என் மலர்tooltip icon

    சமையல்

    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 4
    கொத்தமல்லி - 1/2 கப்
    உருளைக் கிழங்கு - 250 கிராம்
    சீஸ் - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    மாவு பிசைய :


    மைதா - 2 கப்
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    செய்முறை :

    உருளைக் கிழங்கை குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    உருளைக் கிழங்கு வெந்ததும், தோலை உரித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளுங்கள். பின் அதில் ப.மிளகாய், சீஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    மாவு பிசைய அகலமாக பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையுங்கள். பிசைந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசையுங்கள்.

    அடுத்ததாக உங்களுக்கு எந்த அளவிற்கு சமோசா வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து வையுங்கள். இப்படி எல்லா மாவையும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போல் திரட்டுங்கள்.

    திரட்டிய மாவை கையில் எடுத்து சமோசாவிற்கு முக்கோண வடிவில் பிடிப்பதுபோல் கையில் சுருடிக் கொள்ளுங்கள்.

    அதில் தற்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் உருளைக் கிழங்கு பூரணத்தை தேவையான அளவு வைத்து மேற்புறத்தை மூடுங்கள். மாவை வாய் திறக்காதவாறு நன்கு அழுத்தி மூடுங்கள்.

    இப்படி அனைத்தையும் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் பொரிப்பதற்கு தோவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சமோசாவை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான சீஸ் சமோசா தயார்.

    இதையும் படிக்கலாம்...சத்துக்கள் நிறைந்த சோள தோசை
    சோளத்தில் பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
    தேவையான பொருட்கள்

    வெள்ளை சோளம் - 1 கப்
    இட்லி அரிசி - 1 கப்
    உளுந்து -  அரை கப்
    வெந்தயம் - ஒரு ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சோளம், இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் கலந்து கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஆறு மணி நேரம் ஊறிய பின்னர் மிக்ஸியில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    மாவு நன்கு புளித்தவுடன் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சாம்பார் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும்.

    சூப்பரான சோள தோசை ரெடி.

    பாஸ்தாவில் பல்வேறு வெரைட்டியான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று பாஸ்தாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வேக வைத்த பாஸ்தா - 1 கப்
    நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட் - தலா கால் கப்
    கடலை மாவு - கால் கப்
    அரிசி மாவு - கால் கப்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் சாஸ் - 2 டீஸ்பூன்
    நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பாஸ்தாவை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், கொத்தமல்லி, கடலை மாவு, அரிசி மாவு, சீரகத்தூள், தனியா தூள், மிளகாய் தூள், சிவப்பு மிளகாய் சாஸ், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக எடுத்து பக்கோடா போல் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாஸ்தா பக்கோடா ரெடி.

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இன்று கொத்தமல்லி பொடி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி - 2 கட்டு
    பெருங்காயம் - 1 துண்டு
    கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 10
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    புளி - சிறிதளவு

    செய்முறை

    புளியை வெறும் சட்டியில் போட்டு வறுத்துத்தெடுத்து கொள்ளுங்கள்.

    எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் அனைத்தையும் அடுத்தடுத்து போட்டு வறுத்து கொள்ளுங்கள்.

    அனைத்தும் ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து பொடித்து கொள்ளுங்கள்.

    சத்தான சுவையான கொத்தமல்லி பொடி ரெடி.

    இதனை சாதத்திலும் போட்டு சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.

    காரம் அதிகம் விரும்புபவர்களுக்கு இந்த மிளகாய் சப்ஜி பிடிக்கும். மேலும் சப்பாத்தி, நாண், தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
    தேவையான பொருட்கள்

    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - 10
    புளி - நெல்லிக்காய் அளவு

    வறுத்து அரைக்க

    வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
    எள்ளு - ஒரு தேக்கரண்டி
    கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 5

    செய்முறை

    வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும்.

    வெங்காயம், மிளகாயை (விதையை நீக்கிவிட்டு) பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

    மிளகாய் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..

    கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

    சுவையான மிளகாய் சப்ஜி தயார்.

