந்திரி - தேவையான அளவு
    உலர்திராட்சை - 2 ஸ்பூன்

    செய்முறை:

    வெல்லத்தை தண்ணீர் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

    அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

    வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து உரித்து எடுத்து, மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒர் வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

    அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.

    அடுத்து  அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும்.

    அனைத்தும் நன்கு வெந்ததும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.

    தித்திப்பான அடை பிரதமன் தயார்

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் ஓணம் பண்டிகை அன்று பல்வேறு வகையான உணவுகளை தயார் செய்வார்கள். அதில் ஒலன் என்ற ரெசிபியும் ஒன்று. இன்று இந்த உணவு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெள்ளை பூசணி - 200 கிராம்
    சிவப்பு பயிறு (சிவப்பு காராமணி அல்லது பெரும்பயிறு) - அரை கப்
    பச்சை மிளகாய் - 5
    தேங்காய் - அரை மூடி
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    செய்முறை :

    முதலில் வெள்ளை பூசணியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    சிவப்பு பயிறை குக்கரில் வேக வைத்து எடுத்து வைக்கவும்.

    பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.

    தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து பிழிந்து முதல் மற்றும் இரண்டாம் பால் எடுக்கவும்.

    வாணலியில் பூசணித் துண்டுகள், பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, இரண்டாம் தேங்காய் பால் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக விடவும்.

    காய் வெந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பயிறை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கரண்டியால் காய் மற்றும் பயிறை லேசாக மசித்து விடவும்.

    பிறகு முதல் தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

    தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டில் சேர்க்கவும்.

    சுவையான ஓலன் தயார்

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அவல் வைத்து 10 நிமிடத்தில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு அவல் - 1 கப்
    ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு
    முந்திரி - 10
    பால் - 3 கப்
    சர்க்கரை - 1/2 கப்
    பாதாம் - 5

    அவல்

    செய்முறை :

    பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துகொள்ளவும்.

    சிவப்பு அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவேண்டும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.

    பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அவல் சேர்க்கவேண்டும்.

    பின்னர் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    அவல் வெந்தவுடன் இறக்கி பரிமாறும் போது முந்திரி, பாதாம் சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான பாயாசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×