என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகள் வீட்டில் தனி அறையில் உட்கார்ந்து, தனியாக டிவி பார்த்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று முடிவு வெளியிட்டுள்ளது.
    தற்போதைய நாகரிக வளர்ச்சி காலத்தில், பிரைவசி என்ற பெயரில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தனி அறையையும் அதில் கார்ட்டூன் சேனல்கள் பார்ப்பதற்கான வசதியையும் செய்து கொடுக்கிறார்கள்.

    குழந்தைகளும் அதை முதலில் ஒருவித தயக்கத்தோடு ஏற்றுக்கொண்டு, பின் அதுதான் நம்முடைய உலகம் என்று முழுமனதாக ஏற்று, அதிலேயே மூழ்கிப் போய்விடுகிறார்கள்.

    அடுத்து பெற்றோர்கள் வேலைக்குப் போய்விட்டு வரும்வரை, தங்களுடைய அறைக்கதவை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

    அப்படி குழந்தையாக இருக்கும்போது, தனியாக அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பிப்பவர்கள் வளர்ந்த பிறகு, அதுவே மிகப்பெரிய அளவில் உடல்நலக் கோளாறுகள் உண்டாகக் காரணமாக அமைகின்றன.

    குறிப்பாக, அளவுக்கதிகமாக உடல் எடை கூடிவிடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரே வயதில் உள்ள டிவி பார்த்த குழந்தைகளுக்கும் டிவி பார்க்காத குழந்தைகளுக்குமான உடல் எடை சரிபார்க்கப்பட்ட போது, அதில் மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.

    தனி அறையில் தனிமையில் டிவி பார்க்கும் குழந்தைகளின் உடல் எடை மற்ற குழந்தைகளின் எடையை விட கூடுதலாக இருப்பது தெரிய வந்தது.

    அதனால் குழந்தைகளை மனிதர்களோடு அதிக நேரம் பழக விட வேண்டும். அவர்களுடைய வேலையை அவர்களாகவே செய்துகொள்ளப் பழக்க வேண்டும். 
    குழந்தைகள் தனியறையில் படுப்பது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகள் தனியறையில் தூங்குவதை `பெட்ரூம் கல்ச்சர்’ என்று அவர்கள் அழைக்கிறார்கள். மேலைநாடுகளில் மட்டுமல்ல, நம் ஊரிலும்கூட இப்போது இந்தக் கலாசாரம் வேகமாகப் பரவிவருகிறது. இங்கேயும்கூட வயது வந்த பிள்ளைகளில் பலர் அவர்களுக்கான தனி அறையில்தான் தூங்குகிறார்கள்.
    இப்படி குழந்தைகள் தனியறையில் தூங்குகின்ற இந்த பெட்ரூம் கல்ச்சர் நம் ஊரிலிருக்கும் குழந்தைகளுக்கு சரிவருமா… குழந்தைகள் தனியறையில் படுப்பது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    குழந்தைகள் தனியறையில் இருப்பது கெட்டது என்றோ, பெற்றோருடன் சேர்ந்திருப்பது நல்லது என்றோ எதுவும் கிடையாது. ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்து இதை இரண்டுவிதங்களாகப் பார்க்கலாம். குழந்தை அதிகச் சிரமமில்லாமல் வளர வேண்டும் என்பதற்காகத் தனியறை ஒதுக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். குடும்பக் கஷ்டம் தெரிந்து வளர வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை தங்களுடன் ஒரே அறையில் படுக்கவைத்துக்கொள்ளும் பெற்றோரும் இருக்கிறார்கள். இது அந்தந்தக் குடும்பத்தின் சூழ்நிலை சார்ந்த அணுகுமுறை.

    குழந்தைகள் தனியாகப் படுத்தால் நல்லதல்ல, தனியறையில் இருப்பதால் அவர்கள் தனித்துவிடப்படுவார்கள் என்கிற கூற்றும் உண்மையல்ல. ஒரே அறையில் எல்லோரும் ஒன்றாகப் படுத்துக்கொண்டு குழந்தைகளைத் தனித்துவிடுவதுதான் பிரச்னை. குழந்தைகளுடன் பெற்றோர் நிறைய பேச வேண்டும், அன்பு செலுத்த வேண்டும். அவர்களுடன் நல்ல தொடர்பிலிருக்க வேண்டும். 



    தொலைதூரத்தில் படிக்கச் செல்லும் சில குழந்தைகள் பெற்றோர் நினைவுடனேயே இருப்பார்கள். பெற்றோருடன் வசிக்கும் சில குழந்தைகள் அவர்களை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே, தூரம் ஒரு பொருட்டில்லை. தனி அறை ஒரு விஷயமே அல்ல. எவ்வளவு தள்ளி இருந்தாலும் பெற்றோர்-பிள்ளை உறவு அன்பானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும், ஒளிவு மறைவு இல்லாததாகவும்,  `கம்போர்ட் ஸோன்’ (Comfort Zone) ஆகவும் இருக்க வேண்டும்.

