என் மலர்
பொது மருத்துவம்
- நீரிழிவு நோய் இருப்பவர்கள் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் அதிகமாக மெலிவது கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படலாம்
இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்ட பலருக்கும், 40 வயதுக்கு கீழே உள்ளவர்களில் சிலருக்கும் பொதுவான நோயாக நீரிழிவு பிரச்சினை இருக்கிறது.
ரத்த சர்க்கரை குறித்து அவ்வபோது மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதும், அதை கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் அவசியமானது. அதே சமயம், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்கடங்காத வகையில் செல்லும்போது உடல் உள் உறுப்புகளை அது கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கத் தொடங்கும். இந்த பாதிப்புகளை நீங்கள் மீண்டும் சரி செய்ய இயலாது.
நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகிய மூன்று ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மாவுச்சத்தில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. மனிதனின் உடலில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுக்கோசை செல்களுக்கு உள்ளே எடுத்துச் சென்று நமக்கு சக்தியைக் கொடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் குறைவாக சுரப்பதால் இந்த குளுக்கோசால் செல்களுக்கு செல்ல முடிவதில்லை அதனால் தசை மற்றும் கொழுப்பில் உள்ள குளுக்கோஸ் பயன்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் மெலிகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் அதிகமாக மெலிவது கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படலாம்:
1) ரத்தத்தில் அதிகமான சர்க்கரை அளவு.
2) நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் மெட்பார்மின் போன்ற மாத்திரைகளால் உடல் மெலியலாம்,
3) ஹைபர் தைராய்டிசம் அல்லது புற்றுநோய் அல்லது செலியாக் நோய் போன்று வேறு சில நோய்களின் பாதிப்பாக இருக்கலாம்.
ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியும்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயபடிக் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
- நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது.
- நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவுகளையும் சாப்பிட முடியாது.
நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. சிலவகை நீரிழிவு நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, பி2, ஈ, கே, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை இருக்கின்றன. மேலும், பிளாவினாய்ட்ஸ், பாலிபினால் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கின்றது.
பாகற்காயில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரிகள் போன்றவை குறைந்த அளவே இருப்பதாலும், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதாலும், இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும் வேதிப்பொருட்கள் இருப்பதாலும், சர்க்கரை நோயாளிகள் உணவில் இதை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ரத்த சர்க்கரையை குறைக்கும் சரண்டி, விசைன், இன்சுலின் போல செயல்படும் பாலிபெப்டைட் - பி போன்றவை இருப்பதால் இதை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுவாக பாகற்காயின் விதைகளால் கசப்பு தன்மை அதிகமாக இருந்தாலும், நாம் விதையையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. பாகற்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் பாகற்காயை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அது கருப்பை சுருக்குதலை ஏற்படுத்தி கருக்கலைப்பு கூட நேரலாம். பாகற்காயில் உள்ள கசப்பை போக்குவதற்கு, அதை தயிரில் ஊறவைத்தோ அல்லது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம்.
மேலும் பாகற்காயில் உள்ள லெக்டின், திசுக்களில் உள்ள செல்களுக்குள் குளுக்கோஸ் செல்ல உதவி புரிகிறது. மேலும் இது பசியை குறைத்து, உணவை குறைவாக உட்கொள்ள செய்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைகிறது.
நீரிழிவு நோயாளிகள் தினமும் பாகற்காய் சாற்றை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் பாகற்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என்றாலும் கல்லீரலை பாதிக்கலாம். இது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தினமும் பாகற்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- எலும்புப்புரை என்பது எலும்புகளை பலவீனமாக்க கூடியதாகும்.
- ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படலாம்.
எலும்புப்புரை நோயை தடுக்கும் வழிகள் என்ன என்பது குறித்து கடலூர் முதுநகரில் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள மனோன்மணி மருத்துவமனை எலும்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரவீன் மனோகரன் விளக்கம் அளித்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-
முதலில் எலும்புப்புரை (ஆஸ்டியோபோரராசிஸ்) என்றால் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, எலும்புப்புரை என்பது எலும்புகளை பலவீனமாக்க கூடியதாகும். இதன் விளைவாக எலும்புகள் மெல்லியதாகி அவை உடைந்து போகின்றன.
