என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகளின் உடல் வளர்ச்சி குறைபாட்டுக்கு பழக்கவழக்கங்களும், வாழ்வியல் முறையும், ஊட்டச்சத்து குறைபாடும் காரணமாக இருக்கலாம்.
பெண் குழந்தைகள் ஒரு வயது முதல் பூப்பெய்தும் பருவம் வரை மாதந்தோறும் 2 முதல் 5 அங்குலம் வரை வளர்கிறார்கள். பூப்பெய்திய பின்பு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் உயரம் 4 அங்குலம் வரை அதிகரிக்கிறது. இளமைப் பருவத்தை எட்டும் வரை உடல் வளர்ச்சி கணிசமாக அதிகரித்துக்கொண்டிருக்கும். ஆனால் ஆண் குழந்தைகளை பொருத்தமட்டில் இளமைப்பருவத்தின் முடிவில் சட்டென்று வளர்ச்சி அடைந்துவிடுவார்கள். அதேவேளையில் சிறுவயதில் சராசரி உயரத்தை எட்ட முடியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தைகளின் உடல் வளர்ச்சி குறைபாட்டுக்கு பழக்கவழக்கங்களும், வாழ்வியல் முறையும், ஊட்டச்சத்து குறைபாடும் காரணமாக இருக்கலாம்.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை:
குழந்தைகள் வளரும் பருவத்தில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பும் அவசியம். பழங்கள், பச்சை காய்கறிகள், புரதம், முழு தானியங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைவாக கொடுக்க வேண்டும்.
சரியான நேரத்தில் தூங்கவில்லை என்றால் அது உடல் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தூங்கும்போது வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன் வெளியாகும். போதுமான அளவு தூங்கவில்லை என்றால் வளர்ச்சியை தூண்டும் ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும். இரவில் சரியான நேரத்திற்கு தூங்க சென்று காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தை பருவம் முதலே உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் தசைகள், எலும்புகளை பலப்படுத்துவதற்கும் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் உடற்பயிற்சி கைகொடுக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களின் சுரப்பும் அதிகரிக்க தொடங்கும்.
நிற்பது, உட்காருவது, நடப்பது போன்ற செயல்களை சரியான முறையில் செய்ய வேண்டும். அவை தவறான முறையில் அமைந்தாலும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.

குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது என்பது தாய்மார்களுக்கு பெரும் சிரமம். குழந்தைகளுக்கான மருந்துகளையும் அதனை கொடுக்கும் முறைகளையும் ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றாலே பெற்றோர்கள் பதறி விடுவோம். அதிலும் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பது என்பது தாய்மார்களுக்கு பெரும் சிரமம். குழந்தைகளுக்கான மருந்துகளையும் அதனை கொடுக்கும் முறைகளையும் ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
* மருந்து சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதை உணவுடன் கலந்து கொடுப்பது சில பெற்றோர்களின் வழக்கம். சிலவகை மருந்துகள் உணவுடன் கலக்கப்படும்போது செயல் திறனை இழப்பதாகத் தெரிவிக்கின்றார்கள் மருத்துவ நிபுணர்கள். சில மருந்துகள் பாலுடன் வினைபுரியும் என்பதால் இயன்றவரை தண்ணீருடன் மட்டும் அல்லது மருத்துவர் பரிந்துரைப்படி தான் கொடுக்க வேண்டும்.
* உங்கள் குழந்தைக்கு மருத்துவர் 6 முதல் 10 நாட்கள் வரை கொடுக்கச் சொல்லி ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். குழந்தைகளின் உடல் நலம் தேறியதும் ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக் கூடாது. இதனால் அரை குறையாகத் தேறிய குழந்தையின் உடல் நிலை நோய்க்கிருமிகளின் வீரியத்தால் இன்னும் மோசமாகலாம்.
* சாதரண தும்மல், இருமல் போன்ற வற்றுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டியதில்லை. சில தாய்மார்கள் குழந்தை உறங்க இருமல் சிரப்பைக் கொடுப்பதுண்டு.
* கடந்தமுறை நோய்வாய்ப்பட்டபோது குழந்தைக்கு தந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி கொடுத்தல். அதே போல காலாவதியான மருந்து, மாத்திரைகளை உடனுக்குடன் அப்புறபடுத்த வேண்டும் ஏனெனில் தவறுதலாக உட்கொள்ளும் போது விளைவுகள் மோசமாகும்.
* பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஓரே மாதிரி அறிகுறிகள் தென்படும் போது, பெரியவர்களது மருந்து மாத்திரைகள் அளவைக் குறைத்து குழந்தைகளுக்குக் கொடுப்பது மிகவும் மோசமானது மருந்தின் சக்தியை எதிர் கொள்ள முடியாமல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.
* மருத்துவர் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவையும், கடையில் வாங்கியவையும் ஒரே மருந்துதானா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். பிறகு அதன் லேபிளின் மீதுள்ள எச்சரிக்கைகளையும் கொடுக்கும் முறைகளையும் படிக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் மருந்து வாங்கும் இடம் அல்லது மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இன்றைய பெற்றோருக்கு மாறிவிட்டது. குழந்தை வளர்ப்பு குறித்த சூட்சமங்களை அறிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாகவும், சவால் நிறைந்ததாகவும் இன்றைய பெற்றோருக்கு மாறிவிட்டது. குழந்தைகளோடு கூடிக்களிப்பதுதான் மனதுக்கு மகிழ்ச்சிதரும் நிகழ்வு என்பதுபோய், குழந்தைகளைவிட்டு ஒரு ஒருமணிநேரம் ரிலாக்ஸாக தனித்திருந்தால் போதும், மனசு அமைதியாகிவிடும் என்று நிறையப் பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். இத்தனைக்கும் ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள்தாம் இன்று அதிகம். அல்லது அதிகபட்சம் இரண்டு குழந்தைகள். இதற்கே இவ்வளவு போராட்டங்கள்.
குழந்தை வளர்ப்பு குறித்த சூட்சமங்களை அறிந்துகொண்டால், அது உண்மையில் அத்தனை கடினமான காரியம் இல்லை. என்ன அந்த சூட்சமங்கள் என்று பார்க்கலாம்.
* குழந்தை வளர்ப்பு என்பது குழந்தை பிறந்த கணத்திலிருந்து செய்யவேண்டிய ஓர் அதிமுக்கியக் கடமை. குழந்தை பிறந்து 10 வயது வரை அந்தக் குழந்தையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அதன்பிறகு திடீரென்று குழந்தை வளர்ப்பை நீங்கள் கையில் எடுத்தால், அக்குழந்தை உங்கள் வசப்படாது.