    இப்படியாக அவர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தால், தன் பெற்றோர் சார்ந்த நல்ல நினைவுகள் குழந்தைகளை நல்லமுறையில் வழிநடத்தும்.
    பதின்பருவக் குழந்தைகளுக்கு காலையில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வு குறித்த பயம், குழப்பம், சந்தேகம், நிம்மதியற்ற உறக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிலும் தனியாகத் தூங்கும்போது இந்த உணர்வுகள் அவர்களை அதிகமாக அலைக்கழிக்கும் சூழல்கூட ஏற்படலாம். அப்படியொரு சூழல் ஏற்பட்டால், அதைக் கண்டு பெற்றோர் பதற்றப்படத் தேவையில்லை. குழந்தை தன்  பிரச்னை குறித்து உங்களிடம் பேசுமளவுக்கு அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும்.

    ஒரு குழந்தைக்குப் பிரச்னை இருந்தால், அந்தக் குழந்தை ஒரே அறையில் பெற்றோருடன் படுத்திருந்தால்கூட பயம், தனிமை உணர்வுடன்தான் இருக்கும் என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    சிறந்ததொரு வழிகாட்டியாக நம்மால் இருக்க முடியும். பதின்பருவ வயதில் குழந்தைகள் சில நேரம் சறுக்கத்தான் செய்வார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முயற்சி செய்யுங்கள். மற்றபடி தனியறைக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சிக்கலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
    குழந்தைகளை பாதிக்கும் பல பிரச்சனைகளில் கழுத்து தசையுடன் தொடர்புடைய சுளுக்கு வாதமும் ஒன்று. பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம்.
    குழந்தைகளை பாதிக்கும் பல பிரச்சனைகளில் கழுத்து தசையுடன் தொடர்புடைய சுளுக்கு வாதமும் ஒன்று. பிறக்கும்போதே குழந்தைகளை பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு கன்ஜீனிட்டல் மஸ்குலர் டார்ட்டிகாலிஸ் (Congenital muscular torticollis) என்று பெயர். பிறந்த பிறகும் சில குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம். சுருக்கமாக Torticollis எனப்படுகிற பிரச்சனை கழுத்துத் தசைகளுடன் தொடர்புடையது.

    காரணம் என்ன?

    கழுத்தின் இரண்டு பக்கங்களிலும் காதுகளின் பின்னாலிருந்து கழுத்து எலும்பு வரை நீளமான தசை இருக்கும். இதற்கு எஸ்.சி.எம் அல்லது Sternocleidomastoid என்று பெயர். பிறந்த குழந்தைக்கு இந்த பிரச்னை வந்தால் ஒரு பக்க தசை சிறியதாகிவிடும்.

    குழந்தை கருவில் இருந்தபோது குறுக்கி கொண்டிருந்தாலோ அல்லது தாயின் வயிற்றுக்குள் அசாதாரண நிலையில் இருந்தாலோ இந்த பிரச்னை வரலாம். குழந்தையை ஆயுதம் போட்டு வெளியில் எடுத்திருந்தாலும் இந்த பிரச்னை வரலாம்.

    அறிகுறிகள் இவைதான்பிறந்த 6 முதல் 8 வாரங்களுக்கு பெற்றோரால் குழந்தையிடம் எந்த அறிகுறியையும் கண்டுபிடிக்க முடியாது. குழந்தைக்கு தலை மற்றும் கழுத்தில் ஓரளவு பேலன்ஸ் வந்த பிறகே கழுத்து சுளுக்கு வாதத்துக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

    தாடையானது தோள்பட்டையை தொட்டபடி குழந்தையின் கழுத்து ஒரு பக்கமாக சாயும். 75 சதவிகித குழந்தைகளுக்கு வலது பக்கத்திலேயே பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிகிறது. குழந்தையால் கழுத்தை இடவலமாகவோ, மேலும் கீழுமாகவோ சுலபமாக திருப்ப முடியாது.



    குழந்தையின் கழுத்துப் பகுதியில் சின்னதாக கட்டி போன்ற ஒன்றை உணரலாம். இது பயப்பட வேண்டியதல்ல. காலப்போக்கில் தானாக மறைந்துவிடும்.குழந்தைக்கு தாய்ப்பால் குடிப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

    கழுத்தை திருப்ப முடியாததே காரணம். குழந்தை மிகவும் கஷ்டப்பட்டு தன் கழுத்தை மற்ற திசைகளில் திரும்ப முயற்சிக்கும். ஆனால், அது முடியாததால் விரக்தியடையும். ஒரே பக்கத்தில் படுத்திருப்பதால் குழந்தையின் ஒரு பக்க தசைகள் தட்டையாக மாறும்.

    மேலே சொன்ன அறிகுறிகளை உங்கள் குழந்தையிடம் கண்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பார்க்கவும். குழந்தையால் எந்த அளவுக்கு கழுத்தை திருப்ப முடிகிறது என்பதை மருத்துவர் பரிசோதிப்பார்.

    பிரச்னையின் தீவிரத்துக்கேற்ப அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ் ரே எடுக்க சொல்வார். கழுத்து சுளுக்கு வாத பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவருக்கு இடுப்பெலும்பிலும் பிரச்னைகள் இருக்கலாம். பெரும்பாலும் இந்த குழந்தைகளுக்கு வேறு எந்த பிரச்னைகளும் இருக்காது.