    இதையும் படிக்கலாம்...பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட்
    Salad, Recipes, Veg Recipes, Healthy Recipes, Corn Recipes, சாலட், கார்ன் சமையல், சைவம், ஆரோக்கிய சமையல்
    தேவையான பொருட்கள் :

    பேபி கார்ன் - 4,
    ப்ரோக்கோலி - சிறியது 1
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 1,
    வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லி, ப்ரோக்கோலி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக்கொள்ளவும். ப்ரோக்கோலி, பேபி கார்னை கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவியிலும் வேக வைக்கலாம்.

    வேக வைத்த ப்ரோக்கோலி, பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும்.

    அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி, பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் ரெடி.

    திருக்கார்த்திகை தீபமான இன்று மாலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது தேங்காய் பால் அரிசி பாயாசத்தை நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து வழிபாடு செய்யலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    தேங்காய் - ஒன்று (பெரியது)
    பச்சரிசி - அரை ஆழாக்கு
    ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
    வெல்லம் - கால் கிலோ
    காய்ந்த திராட்சை - 10 கிராம்
    முந்திரி - 10 கிராம்

    செய்முறை:
     
    சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும்.

    தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும்.

    மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.

    நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும்.

    கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றி முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி போட்டு 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    கடைசியாக முதல் பாலை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும்.

    சுவையான தேங்காய் பால் அரிசி பாயாசம் தயார்.

    கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்:

    கவுனி அரிசி மாவு - 250 கிராம்,
    தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
    நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.

    செய்முறை:

    கவுனி அரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி பிறகு மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாகப் பிசையவும். தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகிவிடக் கூடாது. மாவாகவே இருக்க வேண்டும். ஆனால், மாவில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அந்த மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும்.

    ஐந்து நிமிடங்கள் ஆனதும் இட்லிப்பானையில் துணி போட்டு சலித்த மாவை ஏழு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

    அதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து பிசிறி எடுத்து உருண்டையாகப் பிடிக்கலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.

    சத்தான கவுனி அரிசி உருண்டை ரெடி.

    இந்த மழை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய போண்டா. இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே ஆகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 1 கப்
    பெரிய வெங்காயம் - 2
    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
    சீரகம்  - 1 ஸ்பூன்
    மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
    கோதுமை மாவு - 4 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் சீரகம், மிளகாய்த்தூள், கோதுமை மாவு, உப்பு, வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

    மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பில் தீயை குறைவாக வைத்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்.

    இப்போது சுவையான வெங்காய போண்டா தயார்.

    தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். பித்தம் மிகுந்து கல்லீரல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வெள்ளரியை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளரிக்காய் - 2
    தக்காளி - 1 சிறியது
    வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
    துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
    ப.மிளகாய் - 2
    உப்பு - ருசிக்கேற்ப  

    தாளிக்க :

    எண்ணெய்,
    கடுகு,
    கறிவேப்பிலை,
    பெருங்காயம்

    செய்முறை :


    வெள்ளரிக்காயை தோல், விதையை நீக்கி சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துவைக்கவும்.

    வெள்ளரிக்காய், வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், ப.மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து அதை அரைத்த கலவையில் கொட்டவும்.

    மனதுக்கும், வயிற்றுக்கும் நல்ல திருப்தியான உணர்வைக் கொடுக்கும் இந்தப் புது விதமான சட்னி.

    அரிசி மாவில் ப.மிளகாய், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து செய்யும் அக்கி ரொட்டி கர்நாடகாவில் மிகவும் பிரபலம். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - கால் கிலோ,
    தேங்காய் - ஒரு மூடி,
    கொத்தமல்லி -  ஒரு கட்டு,
    பச்சை மிளகாய் - 4,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - 50 கிராம்,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை :  

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, சீரகம், உப்பு, துருவிய தேங்காய், கொத்தமல்லி, ப.மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.

    ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம் திருப்பி போட்டு எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான அக்கி ரொட்டி ரெடி.

    இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது.

    விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

    நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க தினமும் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்:

    வாழைத்தண்டு - 50 கிராம்,
    எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    தேங்காய்த்துருவல் - 20 கிராம்,
    மோர், கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் சிறிது நேரம் ஊறவைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப்பயறு, கொத்தமல்லி, சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்த்துருவல், உப்பு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான வாழைத்தண்டு சாலட் ரெடி.

    இதையும் படிக்கலாம்...மூங்க் தால் பரோட்டா
    ×