* குழந்தை பிறந்த மூன்று, நான்கு மாதங்களில் மற்றவர்களின் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்துவிடும். குறிப்பாக தன் அம்மாவை நிறையத் தேடஆரம்பிக்கும். பேசத் தெரியாத அந்தக் குழந்தைக்கு அழுகைதான் ஒரே மொழி. பசித்தாலோ, ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டாலோ, அல்லது எறும்புபோன்ற பூச்சிகள் கடித்தாலோ, அல்லது அம்மா தன்னைத் தூக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ, அழுகை மூலமாக மட்டுமே அந்தக் குழந்தை தன் உணர்வுகளை வெளிப்படுத்தும். பசி, உறக்கம், உடல் உபாதை எனக் குழந்தையின் அழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் தேவையை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும். ஆனால், வெறுமனே நீங்கள் தூக்கிக்கொள்ள வேண்டும் என்று அது அழுதால் அதற்கு நீங்கள் செவிமடுக்காதீர்கள். வேறு வழிகளில் குழந்தைக்கு விளையாட்டுக்காட்டி ரிலாக்ஸ் செய்யுங்கள். அப்படியல்லாமல் குழந்தை அழும்போதெல்லாம் தூக்கித் தூக்கி நீங்கள் பழக்கினால், குழந்தை இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு அழுது, அழுதே உங்களைத் தூக்கிக்கொள்ள வைத்துவிடும். பிடிவாதம் மூலம் காரியம் சாதித்துக்கொள்ள முடியும் என்பதை குழந்தை கற்றுக்கொள்ளும் இடமும் இதுதான்.
* 'என் குழந்தை அழுதா என்னால தாங்க முடியாது' என்று பெற்றோரால் அதீத செல்லம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள் பொறுப்பற்றவர்களாகவும், நான், எனது என்று சுயநலம் மிகுந்தவர்களாகவும் வளர்வார்கள். ஒரு குழுவாக இணைந்து செயல்பட இவர்களால் முடியவே முடியாது.கேட்பதெல்லாம் கிடைத்தே இவர்கள் வளர்வதால், தோல்விகளை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்.
* அதே சமயம் கண்டிப்பும் தண்டனையுமாக வளர்க்கப்படும் குழந்தைகளும் பயந்த சுபாவம் உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை இல்லாதவர்களாகவும் வளர்வார்கள். சதா திட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல், மனதிற்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி மனச்சிக்கலுக்கு ஆளாகிவிடுவார்கள்.
* உங்கள் குழந்தை படிக்காமல் சதா டிவி பார்த்துக்கொண்டே இருக்கிறது, அல்லது மொபைல் போனில் மூழ்கிக்கிடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே குழந்தையை அடிக்கப் பாயாமல், 'இங்க பாருடா கண்ணா... தினமும் ஈவ்னிங் ஒரு மணிநேரம் டிவி பார்க்க அம்மா உன்னை அலோ பண்றேன். ஆனா அதையும் தாண்டி அம்மா பேச்சைக் கேட்காமல், நீ தொடர்ந்து மொபைல் பாக்குற. டிவி பாக்குற. இனிமேல் இப்படிச் செய்தா, இனி நீ வழக்கமா டிவி பாக்குற நேரத்தில்கூட டிவி பார்க்க அம்மா அலோ பண்ண மாட்டேன். அதனால கவனமா நடந்துக்கோ' என்று உறுதியான குரலில் தெரிவியுங்கள்.
* மறுநாள், உங்கள் பேச்சை மதித்து குழந்தை டிவி பார்க்கும் நேரம் முடிந்ததும் அதை ஆஃப் செய்துவிட்டு படிக்கவந்தால் நலம். அப்படி இல்லாமல், அப்போதும் முதல்நாள்போல டிவி பார்க்க ஆரம்பித்தால், அதற்கடுத்த நாள்களில் உங்கள் குழந்தையை முற்றிலும் டிவி பார்க்க அனுமதிக்காதீர்கள்.
* இதற்காகக் குழந்தை அழுது அடம்பிடித்தால், அதை அடிக்காதீர்கள். உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள். தொடர்ந்து இதுபோல உங்கள் உறுதியைக் காண்பித்தால், குழந்தைகள், 'இனி அம்மாகிட்ட நம்மா பாச்சா பலிக்காது' என்று முடிவுசெய்து உங்கள் வழிக்கு வருவார்கள். ஆனால், ஒரு நாளிலேயே இந்த மாற்றம் குழந்தைகளிடம் வந்துவிடாது. உங்களின் தொடர்ந்த உறுதியும், பொறுமையும் மட்டுமே அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டுவரும்.
* குழந்தைகளுடன் வெளியே ஷாப்பிங் செல்வது என்றால் கிளம்புவதற்கு முன்பே, 'ஷாப்பிங்ல உங்களுக்குப் பிடிச்ச ஐஸ்க்ரீமை நாங்க வாங்கித் தர்றோம். ஆனா, பாக்குற பொருளை எல்லாம் கேக்கக் கூடாது. அப்படிக் கேட்டு பிடிவாதம் பண்ணா, இனிமேல் உங்களை மறுபடியும் ஷாப்பிங் கூட்டிட்டுப்போக மாட்டோம். நாங்க சொன்னா அதைச் செய்வோம்னு உங்களுக்குத் தெரியும்ல? அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோங்க' என்று அறிவுறுத்தி அழைத்துச் செல்லுங்கள். இப்படி ஓரளவு குழந்தைகளைத் தயார்செய்து வெளியில் அழைத்துக்கொண்டு சென்றால், குழந்தைகளும் பிடிவாதம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.
* இன்றைய பெற்றோர் குழந்தை வளர்ப்பில் செய்யும் ஆகப் பெரிய தவறு என்ன தெரியுமா? குழந்தைகளுக்கு எதற்கெடுத்தாலும் பொருள்களை கிஃப்ட்டாக வாங்கிக்கொடுத்து ஊக்குவிப்பது. 'முதல் மார்க் வாங்கினா சைக்கிள் வாங்கித்தர்றேன்', 'சமர்த்தா சாப்பிட்டா கார் பொம்மை வாங்கித் தர்றேன்' - இப்படி ஒவ்வொரு விஷயத்தை நிறைவேற்றவும் பொருள்களை லஞ்சமாகக் கொடுக்கிறார்கள் பெற்றோர்கள். குழந்தைகளுக்குப் பணத்தின் அருமை புரியாமல்போக, இது பெரும் காரணமாக அமைந்துவிடுகிறது. அதுமட்டுமல்ல, ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்து ஒரு வேலையை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்கிற தவறான பாடத்தை அவர்கள் இதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். அதனால், பிள்ளைகளை உத்வேகப்படுதி நல்ல விஷயங்களைச் செயல்படுத்த நினைத்தால், பொருள்களைக் கொடுத்து அவர்களிடம் பேரம் பேசாதீர்கள்.