    அரிதாக சிலருக்கு தொற்று, எலும்புகள் உடைதல், அலர்ஜி போன்றவையும் டவுன் சிண்ட்ரோம் மாதிரியான பிரச்னைகளும் வரலாம். சீக்கிரமே கண்டுபிடித்து சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு பாதிப்பின் தீவிரத்தை குறைக்கலாம். பிற்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியிலும் பிரச்னைகள் வருவதை தவிர்க்கலாம். 
    குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.
    அலர்ஜி என்ற வார்த்தையை நான் சொன்னால், உடனடியாக, தோலில் தடிப்புத் தடிப்பாக வருவது தான், பொதுவாக நம் நினைவிற்கு வரும். வெறும், 5 -10 சதவீதம் மட்டுமே தோலில் தடிப்பாக தோன்றும். அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று அலர்ஜி பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது.

    தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற துவங்கும், ஆறு மாதங்களில் இருந்து, உணவு அலர்ஜி வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.

    எப்படி கண்டுபிடிப்பது?

    ஒரு குழந்தைக்கு, பால் அலர்ஜி என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் அலர்ஜிக்கான அறிகுறிகள் வர வேண்டும்.

    அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், இன்று அலர்ஜிக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்னை இல்லை. வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பிட்ட உணவால் அலர்ஜி என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அலர்ஜி வர வேண்டும்.

    பால், முட்டை, நட்ஸ் ஆகியவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது பொதுவான விஷயம். கோதுமை சாப்பிடுவதால், மிக அபூர்வமாக சில குழந்தைகளுக்கு அலர்ஜி வருகிறது. உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

    ஒரு சில ஆண்டுகளில் பால், முட்டை அலர்ஜி ஏற்படுத்துவது மாறி விடும். ஆனால், ‘நட்ஸ்’ சாப்பிடுவதை வாழ்க்கை முழுதும் தவிர்க்க வேண்டியிருக்கும்.
    குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்னை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே, எந்த உணவால் அலர்ஜி என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.

    இது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர். இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்னை இது.

    வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில், வளர்ப்பு பிராணிகளின் உரோமத்தினால், கரப்பான் பூச்சி யால் வரும் அலர்ஜி. இப்படி இருந்தால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில், எப்போதும், ரணம் இருந்து கொண்டே இருக்கும். ‘ஏசி’ அறைக்கு வந்தவுடன் அதிகமாக, தும்மல், மூக்கடைப்பு வரும்.

    வெளியில் செல்லும் நேரங்களில், துணியால் முகத்தில் கட்டிக் கொள்வது, வெளியில் இருக்கும் மாசிலிருந்து பாதுகாக்குமே தவிர, வீட்டில் நிரந்தரமாக உள்ள பிரச்னையில் இருந்து காக்க உதவாது. இதை பரிசோதித்துஅறியவும் வசதிகள் உள்ளன.

    மாணவர்கள் நீங்கள் இணையதளம் சென்றால் எங்கு உலவுவீர்கள்? சமூகவலைத் தளங்களில்தானே. அதனால்தான் உங்கள் பெற்றோர் அதிருப்தி அடைகிறார்கள்.
    மாணவர்கள் நீங்கள் இணையதளம் சென்றால் எங்கு உலவுவீர்கள்? சமூகவலைத் தளங்களில்தானே. அதனால்தான் உங்கள் பெற்றோர் அதிருப்தி அடைகிறார்கள். நீங்கள் உங்கள் கல்வியையும், எதிர்காலத்தையும் வளப்படுத்திக் கொள்ள வழி செய்யும் நிறைய இணையதளங்கள் இருப்பதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அவற்றில் முக்கியமான சில இணைய தளங்களை இங்கே பட்டியலிடுகிறோம்...

    புதிதாக படிக்க விரும்புபவர்களுக்கு...

    புதிது புதிதாக ஏதாவது படிக்க விரும்புபவர்களுக்காக இணையதளத்தில் ஏராளமான ஆன்லைன் படிப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க இணையதளங்களில் ஒன்றுEdX.org. உலகில் அதிகம்பேர் திறக்கும், அதிகமான ஆன்லைன் படிப்புகள் கொண்ட இணையப் பக்கம் இது. Udacity.com,AcademicEarth.org போன்ற இணையதளங் களும் இது போன்றவையே.Coursera.org இணையதளத்தில் பள்ளிமுதல் பல்கலைக்கழக அளவிலான பாடத்திட்டங்களுடன், கூடுதல் அறிவு வளர்க்கும் விஷயங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    பொது கட்டுரைகளுக்கு...

    நவீன உலகைப் பற்றியும், வாழ்வின் பல்வேறு நிலைகள் பற்றிய அனைத்து விஷயங்களையும் பயனுள்ள வகையில் தொகுத்து வழங்கும் இங்கிலாந்து இணையதளம் இது LifeHacker.co.uk. கதைகள், வாழ்க்கை, வேலை, வர்த்தகம், டிப்ஸ், டிரிக்ஸ், பணம் என பலவிதமான பிரிவுகளில் பயனுள்ள தொகுப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எந்த சூழ்நிலையில் என்ன பரிசு வழங்கலாம், ஒரு முடிவு எடுக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை எவை? பண வரவுக்கான வழிகளை உருவாக்குவது எப்படி? ‘லிங்ட் இன்’ பக்கத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவது எப்படி? என்பது போன்ற தகவல்களை இதில் படித்து பயன்பெறலாம்.

