என் மலர்tooltip icon

    சமையல்

    தோசை, நாண், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் வெஜிடபிள் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2
    பீன்ஸ் - 15,
    பட்டாணி - கால் கப்,
    உருளைக்கிழங்கு - 2
    பெரிய வெங்காயம் - 2,
    தக்காளி - 3,
    தேங்காய்த் துருவல் - 1 கப்,
    பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க:

    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்.

    அரைக்க:

    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 5 பல்,
    சோம்பு - அரை டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 5.

    வெஜிடபிள் குருமா

    செய்முறை :

    கொத்தமல்லி, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காய்கறிகளை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, வெயிட்டைத் தூக்கி, பிரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள்.

    தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருள்களை போட்டு தாளித்த பின்னர்  வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்குங்கள்.

    தக்காளி குழைய வதங்கியதும வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.

    அருமையான வெஜிடபிள் குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மிளகு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. இன்று இந்த சப்பாத்தியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    மிளகு சப்பாத்தி

    செய்முறை:

    முக்கால் டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்து ஆறவைத்து பொடித்துக் கொள்ளவும்.

    அதை கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.  

    மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான மிளகு சப்பாத்தி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாயாசம் செய்து கொடுக்க விரும்பினால் சத்தான கம்பு சேர்த்து பாயாசம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கம்பு - அரை கப்
    பால் - அரை லிட்டர்
    சர்க்கரை - தேவையான அளவு
    பிஸ்தா, பாதாம், ஏலக்காய் - தேவையான அளவு

    கம்பு பாயாசம்

    செய்முறை

    பாதாம், பிஸ்தானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பை முதல் நாள் இரவே நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    மறுநாள் பாதியளவு பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

    மீதி பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.

    அதனுடன் வேகவைத்த கம்புப் பயறைச் சேர்த்து, ஏலக்காயைத் தட்டிப் போட்டு இறக்கவும்.

    பிஸ்தா, பாதாம் பருப்புகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

    சத்தான சுவையான கம்பு பாயாசம் ரெடி.

    குறிப்பு: சர்க்கரையை தவிர்க்க நினைப்பவர்கள் கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று தினை, கோதுமை சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தினை மாவு - ஒரு கப்
    கோதுமை மாவு - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    தினை கோதுமை சப்பாத்தி

    செய்முறை


    ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.  

    பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுங்கள்.

    சத்தான தினை கோதுமை சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாடு மட்டன் கிரேவியை சப்பாத்தி, இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - 1 /2 கிலோ
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பில்லை - 2 கொத்துகள்
    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
    தனியா தூள் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    கிரேவிக்கு

    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1 (பெரியது)
    தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

    செட்டிநாடு மசாலா தூள் செய்ய

    தனியா - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
    பிரிஞ்சி இலை - 1
    கல் பாசி - 2
    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - 5 கொத்துகள்
    காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்திற்கேற்ப)

    செட்டிநாடு மட்டன் கிரேவி

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதனுடன் தனியா தூள், உப்பு சேர்த்து 5 - 6 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

    செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருள்களை நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வறுத்துக்கொண்டு, ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    கிரேவிக்கு கொடுத்துள்ள பொருள்களை, ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி, ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதக்கிய பின், அரைத்து வைத்த கிரேவியை சேர்த்து 2 நிமிடம் கொதித்த பிறகு, வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து, நன்றாக கிளறவும்.

    பிறகு, அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலா தூளை சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீரும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.

    சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்!

    சிவரஞ்சனி ராஜேஷ், கரூர்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இன்று பீட்ரூட் சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 1/4 கிலோ
    தக்காளி - 2
    பெரிய வெங்காயம் - 1
    வெண்ணெய் - 25 கிராம்
    மிளகுத்தூள் - தேவையான அளவு
    கரம்மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    சோளா மாவு - 2 டீஸ்பூன்
    கிரீம் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 3 கப்

    பீட்ரூட் சூப்

    செய்முறை :

    பீட்ரூட்டை தோல் சீவி துருவியால் துருவிக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோளா மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட்டை போட்டு அத்துடன் மிளகுத்தூள், உப்பு, கரம்மசாலா தூள், வெண்ணெய் சேர்த்து 2 விசில் போட்டு வேக விடவும். வெந்ததும் மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பீட்ரூட் சாறுடன் கரைத்து வைத்துள்ள சோளமாவு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்கும் போது அத்துடன் 1 டீஸ்பூன் கிரீம் சேர்க்கவும்.

    சூப்பரான பீட்ரூட் சூப் ரெடி.

    பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்து சூடான கப்பில் போட்டு பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கடல் உணவில் இறால் பெரும்பாலானவர்களால் அதிகம் விரும்பி சாப்பிடக் கூடியது. இறால் பெப்பர் பிரை அனைவரும் விரும்பக் கூடியதாகும். அதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 250 கிராம்
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - 25 கிராம்
    பூண்டு - 25 கிராம்
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
    எண்ணெய்  - தேவையான அளவு
    உப்பு  - தேவையான அளவு

    இறால் பெப்பர் பிரை

    செய்முறை :

    இறாலை சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலைப்போட்டு, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறாமாக வதங்கியதும் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை நன்கு பிரட்டி விட வேண்டும்.

    இறால் அதிக நேரம் வேக வைக்க கூடாது. இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடாத வகையில் பக்குவமாக இறக்கி ஆறியதும் பரிமாறலாம்.

    சூப்பரான இறால் பெப்பர் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓமம், கற்பூரவல்லி சேர்த்து சூப் செய்து பருகலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கற்பூரவல்லி இலை - 15,
    ஓமம் - 2 டீஸ்பூன்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    தனியா - 2 டீஸ்பூன்,
    மிளகு - 4 எண்ணிக்கை,
    சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 4 பல்,
    சோம்பு - சிறிது (தேவைப்பட்டால்),
    உப்பு - தேவைக்கு,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
    வெற்றிலை - 4,
    கொத்தமல்லி - சிறிதளவு
    நெய் - 2 டீஸ்பூன்.

    ஓமம் கற்பூரவல்லி சூப்

    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

    மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    சூப் நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும்.

    சத்தான ஓமம் கற்பூரவல்லி இலை சூப் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிராக வடித்த சாதம் - 2 கப்,
    பெரிய வெங்காயம் - 2,
    தக்காளி - 6,
    பச்சை மிளகாய் - 3,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தலா - சிறிதளவு,
    கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    பொடிக்க (முதல் வகை) :

    பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2,
    கசகசா 2 - டீஸ்பூன்,
    முந்திரி - 6,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்.

    மற்றொரு வகை பொடிக்கு:

    தனியா, துவரம் பருப்பு தலா - 2 டீஸ்பூன்,
    மிளகாய் வற்றல் - 4,
    கொப்பரை தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
    எண்ணெய் 1 டீஸ்பூன்.

    ஸ்பெஷல் தக்காளி சாதம்

    செய்முறை:


    பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள 2 வகைகளை வெறும் கடாயில் தனித்தனியாக போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகாயை இரண்டாக கீறி வையுங்கள்.

    வாணலியில் எண்ணெய், நெய்யைக் காய வைத்து கடுகு, உளுந்து போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தக்காளி குழைய வதங்கியதும் இறக்கவும்.

    இந்த தொக்கை சாதத்தில் போட்டு அதனுடன் பொடித்த 2 பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் நன்றாக கலந்து பரிமாறுங்கள்.

    சுவையான ஸ்பெஷல் தக்காளி சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கறிவேப்பிலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு சாதம் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உதிராக வடித்த சாதம் - 2 கப்,
    கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
    கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.

    பொடிக்க:

    மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    முந்திரி - 4,
    கறிவேப்பிலை - 1 கப்,
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
    மிளகாய் வற்றல் - 6.

    கறிவேப்பிலை சாதம்

    செய்முறை:

    கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.

    பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.

    அனைத்தும் நன்றாக ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் போட்டு பொடித்து வையுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் சாதம், பொடித்த பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கறிவேப்பிலை சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ராஜ்மாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ராஜ்மாவில் சுவையான சத்தான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 2 கப்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    ஓமம் - ஒரு டீஸ்பூன்,
    வெங்காயம் - 1
    இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
    வதக்கிய பெரிய வெள்ளை வெங்காயம் - அரை கப்,
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
    பொடித்த முந்திரி - அரை கப்,
    வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
    புதினா - சிறிதளவு
    பிரெட் கிரம்ப்ஸ் - ஒரு கப்
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு,

    ராஜ்மா கட்லெட்

    செய்முறை :

    வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்துக் கொள்ளவும்.

    வேகவைத்த ராஜ்மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த விழுதுடன் வெங்காயம், பொடித்த முந்திரி, வெள்ளை மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, புதினாவைச் சேர்த்துக் கலந்து பிசைந்து, விருப்பமான வடிவில் தட்டி வைக்கவும்.

    இதை பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி எடுத்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ராஜ்மா கட்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த ஜூஸை தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல பலனை காணலாம். இன்று இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 1
    பீட்ரூட் - 1
    ஆப்பிள் - 1
    லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்
    தேன் - விருப்பப்பட்டால்

    ஜூஸ்

    செய்முறை :

    கேரட், பீட்ரூட், ஆப்பிளை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிகொள்ளவும்

    மிக்சியில் வறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

    அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் லெமன் ஜூஸ், தேன் சேர்த்து கலந்து பருகவும்.

    சத்தான ஜூஸ் ரெடி. 
    ×