* இதுவே சற்று வளர்ந்த குழந்தைகளை ஊக்குவிக்க நினைத்தால், உங்கள் மகனை அல்லது மகளை தன் நண்பர்களோடு வெளியே செல்ல அனுமதிப்பது, அல்லது உங்கள் மகன் அல்லது மகளின் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துச் சாப்பாடு செய்துகொடுப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதனால், பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான புரிதல் பலப்படும். இதன் மூலம் பதின்பருவக் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் கம்ஃபர்ட்டாக உணர்வார்கள்.

குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி யோசிக்க நேரமில்லை. சந்தோஷமான குழந்தை பருவத்தை அனுபவிக்க நல்ல சூழல் ஏற்படுத்துவது நம் எல்லோருடைய பொறுப்பு.
உலகிலேயே அதிகமான இளைஞர்கள் கொண்ட நாடு இந்தியா. நமது இளைஞர் படை அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். இதனால் தான் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கிறது. உலக அளவில் இளைஞர்கள் அதிகமாக பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. 1990-களிலிருந்து உலக மயமாக்கல் திட்டம் பரவிய பொழுது வர்த்தகம் தழைக்க புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. கணினி புரட்சி, இண்டர்நெட் மூலம் தகவல் பரிமாற்றம், அன்றாட நடைமுறை, வியாபாரம், கல்வி, மருத்துவம் எல்லாவற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
புதிய வரவுகளை இளைஞர்கள் உடனே பிடித்து கொண்டார்கள். அனுபவஸ்தர் யோசிக்கும் நேரத்தில் இளம் வட்டங்கள் கம்ப்யூட்டர் மூலம் செய்து முடித்தார்கள். அனுபவம் எவ்வளவு முக்கியமோ அதைவிட தேவை வித்தியாசமாக சிந்தித்து பயன்பாட்டை அதிகபடுத்தும் வழிமுறைகள். இது வரவேற்கத்தக்க மாற்றம். மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டும், இளைஞர்களை தயார் செய்ய வேண்டும். அவர்களது திறன் மேம்பாடு முக்கிய அரசாங்க திட்டமாக வகுக்கப்படுவது அவசியம்.
இதை மைய கருத்தாக வைத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம், இந்த வருடம் மனித உரிமைகள் காப்பதில் இளைஞர்கள் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தி அறிக்கை கொடுத்திருக்கிறது. பொது வாழ்வில் ஈடுபடுவதும் ஒரு முக்கிய உரிமையாக கருதப்படுகிறது.
அரசியலில் ஈடுபடுவதுதான் பொது வாழ்வு என்ற எண்ணம் தவறானது. அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி யோசிக்க நேரமில்லை. சந்தோஷமான குழந்தை பருவத்தை அனுபவிக்க நல்ல சூழல் ஏற்படுத்துவது நம் எல்லோருடைய பொறுப்பு. ஆனால் அதை பற்றியோசிக்கவோ விவாதிப்பதோ இல்லை. ஒன்று அவர்களை புத்தக புழுவாக படிப்பை தவிர வேறொன்றும் தெரியாதவர்களாக வளர்க்கப்படுகிறார்கள். இல்லையென்றால் கவனிப்பே இல்லாது குறிக்கோள் இல்லாது ஏதோ படிக்க வேண்டும் என்று படித்துவிட்டு, படித்த கல்விக்கு தகுதியில்லா வேலை பார்த்து காலம் கழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
எல்லோருடனும் அனுசரித்து வாழும் பண்புகள் வளர்க்கப்படுவதில்லை. அதனால் தான் குடும்பங்கள் முறிகின்றன. பெற்றோருடன் சண்டை, அவர்களை சரியாக பராமரிப்பதில்லை, கணவன் மனைவி உறவில் விரிசல், தகாத உறவு, மனைவியே கணவனை ஆளை வைத்து கொல்லும் நிகழ்வுகள் இவையெல்லம் ஒரு வித சீரழிவை நமக்கு காட்டுகின்றன. நாம் சுதாரிக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை!
“கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா” என்ற எம்.ஜி.ஆர். பாடல் நினைவுக்கு வருகிறது. கண்ணும் காலும் இழுத்து செல்லும் இடங்களுக்கு மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் வேண்டத் தகாத கொடூரங்கள் நிகழ்கிறதா என்று நினைக்கத் தோன்றுகிறது.
சமீபத்தில் காவல் துறை கூடுதல் தலைமை இயக்குனர் ஒரு அறிக்கையில் பாலியல் சம்பந்தப்பட்ட இணையதள படங்களை பார்ப்பது குற்றம், காவல் துறை யார் இவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்கிறது என்ற எச்சரிக்கை அந்த அறிக்கையில் விடுத்துளார்கள். குழந்தைகளை பாலியலில் ஈடுபடுத்தி காட்சிகளை இணையதளத்தில் வெளியிடும் சர்வதேச கயவர்கள் உள்ளார்கள். இம்மாதிரியான விரசமான காட்சி கோப்புகள் நான்கு லட்சத்திற்கும் மேல் இணையதளத்தில் உள்ளன. அவற்றை கண்காணிப்பது மிக கடினம். அதனை தடுக்க காவல் துறை எடுத்து வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இதுவும் சமுதாய சீர்கேட்டின் ஒரு அங்கம்.
காலம் காலமாக நமது முன்னோர்கள் பின்பற்றிய நல்லவற்றை போற்றி நடந்தாலேபோதும். ‘முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்’ என்று அந்த எம்.ஜி.ஆர். பாடல் வரிகளை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆதிசங்கரருக்குப் பிறகு இந்தியாவை நாடு என்று நேசித்த இரு பெரியவர்கள் பாரதியாரும், விவேகானந்தரும் ஆவார்கள். இருவரும் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்று இளைய தலைமுறைக்கு ஊக்கம் தந்தவர்கள்.
