என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
ரைஸ் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்காமல் அதை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் ரைஸ் வெஜிடபிள் கட்லெட் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம்.
தேவையான பொருட்கள் :
சமைக்கப்பட்ட சாதம் - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
காய்கறிகள் (பச்சை பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத் தாள், சிவப்பு மற்றும் மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கேரட்) - 1கப் (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - கொஞ்சம்
சீரகப் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மக்காச் சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சாதத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் காய்கறிகள், மசித்த சாதம், வேகவைத்த உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இஞ்சி, மிளகாய் தூள், கொத்தமல்லி இலை, உப்பு, மஞ்சள் தூள், சீரகப் பொடி, தனியா தூள், மக்காச் சோள மாவு, கடலை மாவு என அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக கலக்க வேண்டும். கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும். அப்போது தான் அதன் பதம் தெரியும்.
* பிசைந்து வைத்த கலவையில் சிறிது எடுத்து உருட்டி தட்டையாக அல்லது உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் தட்டி வைக்க வேண்டும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்க வேண்டும். கட்லெட் நன்றாக பொரிய இருபக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.
* பொரித்த கட்லெட்டை சாஸ் அல்லது கொத்தமல்லி மற்றும் புதினா சட்னியுடன் பரிமாறவும்.
* சூப்பரான ரைஸ் வெஜிடபிள் கட்லெட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

மத்தி மீனில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்று மத்தி மீனை வைத்து கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்ற பபர்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மத்தி மீன் (sardine) - அரை கிலோ
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 20 பல்
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :
* மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, தயிர், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் கழுவிய மீனை சேர்த்து நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். 3 - 4 மணி நேரம் வைக்கலாம்.
* அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா பிசறிய மீனை மெதுவாக அடுக்கி வைத்து, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும்.
* அதனை கொஞ்ச நேரம் கழித்து, மீன் உடைந்து விடாமல் மெதுவாக புரட்டிவிடவும். எண்ணெய் போதவில்லை என்றால் ஊற்றவும். அடுத்த பக்கமும் வெந்ததும், மீனை உடையாமல் புரட்டவும். இரு பக்கமும் மீன் மொறு மொறு என வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து கறிவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும்.
* இந்த வறுத்த மத்தி மீனை எந்த குழம்பு சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மத்தி மீன் (sardine) - அரை கிலோ
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 20 பல்
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை :
* மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, மஞ்சள் பொடி, தயிர், உப்பு போட்டு நன்கு கலந்து, அதனுடன் கழுவிய மீனை சேர்த்து நன்றாக கலந்து குளிர்சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். 3 - 4 மணி நேரம் வைக்கலாம்.
* அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா பிசறிய மீனை மெதுவாக அடுக்கி வைத்து, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும்.
* அதனை கொஞ்ச நேரம் கழித்து, மீன் உடைந்து விடாமல் மெதுவாக புரட்டிவிடவும். எண்ணெய் போதவில்லை என்றால் ஊற்றவும். அடுத்த பக்கமும் வெந்ததும், மீனை உடையாமல் புரட்டவும். இரு பக்கமும் மீன் மொறு மொறு என வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து கறிவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும்.
* இந்த வறுத்த மத்தி மீனை எந்த குழம்பு சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சைனீஸ் இறால் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் (500 கிராம்)
இறால் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
செலரி (நறுக்கியது) - ஒரு கப்
கேரட் - ஒன்று
வெங்காய தாள் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அஜினோ மோட்டோ - 1 சிட்டிகை.

செய்முறை :
* இறாலை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும்.
* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* செலரி, வெங்காய இலைகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்த பின்பு அதில் நூடுல்ஸை போடவும். 5 நிமிடங்கள் வெந்தபின்பு எடுத்து நீரை வடிகட்டவும். பிறகு அதில் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு அலசிவிடவும். நீர் வடிந்தபின்பு, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் அனைத்திலும் படுமாறு தடவி வைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
* வெங்காயம் சற்று வதங்கிய பின்பு இறாலை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அதில் துருவின கேரட், நறுக்கின செலரி ஆகியவற்றைப் போட்டு நன்றாக கிளறவும்.
* பின்பு அதில் சோயா சாஸ் விட்டு நன்றாக கிளறவும். லேசான தீயில் அடி பிடிக்காமல் வேகவிடவும். சற்று வெந்ததும் அஜினோ மோட்டோ சேர்க்கவும்.
* காய்கள் போட்டு அனைத்தும் வெந்தபிறகு வேக வைத்த நூடுல்ஸை உதிர்த்துப் போட்டு நன்றாக கிளறவும்.
* கடைசியாக நறுக்கின வெங்காய தாள் தூவி கிளறி இறக்கவும்.
* சுவையான சைனீஸ் இறால் நூடுல்ஸ் தயார்.
* இதை டொமாட்டோ சாஸ் உடன் சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.

ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் ரைஸ், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று குண்டூர் சிக்கன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
காய்ந்த சிவப்பு மிளகாய் - 6 (காரம் அவரவர் விருப்பம்)
தனியா - 3 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு கலவை)
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 150 கிராம்
புளிக்காத தயிர் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு.

செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கி வாசனை வந்ததும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா மற்றும் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விடவும்.
* கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் தீயை மிதமாக வைத்து வேக விடவும். அடிக்கடி திறந்து பிரட்டி விடவும். எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும்.
* சிக்கன் வெந்த பின்னர் மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
* சூப்பரான குண்டூர் சிக்கன் ரெடி.

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லெட் கார்ன்ஃப்ளேக்ஸ் கேக் செய்வது மிகவும் எளிமையானது. இதை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குக்கிங் சாக்லெட் - 1 கப்,
கார்ன்ஃப்ளேக்ஸ் - 3/4 கப்,
பொடித்த நட்ஸ் - தேவையான அளவு.

செய்முறை :
* கார்ன்ஃப்ளேக்ஸை கையால் தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க விடவும்.
* மற்றொரு பாத்திரத்தில் சாக்லெட் அல்லது சாக்கோ சிப்புகளைப் போட்டு கொதிக்கும் கடாயின் மேல் வைக்கவும்.
* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து சாக்லெட்டை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
* சாக்லெட் முழுவதும் உருகியவுடன் அடுப்பை அணைக்கவும்.
* இப்போது நட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸை சாக்லெட் சாஸுடன் சேர்த்து, வேகமாகக் கலக்கவும்.
* நன்றாக கலக்கிய இந்தக் கலவையை சின்ன பேப்பர் கப்புகளில் ஸ்பூனால் எடுத்துப் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் குளிரூட்டி, பிறகு பரிமாறவும்.
* சூப்பரான சாக்லெட் கார்ன்ஃப்ளேக்ஸ் கேக் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குக்கிங் சாக்லெட் - 1 கப்,
கார்ன்ஃப்ளேக்ஸ் - 3/4 கப்,
பொடித்த நட்ஸ் - தேவையான அளவு.

செய்முறை :
* கார்ன்ஃப்ளேக்ஸை கையால் தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க விடவும்.
* மற்றொரு பாத்திரத்தில் சாக்லெட் அல்லது சாக்கோ சிப்புகளைப் போட்டு கொதிக்கும் கடாயின் மேல் வைக்கவும்.
* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து சாக்லெட்டை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
* சாக்லெட் முழுவதும் உருகியவுடன் அடுப்பை அணைக்கவும்.
* இப்போது நட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸை சாக்லெட் சாஸுடன் சேர்த்து, வேகமாகக் கலக்கவும்.
* நன்றாக கலக்கிய இந்தக் கலவையை சின்ன பேப்பர் கப்புகளில் ஸ்பூனால் எடுத்துப் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் குளிரூட்டி, பிறகு பரிமாறவும்.
* சூப்பரான சாக்லெட் கார்ன்ஃப்ளேக்ஸ் கேக் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கனுடன் நெய் சேர்த்து சாதம் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 1/2 கிலோ
மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவைக்கு ஏற்ப
எலுமிச்சைபழம் - அரை மூடி
பச்சைமிளகாய் - 10
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 3
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10 பல்
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பட்டை - சிறிது
புதினா - கால் கட்டு
கொத்தமல்லி இலை - கால் கட்டு
முந்திரிப்பருப்பு - 10
தேங்காய் - அரை மூடி
நெய் - 100 கிராம்

செய்முறை :
* அரிசியை நன்கு கழுவி அதனுடன் 1 1/2 மடங்கு நீர் ஊற்றி குழையாமல் வேகவைத்து கொள்ளவும். இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவைக்கவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.
* தேங்காயை விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தனியே வைக்கவும்.
* அடுத்து வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்துக் பொன்னிறமாக வதக்கவும். அதில் பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.
* வதக்கிய வெங்காயத்துடன் தட்டி வைத்த இஞ்சி, பூண்டை சேர்த்து போட்டு வதக்கி, வாசனை வரும் போது மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
* அடுத்து அதில் தக்காளி கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி, கடைசியில் தேங்காய் விழுதைச் சேர்த்து சிக்கனை மிதமான தணலில் வேக வைக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
* சிக்கன் கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விடவும்.
* பிறகு கொத்தமல்லி, புதினாவைத் தூவவும்.
* அடுத்து அதில் ஆற வைத்திருக்கும் சாதத்தில் வதக்கிய கறி மசாலாவைக் கொட்டி நன்கு கிளறவும்.
* கடைசியில் வறுத்த முந்திரிப்பருப்பு, வெங்காயத்தையும், நெய்யையும் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.
* சூப்பரான சிக்கன் நெய்சோறு ரெடி.