உடலில் பழைய எலும்புகளுக்கு பதிலாக புதிய எலும்புகள் வளர தவறும்போது எலும்புப்புரை நோய் ஏற்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படலாம். இந்த நோய் உள்ளவர்கள், எலும்பு முறிவுகளால் மிக எளிதில் பாதிக்கப்படுவார்கள்.
யாருக்கெல்லாம் வர வாய்ப்பு
புகை பிடிப்பவர்கள், மது அருந்துதல் பழக்கம் உள்ளவர்கள், உடற்பயிற்சிகள் இல்லாத வாழ்க்கை முறை, தைராய்டு நோய் உள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்கள், நீண்ட நாள் படுத்த படுக்கையில் உள்ளவர்கள். இவை அனைத்தும் மாற்றக்கூடிய காரணிகளாக உள்ளன.
குறைந்த வயதில் மாதவிடாய் நின்று போகுதல், மரபியல் மற்றும் நாளமில்லா சுரப்பி பிரச்சினை உள்ளவர்கள், முடக்கு வாதம், சிறுநீரகம், கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள், வயது முதிர்ச்சி உள்ளிட்ட காரணங்களை மாற்ற இயலாத ஒன்றாகும்.
எலும்பு முறிவுகள்
தோள்பட்டை, முதுகு தண்டுவடம், இடுப்பு மற்றும் கை மணிக்கட்டு எலும்பு முறிவுகள் அதிகமாகும்.
50 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புப்புரை நோய்வர வாய்ப்பு உள்ளது. இதனை கண்டறிய எலும்பு தாது பொருள் அடர்த்தி கண்டறிதல், ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி யின் அளவு, டெக்ஸா ஸ்கேன், ரத்தத்தில் எலும்பு மார்க்கர் அளவு போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.
தீர்வு என்ன?
எலும்புப்புரை நோய்க்கான காரணங்களை கண்டறிந்து, அதனை குறைப்பது. மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சிகள் மேற்கொள்வது. மருத்துவரின் ஆலோசனைப்படி, மருந்து மாத்திரைகள் உட்கொள்வது இதற்கு உகந்த சிகிச்சை முறைகள் ஆகும்.
அவ்வப்போது பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம், ஒருவர் தமக்கு எலும்புப்புரை நோய் உள்ளதா? இல்லையா? என அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் எலும்பு முறிவுகள், மேலும் நடக்க முடியாமல் போவது, மருத்துவ செலவினங்கள் வாழ்க்கை முறை மாற்றம், போன்றவைகளில் இருந்து விடுபடலாம். பலர் தங்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்ட பின்னரே, இது போன்ற நோய் இருப்பதை தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது.
மேலும் பலரும் இது பெண்களுக்கு மட்டும் வரும் நோய் என்று நம்பி உள்ளனர். ஆனால் இது ஆண்களுக்கும் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மூலிகை டீயை பருகுவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
- முலிகை டீ பருகுவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.
காபி, டீக்கு மாற்றாக மூலிகைகள் கலந்த டீயை பருகுவதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். முலிகை டீ பருகுவதிலும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. டீ தயாரிப்பு முறையில் செய்யும் தவறுகள் உடல்நல பாதிப்புகள் ஏற்படவும் காரணமாகிவிடும்.
* மூலிகை டீயின் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்காக மூலிகை டீ பருகும்பட்சத்தில் சர்க்கரை சேர்ப்பது பொருத்தமாக இருக்காது. சர்க்கரைக்கு மாற்றாக தேன் சேர்த்து பருகலாம். உடல் பருமனை குறைப்பதற்கு முயற்சிப்பவர்கள் தேன் கலந்து பருகுவது நல்ல பலனை கொடுக்கும். சூடாக தயாரிக்கப்பட்ட முலிகை டீயில் ஒருபோதும் தேன் கலந்துவிடக்கூடாது. மிதமான சூடான இருக்கும்போதுதான் தேன் கலக்க வேண்டும்.
* மூலிகை டீயை அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ பருகக்கூடாது. மிதமான சூட்டில் பருகுவதே சிறந்தது. அதிலும் பித்தம் சார்ந்த பிரச்சினை உடையவர்கள் ஓரளவு மிதமான சூட்டில் அருந்துவதே நல்லது.
