என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • 100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் உடலில் இரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, பழங்கள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். பழங்கள் நார்ச்சத்து, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காத பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

    நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு நுங்கு ஒரு சிறந்த பழமாக திகழ்கிறது. நுங்கில் அதிக அளவு வைட்டமின் சி, ஈ, எ, பி1, பி2, பி7 இருக்கிறது. நுங்கில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக இருப்பதாலும், சர்க்கரை உயர்தல் குறியீடு 35 என்ற மிகக் குறைந்த அளவு இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் நுங்கை பயமின்றி உண்ணலாம்.

    100 கிராம் நுங்கில் 43 கலோரிகள் தான் இருக்கிறது. இதில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம், நீர்ச்சத்து சமநிலைக்கு பெரிதும் உதவி புரிகிறது. நுங்கில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதை உட்கொள்ளும்போது வயிறு கனத்துப் போவதால் பசி குறைந்து, மற்ற கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடாமல் தடுக்கப்படுகிறது. முற்றிய நுங்கை சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படலாம். அதனால் முற்றிய நுங்கை சாப்பிடுவதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கலாம். இதனை நீரிழிவு நோயாளிகளும் அச்சம் இன்றி அளவாக எடுத்து கொள்ளலாம்.

    மேலும் நுங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப்புண், வேர்க்குரு போன்ற பிரச்சினைகளும் குறைய வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    • சந்தையில் நீரிழிவு நோயாளிக்காகச் சிறப்புக் காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன.
    • நீரிழிவு நோயாளிகள் சிறப்பு காலணிகளை வாங்குவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    நீரிழிவு நோய் கால்களில் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுவது உண்டு. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உணர்வு இழப்புகள், குறிப்பாகப் பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களைக்கூட உணர முடியாமல் போகின்றன. இதன் காரணமாகப் பாதங்களில் புண்களும், தொற்றுகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியாமல் போகின்றன.

    இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும் போது பாதங்களுக்கு ஏற்றதாகவும், பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்தும் காக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு காலணிகளைத் தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவருடன் அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும். தற்போது சந்தையில் நீரிழிவு நோயாளிக்காகச் சிறப்புக் காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன.

    சிறப்பு காலணிகளை வாங்குவதற்கும் இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகையான காலணிகளைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பாதங்களைப் பாதுகாக்கும் வகையிலும், நமது உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன.

    நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    நீரழிவு தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நோயாக உள்ளது. எனவே விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அதன் வீரியத்தைக் குறைத்து நம் கால்களில் ஊனம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். கால்களில் எந்தப் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட மருத்துவரையோ அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் நிபுணரையோ சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

    • வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது.
    • வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    நமது அன்றாட உணவில் காய்கள் அதிகம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான பல சத்துகளை அளிக்க கூடிய காய் வகைகள் ஏராளம் உள்ளன. தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம். அந்த வகையில் நாம் "வெண்டைக்காய்" சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    வெண்டைக்காய் ஆங்கிலத்தில் 'லேடிஸ் ஃபிங்கர்ஸ்' என அழைக்கப்படுகிறது. வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. வெண்டைக்காய் அதிகமாக சாப்பிட்டால், அதன் காம்பை போலவே நமது புத்திக் கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

    கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. வெண்டைக்காயில் சிறந்த மாவுச்சத்து பொருட்கள் உள்ளன. இதில் உள்ள பெக்டின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதய துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இதில் உள்ளது.

    வெண்டைக்காயை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 % கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

    வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளியேறுதல் அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவம் சமைத்து சாப்பிட்டால் தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

    இதன் காய், இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல் புண்ணையும் ஆற்றும், பிஞ்சுகளை நறுக்கி போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

    வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும்.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர். எனவே வாரத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது வெண்டைக்காய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது.

    குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்த அளவில் பெற்றவர்கள் ஆகின்றனர். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும்.

    உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு சிலருக்கு பல காரணங்களால் உடலுக்கு தேவையான சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது. இந்த சத்துக்குறைபாடு வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் நீங்க பெறலாம்.

    உடலின் தேவைக்கு ஏற்ப கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம். வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயராது. எனவே உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் வெண்டைக்காயை உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவில் இருக்க விரும்புவார்கள் தாராளமாக சாப்பிடலாம்.

    • நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    • ஊறுகாயில் மிக அதிகமான அளவு சோடியம் இருக்கிறது.

    உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்பது அடுத்த அதிர்ச்சி செய்தி…

    இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள நீரிழிவு நோயின் அளவு அதிகமாக இருப்பது தான். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

    ஊறுகாயில் மிகக் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எப்போதாவது ஒருமுறை ஊறுகாய் சாப்பிடலாம். இதில் மிக அதிகமான அளவு சோடியம் இருக்கிறது. ஒரு ஊறுகாயில் கிட்டத்தட்ட 57 மில்லி கிராம் சோடியம் இருக்கிறது. இது ரத்த கொதிப்பை அதிகரிப்பது மட்டுமில்லாமல் பக்கவாதம், இருதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

    ஊறுகாயில் உள்ள அதிகமான அளவு சோடியம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு வேலைப்பளுவை அதிகப்படுத்துகிறது. மேலும் அதிகமான அளவு சோடியம் சில சமயம் வயிறு புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    அதிகமான அளவு சோடியம் எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேற செய்து எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படுத்தி எலும்பின் அடர்த்தியை இழக்கச் செய்து எலும்பு முறிவை ஏற்படுத்தலாம்.

    அதனால் கலோரிகள், கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும் அதிகமான அளவு சோடியம் இதில் இருப்பதால் ஊறுகாயை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எப்போதாவது ஒருமுறை சேர்த்துக் கொள்ளலாம்.

    உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம்.

    நீரிழிவு நோயாளிகள் ஒருசில உணவுகளை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உட்கார்ந்தோ, நின்றபடியோ தூங்கும் வழக்கத்தை விலங்குகள் பின்பற்றும்.
    • சிலர் பஸ், ரெயில் பயணங்களில் அமர்ந்த நிலையிலேயே தூங்குவதற்கு பழகி விடுவார்கள்.

    உட்கார்ந்த இடத்திலேயே தூங்கும் வழக்கத்தை சிலர் கடைப்பிடிப்பார்கள். எங்காவது அமர்வதற்கு சிறிது நேரம் கிடைத்துவிட்டால் போதும். சட்டென்று கண்களை மூடிய நிலையில் தூக்க நிலைக்கு சென்றுவிடுவார்கள். பஸ், ரெயில் பயணங்களின்போது அமர்ந்த நிலையிலேயே தூங்குவதற்கு பழகியும் விடுவார்கள்.

    அப்படி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று திரும்பிய பிறகு முதுகுவலி, கழுத்து வலி, தோள்பட்டையில் அசவுகரியம் போன்ற பிரச்சினைகளை அனுபவித்திருக்கிறீர்களா? அவை நீண்ட நேரம் உட்கார்ந்தபடி அசையாமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளாகக்கூட இருக்கலாம். உட்கார்ந்தோ, நின்றபடியோ தூங்கும் வழக்கத்தை விலங்குகள் பின்பற்றும். ஆனால் மனித உடல் அத்தகைய நடைமுறைக்கு பழக்கப்படவில்லை.

    உட்கார்ந்த நிலையில் தூங்கும்போது, உடல் செயலற்ற நிலையில் இருப்பதால், மூட்டுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். அவை விறைப்பு தன்மையும் அடையலாம். இது 'வெயின் திரோம்போசிஸ்' எனப்படும் ரத்த உறைவு பிரச்சினைக்கு வழிவகுத்து விடும். அதாவது உடலில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகளில், பொதுவாக கால்களில் ரத்தம் உறைய தொடங்கி விடும். அதன் காரணமாக கால்களில் வலி அல்லது வீக்கம் ஏற்படும்.

