என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு லஞ்சுக்கு கொடுத்து அனுப்ப காய்கறிகள் சேர்த்து மசாலா பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், பச்சை பட்டாணி - கலந்து பொடியாக நறுக்கியது ஒரு கப்.
    பெரிய வெங்காயம் - இரண்டு
    கோதுமை மாவு - கால் கிலோ
    புளிப்பு இல்லாத தயிர் - தேவையான அளவு
    பச்சை மிளகாய் - இரண்டு.
    இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்.
    சீரகம் - அரை டீஸ்பூன்.
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்.
    மஞ்சள்தூள் - தேவையான அளவு.
    எலுமிச்சை சாறு - சிறிது.
    எண்ணெய் - பொரிக்க
    நெய் - இரண்டு ஸ்பூன்.



    செய்முறை :

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கால் கிலோ கோதுமை மாவுடன் மூன்று ஸ்பூன் நெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து புளிப்பு இல்லாத தயிர் ஊற்றி தண்ணீர் ஊற்றாமல் தயிரிலேயே சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு வதங்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதங்கியதும் சிறிது தண்ணீர் தெளித்து தேவையான உப்பு போட்டு காய்கறி கலவை ஓரளவு கெட்டியாகி வந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

    பிறகு பிசைந்த மாவை சப்பாத்திகளாய் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு சப்பாத்தியின் மேல் இரண்டு அங்குல இடைவெளி விட்டு ஒரு ஸ்பூன் மசாலா வைத்து அந்த பூரியின் மேல் இன்னொரு பூரியை வைத்து மூடி ஓரங்களை நன்றாக ஒட்டி சில்வர் டப்பா மூடியால் மசாலா இருக்கும் இரண்டு இடங்களையும் வட்டமாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து பூரிகளை பொரித்தெடுக்கவும்.

    வெஜிடபிள் ஸ்டப்ஃடு பூரி ரெடி.

    குறிப்பு: இது குழந்தைகளின் ஸ்கூல் லஞ்சிற்கு மிகவும் அருமையான டிஷ்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மேகியை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் மேகி போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    கேரட் -1
    பீன்ஸ் - 5
    குடை மிளகாய் - பாதி
    பச்சை பட்டாணி - கொஞ்சம்
    உருளைக்கிழங்கு - கொஞ்சம்
    எண்ணெய் - தேவையான அளவு
    மேகி நூடுல்ஸ் - சின்ன பாக்கெட்
    கடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடுல்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.

    வேகவைத்த மேகி நூடுல்ஸ்சுடன், வதங்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறிது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.

    கடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் நுடுல்ஸ் உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான மேகி போண்டா ரெடி.

    வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி காய்கறிகள் கலந்து செய்து கொடுப்பதால் வைட்டமினும் நார்ச்சத்தும் அதிகமாக கிடைக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு காய்கறிகள் சேர்த்து கொடுத்தால் வைட்டமினும் நார்ச்சத்தும் கிடைக்கும். இந்த ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3,
    துருவிய கேரட், கோஸ், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்ந்த கலவை - கால் கப்,
    கொத்தமல்லி - 2 டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
    சீரகத்தூள் -கால் டீஸ்பூன்,
    பொட்டுக்கடலை பொடி - 2 டீஸ்பூன்,
    பால் - 2 டீஸ்பூன்,
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், மிளகுத்தூள், சீரகத்துள், முட்டை, பொட்டுக்கடலை, பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்த மாவை சிறிய ஆம்லெட்டுகளாக ஊற்றி சுற்றிலும் நெய் விடவும்.

    ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும்.

    சூப்பரான முட்டை வெஜிடபிள் ஆம்லெட் ரெடி.

    வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி காய்கறிகள் கலந்து செய்து கொடுப்பதால் வைட்டமினும் நார்ச்சத்தும் அதிகமாக கிடைக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று காபி டிகாஷன், தேங்காய் துருவல் சேர்த்து பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    தேங்காய் துருவல் - 1 கப்
    காபி டிகாஷன் - அரை கப்
    சர்க்கரை - தேவைக்கு
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    முந்திரி பருப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முந்திரி பருப்பை தூளாக்கி கொள்ளவும்.

    வாணலியில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையை போட்டு பாகு காய்ச்சி கொள்ள வேண்டும்.

    அடுத்து அதில் நெய், காபி டிகாஷன், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறிவிட  வேண்டும்.

    ஓரளவு கெட்டியாகி பதம் வந்ததும் இறக்கிவிட வேண்டும். அகன்ற தட்டில் நெய் தடவி விட்டு அதில் இந்த கலவையை ஊற்றி சமமாக பரப்பி விட வேண்டும்.

    பின்னர் முந்திரி பருப்பு தூளை அதன் மேல் தூவி விட வேண்டும்.

    பின்னர் விரும்பிய வடிவத்தில் வெட்டி பர்பியை ருசிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் கொண்டைக்கடலை புலாவ் செய்வது கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5,
    பச்சை மிளகாய் - 2
    பெரிய வெங்காயம் - ஒன்று
    பட்டை - சிறு துண்டு
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    வெள்ளை கொண்டைக்கடலை - கால் கப்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    நெய்யில் வறுத்த முந்திரி - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து கொள்ளவும்.

    தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும்.

    அடிகனமான வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேகவைத்த கொண்டைக்கடலை, வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, உதிராக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை, முந்திரி தூவி பின்பு பரிமாறவும்.