* பெரும்பாலானவர்கள் காபியோ, டீயோ அளவுக்கு அதிகமாக தயார் செய்துவிட்டால் சில மணி நேரம் கழித்து மீண்டும் அதனை சூடுபடுத்தி குடிப்பார்கள். அதுபோல் மூலிகை டீயை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி பருகக்கூடாது. அப்படி பருகினால் மூலிகையில் உள்ள சத்துக்கள் நீக்கிவிடும்.
* பித்தம் சம்பந்தமான பிரச்சினை உடையவர்கள் கோடை காலங்களில் மூலிகை டீ பருகுவதை தவிர்ப்பது நல்லது. மற்ற நேரங்களிலும் அடிக்கடி பருகுவதை தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இதய நோய்கள் வராமல் தடுப்பதில் நாவல் பழத்திற்கு முக்கிய இடமுண்டு.
- நாவல் பழத்தில் இனிப்பின் அளவு மிக குறைவாக இருக்கிறது.
உடலுக்கும், மனதிற்கும் நல்லதை செய்யும் நாவல் பழத்தின் சத்துக்களை அறிந்து கொள்வோம்.
நாவல் பழத்தில் புரோட்டீன், மெக்னீசியம், வைட்டமின்-சி, வைட்டமின்-பி, குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.
இதய நோய்கள் வராமல் தடுப்பதில் நாவல் பழத்திற்கு முக்கிய இடமுண்டு. ஞாபக சக்தியையும் அதிகரிக்கின்றது.
ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சினை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் நாவல் பழம் உதவுகிறது.
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சினைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* நாவல் பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர் களுக்கு நாவல் பழம் நல்ல தீர்வாக இருக்கும்.
* நாவல் பழத்தில் இனிப்பின் அளவு மிக குறைவாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களும் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் சாப்பிடலாம்.
* நாவல் பழ விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.
- இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும்
- நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நீரிழிவு நோயைத் தவிர்க்க உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், ஆரோக்கியமான உணவு தேவை. நார்ச்சத்து நிறைந்த உணவை நீங்கள் சேர்க்க வேண்டும். வெங்காயத்தையும் சேர்க்கலாம்.
இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும், இது கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு வெங்காயத்தில் கிட்டத்தட்ட 44 கலோரிகள் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, போலெட், பொட்டாசியம், சல்பர் போன்றவை அதிகமாக இருக்கிறது. வெங்காயத்தில் கிட்டத்தட்ட 17 வகையான பிளாவினாய்ட்ஸ், (ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ்) இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு 11 ஆகும். இது மிகக் குறைந்த அளவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், குறிப்பாக ஆன்தோசயனின் மற்றும் கொர்சிட்டின், செல்களின் அழற்சியை குறைத்து நீரிழிவு நோய், இதய நோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது. மேலும் கொர்சிட்டின், கணையம், கொழுப்பு, கல்லீரல் மற்றும் தசைகள் உள்ள செல்களுடன் ஒருங்கிணைந்து சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கிறது.
கோடையில் வெங்காயம் சாப்பிடுவதோ அல்லது அதன் சாற்றைக் குடிப்பதோ வெப்பத்தை ஏற்படுத்தாது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை நிலையானதாக வைத்திருக்கும்.
வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள அதிகமான வைட்டமின் சி நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக எஸ்சர்சியா, ஸ்டபைலோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் வராமல் ஓரளவு தடுக்கிறது. வெங்காயத்தில் உள்ள 'ஆனயானின் ஏ' என்ற வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வெங்காயத்தில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதாலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் பிளவினாய்ட்ஸ் அதிகமாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு மிகவும் குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் அதை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
- நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன்
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- அட்கின்ஸ் டயட் முறையை, மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்பற்றலாம்.
- இளசுகளிடம் தற்போது பிரபலமாக இருக்கும் உணவு முறை 'அட்கின்ஸ் டயட்'.