அவ்வப்போது நிகழும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் பெண்கள் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதை காட்டுகிறது. சமீபத்தில் தெலுங்கானாவில் நடந்த பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது. காவல் துறை 4 குற்றவாளிகளை சுட்டு வீழ்த்தியது மக்களிடம் வரவேற்பை பெற்றது. சுட்டது சரியா? தவறா? என்பது ஒருபுறம் இருக்க கொடூரமான குற்றங்களுக்கு அசாதாரண முடிவுகள் தவிர்க்க முடியாது. காவலர்கள் தடி எடுப்பதை எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இத்தகைய முடிவுகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
துப்பாக்கி சூடு சாதாரணமாக நடத்தக்கூடாது என்பது விதியானாலும் சில சமயம் துப்பாக்கி வேலாயுதமாக சமூக விரோதிகளை அடக்க உதவுகிறது என்பதும் உண்மை. வெற்றி புனையும் வேலே போற்றி! சமூக பிரச்சினைகள் பற்றிய விவாதங்களில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, இனவெறி களைதல், தீண்டாமை ஒழிப்பு, மாற்று திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு, ஒருமைப்பாட்டிற்கும் சமூக ஒற்றுமைக்கும் பாடுபடுதல் போன்ற உயரிய நோக்கங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
பெற்றோர்களை பராமரித்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு உண்டு. செய்யத்தவறினால் முதியோர் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். எல்லாவற்றையும் சட்டத்தால் மட்டும் திருத்த முடியாது. நல்வழி காட்டும் கல்வி தான் இதற்கு தீர்வாக அமையும். உலகில் பல மாற்றங்கள் இளைஞர்கள் முனைப்பாக செயல்பட்டதால் சாத்தியமானது.
புதிய சிந்தனைகள், வித்தியாசமான அணுகுமுறை தேவை. நடந்த பாதையிலே பயணம் பாதுகாப்பு அளிக்கலாம்; முன்னேற்றத்திற்கு உதவாது. நிலையான வளர்ச்சி கல்வி, மருத்துவம் சுகாதாரமான குடிநீர் போன்ற அடிப்படை துறைகளில் அடுத்த பத்து வருடங்களில் உலக நாடுகள் தன்னிறைவு பெறவேண்டும் என்பது குறிக்கோளாக வைக்கப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் தங்கள் உரிமைகளை பெற பெரியவர்கள் உதவ வேண்டும். இளம் வயதை காரணம் காட்டி அவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் மறுக்கக்கூடாது.
ஐரோப்பாவில் உள்ள பின்லாந்து நாட்டு மக்கள் 34 வயதான, சன்னா மாரின் என்பவரை பிரதம மந்திரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதிலும் அவர் பெண் என்பது கூடுதல் சந்தோஷமான செய்தி. பாரத சமுதாயம் வாழ்கவே என்று பாடி மகிழ்ந்தார் பாரதி. அவரது காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மக்கள்தொகை 30 கோடி. இப்போது 130 கோடி!
அதில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள். “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி”. கருணை பொறுமை கடமை மூன்றும் இருந்தால் தலைவனாகலாம் என்ற நினைவில் நீங்கா பாடல் எக்காலத்திற்கும் பொருந்தும். கால சுழற்சியை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு இளைய தலைமுறையை தயார் செய்ய வேண்டு
நடராஜ், ஐ.பி.எஸ்.,
சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் போது தயார்ப்படுத்துவது எப்படி என்று பலருக்கும் தெரிவதில்லை. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறோம். அதன் பிறகு குழந்தைகளுக்கான பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும் எனப் பலருக்கும் தெரிவதில்லை. தடுப்பூசி போட்ட பிறகு பின் விளைவுகள் வருவது பொதுவான விஷயம்தான். அதை எப்படி எதிர்கொள்வது? குழந்தைகளை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது… இதைப் பற்றி முழுமையாக இங்குப் பார்க்கலாம்.
சின்ன குழந்தைகளை தடுப்பூசிக்கு தயார்ப்படுத்துதல்…
எளிதில் கழற்றகூடிய லேசான ஆடைகளைக் குழந்தைக்கு அணிவிப்பது நல்லது. அரை கை சட்டை உள்ள ஆடைகள் நல்லது. 12 மாதத்துக்கு கீழ் உள்ள குழந்தைக்கு தொடையில் ஊசி போடுவது நல்லது. 1 வயது + குழந்தைகளுக்கு, மருத்துவர் பரிந்துரைப்பின்படி இடுப்பிலோ கையிலோ ஊசி போடலாம். ஊசி போடும்போது குழந்தையை நன்கு அரவணைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புங்கள்.
குழந்தையை கட்டி அணைப்பது, பாடுவது, இதமாகப் பேசுவது போன்றவற்றை செய்யலாம். குழந்தையின் கண் பார்த்துப் பேசுங்கள். குழந்தையை பார்த்து புன்னகை செய்யுங்கள். குழந்தை பாதுகாப்பாக உணரும்படி அரவணைத்துக் கொள்ளுங்கள் கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளையாட்டு காண்பிக்கலாம். குழந்தையை துணியால் போர்த்தி அரவணைக்கலாம். குழந்தையை, தடுப்பூசி போடும்போது உங்களது மடியில் வைத்திருங்கள்.
பெரிய குழந்தைகளை தடுப்பூசிக்கு தயார்ப்படுத்துதல்…
வலியில் இருந்து மீள ஆழ்ந்த மூச்சு விடும்படி சொல்லி கொடுங்கள் பொய் சொல்லி ஏமாற்ற வேண்டாம். உண்மையை சொல்லி குழந்தையை தயார்படுத்துங்கள். அறையில் உள்ள பொருட்களைக் காண்பித்து குழந்தையின் கவனத்தை மாற்றுங்கள். அழும் குழந்தையை சமாதானம் செய்யுங்கள் குழந்தை பயப்படுகிறது எனத் திட்ட வேண்டாம். கேலி, கிண்டல் செய்ய வேண்டாம்.
மருத்துவரிடம் இதன் பிறகான பராமரிப்புகளைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஈரமான துணியை ஊசி போட்ட இடத்தில் வைத்து லேசாகத் தொட்டு தொட்டு எடுக்கவும். காய்ச்சல் வந்தால், தண்ணீரில் நனைத்த துணியை உடலில் தொட்டு தொட்டு எடுக்கவும். தடுப்பூசி போட்ட இக்காலத்தில் குழந்தைகள் குறைவாகவே சாப்பிடுவார்கள். இதற்காக பயம் வேண்டாம். அது நார்மல்தான். கொஞ்சம் அதிக கவனத்தை குழந்தைகள் மேல் வையுங்கள்.

குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமத்துக்கு வரக்கூடிய பிரச்னைகள். அதற்கான தீர்வுகள்…இவற்றை இங்கு பார்க்கலாம்.
பனிக்காலத்தில் குழந்தைகளை சற்று மிக கவனமாகவும் சரியாகவும் பராமரிக்க வேண்டும். குளிர் காலத்துக்கு ஏற்ற சரும பராமரிப்பை மேற்கொள்வது நல்லது. குளிர்ந்த வெப்பநிலை குழந்தைகளின் சருமத்தை உலர செய்யும். சருமத்தில் சில வெடிப்புகள் போன்றவையும் காணப்படும். சின்ன சின்ன மாற்றங்களை செய்து கொண்டால் குழந்தைகளின் சருமத்தைக் குளிர் காலத்தில் இருந்து காக்க முடியும்.
குழந்தைகளை நீண்ட நேரமாக குளிக்க வைக்க வேண்டாம். 5 நிமிடத்துக்குள் குளித்து விட்டுவரும்படி ஏற்பாடு செய்யுங்கள். பிறந்த குழந்தைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க வைக்கலாம். ஆனால், கால், இடுப்பு, டயாப்பர் உள்ள பகுதிகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். சுடுநீர் இல்லாமல் இளஞ்சூடான நீரில் குளிக்க வைப்பது நல்லது. சூடான நீரில் குளித்தால் சருமம் வறண்டு போகும்.
அதிக வாசனை, அதிக நுரை, அதிக கெமிக்கல்கள் இல்லாத சோப்பை பயன்படுத்துங்கள். குளிக்கும்போது, குழந்தைகளின் சருமத்தை ஸ்கரப் செய்ய வேண்டாம். துடைக்கும்போது, மிருதுவான துண்டால் ஒத்தி ஒத்தி எடுக்கலாம்.
குளிர், பனிக்காலத்தில் குழந்தையின் சருமம் உலர்ந்து காணப்படும். 6+ மாத குழந்தைகளுக்கு தேவையான தண்ணீர், ஜூஸ், சூப், பழங்கள் போன்ற நீர்ச்சத்து உணவுகளையும் சரியான அளவில் தர வேண்டும். 0-6 மாத குழந்தைகளுக்கு, தாய்ப்பால் அதிகமாகக் கொடுத்து உடலின் நீர்ச்சத்து அளவை பராமரித்துக்கொள்ள வேண்டும். மீன், நட்ஸ் மற்றும் நட்ஸ் பவுடர், அவகேடோ போன்றவை சருமத்தை காக்கும் உணவுகள்.
குளிரைத் தாங்க கூடிய கனமான உடைகளை அணிந்து விடுங்கள். ஆனால், குத்தாத, அரிக்காத உடைகளாக இருப்பது நல்லது. முழுக்கை, முழுக்கால் மூடும்படியான ஆடைகளை அணியலாம். காது, தலைக்கு மப்ளர் அணிந்து விடலாம்.
எப்போதுமே இளஞ்சூடாகவே குழந்தைகளுக்கு நீர் அருந்த கொடுக்கலாம். பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு கொதித்து ஆறவைத்த குடிநீரையே கொடுத்துப் பழகுங்கள். போதுமான அளவு நீர்ச்சத்து குழந்தைகளுக்கு முக்கியம்.

கல்வியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் கூகுள் பலவிதங்களில் பயன்பட்டு வருகிறது. கூகுளின் தேடுபொறி மாணவர்களின் தேடலை எளிதாக்கியிருக்கிறது
கூகுளின் தேடுபொறி (சர்ச் என்ஜின்) அறிமுகமான பின்பு, இணைய பயன்பாடு பெருகியது என்றால் மிகையில்லை. உலகளாவிய முன்னணி தேடுபொறியாக விளங்கும் கூகுள் பொது மக்களுக்கு மட்டுமல்லாது மாணவர் உலகத்துக்கும் மிகப்பெரிய பொக்கிஷத்தை வழங்கி உள்ளது. கல்வியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் கூகுள் பலவிதங்களில் பயன்பட்டு வருகிறது.
கூகுளின் ஓ.எஸ். மென் பொருள் இன்று ஸ்மார்ட்போன்களின் உயிர்நாடியாக விளங்குகிறது. சரிபாதிக்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களில் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளமே பயன்படுத்தப்படுகிறது என்பது அதற்கு சிறந்த சான்று. அதுபோல டேப்லட், டெஸ்க்டாப், லேப்டாப், ஸ்மார்ட் டி.வி. என எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் கூகுளின் இயங்குதளங்கள் அடித்தளமாக உள்ளன.
கூகுளின் தேடுபொறி மாணவர்களின் தேடலை எளிதாக்கியிருக்கிறது. தகவல் களஞ்சியமாக, தகவல் சுரங்கமாக அளவில்லாத தகவல்களை தேடலுக்கேற்ப அள்ளியள்ளி தருகிறது.
மக்களின் தேவை மற்றும் தேடலுக்கு ஏற்ற எண்ணற்ற அப்ளிகேசன்களை வழங்கியிருக்கும் கூகுள், மாணவர் களுக்கும் கிளாஸ்ரூம், லென்ஸ், டிவைஸ் என பலவிதமான அப்ளி கேசன்களை வழங்குகிறது. சொந்த தயாரிப்பு அல்லாத ஏராளமான அப்ளிகேசன்களையும் அது சேகரித்து வினியோகிக்கிறது. வயதுக்கு ஏற்றவை, குறிப்பிட்ட கல்விக்கு ஏற்றவை, உபயோகத்திற்கு எளிமை யானவை, செலவு குறைந்தவை, இலவசமானவை என பலவிதங்களில் இந்த அப்ளிகேசன்கள் கிடைக்கின்றன.
கூகுள் வழங்கும் பல சேவைகள் தனிப்பட்ட ஒன்றின் சேவையாக அல்லாமல் ஆசிரியர்கள், கல்வி அமைப்புகள், மாணவர்கள் ஆகியோரின் கூட்டமைப்புகளின் சேவையாக இருப்பதால் அதன் திறனும், பலனும் வீரியம் மிக்கதாக உள்ளது. குறிப்பாக ஒரு கணக்கிற்கு ஒரு விடைதான் என்றாலும் அதற்கு பல வழிகள் இருக்கின்றன என்று அத்தனை வழிகளையும் காட்டுவதாக கூகுளின் சேவைகள் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.