    நீண்ட நேரம் அசைவில்லாமல் இருப்பதும், ஒரே நிலையில் இருப்பதும் முதுகு வலி மற்றும் உடல் வலிகளை உண்டாக்கும், உடல் தோரணையும் பாதிப்புக்குள்ளாகும். அசைவில்லாத தன்மையில் இருப்பது மூட்டுகள் விறைப்பு அடைவதற்கு வழிவகுக்கும். வலி அதிகரிக்கும். பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.

    ரத்த உறைவின் ஒரு அங்கமாக நுரையீரல் அல்லது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் சிக்கல் நேர்ந்தால் பெரும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். ரத்த உறைவு காரணமாக தினமும் 20-க்கும் மேற்பட்டவர்கள் இறப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    கால் தசைகள், கணுக்கால் அல்லது பாதத்தில் வீக்கம் மற்றும் காயம் ஏற்படுதல், சருமம் சிவத்தல், திடீரென்று கணுக்கால் அல்லது கால்களில் வலி ஏற்படுதல் போன்றவை 'வெயின் திரோம்போசிஸ்' எனப்படும் ரத்தம் உறைதல் பிரச்சினைக்கான அறிகுறிகளாகும்.

    உட்கார்ந்த நிலையில் தூங்க விரும்பினால், சாய்வான நிலையில் இருக்கும் இடத்தை நாடுவது நல்லது. இருப்பினும் கர்ப்பிணி பெண்களுக்கு உட்கார்ந்த நிலையில் தூங்குவது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் படுத்து உறங்குவது கடினமானது. மேலும் மூச்சுத்திணறல், தூக்கத்தின்போது சுவாசம் தடைபடும் பிரச்சினையை எதிர்கொள்பவர்களும் உட்கார்ந்த நிலையில் தூங்கலாம்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காரமான உணவை விரும்புபவர்கள் மிளகாயின் சுவையை ரசிப்பார்கள்.
    • பச்சை மிளகாய் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது.

    உணவுக்கு காரமும், சுவையும் சேர்ப்பதில் மிளகாய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. காரமான உணவை விரும்புபவர்கள் மிளகாயின் சுவையை ரசிப்பார்கள். பச்சை மற்றும் சிவப்பு நிற மிளகாய்கள் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றில் வைட்டமின் ஏ, பி 6, சி, இரும்பு, தாமிரம், பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி பீட்டா கரோட்டின், கிரிப்டோக்சாண்டின், லுடீன்சாந்தின் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பொருட்களும் உள்ளடங்கி இருக்கின்றன. பச்சை மிளகாய் உணவில் காரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டாலும் அதனை சாப்பிடுவதால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம் என்றும் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. பச்சை, சிவப்பு இவற்றில் எந்த வகை மிளகாய் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

    * பச்சை மிளகாய் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதில் நார்ச்சத்து இருப்பதால் செரிமான செயல்முறை எளிதாக நடைபெற உதவும். மேலும் குடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

    * பச்சை மிளகாய் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஏனெனில் இதில் கலோரிகள் இல்லை. அதேநேரத்தில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் துணை புரியும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ, கண்களுக்கும், சருமத்திற்கும் நன்மை தரும்.

    * பச்சை மிளகாயில் இருக்கும் பீட்டா கரோட்டின் இதயம் நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் பச்சை மிளகாய் சிறந்த ஆன்டி ஆக்சிடெண்ட் கொண்டது.

    *பச்சை மிளகாயில் இருக்கும் வைட்டமின் சி சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக விளங்குகிறது. புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. ஆன்டி ஆக்சிடெண்ட் பண்புகளை கொண்டிருப்பதால் நுரையீரல் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவு. பச்சை மிளகாய் நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு கவசமாக செயல்படுவதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    * சமையலில் சிவப்பு மிளகாய் தூள் சேர்ப்பது உணவின் சுவையையும், நிறத்தையும் மேம்படுத்தும். பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாயின் ஊட்டச்சத்துக்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. சிவப்பு மிளகாயை உலர்த்தும்போது, அதில் உள்ள நீரின் அளவு குறைந்துவிடுகிறது.