    சூப்பரான கொண்டைக்கடலை புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சிக்கன் தோரன் அருமையாக இருக்கும். இன்று இந்த சிக்கன் தோரனை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் துண்டுகள் - அரை கிலோ (சிறியதாக நறுக்கியது),
    வெங்காயம் - 2 கப்,
    பூண்டு - 2 தேக்கரண்டி,
    இஞ்சி - 2 தேக்கரண்டி,
    பச்சை மிளகாய் - 8,
    சிக்கன் மசாலா பொடி - 2 தேக்கரண்டி,
    நல்ல மிளகு பொடி -1 கப்,
    சீரகம் - 1 தேக்கரண்டி,
    தேங்காயம் (துருவியது) - 1 கப்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - ½ கப்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - 1 தேக்கரண்டி,
    உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
    பிரியாணிஇலை - சிறிதளவு.



    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்கு வதங்கும் வரை கிளறி விடவும்.

    பின்னர் சிக்கன் துண்டுகளை அதனோடு சேர்த்து மெதுவாக கிளறிவிடவும்.

    இப்போது சிக்கன் மசாலா, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    பின்னர் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    இப்போது 2 கப் நீர் சேர்த்து., அதோடு பிரியாணி இலை சேர்த்து பாத்திரத்தை மூடி வேக வைக்கவும்.

    நீர் முற்றிலும் வற்றிய பின்னர் துருவி வைத்த தேங்காய் சேர்க்கவும். நன்கு கிளறி சிறிது நேரம் வேக விடவும்.

    பின்னர் நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

    இப்போது உங்களுக்கு சுவையான கமகம சிக்கன் தோரன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வாத்துக்கறி குழம்பு சூப்பராக இருக்கும். இன்று வாத்துக்கறி குழப்பை வேலூர் ஸ்டைலில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாத்துக்கறி - 1 கிலோ
    சின்ன வெங்காயம் - அரை கிலோ
    தக்காளி - 4
    தேங்காய் துருவல் - 1 கப்
    இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - 4
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தவாவில் சிறிது எண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கி ஆற வைத்து, பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    துருவிய தேங்காயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது, பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்த வாத்துக்கறி ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.

    பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, மஞ்சள் தூளைச் சேர்க்கவும்.

    வாத்துக்கறியிலிருந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு நீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி எட்டு முதல் பத்து விசில் வரை விட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூடான, டேஸ்டான வேலு}ர் வாத்துக்கறி குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உளுந்து, கடலைப்பருப்பு, பட்டாணி பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இன்று வேர்க்கடலையை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை வேர்க்கடலை - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - சிறிய துண்டு,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    வெங்காயம் - ஒன்று,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :  

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வேர்க்கடலையை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஊறிய வேர்கடலையை நீரை பிழிந்துவிட்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த வேர்க்கடலை விழுது சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதம் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை வடை ரெடி.

    தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த இரண்டையும் சேர்த்து கட்லெட் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நன்கு வேகவைத்த சாதம் - ஒன்றரை கப்
    உருளைக்கிழங்கு - ஒன்று
    குடைமிளகாய் (நறுக்கியது) - 2 டீஸ்பூன்
    வேகவைத்து, மசித்த கேரட், பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை -  சிறிதளவு
    வெங்காயம் - 1
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    பிரெட் தூள், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாதத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும் (அரைக்க வேண்டாம்; கையால் மசித்தால் போதும்).

    கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பிறகு, அதில் வேகவைத்த சாதம், மசித்த உருளைக்கிழங்கு, காய்கறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் வதக்கவும்.

    அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் கையால் நன்றாகப் பிசைந்து விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்யவும்.

    லேசாக பிரெட் தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து எடுத்து, லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.

    சூப்பரான சூப்பரான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் ரைஸ் கட்லெட் ரெடி.

    ஒரு கைப்பிடி சாதம்கூட சாப்பிடாத குழந்தைகளை ஒரு கப் சாதம் சாப்பிட வைக்க இது எளிய முறை. சாதம், காய்கறிகள் எல்லாம் இதனுள்ளேயே இருப்பதால் தேவையான சத்தும் கிடைக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த செட்டிநாடு மிளகாய் சட்னி சூப்பரான இருக்கும். இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    வரமிளகாய் - 5
    பூண்டு - 3
    புளி - 1 இன்ச்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு :

    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு அதில் பூண்டு, புளி, வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தூவி மீண்டும் 2 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால், செட்டிநாடு மிளகாய் சட்னி ரெடி!!

    புளிக்கு பதிலாக தக்காளியையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆப்பம், இடியாப்பம், தோசை, இட்லி, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் சொதி. இன்று அதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - 200 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 6
    2-ம் தேங்காய் பால் - 200 மில்லி,
    முதல் தேங்காய் பால் - 100 மில்லி
    மஞ்சள் தூள் - 5 கிராம்
    எலுமிச்சைப்பழம் - 1
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 3
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மட்டனை போட்டு அதனுடன் ப.மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு, 2-ம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணிநேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

    2 மணிநேரம் கழித்து ஃபிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து குளிர்ச்சி போனவுடன் கடாயில் போட்டு கொதிக்க விடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்னர் கொதிக்க வைத்த மட்டனை இதில் சேர்க்கவும்.

    இப்போது முதல் தேங்காய் பால், உப்பு சேர்க்கவும்.

    லேசாக கொதி வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும். அதிக நேரம் கொதிக்க வைத்தால் திரிந்து விடும்.

    சூப்பரான மட்டன் சொதி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. இன்று நாரத்தங்காய் வைத்து சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :      

    நாரத்தங்காய் - 3,  
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    வெந்தயம் - அரை டீஸ்பூன்,  
    காய்ந்த மிளகாய் - 8,  
    கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,  
    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - 2 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :     

    நாரத்தங்காயை நன்றாக கழுவிய துடைத்த பின்னர் துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கி விடவும்.

    வெட்டிய நாரத்தங்காய் துண்டுகளை ஜாடியில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும்.

    இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும்.

    வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

    நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    குறிப்பு : நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×