இளசுகளிடம் தற்போது பிரபலமாக இருக்கும் உணவு முறை 'அட்கின்ஸ் டயட்'. வழக்கமான உணவு முறையில், சிறிய மாறுதல்கள் மட்டும் செய்வது இந்த உணவு முறையின் சிறப்பு. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
அட்கின்ஸ் முறையின் அடிப்படை விதி, கார்போஹைட்ரேட் இல்லாத அல்லது குறைவாக உள்ள உணவு வகைகளை சாப்பிடுவதாகும். நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து தான், உடல் எடை அதிகரிப்புக்குக் காரணம். இதில், கொழுப்பைக் கரைப்பதிலேயே பலரும் கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால், மாவுச்சத்து அதிகரிப்பைப் பற்றி கவலை கொள்வதில்லை. அட்கின்ஸ் உணவு முறையில், கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்தால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று உறுதியாக கூறப்படுகிறது. கார்போஹைட்ரேட்டை குறைக்கும் போது, உடலின் வளர்ச்சிதை மாற்றம் தூண்டப்பட்டு, இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. இது, குளுக்கோசை எரித்து சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும். உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றும். இதனால் எடைக் குறைப்பு என்பது எளிதாகிறது.
அட்கின்ஸ் டயட்டின் 4 நிலைகள்:
ஆரம்ப நிலையில், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் 20 கிராம் மட்டுமே இருக்க வேண்டும். அவற்றையும் காய்கறி சாலட், பழங்கள் ஆகியவற்றின் மூலமே பெற வேண்டும். கீரைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். அடுத்த நிலையில், 30 கிராம் வரை கார்போஹைட்ரேட் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றில் அதிகம் உலர் பழங்கள், விதைகள், மாவுச்சத்து அதிகமில்லாத காய்கறிகள், குறைந்த அளவிலான பெர்ரி பழ வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
இதனால், 2-வது வாரத்திலேயே எடைக் குறைப்பைப் பார்க்க முடியும். மூன்றாவது நிலையில், பராமரித்தல் முறையில், எடைக் குறைப்பை மெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். இதில் முழு தானியங்கள், புரதம் உள்ள உணவுகள், நல்ல கொழுப்புள்ள உணவுகள், பால் பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். இதில், உடல் எடை குறைய குறைந்தபட்சம் 1 மாதம் வரை தேவைப்படும்.
நான்காவது நிலையில், சீரான எடையை வாழ்நாள் முழுவதும் பராமரிப்பது முக்கியமானதாகும். இதற்கு அனைத்து சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். எடைக் குறைப்பில் உணவுகள் மூலம் 70 சதவீத கலோரிகளை எரித்தால், மீதமுள்ள 30 சதவீத கலோரிகளை உடற்பயிற்சியால் மட்டுமே எரிக்க முடியும். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும்.
கிழங்கு வகைகள், சோளம், மாம்பழம், சப்போட்டா, அன்னாசிப்பழம், வாழைப்பழம், பப்பாளி வகைகள், பேக்கரி உணவுகள், இனிப்பு வகைகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்திய உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், வெள்ளை நிறப் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அட்கின்ஸ் டயட் முறையை, மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்னரே பின்பற்ற வேண்டும்.
- டி.வி. பார்த்தபடியே தூங்கும் பழக்கத்தை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
- சிலர் அறைக்குள் விளக்கு வெளிச்சம் இருந்தால்தான் தூங்குவார்கள்.
ஒவ்வொருவரும் விதவிதமான சூழல்களில் தூங்கும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். சிலர் அறைக்குள் விளக்கு வெளிச்சம் இருந்தால்தான் தூங்குவார்கள். சிலருக்கு சிறு வெளிச்சம் அறைக்குள் பரவினாலும் தூக்கம் தடைபட்டுவிடும். சிலர் குளிர் காலத்தில் கூட மின் விசிறி இல்லாமல் தூங்கமாட்டார்கள். சிலர் கோடையிலும் போர்வை போர்த்திக்கொண்டு தூங்கும் வழக்கத்தை கடைப்பிடிப்பார்கள்.
காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டே இசையை கேட்டபடி தூங்குபவர்களும் இருக்கிறார்கள். டி.வி. பார்த்தபடியே தூங்கும் பழக்கத்தை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். டி.வி. பார்க்கும்போது தூக்கம் கண்களை தழுவினாலும், டி.வி.யை 'ஆப்' செய்ய மாட்டார்கள். டி.வி. சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்த சத்தத்துக்கு நடுவே தூங்கிக்கொண்டிருப்பார்கள்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், படுக்கை அறையில் டி.வி.யை பார்த்துக்கொண்டே தூங்குவது உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கும், டி.வி.யில் இருந்து வெளிப்படும் நீல ஒளி உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கும் என்பது தெரியவந்துள்ளது. அப்படி என்னென்ன கேடுகளை விளைவிக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோமா?