    நீங்கள் இணையதளத்தில் சென்று பொழுதுபோக்கு வீடியோக்களை ரசிக்கும் பழக்கத்திற்கு அடிடையானவர்கள் என்றால், உங்களை அறிவியல் மற்றும் கல்வி சார்ந்த வீடியோக்களால் ஈர்க்கிறது UnplugTheTV.com இணையதளம். வீடியோக்கள் மட்டுமல்லாது கட்டுரைகளாகவும், புகைப்படங்களாகவும், பொன்மொழிகளாகவும், ஒலி வடிவிலும் ஏராளமான தகவல்கள் நிரம்பி உள்ளன. கேள்வி கேட்பதன் மூலமும் நமக்கு அவசியமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும். வேறுசில முக்கியமான பக்கங்களுக்கான தொடர்பு முகவரிகளையும் கொடுத்திருப்பார்கள்.

    மாணவர்களின் மனதை ஈர்க்கும் தகவல்கள் அடங்கிய இணையதளங்களில் ஒன்று MentalFloss.com அறிவியல், உணவு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலான தொகுப்புகள் உள்ளன.



    உணவுப் பிரியர்களுக்கு...

    மாணவர்களுக்கான உணவுப்பட்டியலையும், அதை தயாரிக்கும் முறையையும் கற்றுத்தருகிறது StudentRecipes.com. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரெஸிபிகளும், சமையல் யுத்திகளும் உள்ளன.

    ஆரோக்கியத்தை மதிப்பிட

    உங்களின் தற்போதைய உடல் நலத்தை மதிப்பிட உதவும் இணையதளம்WebMD.com. உங்களுக்குத் தோன்றும் உடல் அறிகுறிகளை குறிப்புகளைக் கொடுத்தால், அதனுடன் தொடர்புடைய நோய் பாதிப்புகளைப் பற்றிய தகவல்களைத் தரும். இது இணைய மருத்துவர் இல்லையென்றாலும், மருத்துவ துணைவனாக சில புரிதல்களை ஏற்படுத்தும். மருந்துகளை இது பரிந்துரைப்பதில்லை என்பதால் உடல்நலம் பற்றிய தெளிவுகளை மட்டும் பெறலாம்.

    இதுபோல மாணவப் பருவத்தில் ஏற்படும் உடல், மன நலப்பிரச்சினைகள் பற்றி கட்டுரைகளை கொண்டது The Ultimate Health Food Guide இணைய தளம். இந்த பக்கத்தில் உடல்நலத்திற்கேற்ற உணவுகளையும் அறிந்து கொள்ளலாம். நோய் எதிர்ப்புசக்திக்குத் தேவையான உணவுப்பட்டியலையும் தரும்.

    உங்கள் தூக்கத்தை ஆராய்ச்சி செய்யும் இணையதளம் Sleepyti.me. இதில் நீங்கள் ஒரு கணக்கு துவங்கிக் கொண்டு, தினசரி தூங்கச் செல்லும் நேரத்தையும், விழிக்கும் நேரத்தையும் பதிவு செய்தால், உங்கள் தூக்க நேரத்திற்கு ஏற்ப பல ஆலோசனைகள் வழங்கும். அப்படி இல்லாமலும் நீங்கள் தூங்கும் நேரத்தின் அளவைக் குறிப்பிட்டும், உங்கள் தூக்கம் போதுமானதா? எவ்வளவு நேரம் ஓய்வு எடுப்பது என்பது போன்ற பயனுள்ள தகவல்களை பெறலாம்.

    புத்தகங்களை வாங்க விற்க...

    TheBookPond.comஇணைய தளம் உங்கள் பழைய பள்ளி, கல்லூரி பாடநூல்களை விற்கவும், மற்றவர்களிடம் இருந்து வாங்கி பயன்பெறவும் துணை செய்கிறது. அமேசான், இபே, கம்ட்ரீ போன்ற பொதுவான இணைய வர்த்தக தளங்களிலும் கல்வி தொடர்பான பொருட்களை தேடி வாங்கலாம்.

    வரவு செலவுக்கான தளங்கள்...

    நீங்கள் பணம் வரவு செலவு மற்றும் நிதி விவரங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள MoneySavingExpert.com என்ற இணையதளம் கைகொடுக்கும். இதில் குறிப்பிட்ட வங்கிகளின் வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைஅறியலாம். Wise Bread.com தளத்திலும் பயனுள்ள நிதி ஆலோசனைகள் கிடைக்கும். இதில் சில ஐடியாக்களை வழங்கி வருவாய் ஈட்டவும் முடியும்.

