என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    ஆப்பம், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மலபார் இறால் கறி சூப்பராக இருக்கும். இன்று மலபார் இறால் கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    இறால் - 300 கிராம்
    மாங்காய் - 1
    இஞ்சி - 1
    பச்சை மிளகாய் - 5
    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கிரேவி செய்ய :

    தேங்காய் - 1
    [பாட்டி மசாலா] மிளகாய்தூள் - தேவையான அளவு
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    வெந்தயத்தூள் - அரை தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை  :

    இறாலை சுத்தம் செய்து வைக்கவும்.

    மாங்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    இஞ்சி ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கிரேவிக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு மண் பாத்திரத்தில் இறாலை போட்டு அதனுடன் மாங்காய், இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து கிளறி அடுப்பில் வைத்து மூடிவைத்து சிறிது வேக விடவும்.

    இறால் வெந்ததும் அதோடு அரைத்து வைத்த மசாலாவைத் சேர்த்து அரை கப் நீர் சேர்த்து நன்கு வேக விடவும். கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

    பின்னர் மிதமான தீயில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து அதோடு சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.

    இப்போது சுவையான இறால் கறி பரிமாறத் தயாராகிவிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் மீன் குருமா சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    (வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்)

    வாழை மீன் - 3
    தேங்காய் - அரை மூடி
    பச்சை மிளகாய் - 20
    வெங்காயம் - 2
    நாட்டுத் தக்காளி - 4
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    புளிப்பு மாங்காய் - 1
    கொத்தமல்லி - ஒரு கையளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    வாழை மீனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    தேங்காயுடன் சோம்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் மாங்காய், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் [பாட்டி மசாலா] மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் மீன் போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சுவையான மீன் குருமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 200 கிராம்,
    உப்பு - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    ஸ்டஃபிங் செய்ய :

    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    சிறிய வெங்காயம் - 2,
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
    உருளைக்கிழங்கு - 1 (சிறியது),
    பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்,
    பச்சை கொத்தமல்லி - சிறிதளவு,
    கேரட், முட்டைகோஸ் - கைப்பிடி அளவு,
    தக்காளி, பச்சை மிளகாய் - 2.

    ஸ்பைசி பொடி:

    [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] தனியா தூள்- ஒரு டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] சீரகப் பொடி - அரை டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    கோதுமை மாவை உப்பு, எண்ணெய் சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட், முட்டைக் கோஸ், பச்சை கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள், [பாட்டி மசாலா] தனியா தூள், [பாட்டி மசாலா] சீரகப் பொடி, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், [பாட்டி மசாலா] சீரகப் பொடியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்.

    இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி மாவைத் திரட்டி அதனுள் வைத்து ஓரங்களை மடித்து, மசாலா காய்கறி உருண்டை வெளியே தெரியாதபடி மூடி விடவும். மீண்டும் லேசாக (ஜென்டில் ப்ரஷர்) சப்பாத்திகளாகத் திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி நெய்/எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலோன் பரோட்டா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே சிக்கன் வைத்து சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரைக்கிலோ
    பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் - 2
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    பிரிஞ்சி இலை - 2
    சிலோன் கறிபவுடர்  - கால் தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    தேங்காய் பால் - 2 கப்
    எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    நெய் - தேவையான அளவு

    சிலோன் கறி பவுடர் செய்ய :

    தனியா, சீரகம் - தலா 2 மேசைக்கரண்டி
    அரிசி, சோம்பு - ஒரு தேக்கரண்டி
    வெந்தயம் - கால் தேக்கரண்டி
    பட்டை - சிறிய துண்டு
    ஏலக்காய், கிராம்பு - 4
    கறிவேப்பிலை - சிறிதளவு

    பரோட்டா செய்ய :

    மைதா மாவு - 2 கப் ,
    முட்டை - 2
    சர்க்கரை - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் பரோட்டா செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக பாலும், தேவையெனில் தண்ணீரும் தெளித்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

    சிலோன் கறி பவுடர் செய்ய தேவையான பொருட்களை  ஒவ்வொன்றாக வெறும் கடாயில் போட்டு வறுத்தெடுக்கவும். நன்றாக ஆறியதும் கொரகொரப்பாக பொடியாக திரித்து வைக்கவும்.

    சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் சில நிமிடங்களில் கலர் மாறி அதிலிருந்து நீர் வெளியேற ஆரம்பித்தவுடன் சிக்கனை மட்டும் தனியே எடுத்து விடவேண்டும்.

    அதே நெயில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது (முழுவதுமாக பொன்னிறமாகக் கூடாது) வதங்கியவுடன் உப்பு, பிரிஞ்சி இலை, [பாட்டி மசாலா] மிளகாய் தூள், சிலோன் கறிபவுடர், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இப்பொழுது பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயை குறைத்து மிதமான தீயில் பத்து நிமிடம் வேக விடவும்.

    தேங்காய் பால் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

    கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்து ஆற வைக்கவும்.

    பரோட்டா மாவை சதுரமாக திரட்டி நடுவில் சிக்கனை வைத்து மூடவும்.

    தவாவில் பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.

    இந்த பரோட்டாவின் ஸ்பெஷலே சதுர வடிவம் தான்.

    சூப்பரான சிலோன் பரோட்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி பூண்டு கார சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 5
    சிவப்பு மிளகாய் - 8 முதல் 10 வரை
    பூண்டு - 12 பல்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - சுவைக்கு
    கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க



    செய்முறை :

    தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.

    அடுத்து பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த அரைத்த சட்டியில் கொட்டி கலந்து பரிமாறவும்.

    சூப்பரான தக்காளி பூண்டு கார சட்னி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் சூடான சோற்றில் போட்டு சாப்பிடவும், இட்லி, சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளவும் மிக மிக சுவையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - 1 கிலோ
    நெய் - 100 கிராம்
    வரமிளகாய் - 10
    மல்லி - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    மிளகு - 2 தேக்கரண்டி
    முந்திரி பருப்புகள் - 15
    பூண்டு இஞ்சி பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
    பட்டை - இரண்டு விரல் அளவு
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 4
    தயிர் - 150 மிலி
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.
    எலுமிச்சம் சாறு - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    மட்டனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து 50 கிராம் நெய் ஊற்றி சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு இஞ்சி பேஸ்ட் மற்றும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், விரல் அளவு பட்டை போட்டு லேசாக வதக்கவும்.

    பூண்டு இஞ்சி பேஸ்ட் வதங்கியதும் வெட்டிய மட்டன் துண்டுகளை அதில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
    போட்டு இறக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வரமிளகாய்களுடன் முந்திரி பருப்பு மற்றும், மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

    பின்னர் வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் எலுமிச்சை பழ சாறு கலந்து அரைத்துக்கொள்ளவும்.

    குக்கரின் உள்ள கறியை தனியாக எடுத்துக்கொண்டு கறி வெந்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.

    அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

    அதில் மீதி இருக்கும் 50 கிராம் நெய் விட்டு சூடாக்கவும், சூடாகிய பின் இப்போது வறுத்து அரைத்த மசாலாவை அதில் போட்டு மேற்கொண்டு தயிர் ஊற்றி வதக்கவும்.

    பச்சை வாசனை எல்லாம் போய் மசாலா நன்றாக வதங்கி வந்த பின் அதில் வேக வைத்த கறியை போட்டு பிரட்டவும்.

    பின்னர் கறி வெந்த தண்ணீரை ஊற்றி அடுப்பை மீடியத்தில் வைத்து 10 நிமிடங்கள் அவ்வப்போது வதக்கியப்படி இருக்கவும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கவும்.