* டி.வி.யில் இருந்து வெளிப்படும் ப்ளூ-ரே எனப்படும் நீல ஒளி விழித்திரையை சேதப்படுத்தும். எலிகளை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எலியின் கண்களின் விழித்திரை வழியாக ஊடுருவிய நீல ஒளியின் தாக்கத்தால் சில நாட்களுக்கு பிறகு அந்த பகுதி கருப்பு நிறமாக மாறியது தெரியவந்தது.
* நீல ஒளி அதிகம் வெளிப்படுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். இரவில் டி.வி., லேப்டாப் உபயோகிப்பவர்கள் அதனை 'ஆப்' செய்யாமல் தூங்கும்போது மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
* இரவில் டி.வி., செல்போன், லேப்டாப், டேப்லெட், கணினி போன்ற மின்னணு சாதனங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் அபாயம் அதிகம். டி.வி.யில் இருந்து வரும் நீல ஒளி, தூங்கிய பிறகும் மூளையை விழிப்பு நிலையிலேயே வைத்திருக்கும். இதன் காரணமாக, மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்காமல் சோர்வு உண்டாகும். அது மன அழுத்தத்திற்கு வித்திடும்.
* அதிக ஆற்றல் கொண்ட நீல ஒளி, டி.என்.ஏ.வை சேதப்படுத்தும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் சரும செல்கள், திசுக்கள் மற்றும் தோல் சேதமடையும் அபாயமும் இருக்கிறது.
- பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி இளகி வெளியாகும்.
- இதை பானமாக அருந்துவதால் இருதய நோய் குணமாகும்
பனங்கற்கண்டில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), இரும்பு (அயன்), சாம்பல், புரதச்சத்துக்கள், மல்டி-வைட்டமின்களான துத்தநாகம் (ஜின்க்) மற்றும் பொட்டாசியம் உள்ளது.
ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக கோளாறுகள் முற்றிலும் குணமாகும்.
சிறிதளவு பனங்கற்கண்டு நெய், நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டுவர மூளை வளர்ச்சி பெறுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்களை அதிகமாக உண்டு பண்ணுகிறது.
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்துவர மார்புச்சளி இளகி வெளியாகும்.
பனங்கற்கண்டு சுவைத்து உமிழ்நீரை சிறுக சிறுக விழுங்கி வர வாய் துர்நாற்றம், தொண்டைப்புண், வலி இவை நீங்கும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது. கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை தருகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது.
இதை பானமாக அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காயச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வர சிறுநீரக கோளாறுகள் முற்றிலும் குணமாகும். சிறிதளவு பனங்கற்கண்டு நெய், நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டுவர மூளை வளர்ச்சி பெறுவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சத்துக்களை அதிகமாக உண்டு பண்ணுகிறது.
சித்தா ஆயுர்வேதம் மற்றும் ஆங்கில மருந்து மாத்திரைகளை உண்டபின் வாயில் ஏற்படும் கசப்பை போக்குவதற்கு வெள்ளை சர்க்கரையைவிட பனங்கற்கண்டே மேலானது. கோடை வெயிலின் கொடுமைகளை தவிர்க்க இளநீருடன் பனங்கற்கண்டு ஏலக்காய் சேர்த்து பானமாக அருந்தி வருவது சிறப்பு.
-அருளானந்தர்
- வாழைப் பூவிற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது.
- வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியாததால், அதனை சமைப்பது இல்லை. எனவே, வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
* வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.
* ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்தமானது அதிக ஆக்ஸிஜனை உட்கிரகித்து தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.
* சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால், ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. மேலும், கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கிறது.
* வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும். வாய்ப்புண், வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றலும் வாழைப் பூவிற்கு உண்டு.
* மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள் மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
* வாழைப் பூவிற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும்.
* பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் குணமாகும்.
* வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.
* உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். இதில் கொழுப்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
- இளநீர் உலகின் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
- இளநீரின் வழுக்கையானது புரதச்சத்து நிறைந்ததாகும்.
