search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mutton recipe"

    • அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன்.
    • மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும்.

    அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். மட்டன் தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வகைகளில் செய்யலாம். அதிலும் மட்டனில், அரைத்த மசாலா சேர்த்து செய்யப்படும் மட்டன் கோலா உருண்டை சாப்பிடவே அட்டகாசமாக இருக்கும். அதை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    மட்டன் (வெள்ளாட்டு இறைச்சி) -1கிலோ

    மிளகாய்த் தூள் 12 கிராம்

    மஞ்சள் தூள் - 4 கிராம்

    உப்பு -தேவைக்கு ஏற்ப

    நறுக்கிய பச்சை மிளகாய்- 10 கிராம்

    நறுக்கிய பூண்டு - 20 கிராம்

    நறுக்கிய கொத்தமல்லி - 30 கிராம்

    எலுமிச்சைச் சாறு- 5மி.லி.

    எண்ணெய் - கால் லிட்டர்

    அரைக்க

    துருவிய தேங்காய் 25 கிராம்

    லவங்கப்பட்டை 2 கிராம்

    கிராம்பு, கசகசா - 10 கிராம்

    வறுத்த உளுந்தம்பருப்பு - 15 கிராம்

    செய்முறை:

    முதலில் மிக்சியில், சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை அரைத்து எடுக்கவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலவையை கலந்துகொள்ளவும்.

    பின்னர் மிக்சியில் தேங்காய்த் துருவல், லவங்கப்பட்டை, கிராம்பு, கசகசா, வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை அரைத்த இறைச்சியுடன் சேர்த்து கலக்கவும்.

    கடைசியாக, உருண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுத்தால் சுவையான கோலா உருண்டை, உங்களை ருசிக்க கூப்பிடும்.

    • ரத்த அளவை அதிகரிக்க பலரும் பரிந்துரைப்பது சுவரொட்டியை தான்.
    • சுவரொட்டியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

    ஆட்டுக்கறியை விட அதன் மற்ற உறுப்புகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன, குறிப்பாக ரத்த அளவை அதிகரிக்க பலரும் பரிந்துரைப்பது சுவரொட்டி எனும் மண்ணீரலைத் தான். ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள நபர்கள் வாரம் ஒருமுறை இதை தவறாமல் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடுவது பலனைத் தரும். வயிற்றுப்புண், வாய்ப்புண் பிரச்சனையால் அவதிப்படும் நபர்களுக்கும் அற்புதமான உணவு சுவரொட்டி தான். இந்த பதிவில் சுவரொட்டி வறுவல் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    மிளகு- ஒரு ஸ்பூன்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    சுவரொட்டி- 2

    சின்ன வெங்காயம்- 10

    இஞ்சி, பூண்டு விழுது- தேவையான அளவு

    கரம் மசாலா தூள்- அரை டீஸ்பூன்

    பெருஞ்சீரகம்- அரை டீஸ்பூன்

    தேங்காய்- சிறிதளவு

    நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்

    செய்முறை:

    மட்டன் கடையில் சுவரொட்டியை வெட்டாமல் வாங்கி வர வேண்டும், அதனை நன்றாக சுத்தம் செய்த பிறகு குக்கரில் போட்டு 2 விசில் வரை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சி ஜாரில் பொடித்துக்கொள்ள வேண்டும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்ததும், பட்டை, சோம்பு, கடுகு உளுந்து, கிராம்பு, லவங்கப்பட்டை கருவேப்பில்லை சேர்க்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்.

    அதன்பிறகு சுவரொட்டியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தண்ணீர் சேர்க்க வேண்டாம், இதனுடன் கரம் மசாலா தூள், நாம் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், சோம்பு பொடியை சேர்க்க வேண்டும்.

    பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொண்டே இருக்கவும், கடைசியாக நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வறுவல் தயார்.

    பட்டர் கீமா மசாலாவை தோசை, புலாவ், சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும். ரசம் சாதத்திற்கும் இது சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன் கீமா - 1 கிலோ
    வெண்ணெய் - 1 கப்
    தயிர் - 500 கிராம்
    இஞ்சி பேஸ்ட் - 3 டீஸ்பூன்
    பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
    வெங்காயம் - 3  
    தக்காளி - 2  
    கிராம்பு - 5
    பட்டை - 1 இன்ச்
    கருப்பு ஏலக்காய் - 2
    பச்சை ஏலக்காய் - 2
    பச்சை மிளகாய் - 6
    பிரியாணி இலை - 2
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது



    செய்முறை :

    மட்டன் கீமாவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

    அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீமாவை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.

    பின்பு அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

    பின் அதில் வெண்ணெயை சேர்த்து நன்கு பிரட்டி, மற்றொரு அடுப்பில் உள்ள வாணலியில் போட்டு கிளறி விட வேண்டும்.

    பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கீமாவை வேக வைக்க வேண்டும்.

    அடுத்து அதில் தயிர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து கீமா தயிரை முற்றிலும் உறிஞ்சியதும், அடுப்பில் இருந்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பட்டர் கீமா மசாலா ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×