    *சிவப்பு மிளகாயில் இருக்கும் கேப்சைசின் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும். மனநிலையை மேம்படுத்தும் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உருவாகவும் தூண்டும். மேலும் சிவப்பு மிளகாயில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது மற்ற வைட்டமின்கள் உடலில் போதுமான அளவு உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும், நோய்களுக்கு எதிராக போராடவும் துணைபுரியும்.

    * சிவப்பு மிளகாயில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சமீபத்திய ஆய்வுகளின்படி, ரத்த சர்க்கரையை குறைக்க சிவப்பு மிளகாய் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

    * இதய நோய்களின் அபாயத்தை குறைப்பதிலும் சிவப்பு மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் ரத்த உறைவை தடுக்கவும் செய்யும்.

    * சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் இரண்டுமே ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. அவற்றை முறையாக உட்கொள்ள வேண்டும். உதாரணமாக, பச்சை மிளகாய் எப்போதும் பச்சையாக பயன்படுத்தப்படுகிறது. பச்சையாகவும் சாப்பிடலாம். ஆனால் உலர்ந்த சிவப்பு மிளகாய் பெரும்பாலும் மசாலா பொருட்களுடன் கலக்கப்படுகிறது. சிவப்பு மிளகாயை தூளாக பயன்படுத்துவதை விட நேரடியாக உலர்ந்த மிளகாயாக பயன்படுத்துவது நல்லது.

    • 'குறட்டை' தீவிரமான உடல்நலக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.
    • குறட்டை பிரச்சினையை தீர்ப்பதற்கு இயற்கை வழிகள் சிலவற்றைக் காண்போம்.

    தூங்கும்போது, மூச்சுக்காற்று தொண்டைப் பகுதியில் உள்ள மெல்லிய தளர்வான திசுக்களின் வழியாகச் செல்வதால் ஏற்படும் அதிர்வு ஒலியையே 'குறட்டை' என்கிறோம். குறட்டை வருவது இயல்பானதுதான் என்றாலும், பலருக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது. சில நேரங்களில், 'குறட்டை' தீவிரமான உடல்நலக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதிகப்படியான உடல் எடையைக் குறைத்தல், மதுப்பழக்கத்தை தவிர்த்தல், பக்கவாட்டு நிலையில் படுத்து உறங்குதல், சற்று உயரமான தலையணையைப் பயன்படுத்துதல் போன்ற ஒரு சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாக குறட்டை விடுவதை நிறுத்த முடியும். இதுதவிர குறட்டை பிரச்சினையை தீர்ப்பதற்கு இயற்கையான வழிகள் சிலவற்றைக் காண்போம்.

    நீராவி பிடித்தல்: குறட்டைக்கான காரணங்களில் ஒன்று மூக்கில் ஏற்படும் அடைப்பு. இதனால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும். இதற்கு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் இருந்து வரும் நீராவியை 10 நிமிடங்களுக்கு மூக்கு வழியாக உள்ளிழுக்க வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன்பு இவ்வாறு செய்யலாம். இதனால், மூக்கில் உண்டாகும் அடைப்பு நீங்கி, குறட்டை விடுவது நிற்கும்.

    புதினா மற்றும் வெந்தயம்: செரிமானப் பிரச்சினைகளாலும் குறட்டை ஏற்படலாம். இதற்கு, புதினா மற்றும் வெந்தயம் சிறந்த தீர்வாகும். வெந்தயம் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, அதை தூங்கச் செல்வதற்கு முன்பு சாப்பிடலாம். அதேபோல், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடி மற்றும் சிறிதளவு புதினா இலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இதனால், செரிமான பிரச்சினை நீங்குவதுடன், இரவில் நிம்மதியான உறக்கமும் கிடைக்கும்.

    ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன்: அரை டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் நன்றாகக் கலந்து, படுக்கைக்குச் செல்லும் முன்பு சாப்பிடலாம். இதுதவிர ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தூங்கச் செல்வதற்கு முன்னர் குடிக்கலாம். இது தொண்டைக்கு இதமாக இருப்பதுடன், குறட்டையையும் தடுக்கும்.