கூகுளின் அப்ளிகேசன்கள், மென்பொருட்கள் பயன்பாட்டு அளவில் எளிமையாகவும், தீர்வு தருவதில் முன்னிலையாகவும், உற்பத்தியை பெருக்குதல் மற்றும் திறன் மேம்பாட்டில் பங்களிப்பதாகவும் விளங்குகிறது. கூகுளின் சேவையை சிறப்பாக பயன் படுத்திக் கொள்ளும் மாணவர்கள், சாதனையாளர்களாக உயரலாம் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் குழந்தையை நீங்கள் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்கும்போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களது வளர்ச்சியையும், வயதிற்கு ஏற்ற அறிவையும் பாதிக்கும்.
காலை முதல் மாலை, ஏன் இரவு வரையிலும் அலுவலக பணிகளை முடித்து விட்டு மன அழுத்தத்துடன் வீடு திரும்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டை அசுத்தமாக வைத்திருப்பது, சரியாகத் தின்பண்டங்களை உண்ணாமல் இருப்பது, வீட்டுப் பாடத்தை முடிக்காமல் இருப்பது என்று பலவற்றையும் கண்டு அவர்கள் மீது கோபம் கொள்கிறார்கள். மேலும் அவர்களைத் திட்டவும் தொடங்குகிறார்கள். அவ்வாறு குழந்தைகளைத் திட்டும் போது அது அவர்களின் மனம்,ஆரோக்கியமான சிந்தனை மற்றும் உடல் வளர்ச்சி ஆகியவற்றை எவ்வளவு பாதிக்கின்றது என்ற உண்மையை அறியாமல் பல பெற்றோர்கள் நாட்களை நகர்த்துகிறார்கள்.
குழந்தைகள் சிறு சிறு தவறுகள் செய்வது இயல்பே. அவர்கள் ஒன்றும் பிறப்பதற்கு முன்பே இந்த உலகத்தில் வாழ்வதற்கான விதி முறைகளையும் சட்டங்களையும் கற்றுக் கொண்டு வருவதில்லை. ஏன் முதுமை அடைந்தவர்களும் இத்தனை கால வாழ்க்கை அனுபவத்திற்கு பிறகும் தவறுகள் செய்வது இயல்பே. ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தவறு செய்வதை எண்ணிப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மனம் உடைகின்றனர்.
அவர்களைத் திருத்த அல்லது அவர்களது தவறுகளை எடுத்துச் சொல்ல முயலாமல் தங்களது அறியாமையால் குழந்தைகளை அதிகம் திட்டத் தொடங்கி விடுகின்றனர். இதனால் உற்சாகத்தோடு வளர வேண்டிய குழந்தைகள் பயத்துடன் வாழ மற்றும் வளரவும் தொடங்குகிறார்கள். பள்ளியில் ஆசிரியர்களுக்குப் பயந்து வீட்டில் பெற்றோர்களுக்குப் பயந்து தாங்கள் செய்வது சரியா அல்லது தவறா என்று தெரியாமல்,அறியாமையிலேயே பிள்ளைகள் தங்களது குழந்தைப் பருவத்தைத் தவறாகக் கடக்கின்றனர்.
இத்தகைய சூழல் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.முக்கியமாகப் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்று விடுதல், வீட்டில் தாத்தா, பாட்டி அல்லது வேறு உறவினர்கள் அவர்களுடன் துணையாக இருந்து விளையாடி நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க இயலாத நிலை,அடுக்கு மாடி குடியிருப்பு வாழ்வு முறையில் வாசல் கதவிற்கு வெளியே எட்டிப் பார்ப்பதும் குற்றம் என்ற சூழலில் வளருதல் என்பன எல்லாம் ஆகும்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தெரிந்து கொண்டால், நீங்கள் மாறுவதோடு, நேர்மறை சக்திகளையும் எண்ணங்களையும் உங்கள் குடும்பத்தில் ஏற்படுத்த முனைந்து ,உங்கள் குழந்தைகளையும் தன்னம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் வளர்க்கும் சூழலை ஏற்படுத்துவீர்கள்.
உங்கள் குழந்தையை நீங்கள் தொடர்ந்து திட்டிக் கொண்டே இருக்கும்போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதிகம் வருத்தம் கொண்ட மனதோடு இருப்பதால் அவர்கள் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். இது அவர்களது வளர்ச்சியையும், வயதிற்கு ஏற்ற அறிவையும் பாதிக்கும். மன உளைச்சலே பல கடுமையான நோய்களுக்கும் முதல் படி என்பதை தயவு செய்து நினைவு கூறுங்கள்.எதிர்காலத்தில் இது தற்கொலை எண்ணத்தைக் கூடத் தூண்டிவிடும்.

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் உடல் பருமன் கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் ஒரு கோடியே 44 லட்சம் குழந்தைகள் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் உடல் பருமன் கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியும் குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. ‘‘பெரும்பாலான குழந்தைகள் வீடியோ கேம்ஸ், கணினி, செல்போன், லேப்டாப் போன்றவற்றுள் ஏதாவது ஒன்றை தினமும் சராசரியாக 5 முதல் 6 மணி நேரம் வரை உபயோகப்படுத்துகிறார்கள். இது பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை விட ஐந்து மடங்கு அதிகமானதாகும். அத்தகைய காட்சி ஊடகங்கள் வழியாக செலவிடும் ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தைகளின் உடல் பருமன் 2 சதவீதம் வரை அதிகரிக்கிறது’’ என்கிறார் குழந்தை நல ஆலோசகர் டாக்டர் வைஷாகி.
மேலும் அவர் கூறுகையில், ‘‘உடல் இயக்க செயல்பாடு இல்லாமை, தவறான உணவு பழக்கம் போன்றவை உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. உலக அளவில் கோடிக்கணக்கான குழந்தைகளும், நடுத்தர வயதினரும் உடல் பருமன் தொடர்பான பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். உடல் எடை அதிகமாக இருப்பது பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் அடித்தளமிடுகிறது. குறிப்பாக நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள், மூட்டு வலி, கருப்பை பாதிப்பு, புற்றுநோய், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுகிறது’’ என்கிறார்.
குழந்தைகள் உடல் பருமன் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பதற்கு சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தைகள் ஒரே நேரத்திலோ, ஒரே நாளிலோ அதிக அளவில் இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமனுக்கு முக்கிய காரணம். அதனால் குறைவான அளவே இனிப்பு வகைகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். குழந்தையின் வயதுக்கேற்பவும் சாப்பிடும் அளவை நிர்ணயிக்க வேண்டும்.