    Mint.com என்ற இணையதளம் சென்றால் உங்கள் வரவு செலவை பதிந்து வைக்க வழி உண்டு. அதற்கேற்ப சில ஆலோசனைகளையும் இந்த இணையதளம் வழங்கும்.
    குழந்தைகள் முழுமையாக நிப்பிளுக்கு அடிமையாவதற்கு முன்னர் அதனை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை மற்றும் தீமை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
    பலர் குழந்தையின் அழுகையை நிறுத்த நிப்பிள் பயன்படுத்துகின்றனர். அல்லது விரல் சப்புவதைத் தடுக்க நிப்பிள் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு நிப்பிள் பயன்படுத்துவது நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    நிப்பிள் அறிமுகத்தால் தாய்பால் குடிப்பதில் தடை உண்டாகலாம். பார்ப்பதற்கு இரண்டும் ஒரே விதமாக இருந்தாலும் நிப்பிள் மற்றும் தாய்ப்பால் உறிஞ்சுதலில் வேறுபாடு உண்டு. மேலும் இந்த வேறுபாட்டை குழந்தைகள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். மத்திய காது பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீண்ட காலம் நிப்பிள் பயன்படுத்துவதால் பற்கள் தொடர்பான கோளாறுகள் தோன்றலாம். இரண்டு வருடங்களுக்கு மேல் நிப்பிள் பயன்படுத்துவதால் பல்வரிசை நேர்த்தியாக இல்லாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு, நீண்ட காலம் நிப்பிள் பயன்படுத்துவதால் குழந்தை தாய்ப்பாலை மறப்பது கடினமாக இருக்கலாம். அந்த தருணத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    குழந்தைக்கு நிப்பிள் பயன்படுத்தத் தொடங்குபோது சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தை தாய்ப்பால் குடிப்பதை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு நிப்பிள் பயன்படுத்தத் தொடங்குங்கள். தாய்ப்பால் பருகுவதில் எந்த ஒரு இடையூறும் நேராதபடி சரியான இடைவெளியில் தாய்ப்பால் புகட்டுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் அல்லது தாய்ப்பால் குடிக்கும் இடைவெளியில் நிப்பிளை பயன்படுத்துங்கள்.

    குழந்தைக்கு நிப்பிள் பயன்படுத்துவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் அதனை கட்டாயப்படுத்தி பயன்படுத்த வேண்டாம். மேலும், குழந்தை உறங்கும்போது வாயில் இருந்து நிப்பிள் விழுந்துவிட்டால், அதனை மறுபடி வாயில் திணிக்க வேண்டாம்.

    குழந்தையின் வயதுக்கு ஏற்ற நிப்பிள் அளவை உபயோகப்படுத்துங்கள். அடிக்கடி நிப்பிளை மாற்றி விடுங்கள்.
    குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். குழந்தையின் நகத்தை வெட்டும் போது கவனிக்க வேண்டியவை.
    குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களின் பராமரிப்பிலும் தாய்மார்கள் மென்மையை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டுவதும், காதை சுத்தம் செய்வதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்று தாய்மார்களுக்குத்தான் தெரியும். அந்த விஷயங்களில் உங்களுக்கு உதவும் எளிய டிப்ஸ் இதோ…

    * குழந்தைகள் விளையாடும் வேளைகளில் அதிகமாக நகங்களை பயன்படுத்துவதால் அதில் ஏராளமாக அழுக்கு படியும். இதனால் நோய் தொற்ற வாய்ப்பு உண்டு. எனவே அதிகமாக வளரும் நகங்களை அவ்வப்போது வெட்டிவிடுவது சிறந்தது.

    * குழந்தைகளின் நகங்களை வெட்ட சரியான நேரம் அவர்கள் தூங்கும் வேளைதான். இல்லாவிட்டால் அவர்கள் வளைந்து, நெளிந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். பிறகு அழுகையையும் நிறுத்த முடியாது.

    * குளிப்பாட்டியவுடன் குழந்தைகளின் நகம் மேலும் மென்மையாக மாறிவிடும் என்பதால் அப்போதும் நகங்களை நறுக்கலாம்.

    * குழந்தைகளுக்கு வேகமாக நகம் வளர்ந்து விடும் என்று சொல்வார்கள். அது உண்மையல்ல. மெதுவாகவே வளரும். 2 வாரங்களுக்கு ஒரு முறை நகங்களை வெட்டிவிடலாம்.



    * குழந்தைகளின் கால் நகங்கள், கை நகங்களைவிட மெதுவாகத்தான் வளரும். அதுவும் மிருதுவாகத்தான் இருக்கும். கால்நகங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை என்பதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டிய அவசியமில்லை. நன்றாக வளர்ந்தபிறகு கத்தரிக்கலாம்.

    * நகங்களை வெட்டுவதற்கு குழந்தைகளுக்கான `நெயில்கட்டர்’ கருவியை பயன்படுத்தலாம். கத்தரிக்கோல் கொண்டு வெட்டுவது, சாணைக்கல்லில் நகங்களை உரசுவது போன்றவை கூடாது.

    * காதுகளை சுத்தம் செய்ய சுத்தமான துணியை லேசாக தண்ணீரில் நனைத்து காதை துடைத்தால் போதும். காதுக்குள் குடைந்து எடுக்க வேண்டாம்.

    * காதுகளில் மயிர்க்கால்கள் வளர்வதை உணர்ந்தால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்க வேண்டாம். குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.

    * காதுக்குள் சொட்டு மருந்துகள் எதையும் டாக்டர்களின் ஆலோசனையின்றி விடவேண்டாம்.

    * கண்களை சுத்தபடுத்தும்போது சுத்தமான துணியை வெதுவெதுபான நீரில் முக்கி பிழிந்துவிட்டு கண்ணின் சுற்றுபுறத்தை துடைத்தால் போதும். சோப்பு கொண்டு கண்களை கழுவக்கூடாது.

    நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. நிமோனியா காய்ச்சலின் அறிகுறியையும், தடுக்கும் முறையையும் அறிந்து கொள்ளலாம்.
    நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைதான் அதிகம் பாதிக்கிறது. மிக அதிகமான குழந்தைகள் இறப்பதற்கும், நோய்த் தாக்கத்தால் மோசமான பின்விளைவுகளுக்கும் மிக முக்கியமான காரணமாக இருப்பது நிமோனியா காய்ச்சல்தான்.

    அறிகுறிகள்


    * காய்ச்சல்
    * இருமல்
    * அதிகமாக மூச்சு வாங்குதல் (மூச்சு விடும் எண்ணிக்கை)
    * மூச்சுவிட கஷ்டமாக இருத்தல்.

    காரணங்கள்

    * குறைந்த எடை
    * ஊட்டச்சத்துக் குறைபாடு
    * வைட்டமின் - ஏ குறைபாடு
    * தாய்ப்பால் இல்லாமை
    * சிகரெட் புகை

    போன்றவை மிக முக்கியக் காரணங்கள். இவை தவிர, அதிகம் பேர் உள்ள குடும்பம், வீட்டில் இருப்பவர்களுக்கு நுரையீரல் நோய் இருத்தல், அதிக மக்கள் வசிக்கும் இடத்தில் வசிப்பது, மாசுபாடான காற்றை வீட்டிலும், வெளியிலும் சுவாசித்தல் போன்றவையும் நிமோனியா நோய் வரக் காரணங்களாக இருக்கின்றன.
    பிறந்து ஒன்று அல்லது இரண்டு மாதமே ஆன குழந்தைகளுக்கு நிமோனியா வருவதற்கு, குரூப் - பி ஸ்ரெப்டோ காக்கை, ஈகோலி, கிளப்ஸியெல்லா, ஸ்டெஃபைலோ காக்கை போன்றவை முக்கியக் காரணம்.

    3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரையுள்ள குழந்தைகளுக்கு, நீமோகாக்கை, ஹெச்&இன்ஃபுளூயன்சா, ஸ்டெஃபைலோ காக்கை போன்றவை நிமோனியா காய்ச்சலை ஏற்டுத்துகின்றன.

    ரெஸ்பரேட்டரி சின்சைட்டியல் வைரஸ், இன்ஃபுளூயன்சா வைரஸ், பாரா இன்ஃபுளூயன்சா வைரஸ், அடீனோ வைரஸ் போன்றவையும் நிமோனியா காய்ச்சலுக்கு முக்கிக் காரணமாக இருக்கின்றன.

    ஐந்த வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் கிருமிகள்தான் அதிக அளவில் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்துகின்றன.



    வைரஸ்களால் ஏற்படும் அறிகுறிகள் :


    * மூக்கில் நீர் வடிதல்
    * இருமல்
    * காய்ச்சல்
    * அதிகமாக மூச்சு வாங்குதல் (மூச்சு விடும் எண்ணிகை)
    * மூச்சு விடுவதற்குக் கஷ்டம்
    * உடல் நீல நிறமாக மாறுதல்
    * மூச்சுவிட முடியாமல் சோர்வு

    பாக்டீரியக்களால் ஏற்படும் அறிகுறிகள் :


    * நடுக்கத்துடன் குளிர்
    * அதிகமான காய்ச்சல்
    * இருமல்
    * நெஞ்சு வலி
    * அதிகமாக மூச்சு வாங்கதல் (மூச்சு விடும் எண்ணிகை)
    * கவலை - சோர்வு
    * நினைவிழப்பு

    மேற்கண்ட அறிகுறிகளுக்கு உடனே சிகிச்சை அளிக்காவிட்டால், நெஞ்சில் சீழ் பிடிக்கும்.

    தடுக்கும் முறைகள் :

    * குழந்தைத் தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு, இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் மற்ற உணவு வகைகளையும் கொடுக்க வேண்டும்.

    * புட்டிப்பால், டின் பவுடர் பால் கொடுக்கக்கூடாது.

    * குழந்தைகள் இருக்கும் வீட்டில் யாரும் சிகரெட் பிடிக்கக்கூடாது.

    * சளி மற்றும் இருமல் இருப்பவர்கள், குழந்தைகளைக் கொஞ்சக் கூடாது.

    * குழந்தை பிறந்தவுடன் தக்க தடுப்பூசிகளைத் தவறாமல் போட வேண்டும்.

    * அவ்வப்போது குழந்தை வயதுக்கேற்ற சரியான எடையுடன் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து சரிவிகித உணவு கொடுக்க வேண்டும்.

    * சளி, மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல் இருந்தால் உடனே டாக்டரிடம் காட்டி, நோய் தீவிரமாகாமல் தடுக்க வேண்டும்.
    ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் அணுகுமுறையாலும், அரவணைப்பாலும் குறைபாடு உள்ள குழந்தைகளின் வாழக்கையில் ஒளி ஏற்ற வேண்டும்.
    ஒரு மனிதனின் வாழ்வை அழகுறச் செய்வது குழந்தைகள்தான். வீட்டில் சுட்டித்தனத்துடன் ஓடிவரும் குழந்தைகளை பார்க்கும்போது நமது மனதில் உள்ள துன்பங்கள் அனைத்தும் சிதறி ஓடிவிடும். குழந்தைகளிடையே கவனப்பற்றாக்குறை மற்றும் மிகை இயக்க செயல்பாடு பொதுவாக காணப்பட்டு வருகிறது. இது நரம்பியலில் ஏற்படும் ஒருவித வளர்ச்சி குறைபாடு ஆகும்.

