என் மலர்tooltip icon

    சமையல்

    அரிசி மாவு, தேங்காய் சேர்த்து செய்யும் இந்த ரொட்டி மிகவும் சுவையானது. ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 1 கப்
    தேங்காய் துருவல் - 1 கப்
    உப்பு - 1/2 ஸ்பூன்
    எண்ணெய் - 5 ஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உப்பு, தண்ணீர், தேங்காய் துருவல் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

    பிசைந்த மாவை சிறிய வட்டங்களாக தட்டி கொள்ளவும்

    தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தட்டி வைத்துள்ள ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்

    சுவையான எளிதில் செய்ய கூடிய அரிசி மாவு தேங்காய் ரொட்டி தயார்

    சுவையாகவும், அதே சமயம் சத்து நிறைந்ததாகவும் ஒரு காலை உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் அதற்கு வெஜிடபிள் ஊத்தாப்பம் சிறந்த தேர்வாக இருக்கும்.
    வெஜிடபிள் ஊத்தாப்பத்தில் பலவகையான காய்கறிகள் சேர்ப்பதால், அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும். இதை காலை வேளையில் சாப்பிடும் போது, அந்நாளுக்குத் தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    தோசை மாவு - தேவையான அளவு
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய தக்காளி - 1 டேபிள் ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * ஒரு பௌலில் வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.

    * தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி, பெரிய வட்டமாக சுற்றாமல், ஓரளவு மொத்தமாக சுற்றிக் கொள்ளவும்.

    * பிறகு அதன் மேல் சிறிது வெஜிடபிளைத் தூவி, எண்ணெய் ஊற்றி, ஒரு மூடி கொண்டு 2 நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்கவும்.

    * பின் தோசையை திருப்பிப் போட்டு லேசாக தோசை கரண்டியால் அழுத்தி விட்டு, 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், வெஜிடபிள் ஊத்தாப்பம் தயார்.

    இந்த வெஜிடபிள் ஊத்தாப்பத்திற்கு தேங்காய் சட்னி மிகவும் அற்புதமாக இருக்கும்.
    மட்டன் சுக்காவைப் போன்றே ருசியாக இருப்பது தான் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட். இதனை பேச்சுலர்கள் விடுமுறை நாட்களில் முயற்சிக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன் - 1/2 கிலோ
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிது
    கொத்தமல்லி - சிறிதளவு
    பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

    அரைப்பதற்கு...

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
    வர மிளகாய் - 5
    மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1 பெரிய துண்டு
    பூண்டு - 6 பெரிய பற்கள்

    செய்முறை:

    மட்டனை நீரில் நன்கு கழுவிக் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுத்தம் செய்த மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அரைத்த மசாலாவை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, மிக்ஸியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, மசாலா அனைத்து தண்ணீரில் கலந்தவுடன் அதனையும் மட்டனுடன் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

    ஊறிய சிக்கனை குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

    மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் மட்டனை சேர்த்து 10 நிமிடம் நன்கு பிரட்டவும்.

    பிறகு அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி.

    இதையும் படிக்கலாம்...கேரட் பச்சை பட்டாணி சாலட்
    பச்சை பட்டாணி சீசன் தொடங்கி விட்டது. இந்த பச்சை பட்டாணியில் மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் பி போன்ற தாதுக்கள் அவற்றில் உள்ளன.
    தேவையான பொருட்கள்

    பச்சை பட்டாணி - 1 கப்
    கேரட் - 1
    இனிப்பு சோளம் - அரை கப்
    வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு
    எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு- தேவையான அளவு

    செய்முறை

    கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது இனிப்பு சோளம், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.

    பட்டாணி வெந்தவுடன் தண்ணீரை வடித்து வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் வேக வைத்த பட்டாணி, இனிப்பு சோளம், கேரட் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதில் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியான வறுத்த வேர்க்கடலையை மேலே தூவி பரிமாறவும்.

    சூப்பரான கேரட் பச்சை பட்டாணி சாலட் ரெடி.

    பாஸ்தாவை வைத்து பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்தா - அரை கப்
    கடலை மாவு - கால் கப்
    அரிசி மாவு - கால் கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 1
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    பெருஞ்சீரகம் தூள் - மரை டீஸ்பூன்
    தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்தாவில் சிறிது உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைத்து குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும்.

    குளிர்ந்த நீரில் போட்ட பாஸ்தாவை தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பெருஞ்சீரகம் தூள், தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து ( வடை மாவு பதத்தில்) கொள்ளவும்.

    உப்பு சரிபார்த்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ்  பாஸ்தா  வடை ரெடி.

    காலை வேளையில் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிட நினைத்தால், பசலைக்கீரை ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 2
    பசலைக்கீரை - 1 கப்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
    வெண்ணெய் - 1 டீஸ்பூன்
    பால் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பசலைக்கீரையை போட்டு, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின்னர் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, கையால் அதனை லேசாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதில் பசலைக்கீரை மற்றும் கொத்தமல்லியைப் போட்டு, மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை ஆம்லெட் ரெடி!!!

    காலையில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, இந்த பசலைக்கீரை ஆம்லெட்போட்டு சாப்பிட்டால், வயிறு நிறையும்.

    அனைவரும் விரும்பி உண்ணும் வகையில், குறைந்த பொருட்களைக் கொண்டு எளிமையான முறையில் செய்யக்கூடிய இனிப்பு தான் ‘ரசமலாய் பார்'. அதன் செய்முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
    தேவையான பொருட்கள்:

    வெள்ளை சாக்லெட் - 250 கிராம்
    பால் - 1 தேக்கரண்டி
    குங்குமப்பூ - 1 கிராம்
    ஏலக்காய் - 1
    ரசமலாய் எசன்ஸ் - 1 தேக்கரண்டி
    பாதாம், பிஸ்தா (பொடித்தது) - சிறிதளவு

    செய்முறை:

    சிறிய பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் குங்குமப்பூ மற்றும் இடித்த ஏலக்காய் கலந்து ஊற வைக்கவும்.

    அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அதற்குள் வெள்ளை சாக்லெட்டைக் கொட்டி மிதமான தீயில் உருக்கவும். பின்பு அதில் குங்குமப்பூ ஊறவைத்தப்  பாலை சிறிது சிறிதாக ஊற்றி அடிப்பிடிக்காதவாறு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து இந்தக் கலவையில் ரசமலாய் எசன்ஸ் ஊற்றி, நன்றாகக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, பொடித்து வைத்த பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து மிதமான தீயில் அதன் நிறம் மாறாத வண்ணம் வறுக்கவும். இதை வெள்ளை சாக்லெட் கலவையில் சேர்த்துக் கிளறவும்.

    பின்பு படத்தில் காட்டியவாறு விருப்பமான சாக்லெட் அச்சில், இந்த சாக்லெட் கலவையை ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 2 மணி நேரம் குளிர வைத்து எடுக்கவும். இப்பொழுது ருசியான ‘ரசமலாய் பார்' தயார்.

    இதையும் படிக்கலாம்...சத்தான சம்பா கோதுமை கஞ்சி
    கோதுமையில் எப்போதும் ஒரே மாதிரி சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடாமல் வித்தியாசமாக கோதுமை மாவில் கஞ்சி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சம்பா கோதுமை மாவு - 3 டீஸ்பூன்,
    தண்ணீர் - ஒரு கப்,
    ஓமம், சுக்கு, சீரகம், மிளகு - சிறிதளவு,
    எலுமிச்சம்பழம் - அரை மூடி,
    நாட்டு சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
    ஏலக்காய் - 2.

    செய்முறை:

    ஓமம், சுக்கு, சீரகம், மிளகு நான்கையும் வெறும் வாணலியில் சூடு வர லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொள்ளவும்.

    வெறும் வாணலியில் கோதுமை மாவைப் போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டிபடாமல் கிளறி, மீதி தண்ணீரையும் ஊற்றிக் கிளறவும். கூழ் போல் ஆகிவிடும். அத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும்.

    பொடித்து வைத்திருக்கும் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, 3, 4 துளிகள் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து மிளகு போன்ற சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    இந்த உருண்டைகளை, கோதுமைக் கஞ்சியில் சேர்த்துப் பருகவும்.

    வித்தியாசமான சுவையில், காரசாரமாக இருக்கும் இந்த சம்பா கோதுமை கஞ்சி.

    பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    கேரட் - 1
    வெங்காயம் - 1
    முட்டை - 3
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
    கரம்மசாலா தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கு, கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் துருகிய உருளைக்கிழங்கு, கேரட்டை போட்டு வதக்கவும்.

    உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் உப்பு, மிளகாய் தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற விடவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கலவையை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் ரெடி.

    கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்சத்துக்கள் உணவினை எளிதாக செரிக்க செய்து மலசிக்கலை தடுக்கின்றது. மெக்னீசியம் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது.
    தேவையான பொருட்கள்

    கைக்குத்தல் அரிசி - 4 டீஸ்பூன்
    பொரிகடலை - 2  டீஸ்பூன்
    சுக்குத்தூள் - ½  டீஸ்பூன்

    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி வெயிலில் காய வைத்து நன்றாக காய்ந்ததும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக உப்பி வரும் வரை மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

    அதே போல் அடுத்து கடாயில் பொரிகடலையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.

    இரண்டும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்குத்தூள் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தை  அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் 2 டீஸ்பூன் கஞ்சிப்பொடியை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.

    மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கஞ்சி பதம் வரும் அளவிற்கு கலக்கவும்.

    கஞ்சி தயார் ஆனவுடன் இளஞ்சூட்டுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

    இப்போது சத்தான பொரிகடலை அரிசி கஞ்சி ரெடி.

    கடையில் விற்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆரோக்கியமானதாக இருக்காது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
    தனி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.
    எண்ணெய் - 150 கிராம்.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை முதலில் நன்றாக கழுவி எடுத்து அதனை சீவி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பு மற்றும் மிளகாயைத் தூளை சேர்த்து கலக்கி வைக்கவும்.

    அடுப்பினில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீவிய உருளைக் கிழங்கைப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருளைக் கிழங்கு சிப்ஸை பாத்திரத்தில் போட்டு அதன் மீது மிளகாய் மற்றும் உப்பு தூள் கலந்த கலவையை தூவி எல்லா சிப்ஸ்களிலும் படும்படி கலக்கி கொள்ளவும்.

    சுவையான உருளைக் கிழங்கு சிப்ஸ் தயார்.

    காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாரம்வரை பயன்படுத்தலாம்.

    குறிப்பு: உருளைக் கிழங்கை சீவி துணியின் மேல் பரப்பிவிடவும். அதிக நேரம் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் உருளைக்கிழங்கு கருத்து விடும். இதனால் ஈரம் உறிஞ்சப்பட்டு மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் கிடைக்கும். மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூள் பயன்படுத்தலாம்..

    வழக்கமான முட்டைக்கோஸை விட சிவப்பு முட்டைக்கோஸில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும்.
    தேவையான பொருட்கள்

    சிவப்பு முட்டைக்கோஸ் - 50 கிராம்
    கேரட் - 50 கிராம்
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    முட்டை - 2
    ப.மிளகாய் - 2
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    சிவப்பு முட்டைக்கோஸ், கேரட், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சிவப்பு முட்டைக்கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் முட்டை கலவையை பரவலாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பு முட்டைக்கோஸ் கேரட் ஆம்லெட் ரெடி.

    ×