வீட்டில் காளான் இருந்தால், அருமையான ஷாஹி காளான் பிரியாணியை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். இன்று ஷாஹி காளான் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாதத்திற்கு...
பாசுமதி அரிசி - 2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 4
கருப்பு ஏலக்காய் - 1
மிளகு - 4
உப்பு - தேவையான அளவு
காளான் மசாலாவிற்கு...
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 2
மிளகு - 4
கருப்பு ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காளான் - 200 கிராம்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
அலங்கரிக்க...
வெங்காயம் - 1/2 கப்
முந்திரி - 5-6
குங்குமப்பூ - 1 சிட்டிகை (1 டேபிள் ஸ்பூன் பாலில் ஊற வைத்தது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்

செய்முறை:
* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சாதத்திற்கு...
* முதலில் அரிசியை நன்கு கழுவி, நீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, ஏலக்காய் மற்றும் மிளகு சேர்த்து 1 நிமிடம் வறுக்க வேண்டும். பின்பு அரிசியை அத்துடன் சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி வைத்து, அரிசியானது முக்கால் பாகம் வெந்ததும், அதனை இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
காளான் மசாலாவிற்கு...
* காளானை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, மிளகு, பட்டை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* வெங்காயமானது பொன்னிறமானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காளானை சேர்த்து, மூடி வைத்து, காளானை வேக வைக்க வேண்டும். காளானானது நன்கு வெந்து, தண்ணரானது வற்றியதும், அதில் கொத்தமல்லியை தூவி இறக்க வேண்டும்.

அலங்கரிக்க...
* வெங்காயத்தை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* முந்திரியையும் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிரியாணி...
* ஒரு அகன்ற வாணலியில் மூன்றில் ஒரு பங்கு சாதத்தைப் போட்டு, அதன் மேல் காளான் மசாலா சிறிதளவு பரப்பி, மீண்டும் பாதி சாதத்தைப் போட்டு, மறுபடியும் மீதமுள்ள அனைத்து காளான் மசாலாவையும் பரப்பி, இறுதியில் மீதமிருக்கும் சாதத்தைப் பரப்பிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதனை அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் அனைத்து பொருட்களும் ஒன்று சேரும் வரை, மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியில் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரியை தூவி, குங்குமப்பூ பாலை ஊற்றி, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான ஷாஹி காளான் பிரியாணி ரெடி!!!

காலையில் செய்த பரோட்டா மீந்து விட்டால் மாலையில் சிற்றுண்டியாக காய்கறிகள் சேர்த்து சூப்பரான வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
பரோட்டாக்கள் - 5
வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி (பெரியது) - 1
குடமிளகாய் (பெரியது) - 1
கேரட் - 1
பட்டாணி - 1 கப்
பூண்டு - 2 பல்லு
எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
* பரோட்டாக்களைச் சிறிய துண்டுகளாக உதிர்த்து கொள்ளவும்.
* பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கேரட், குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டை தட்டிக்கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும்.
* இதனுடன் பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கினதும் தக்காளி, குடமிளகாய் போட்டு சற்று வதக்கவும். தண்ணீர் விடத் தேவையில்லை.
* அடுத்து அதில் கேரட், வேக வைத்த பச்சைப் பட்டாணியையும் சேர்த்து உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.
* காய்கறிகள் வெந்தவுடன் காரம் பார்த்து விட்டு எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும்.
* அடுத்து அதில் பரோட்டா துண்டுகளை போட்டு காய்கறிக்கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
* எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்போது கொத்தமல்லித்தழை தூவி நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.
* சூப்பரான வெஜிடபிள் கொத்து பரோட்டா ரெடி.