    இந்த வகையுடைய ஒரு சில குழந்தைகள் வயதுக்கு மீறிய துறுதுறுப்புடனும், உத்வேகத்துடனும் இருப்பார்கள். மிகுதியான இயக்கமும், உணர்ச்சி வேகமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். சில குழந்தைகள் எதிலும் ஆர்வம் இல்லாமல் மந்தமாகவே செயல்படுவார்கள். இந்த வகை குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த சவால் மிக்க ஒன்றாகும்.

    நமது நாட்டில் தற்போதைய நிலவரப்படி 11.32 சதவீத தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இந்த குறைபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகள் 3 மடங்கு அதிகம் இந்த குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இக்குறைபாட்டிற்கான அறிகுறிகள் ஏழு வயதிற்குள் தென்படத் தொடங்குகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, மைக்கேல் ஜார்டான், அறிவியல் அறிஞர் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் போன்ற பிரபலமானவர்கள் இந்த வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள். குழந்தைகளுக்கு பின்வரும் அறிகுறிகள் தென்படும். இந்த வகை குழந்தைகள் படிப்பிலோ அல்லது வேறு எந்த வேலையிலோ ஈடுபடும்போது கவனத்தை தக்க வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்.

    ஆசிரியர்கள், பெற்றோர்கள் நேரடியாகப் பேசும்போது காது கொடுத்து கேட்க மாட்டார்கள், படிப்பில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள், தனது உடைமைகளை பத்திரப்படுத்தாமல் மறந்து எங்கேயாவது விட்டுவிடுவார்கள், ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போதே, மற்றொரு வேலையின் மேல் இவர்கள் எண்ணம் செல்லும், ஒரு இடத்தில் அமைதியாய் உட்காரமாட்டார்கள், திடீரென்று எழுந்து ஓடுவார்கள், மேசை, நாற்காலி மீது ஏறிக்கொண்டு இருப்பார்கள்.

    இவர்களை வகுப்பறையில் ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாது. அப்படி உட்கார வைக்கும்போது நெளிந்து கொண்டும், இருக்கையை விட்டு எழுந்தும், பிற ஒலிகளை எழுப்பிக் கொண்டும் இருப்பார்கள். இவர்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும் மிகக் கடினம்.

    ஒரு கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் அது சரியோ, தவறோ, உடனடியாக பதிலைக் கூறிவிடுவார்கள். சுயகட்டுப்பாடு இல்லாமல் எளிதில் தூண்டப்பட்டு சிந்திக்காமல் செயல்படுவார்கள்.

    மரபணுக் கூறுகள், சுற்றுச்சூழல், மூளையின் செயல்பாடுகள் போன்றவை இந்த குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்த குறைபாடு உடைய குழந்தைகளை நாம் கவனிக்காமல் விட்டால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் சமூகத்தில் பின்தங்க நேரிடும்.



    இந்த குறைபாடு உடைய குழந்தைகளை எப்படி கையாள்வது? இதனை எப்படி சரிசெய்வது? என்பதை பார்ப்போம்.

    இக்குறைபாடு உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் அடிக்காமல், கோபப்படாமல் நல்லப் பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இனிப்பு அவர்களின் துறுதுறுத்தன்மையை அதிகரிக்கும் என்பதால் பெரும்பாலும் இனிப்பு பலகாரங்களை தவிர்க்கவேண்டும். செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், குளிர் பானங்கள் ஆகியவற்றையும் தவிர்த்தல் வேண்டும்.

    இந்த வகை குழந்தைகளை கையாள்வதற்கு ஆசிரியருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளை தங்களது அருகிலேயே அமர வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் நற்செயல்களை பாராட்டி, பரிசு அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் தவறு செய்தாலும் கோபப்படாமல் பக்குவமாய் எடுத்து சொல்ல வேண்டும்.

    ஒரு வேலையை, செயலை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவை குறித்த தகவல்களை, விதிமுறைகளை தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும், எந்த ஒரு வேலையையும் சிறு, சிறு செயல்களாகப் பிரித்தே இந்த வகை குழந்தைகளிடம் வழங்க வேண்டும். இந்த குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் செயல்களை செய்யக்கூடாது, இக்குறைப்பாடு உள்ள குழந்தையை, நன்றாக செயல்படும் குழந்தைகளின் அருகில் அமர வைப்பதன் மூலம் அவர்களின் தாழ்வு மனப்பான்மையை குறைக்கலாம்.

    இந்த வகை குழந்தைகளுக்கு சிறு, சிறு பயிற்சிகள் கொடுக்கலாம். சிறு துவாரங்கள் இருக்கின்ற மணிகளை கோர்க்கும்படி செய்தல், வரைபடங்களில் உள்ள கோடுகளின் மீது வரையும் பயிற்சி, படங்களின் எல்லைக்குள் வர்ணம் தீட்ட செய்தல், ஊஞ்சலில் மெதுவாக ஆடும்படி கூறுதல், நீச்சல் பயிற்சி, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு செல்லும் பயிற்சி போன்ற பயிற்சிகளை இந்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.