    பூண்டு: பூண்டில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இது சுவாச மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, நாசி பாதையில் சளி படிவதைத் தடுத்து குறட்டையைக் குறைக்கும். 2 அல்லது 3 பூண்டு பற்களை எடுத்து மென்று சாப்பிடவும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் குறட்டை நிற்கும்.

    • நீரிழிவு நோயை வாழ்நாள் முழுவதும் கட்டுக்குள் வைக்க வேண்டியது முக்கியம்.
    • செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதற்கு இன்சுலின் ஒரு சாவியாக கருதப்படுகிறது.

    நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை வியாதி உலகின் பெரும்பாலான மக்களுக்கு மிகப் பெரிய கவலை தரும் விஷயமாக உள்ளது. உடல் செயல்பாடுகள், உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இளைஞர்களிடையே முக்கியமாக 40 வயதிற்கும் குறைவான நபர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

    நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவ்வளவு எளிதல்ல. சமநிலையான டயட் மற்றும் வாழ்க்கைமுறை, அதனுடன் இன்சுலின் போன்ற தேவையான மருந்துகள் போன்றவை முறையாக கையாளப்பட்டாலும் நீரிழிவு நோயை எப்போதும் சீராக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

    நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் தினசரி நிறைய வாழ்க்கைமுறைகளை கடைபிடிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். வழக்கமான கண்காணிப்பு முதல் ஸ்கிரீனிங், மருத்துவரை அணுகி பரிசோதித்தல் போன்றவை மிகவும் அவசியம். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை காரணமாக எழும் பிற பிரச்னைகளால் அதிக மன அழுத்தம், சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவற்றையும் எதிர்த்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    நீரிழிவு நோயை ஏற்றுக்கொள்வதும், வாழ்நாள் முழுவதும் அதனை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதும் மிகவும் முக்கியம். இதனால் விரக்தி ஏற்பட்டாலும் உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளவேண்டும்.

    பொதுவாக செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதற்கு இன்சுலின் ஒரு சாவியாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயில் ஏற்படும் இன்சுலின் குறைபாட்டால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று செயல்பட முடியாததால் செல்களின் ஆற்றல் குறைந்து உடலில் சோர்வு ஏற்படுகிறது.

    உடல் சோர்வு ஏற்பட வேறு சில காரணங்களாக கருதப்படுவது:

    1. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருத்தல் அல்லது மிக குறைவாக இருத்தல்.

    2. நீரிழிவு நோயின் பக்க விளைவுகளான சிறுநீரக பாதிப்பு, இருதய நோய், பக்கவாதம், வைட்டமின் பாதிப்பு போன்ற பிரச்சினைகள்.

    3. தூக்கமின்மை மற்றும் உடல் பருமன்.

    4. உட்கொள்ளும் மாத்திரைகளின் விளைவுகள்.

    5. அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

    6. நெடுங்காலமாக இருக்கும் நோய்த்தொற்று.

    7. வேறு சில தொடர்புடைய நோய்கள்.

    8. வைட்டமின் குறைபாடு.

    9. மனஅழுத்தம்.

    10. ரத்தசோகை.

    நீரிழிவு நோயானது வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தின்மீது கவனம் செலுத்துவது அவசியம். எனவே தொடர் பரிசோதனை மற்றும் முறையாக மருந்துகள் உட்கொள்ளுதல் அவசியம்.

    • கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போனை அதிக நேரம் பார்வையிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
    • கண் பார்வையை மேம்படுத்துவதற்கும் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

    எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்ததாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், டேப்லெட், டி.வி. போன்ற சாதனங்களுடன் பல மணி நேரங்களை செலவிட வேண்டியுள்ளது. அப்படி அதிக நேரம் பார்வையிடுவது கண் ஆரோக்கியத்தை பாதிக்கும். தலைவலி, இரட்டை பார்வை, மங்கலான பார்வை, கண் எரிச்சல், கண் உலர் வடைதல், கண் சோர்வு போன்ற பாதிப்புகள் உண்டாகும். கண்களின் நலன் பேணுவதற்கும், கண் பார்வையை மேம்படுத்துவதற்கும் சாப்பிட வேண்டிய உணவுகளின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

    * நட்ஸ் வகைகளில் பாதாம் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது. பொதுவாக வைட்டமின் ஈ உள்ளடக்கிய உணவு பொருட்களை உட்கொள்வது கண்புரை மற்றும் மாகுலர் சிதைவைத் தடுக்க உதவும். பாதாமை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். சாலடுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். நட்ஸ் வகைகளுடன் கலந்தும் உட்கொள்ளலாம்.

    * கேரட், கண் பார்வை திறனை அதிகரிக்கச்செய்யும் சக்தி கொண்டது. அதில் வைட்டமின் ஏ உடன் பீட்டா கரோட்டின்களும் அதிகம் நிரம்பப்பெற்றுள்ளன. வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இவை இரண்டுமே கண் தொடர்பான ஆபத்துக்களை தவிர்க்க உதவும். கேரட்டை மாலை நேர சிற்றுண்டியாக உட்கொள்ளலாம். சாலட்டுகள், சூப்களாக தயாரித்தும் பருகலாம். உணவிலும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

    * பச்சை இலை காய்கறிகளில் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் உள்ளன. இவை இரண்டுமே ஆன்டி ஆக்சிடெண்டுகள் கொண்டவை. தெளிவான பார்வை திறனுக்கு வித்திடுபவை. மாகுலர் சிதைவை தடுக்கக்கூடியவை. பெர்ரி பழங்கள், குடை மிளகாய், சர்க்கரைவள்ளி கிழங்கு, அவகொடா, கீரை, ப்ரோக்கோலி, பட்டாணி போன்வைகளில் இந்த ஆன்டி ஆக்சிடெண்டுகள் ஏராளமாக உள்ளன. மேலும் வைட்டமின்கள் ஏ, சி, கே, போலேட், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

    * ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி மற்றும் திராட்சைப்பழங்கள் போன்றவை கண்களுக்கு நன்மை பயக்கும் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களுள் முக்கியமானவை. இந்த சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. அவை ப்ரீ ரேடிக்கல் களால் ஏற்படும் சேதத்தில் இருந்து உடலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், செல்கள் சேதம் அடையாமல் தடுப்பதற்கும், புதிய திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.

    * கண் பார்வையை மேம்படுத்த உணவில் சேர்க்க வேண்டிய சில சத்தான முழு தானியங்கள்: ஓட்ஸ், பார்லி. மேலும் டுனா, சால்மன், கானாங்கெளுத்தி, நெத்திலி, மத்தி மற்றும் ட்ரவுட் போன்ற மீன் வகைகளில் லீன் புரதங்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை கண் களுக்கு நலம் சேர்ப்பவை.

    * முட்டையும் கண் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாகும். முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, லுடீன், ஜியா சாந்தின், துத்தநாகம் ஆகியவை காணப்படுகின்றன. அவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த வல்லவை. கண்ணில் இருக்கும் கார்னியா வைட்டமின் ஏ மூலம் பாதுகாக்கப்படுகிறது. கண்ணின் வெளிப்பகுதியில் அமைந்திருக்கும் கார்னியா, கண்புரை, மாகுலர் சிதைவு உள்ளிட்ட கண் நோய் அபாயத்தை குறைக்கின்றன. காலை, மதியம் மற்றும் இரவு உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.

    • தினமும் ஏதாவது ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
    • எந்த கீரையில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

    கீரை வகைகள் மனிதனுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றன. இதில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

    புதினா, கொத்தமல்லி... புதினா கீரையில் போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்சியம் 200 மி.கி., இரும்புச் சத்து 15.6 மி.கி., வைட்டமின்கள் ஏ,பி,சி சிறிதளவு உள்ளன. இது ரத்த சோகையைப் போக்க வல்லது.