உணவில் அதிக காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை தவிர்க்க நினைக்கும் குழந்தைகளுக்கு உணவுடன் சேர்த்து ஊட்டிவிட வேண்டும்.
உணவு உட்கொள்ளும்போது வேறு எந்தவிதமான கவனச்சிதறலுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. முக்கியமாக வீடியோ கேம், செல்போன் பார்த்தபடி சாப்பிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
குழந்தைகள் எந்தெந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்களோ அவற்றை வீட்டிலேயே தயார் செய்து கொடுத்து சாப்பிட வைக்க வேண்டும்.
கணினி, வீடியோ கேம்ஸ், செல்போன் போன்றவற்றில் நேரத்தை செலவிடுவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். வெளியே சென்று விளையாடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகள் தினமும் போதுமான நேரம் தூங்குகிறதா? என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இளைஞர்களிடையே போதைத் தரக்கூடியப் பொருட்களுக்கு தேவை உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே இருக்கும் போதை பழக்கங்களைப் பற்றியது ஆகும்.
போதை என்பது பகுத்தறிவை பாதாளத்தில் தள்ளிவிடுவது, போதைக்கு அடிமையாவது மனநோயின் அறிகுறி. போதைகள் பல வகைப்பட்டாலும் நாம் இந்த கட்டுரையில் பார்க்கப்போவது வஸ்துகளை முறையற்ற வகையில் பயன்படுத்துவதால் ஏற்படும் போதை. முக்கியமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே இருக்கும் போதை பழக்கங்களைப் பற்றியது ஆகும்.
சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல் துறையால் “ஓ” என்ற புற்றுநோயாளிகள் பயன்படுத்தும் ஒரு மருந்தை போதைப்பொருளாக பயன்படுத்திய இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு விற்பனை செய்த திருப்பூரைச் சேர்ந்த நபர்கள் உள்பட நான்கு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததைத் தொடர்ந்து, தென் இந்தியாவில் இந்த மருந்தை முறைகேடாக பயன்படுத்தி இருப்பது முதன் முதலாக தெரியவந்தது.
இதை தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை இது பற்றி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கஞ்சா, ஹெராயின் போன்ற வழக்கமான போதைப் பொருட்கள் தவிர நடைமுறையில் மருந்துப் பொருட்களாகவோ அல்லது வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடியப் பொருட்களையோத் தவறாக பயன்படுத்தி போதை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.
எந்தெந்த பொருட்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து அதில் உள்ள அபாயங்களை இளைஞர்களுக்கு உணர வைப்பது முக்கியமாகும். மருந்துகள் பற்றிய ஆராய்ச்சி கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டு செயல்படும் தொழில் என்பதால் புதிய புதிய மூலக்கூறுகள் தொடர்ந்து பல்வேறு நோய்களுக்கு எதிராக வந்து கொண்டிருக்கின்றன. அதைப்போல் ஒவ்வொரு மருந்தின் வழக்கமான பயன்பாட்டை மீறி முறையற்ற வகையில் எப்படி பயன்படுத்துவது என்ற சட்டத்திற்கு புறம்பான ஆராய்ச்சியும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
குறிப்பாக அதிக அளவில் கிடைக்கக்கூடிய விலை குறைந்த மருந்துகளை அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகம் நடைபெறுகிறது. அவ்வாறு முயற்சிப்பவர்கள் அந்த மருந்தை அப்பாவி இளைஞர்கள் மீது சோதனை செய்வதற்கும் தயங்கமாட்டார்கள். எடுத்துக்காட்டாக உணவுடன் உட்கொள்ளக்கூடிய மருந்தை தண்ணீரில் கரைத்து ஊசியாக பயன்படுத்தும் போது ஏற்படும் எதிர் விளைவுகளும், பின் விளைவுகளும் அபாயகரமானவை; உயிரிழத்தல் கூட ஏற்படலாம்.
போதையால் ஏற்படும் பின்விளைவுகளில் மிக முக்கியமானது போதைப்பொருள் உட்கொண்டவுடன் ஏற்படும் போதை நிலையைத் தொடர்ந்து வரும் வேதனை நிலை. உடன் விளைவு மற்றும் பின்விளைவு எந்த அளவுக்கு போதையால் உயரப்பறக்கும் எண்ணம் வருகிறதோ, அதே அளவுக்கு கீழே விழும் எண்ணமும் இருக்கும். எவ்வளவு வேகத்தில் உயரத்தில் செல்கிறார்களோ அதைவிட அதிவேகமாக கீழே விழுவது நிச்சயம்.
உயரம் சென்றபோது ஏற்பட்ட போதை உணர்வில் இருந்த நேரத்தைவிடக் கீழே விழுந்து கிடந்து துயரப்படும் நேரம் பல மடங்கு அதிகமானதாக இருக்கும். போதையால் ஏற்படும் அளவற்ற கோபம், மனஉளைச்சல், அடிக்கடி ஏற்படும் மனசோர்வு, தொடர் சோக உணர்வு போன்றவை மனநோய்க்கான அறிகுறிகள். மேற்கண்ட உணர்வுகள் எல்லாம் மிதமாக இருக்கும்போது இயல்பான உணர்வுகள் என்றாலும் போதையின் பின் விளைவால் அவை ஏற்படும் போது இயல்பை விட அதிகமாக அல்லது முறையற்று மாறி மன நோயாக திரிகிறது. இந்த மனநோய்களைப் போதை வஸ்துகள் தீவிரப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதிகப்படுத்தவும் செய்கிறது.
இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, எந்தெந்த மருந்தை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்ற ஆராய்ச்சியை விட மாணவர்களையும், இளைஞர்களையும் விழிப்புணர்வு மூலமாக அந்த போதை பாதையில் பயணிக்காமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வது முக்கியம். அதில் பெற்றோர்கள் ஆசிரியர்கள், மருந்து கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரின் பங்கு முக்கியம்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஒரு நாளைக்கு குறைந்த நேரமாவது செலவிட வேண்டும். அவர்களுக்கு அறிவுரைப் பொழிவதை மட்டும் செய்யாமல் பொறுமையாக அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவர்கள் கருத்துக்கு உடனுக்குடன் எதிர்கருத்தை சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கருத்து பரிமாற்றத்திற்கு கருத்தடை செய்வதை விட்டு விட்டு அவர்கள் மனதில் உள்ளதைச் சொல்வதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே உள்ள நட்புணர்வு மற்றும் நம்பிக்கை வளரும். இது குழந்தைகள் தங்கள் மனதில் உள்ளவற்றைப் பெற்றோர்களிடம் தயக்கமில்லாமல் பகிர்ந்துகொள்வதற்கு வழிவகுக்கும்.
