search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peanut vada"

    உளுந்து, கடலைப்பருப்பு, பட்டாணி பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இன்று வேர்க்கடலையை வைத்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை வேர்க்கடலை - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - சிறிய துண்டு,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
    வெங்காயம் - ஒன்று,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :  

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வேர்க்கடலையை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஊறிய வேர்கடலையை நீரை பிழிந்துவிட்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த வேர்க்கடலை விழுது சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதம் மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான வேர்க்கடலை வடை ரெடி.

    தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×