search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பூர்ண கொழுக்கட்டை
    X
    பூர்ண கொழுக்கட்டை

    விநாயகருக்கு பிடித்தமான பூர்ண கொழுக்கட்டை

    கொழுக்கட்டை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பிள்ளையார் தான். அத்தகைய கொழுக்கட்டையை நாளை விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் செய்து, விநாயகரை வரவேற்போம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி மாவு - 2 கப் (வறுத்தது)
    எள் - 2 கப்
    வேர்க்கடலை - 2 கப்
    பொட்டுக்கடலை - 2 கப்
    தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
    மண்டை வெல்லம் - 100 கிராம்
    உப்பு - சிறிது

    செய்முறை:

    பூர்ணம் செய்ய...


    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

    மண்டை வெல்லத்தை நன்கு நைஸாக இடித்து, அதையும் மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும்.

    பின்னர் தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

    பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் மண்டை வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

    கொழுக்கட்டை செய்ய...

    முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, சிறிது லேசான அளவு உப்பு சேர்த்து சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

    பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இதேப்போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

    பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது பூர்ண கொழுக்கட்டை ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    Next Story
    ×