கோடையின் சூட்டை தணிக்க இயற்கை வழங்கியுள்ள பானம் இளநீர். இது உடலுக்கு உடனடி ஆற்றல் தரும் இயற்கை குளுக்கோஸ். வெயிலுக்கு இதமான, தாகத்தை தணிக்கும் இளநீர் பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது முதல் புற்றுநோயை தடுப்பது வரை உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் தரும்.
இளநீர் உலகின் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கோடையில் குளிர் பானங்களுக்கு செலவிடுவதை இளநீருக்கு செலவிடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். சத்துக்கள் நிறைந்த இளநீர் குறைந்த கலோரியும், குறைந்த சர்க்கரையும் கொண்ட பானம். இதில் ஒரு கப்-ல் 45 கலோரி ஆற்றல், 11 மி.கி., சர்க்கரை சத்து மட்டுமே உள்ளது. கொழுப்பு இல்லை. சோடியம் (25 மி.கி.), பொட்டாசியம் (470 மி.கி.,) ஆகிய சத்துகள் அதிகளவிலும், கால்சியம் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் ஓரளவுக்கு இளநீரில் உள்ளதால், உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் சிறந்த பானமாக உள்ளது.
நீர்ச்சத்து இழப்பால் ஏற்படும் சோர்வை நீக்கி, உடனடியாக ஆற்றலை மீட்டுத்தரும் இளநீர் நோயாளிகளுக்கு ஏற்றது. நிறைய மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வோர், இளநீர் பருகினால் உடலில் மருந்து நன்கு கிரகிக்க உதவும். இளநீரின் வழுக்கையானது புரதச்சத்து நிறைந்ததாகும். இதில் நுண்சத்துகளும் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கர்ப்ப காலத்தில் நீரிழப்பு, தலைவலி, பிடிப்புகள், வீக்கம், சுருக்கம் உட்பட பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். அதை சமாளிக்க இளநீர் உதவும்.
கோடைக்கால நோய்களான வயிற்றுக்கடுப்பு, நீர்க் கடுப்பு, மஞ்சள் காமாலை, அம்மை நோய், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு.
அம்மை நோய், வயிற்றுப் போக்கு, காலரா போன்றவை ஏற்படும்போது குறையும் நீர்ச்சத்தை ஈடுகட்ட இளநீர் சிறந்தது. இளநீர் பருக சிறுநீர் நன்றாக வெளியேறும். வளரும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக்.
வியர்க்குரு, தீக்காயங்கள், அமிலத்தால் ஏற்பட்ட காயங்கள் போன்றவற்றின் மீது இளநீரை தடவினால் விரைவில் குணமடையும். இளநீரில் உள்ள லாரிக் அமிலம் படர்தாமரை, கிளமீடியா ஹெலிகோபேட்டர் உள்ளிட்ட நோய்க்கிருமிகளை அழிக்க உதவுகிறது. மேலும் இளநீர் குடல்புழுக்களை அழிக்கிறது.
இது உடலில் நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கும். இதனால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்கு ஏற்றது. உடற்பயிற்சி செய்தபின் உற்சாக பானங்களுக்கு பதில் இளநீர் அருந்தினால், சிறந்த பலன்கள் கிடைக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இளநீர் அருந்துவதால், அதில் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைகிறது.
- நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- 100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, பழங்கள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.
நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு நுங்கு ஒரு சிறந்த பழமாக திகழ்கிறது. நுங்கில் அதிக அளவு வைட்டமின் சி, ஈ, எ, பி1, பி2, பி7 இருக்கிறது. நுங்கில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு 35 என்ற மிகக் குறைந்த அளவு இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் நுங்கை பயமின்றி உண்ணலாம்.
100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது. இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம், நீர்ச்சத்து சமநிலைக்கு பெரிதும் உதவி புரிகிறது. நுங்கில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை உட்கொள்ளும்போது வயிறு கனத்துப் போவதால் பசி குறைந்து, மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடாமல் தடுக்கப்படுகிறது. முற்றிய நுங்கை சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படலாம். அதனால் முற்றிய நுங்கை சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கலாம். இதனை நீரிழிவு நோயாளிகளும் அச்சம் இன்றி அளவாக எடுத்து கொள்ளலாம்.
மேலும் நுங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், வேர்க்குரு போன்ற பிரச்சினைகளும் குறைய வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.






