search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pacifier for baby"

    குழந்தைகள் முழுமையாக நிப்பிளுக்கு அடிமையாவதற்கு முன்னர் அதனை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை மற்றும் தீமை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
    பலர் குழந்தையின் அழுகையை நிறுத்த நிப்பிள் பயன்படுத்துகின்றனர். அல்லது விரல் சப்புவதைத் தடுக்க நிப்பிள் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு நிப்பிள் பயன்படுத்துவது நல்லதா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    நிப்பிள் அறிமுகத்தால் தாய்பால் குடிப்பதில் தடை உண்டாகலாம். பார்ப்பதற்கு இரண்டும் ஒரே விதமாக இருந்தாலும் நிப்பிள் மற்றும் தாய்ப்பால் உறிஞ்சுதலில் வேறுபாடு உண்டு. மேலும் இந்த வேறுபாட்டை குழந்தைகள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். மத்திய காது பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீண்ட காலம் நிப்பிள் பயன்படுத்துவதால் பற்கள் தொடர்பான கோளாறுகள் தோன்றலாம். இரண்டு வருடங்களுக்கு மேல் நிப்பிள் பயன்படுத்துவதால் பல்வரிசை நேர்த்தியாக இல்லாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு, நீண்ட காலம் நிப்பிள் பயன்படுத்துவதால் குழந்தை தாய்ப்பாலை மறப்பது கடினமாக இருக்கலாம். அந்த தருணத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

    குழந்தைக்கு நிப்பிள் பயன்படுத்தத் தொடங்குபோது சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தை தாய்ப்பால் குடிப்பதை பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு நிப்பிள் பயன்படுத்தத் தொடங்குங்கள். தாய்ப்பால் பருகுவதில் எந்த ஒரு இடையூறும் நேராதபடி சரியான இடைவெளியில் தாய்ப்பால் புகட்டுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் அல்லது தாய்ப்பால் குடிக்கும் இடைவெளியில் நிப்பிளை பயன்படுத்துங்கள்.

    குழந்தைக்கு நிப்பிள் பயன்படுத்துவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் அதனை கட்டாயப்படுத்தி பயன்படுத்த வேண்டாம். மேலும், குழந்தை உறங்கும்போது வாயில் இருந்து நிப்பிள் விழுந்துவிட்டால், அதனை மறுபடி வாயில் திணிக்க வேண்டாம்.

    குழந்தையின் வயதுக்கு ஏற்ற நிப்பிள் அளவை உபயோகப்படுத்துங்கள். அடிக்கடி நிப்பிளை மாற்றி விடுங்கள்.
    ×