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, சீஸ் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, சீஸ் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் பான்கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 2,
சோள மாவு - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
முட்டை - 2
சீஸ் - தேவைக்கு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை :
* உருளைக்கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்
* சீஸ், வெங்காயத்தை துருவிக்கொள்ளவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, சோள மாவு, வெங்காயம். ப.மிளகாய், முட்டை, சீஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றிய பின் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
* சூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு பான்கேக் ரெடி.
* இதை சாஸ், தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 2,
சோள மாவு - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 1
முட்டை - 2
சீஸ் - தேவைக்கு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை :
* உருளைக்கிழங்கை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்
* சீஸ், வெங்காயத்தை துருவிக்கொள்ளவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, சோள மாவு, வெங்காயம். ப.மிளகாய், முட்டை, சீஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றிய பின் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
* சூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு பான்கேக் ரெடி.
* இதை சாஸ், தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மீனில் குழம்பு, வறுவல் மட்டுமே செய்து சாப்பிட்டவர்களுக்கு இன்று வித்தியாசமான சாதம், ஆப்பத்திற்கு சூப்பரான சைடிஷ் ஃபிஷ் மொய்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன்(ஏதாவது ஒரு வகை) - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கீறிய பச்சை மிளகாய் - 5
இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய்ப்பால் - தண்ணீர் சேர்க்காமல் எடுத்த முதல் பால் ஒரு கப்,
சிறிதளவு தண்ணீர் சேர்த்து எடுத்த இரண்டாம் பால் - ஒரு கப்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :
* சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
* மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் எலுமிச்சைசாறு, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு சேர்த்து வெடித்தவுடன் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் பாதி வெந்தவுடன் அதனுடன், இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பால் சேர்த்து, பின்பு ஊறவைத்திருக்கும் மீன் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு சிறிது நேரம் வேகவைக்கவும்.
* பின்னர் அடுப்பின் தீயைக் குறைத்து, முதலில் எடுத்த தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கிவிட்டு பாத்திரத்தை மூடி வைத்து சிறிது நேரம் வேகவிட்டு குழம்பு கொதி வந்ததும் இறக்கவும்.
* சூப்பரான ஃபிஷ் மொய்லி ரெடி.
* ஃபிஷ் மொய்லி, சாதம் மற்றும் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

பருப்பு வடை மோர்க்குழம்பு சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த பருப்பு வடை மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மோர் - 2 கோப்பை
பருப்பு வடை - 7
துருவிய தேங்காய் - 1/4 கோப்பை
துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
பச்சரிசி - 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லி விதை (தனியா)- 2 மேசைக்கரண்டி
இஞ்சி - 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 10
வற்றல் மிளகாய் - 3
பெருங்காயம் - 2 சிட்டிகை
மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லித்தழை - தூவும் அளவுக்கு
தாளிக்க :
கடுகு, உளுந்து, வெந்தயம் - தலா கால் ஸ்பூன்
கறிவேப்பிலை.

செய்முறை :
* மோரை நன்றாக கரைத்து வைக்கவும்.
* துவரம்பருப்பு, பச்சரிசி, கொத்துமல்லி விதை இவை அனைத்தையும் சுமார் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
* மிக்சியில் ஊறவைத்த பொருட்களை போட்டு அதனுடன் தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெந்தயம், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்துத் தாளித்த பின் அரைத்த விழுது, மஞ்சள் பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள மோரை சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
* மோர் திரிந்து விடாமல் இருப்பது அவசியம். அதே நேரத்தில் கொதிக்கவும் வேண்டும்.
* சற்றே இறுக்கமாக இந்தக்கலவை வரும் போது பருப்பு வடைகளையும் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு பின் அடுப்பை அணைத்து விட்டு கொத்துமல்லித் தழை தூவி இறக்கி விடவும்.
* வடை நன்கு ஊற சுமார் 30 நிமிடங்களாவது பிடிக்கும்.
* பருப்பு வடை மோர்க்குழம்பு ரெடி.
குறிப்பு: பருப்பு வடைகள் அதிகம் மொறுமொறுப்பாக இல்லாமல், சற்றே தடிமனாகத் தட்டிக் கொள்ளவும்.

சம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டு கொள்ள இந்த மட்டன் மிளகாய் சுக்கா வறுவல் சூப்பராக இருக்கும். இன்று மட்டன் மிளகாய் சுக்கா வறுவல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - அரை கிலோ
இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி அல்லது தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 மேசைக்க்ரண்டி
எண்ணெய் - 3/4 கோப்பை
ப.மிளகாய் - 4
கொத்தல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
* மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கழுவி மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து நன்கு கழுவி எடுக்கவும்.
* குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடி 7 விசில் போட்டு இறக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்க கூடாது.
* வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் அதில் ப.மிளகாயை போட்டு தாளித்த பின்னர் வேக வைத்த மட்டனை போட்டு நன்கு வறுத்தெடுக்கவும்.
* துண்டுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்வரை வறுக்க வேண்டும். நன்றாக வெந்து உதிரியாக வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
* சூப்பரான மட்டன் மிளகாய் சுக்கா வறுவல் ரெடி.
குறிப்பு:
இளங்கறியாக இருந்தால் அரை வேக்காடு போதும். காரம் அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சற்றுத் தாரளமாக இருப்பதுதான் சுக்காவுக்கே சுவை. கரம் மசாலா தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்.