    கொத்தமல்லி கீரையில் கால்சியம் 184 மி.கி., இரும்புச் சத்து 1042 மி.கி., வைட்டமின் ஏ 8,918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி, உள்ளன. இது பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்கும்.

    * முளைக்கீரையில் இரும்புச் சத்து 22.9 மி.கி., கால்சியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும் திறனுள்ளது.

    * அகத்திக் கீரையில் கால்சியம் 1,130 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 3.9 மி.கி., வைட்டமின் ஏ 5,400 மைக்ரோ கிராம் உள்ளன. வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன.

    * பொன்னாங்கண்ணி கீரையில் இரும்புச் சத்து 1.63 மி.கி, கால்சியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன.

    * பசலைக் கீரையில் வைட்டமின் ஏ 5,580 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து 1.14 மி.கி., பொட்டாசியம் 306 மி.கி போன்றவை உள்ளன.

    * வெந்தயக் கீரையில் கால்சியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2,340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93 மி.கி. உள்ளன.

    * புளிச்ச கீரையில் இரும்புச் சத்து 2.28 மி.கி, வைட்டமின் ஏ 2,898 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன.

    * முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ 6,780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்சியம் 440 மி.கி., பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி போன்றவை உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். இது பார்வைக் கோளாறுகளை தடுக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    நீரிழிவு நோயை போல இதய நோயால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' எனப்படும் கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் ஏற்படும் மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் கை, கழுத்து, தாடை பகுதியில் வலி, மார்பில் குத்துவது போன்ற வலி, தலைச்சுற்றல், பதற்றம், வியர்வை போன்ற மாரடைப்புகளுக்கான அறிகுறிகள் எதுவும் வெளிப்படாது.

    இரைப்பை பகுதியில் அசவுகரியம் ஏற்படுவதுபோல் சாதாரணமாக தெரியும். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஒரு சில அறிகுறிகள் வெளிப்பட்டாலும் சாப்பிட்ட உணவு ஏதோ ஒத்துக்கொள்ளவில்லை என்று வாயு தொல்லை, அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சினையாகத்தான் பலரும் கருதுகிறார்கள்.

    பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகள் இத்தகைய அறிகுறிகளை எளிதில் உணரமாட்டார்கள். ஏனெனில் அவர்களின் நரம்புகள் வலி பற்றிய அறிகுறிகளை சட்டென்று வெளிப்படுத்தாது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தாமலேயே சில சமயங்களில் மாரடைப்பு ஏற்படக்கூடும்.

    'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்படுவது எப்படி தெரியும்?

    வயிற்றின் மேல் பகுதியிலோ அல்லது மார்பின் மையப் பகுதியிலோ இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண அறிகுறிகளோ, வலியோ 20 முதல் 25 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம். ஈ.சி.ஜி. பரிசோதனை எடுத்துக்கொள்வதும் முக்கியமானது. அதன் மூலமே நோய் பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம். டிரோபோனின் டி பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.

    இது இரத்தத்தில் உள்ள டிரோபோனின் ஐபுரோடீன்களின் தன்மையை அளவிடும். இந்த புரதங்கள் இதய தசை சேதமடைவதை சுட்டிக்காட்டும். இதயம் எவ்வளவு சேதமடைகிறதோ, அந்த அளவுக்கு ரத்தத்தில் ட்ரோபோனின் டி அளவு அதிகமாக இருக்கும்.

    இதுபோன்ற அசவுகரியம் தோன்றினாலோ, சிறிது நேரத்திற்கு பிறகு மறைந்தாலோ இவை இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

    35 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் எக்கோ கார்டியோகிராம் ஆகியவை அதில் உள்ளடங்கி இருக்க வேண்டும். நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு கொண்டவர்கள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம் கொண்டவர்கள், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்கள், ஏற்கனவே இதய நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. முதல் முறை 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டது தெரியாமலேயே கடந்து சென்றுவிட்டால், இரண்டாவது முறை ஏற்படும்போது கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஏப்ரல் மாதம் தொடங்கி மே, ஜூன், ஜூலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
    • இயற்கை வழியில் நீங்கள் பாதுகாப்பை தேட முடியும்.