    இந்த குறைபாட்டிற்கான அறிகுறிகள் தென்படும் குழந்தைகளை உளவியல் நிபுணர் அல்லது குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பின்னரே அவர்கள் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    குழந்தைகள் தான் நமது உலகம். அவர்களின் எதிர்காலத்தை சிறந்த ஒளிமயமாக்க வேண்டிய பொறுப்பு நமது கையில்தான் உள்ளது. எனவே ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் அணுகுமுறையாலும், அரவணைப்பாலும் இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகளின் வாழக்கையில் ஒளி ஏற்ற வேண்டும். இத்தகைய குறைபாட்டைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பொதுமக்களிடம் வளர வேண்டும்.

    கலையரசி, சிறப்பு பயிற்சியாளர்.
    சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு. இதற்கான காரணத்தையும் தடுக்கும் வழிமுறையையும் அறிந்து கொள்ளலாம்.
    சிறு குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது உண்டு. அதற்கு 3 காரணங்கள் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது.

    1. மரபு ரீதியானது,

    2. ஹார்மோன் மாற்றங்கள்,

    3. கவலை மற்றும் பயம்.

    இவை தவிர சிறுநீர் பை சரிவர வளர்ச்சி அடையாததாலும் தன்னை அறியாமல் சிறுநீர் கழிக்க வாய்ப்பிருக்கிறது.

    இதனை தடுப்பது எப்படி?

    * படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக குழந்தைகளை அடிக்கவோ, திட்டவோ கூடாது.

    * குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்படியாக பேச வேண்டும். பயம், கவலை ஏற்பட காரணங்கள் என்ன என்பதை புரிந்து கொண்டு நம்பிக்கையூட்டுங்கள்.

    * இரவில் அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் மற்றும் திரவ உணவுகள் கொடுபதையும் நிறுத்துங்கள்.

    * 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் படுக்கையில் சிறுநீரை உறிஞ்சும் துண்டுகளை விரிக்கலாம்.

    * குழந்தையின் படுக்கையை அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் மாற்று ஏற்பாடுகளை செய்வது அவர்கள் நிம்மதியாக உறங்க உதவும்.

    * தூங்கச் செல்லும் முன் சிறுநீர் கழித்து விட்டு வந்து படுக்கச் சொல்லலாம்.

    * குறிப்பிட்ட நேரங்களில் அவர்கள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக வைத்திருந்தால் அந்த நேரத்திற்கு எழுப்பி கழிவறைக்கு கொண்டு சென்று விடலாம்.
    சில குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    சில குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும். அதனால், பல தாய்மார்கள், அந்தக் குழந்தைகளை கீழாடை அணியாமல் `ப்ரீ’யாக விட்டுவிடுவார்கள்.

    அவ்வாறு செய்பவர்கள், ஏன் தங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள் என்று யோசித்திருக்க மாட்டார்கள்.

    உங்கள் குழந்தையும் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா? அதற்கு காரணம், இதுதான்…

    பொதுவாக பாலில் தண்ணீர் அதிகமாகக் கலந்து தருவதால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு தரும் பசும்பால் அல்லது ஆவின் பாலில் தண்ணீர் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

    டின் பவுடர் பாலாக இருந்தால் ஒரு கரண்டி பவுடருக்கு ஒரு அவுன்ஸ் தண்ணீர் சேர்த்தால் போதும். பொதுவாக, 4 கிலோ எடையுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு வேளைக்கு 4 அவுன்ஸ் பால் கொடுத்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
    பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும்.
    பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் சதா குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும். இதனால் விரும்பத்தகாத பின் விளைவுகள் ஏற்படலாம். அவர்களுடைய நல்ல செயல்களை நாலு பேர் முன் பாராட்டுவது அவர்களை உற்சாகப்படுத்துவதோடு மேன்மைப்படுத்தவும் உதவும்.

    அதோடு நீங்கள் அவர்களை உளப்பூர்வமாக நேசிக்கிறீர்கள் என்பதையும் அது அவர்களிடத்தில் பதிவு செய்யும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பலர் முன்னிலையில் அடிப்பது உண்டு. தவறு செய்தால் அடிப்பது சரியான அணுகுமுறையல்ல. மேலும் நம் மீதுள்ள கோபத்தை அவர்கள் மற்ற குழந்தைகள் தம்பி, தங்கைகள் மீது காட்ட வாய்ப்பிருக்கிறது.

    குழந்தை மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி பெரும்பாலான குழந்தைகள் மற்றவர்களிடம் அடிதடி வரை போகும் பின்னணிக்கு இது தான் காரணம். தாங்கள் பட்ட அவமானத்தை அவர்கள் இப்படித் தீர்த்துக் கொள்வார்கள். பொது இடங்களில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமான செயல்.

    பொறுமையாக அவர்களை கட்டுப்படுத்த முயலுங்கள். முடியாவிட்டால் அந்த இடத்திலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள். அதைவிடுத்து காட்டுத்தனமாக அடிப்பது பெற்றோரை அநாகரீகமாக காட்டும் செயல். 
    ×