என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சிலோன் சிக்கன் பரோட்டா செய்வது எப்படி
Byமாலை மலர்1 March 2018 9:37 AM GMT (Updated: 1 March 2018 9:37 AM GMT)
சிலோன் பரோட்டா சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று வீட்டிலேயே சிக்கன் வைத்து சிலோன் பரோட்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் - அரைக்கிலோ
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் - 2
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
சிலோன் கறிபவுடர் - கால் தேக்கரண்டி
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
சிலோன் கறி பவுடர் செய்ய :
தனியா, சீரகம் - தலா 2 மேசைக்கரண்டி
அரிசி, சோம்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
ஏலக்காய், கிராம்பு - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
பரோட்டா செய்ய :
மைதா மாவு - 2 கப் ,
முட்டை - 2
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் பரோட்டா செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக பாலும், தேவையெனில் தண்ணீரும் தெளித்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
சிலோன் கறி பவுடர் செய்ய தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வெறும் கடாயில் போட்டு வறுத்தெடுக்கவும். நன்றாக ஆறியதும் கொரகொரப்பாக பொடியாக திரித்து வைக்கவும்.
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் சில நிமிடங்களில் கலர் மாறி அதிலிருந்து நீர் வெளியேற ஆரம்பித்தவுடன் சிக்கனை மட்டும் தனியே எடுத்து விடவேண்டும்.
அதே நெயில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது (முழுவதுமாக பொன்னிறமாகக் கூடாது) வதங்கியவுடன் உப்பு, பிரிஞ்சி இலை, [பாட்டி மசாலா] மிளகாய் தூள், சிலோன் கறிபவுடர், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
இப்பொழுது பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயை குறைத்து மிதமான தீயில் பத்து நிமிடம் வேக விடவும்.
தேங்காய் பால் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்து ஆற வைக்கவும்.
பரோட்டா மாவை சதுரமாக திரட்டி நடுவில் சிக்கனை வைத்து மூடவும்.
தவாவில் பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
இந்த பரோட்டாவின் ஸ்பெஷலே சதுர வடிவம் தான்.
சூப்பரான சிலோன் பரோட்டா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story
×