    வெயில் மண்டையை பிளந்து வருகிறது. அனல் காற்று பாடாய் படுத்துகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கி மே, ஜூன், ஜூலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், கோடை வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

    1.தர்பூசணி : இது கோடை காலத்தில் உடலை 'ஹைட்ரேட்' (நீரேற்றம்) செய்யும் ஒரு சூப்பர் ஹைட்ரேஷன் உணவாகும். தர்பூசணிகள் அதிகப்படியான நீரை கொண்டுள்ளன. மேலும் அவை உங்களை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன. மேலும் தர்பூசணி சூரிய வெப்பத்தால் தோல் சேதமடையாமல் பாதுக்காக்கிறது.

    2.தக்காளி : கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க பலர் எப்போதும் சன்ஸ்கிரீன் போன்ற செயற்கை பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கை வழியில் அதற்கு நீங்கள் பாதுகாப்பை தேட முடியும். ஆம் தக்காளி மற்றும் பிற சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்கள் தோலுக்கு கூடுதல் பாதுகாப்பை நீங்கள் பெற முடியும். ஏனெனில் இது லைகோபினை கொண்டுள்ளது. தக்காளியை சிவப்பு நிறமாக்கும் கரோட்டினாய்டு மற்றும் அதிக லைக்கோபீனை உட்கொள்வதன் மூலம் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க முடியும்.

    3. முலாம் பழம் : கோடை கால ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்துக்கள், நீர் மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக உள்ளது. எனவே ஆரோக்கியமான சுவையான கோடை கால உணவாக முலாம் பழம் விளங்குகிறது. குறிப்பாக முலாம்பழம் உடலில் நீரிழப்பை குறைக்கிறது.

    4.பெர்ரி : ஸ்ட்ராபெர்ரி, ப்ளு பெர்ரி, ப்ளாக் பெர்ரி என அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரி இரண்டு அதிக பிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது. ப்ளாக் பெர்ரி மற்றும் ராஸ் பெர்ரி இரண்டிலும் அதிகமான நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

    5. சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்கள் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் பருவகால பழங்கள் அல்ல என்றாலும் ஆரஞ்சு போன்ற கனிகளில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது கோடையில் உங்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நமக்கு வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்படும்போது நமது உடல் பொட்டாசியத்தை இழக்கிறது. இதனால் நமது தசைப்பிடிப்புகளில் ஆபத்து ஏற்படலாம். எனவே உடலை நீரேற்றமாக்கவும், புத்துணர்ச்சி ஆக்கவும் இது உதவுகிறது. அதே போல குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். அல்லது சோடா குடிப்பதற்கு பதிலாக எலுமிச்சை சாற்றை அருந்தலாம். கோடை காலங்களில் மீன் போன்ற இறைச்சி வறுவல்களில் எலுமிச்சையை பிழிந்து விட்டு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கூடுதல் வைட்டமின்-சி கிடைக்கிறது.

    6. இனிப்பு சோளம் : கோடை காலத்தில் வரும் பருவ கால காய்கறிகளில் இனிப்பு சோளமும் ஒன்றாகும். நீங்கள் அதை வேகவைத்தாலும் க்ரில் செய்தாலும் அது இனிப்பு சுவையிலேயே இருக்கும். மேலும் இது அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கண்புரை மற்றும் வயது சார்ந்து ஏற்படும் தசை சிதைவை இது தடுக்கிறது. மேலும் இது உங்கள் கண்களை வெயில் பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    7. அவகாடோ : உங்கள் ஆரோக்கிய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இருக்க கூடிய ஒரு உணவாக அவகாடோ உள்ளது. ஏனெனில் அவகாடோ மோனோசாச்சுரேட் கொழுப்பு, போலெட் மற்றும் பைபர் ஆகியவற்றை கொண்ட சுவையான மூலமாக உள்ளது. கூடுதலாக அவை இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளன.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×