    சூப்பரான காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட உருளைக்கிழங்கு வடை சூப்பராக இருக்கும். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - அரை கிலோ
    கடலை மாவு - நான்கு டீஸ்பூன்
    இஞ்சி - அரை துண்டு
    வெங்காயம் - 2
    சீரகம் - ஒன்றை டீஸ்பூன்
    கொதம்மல்லி - சிறிதளவு
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - ஒன்றை டீஸ்பூன்
    உப்பு - தேவைகேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    இஞ்சி மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, உப்பு, கொதம்மல்லி, வெங்காயம், கடலை மாவு, [பாட்டி மசாலா] மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    மாவு சற்று தளர்வாக இருந்தால் கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு வடை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இன்று கேரளாவில் மிகவும் பிரபலமான உளி தீயல் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காய புளிக்குழம்பை எப்படி செய்வதென்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சின்ன வெங்காயம் - 1/2 கப் (தோலுரித்தது)
    புளிச்சாறு - 1/4 கப்
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    வறுத்து அரைப்பதற்கு:

    துருவிய தேங்காய் - 1/2 கப்
    மல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 3
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு :

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    வரமிளகாய் - 2



    செய்முறை :

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு, குறைவான தீயில் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

    பின்பு அதில் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய் தூள் மற்றும் [பாட்டி மசாலா] சீரகப் பொடி சேர்த்து வதக்கி, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதப்பி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் புளிச்சாறு ஊற்றி, குழம்பு சற்று கெட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

    குழம்பானது கெட்டியாகி, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால், கேரளா ஸ்டைல் சின்ன வெங்காய புளிக்குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாம்பார் சாதம், தயிர் சாதம், புலாவ், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை வறுவல். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 4
    வெங்காயம் - 2 பெரியது
    பூண்டு - 6 பல்
    இஞ்சி - சிறிய துண்டு
    தக்காளி பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
    முட்டை மசாலா பவுடர் - 2 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பச்சை மிளகாய்  - 2
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    முட்டையை வேகவைத்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி பேஸ்ட் சேர்க்கவும்.

    அடுத்து அதில் முட்டை மசாலா, [பாட்டி மசாலா] மிளகு தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் பொடி மற்றும் [பாட்டி மசாலா] கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.

    அடுத்து அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    கொதிக்கும் போது அடுப்பை மிதமான தீயில் வைத்து முட்டையை சேர்த்து மூடிபோட்டு 10 நிமிடங்கள் வேக விடவும்.

    தண்ணீர் வற்றி திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான முட்டை வறுவல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜிஞ்சர் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    இஞ்சி - பெரிய துண்டு
    தக்காளி - 2
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] தனியா தூள் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை பழம் - 1
    புளித்த தயிர் - சிறிதளவு
    [பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
    எண்ணெண், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில்வைத்து சூடானதும வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] தனியா தூள், [பாட்டி மசாலா] மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்.

    அதனுடன் சிக்கனை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, தயிர் சேர்த்து கிளறி விடவும்.

    எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விட வேண்டும்.

    இறுதியில் [பாட்டி மசாலா] கரம்மசாலா தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், சப்பாத்தி, இட்லி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காளான் செட்டிநாடு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் - 200 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
    பட்டை - 1
    ஏலக்காய் - 1
    லவங்கம் - 1
    மிளகு - ஒன்றரை டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    வரமிளகாய் - 8
    தனியா - 2 டீஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 6 பல்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காளானை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் மிளகு, மிளகாய், தனியா, சோம்பு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கி தேங்காய் சேர்த்து அனைத்தையும் விழுதாக அரைக்கவும்.

    மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கிய காளான், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    பின் அரைத்து வைத்த விழுது உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வேக வைக்கவும்.

    இறக்கும் முன்பு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

    சூப்பரான காளான் செட்டிநாடு மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, சாதம், நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ரெட் மட்டன் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆட்டுக்கறி - 1/2கிலோ
    வெங்காயம் - 3
    தக்காளி - 3
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    ஏலக்காய், பட்டை - தலா 2
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், பட்டை சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி பின் [பாட்டி மசாலா] மிளகாய் தூள் சேர்த்த வதக்கவும்.

    அடுத்து நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவேண்டும்.

    பின்னர் கழுவிய மட்டனை சேர்த்து உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

    பின் குக்கரை மூடி முன்று விசில் வரும்வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.

    குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து சூடாக பறிமாறவும்.

    சூப்பரான ஸ்பைசி ரெட் மட்டன் கிரேவி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×