போதை பாதையைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதற்கு உதவும். அதற்கு பொறுமை, அவசர அவசரமாக தங்கள் கருத்தை அவர்கள் மீது திணியாமை, அவர்கள் சொல்லக் கூடிய கருத்துகளை வைத்து அவர்களைப் பற்றிய ஒரு உடனடி முடிவுக்கு வரும் செயல் போன்றவைகளை பின்னுக்கு தள்ளி ஒருநாள் அரைமணி நேரம் செலவிட்டால் கூட போதும். அந்த அரைமணி நேரம் அதிசயம் நிகழ்த்தும் சக்தி கொண்டது. அவர்கள் மனதில் எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோர்களிடம் பரிமாறிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். அடுத்து, நீங்கள் அவர்களுடன் பேசும் போது அவர்கள் மன ஓட்டங்களைத் தெரிந்துகொள்வதோடு உடல் ரீதியில் உள்ள மாற்றங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
நல்ல விஷயங்களைச் சொல்லும் போது வாழ்த்துங்கள். தவறான விஷயங்களைச் சொல்லும்போது அதைப்பற்றி அதிகமான தகவல்களைக் கேட்பதன் மூலம் அந்த பிரச்சினையை முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். போதைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் உடலில் கண்டிப்பாக மாற்றம் தெரியும். குறிப்பாக ஊசி பயன்படுத்துபவர்கள் ஊசிபோட்ட அடையாளங்களை மறைக்க முடியாது.
இதே போன்ற பொறுமையும், பொறுப்புணர்வும் ஆசிரியர்களுக்கும் முக்கியம். இந்த இரண்டு பாதுகாப்பு அரண்களும் சரியாக இருந்தால் எந்த போதைப்பொருள் குற்றவாளிகளாலும் உங்கள் குழந்தைகளை நெருங்க முடியாது. அதைப்போல் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் விற்கும் பழக்கத்தை மருந்து கடை முதலாளிகள் நிறுத்த வேண்டும். புதுக்கோட்டையில் பிடிபட்ட போதை மருந்து மருந்து கடைகளில் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது.
இதுபோல் ஒரு சில பேர் மருந்துகளின் தவறானப் பயன்பாட்டைத் தெரிந்தும், பணத்திற்காக அதிக விலைக்கு விற்றும் பணம் சம்பாதிக்கிறார்கள். நம் மருந்து கடைகளில் மளிகை கடை பொருட்கள் போல் மருந்துகளை விற்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை மருந்து கடை வைத்திருப்போர் உணர வேண்டும். இளைஞர்களிடையே போதைத் தரக்கூடியப் பொருட்களுக்கு தேவை உருவாக்கப்பட்டுள்ளது. போதைப் பொருளால் ஏற்படும் உணர்வு உண்மையென என்னும் போலி உணர்வு, மனதில் உள்ள மனநல குறைபாடுகள், ஏக்கங்கள் நிறைவேறாவிட்டால் அதைச் சரிப்படுத்த போதை தேவை என்ற உணர்வு சரியான வழிகாட்டல் இல்லாமை ஆகிய காரணங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எந்த விதமான செயல்பாடுகளை வெளிபடுத்துகிறார்கள், எதைப் பற்றி பேசுகிறார்கள், யாரைப் பற்றி பேசுகிறார்கள், அவர்கள் சகஜமாக எல்லோருடனும் பழகுகிறார்களா அல்லது தனிமையை விரும்பிச் செல்கிறார்களா? என்பது போன்ற விஷயங்களைக் கடைக்கண்ணால் பார்த்தாலே போதும், தெரிந்து கொள்ளலாம்.
இறுதியாக போதை என்பது விதவைகளை உருவாக்கும் உற்பத்திக்கூடம். விதவை என்ற வார்த்தையை இங்கு கணவனை இழந்த கைம்பெண் என்ற பொருளைத் தாண்டி, இழப்பு என்ற பொருளைக் கொண்ட ஒரு பொதுச் சொல்லாக பயன்படுத்துகிறேன். போதை பெற்றோர்களின் அன்பை இழந்த ‘விதவைக் குழந்தைகளை’ பலிகடா ஆக்குகிறது. எதிர்காலம் பறிக்கப்பட்ட விதவை மாணவர்களை உருவாக்குகிறது. விதவைக் கணவர்களும், மனைவிகளும் பெருகுகிறார்கள். நம்மில் ஒவ்வொருவரும் உடனடி நடவடிக்கை எடுக்க தவறினால் எதிர்காலம் இருள் மயமானதாகிவிடும்.
வி.பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி., திருச்சி.

சில குறும்புக்காரர்கள் சக மாணவ-மாணவிகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து ரகளை செய்வார்கள். குறும்பிலும், வம்பிலும் ஈடுபடும் மாணவர்களை சமாளிப்பது எப்படி என்று அறிந்துகொள்வோம்.
பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் அனைவரும் ஒரேமாதிரியான குணத்துடன் இருப்பதில்லை. சிலர் அமைதியாக இருப்பார்கள். சிலர் கொஞ்சம் சேட்டை, கொஞ்சம் அமைதி என்ற குணம் பெற்றிருப்பார்கள். சிலர் குறும்புத்தனம் நிறைந்தவராக காணப்படுவார்கள். இந்த குறும்புக்காரர்கள் சக மாணவ-மாணவிகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து ரகளை செய்வார்கள். மற்ற மாணவர்களை அடித்தும், கேலி செய்தும் மிரட்டுவது உண்டு.
இதுபோன்ற வம்பு செய்யும் மாணவர்களை பார்க்கும் போது பிற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து பயப்படுவதுண்டு. சில மாணவர்களுக்கு இது பெரிய மனச்சோர்வையும், மன அழுத்தத்தையும் தரும். அதுபோன்ற நிலையில் குறும்பிலும், வம்பிலும் ஈடுபடும் மாணவர்களை சமாளிப்பது எப்படி என்று அறிந்துகொள்வோம்.
குறும்பு செய்யும் மாணவர்களைக்கண்டு பயப்படுவதை முதலில் நிறுத்துங்கள். அவர்களை முற்றிலும் புறக்கணியுங்கள். உங்கள் அருகில் அந்த மாணவன் வந்தாலும் அவனை உதாசீனப்படுத்துவது போல நடந்து கொண்டு உங்கள் வேலையில் நீங்கள் கவனமாக இருங்கள். பொதுவாக குறும்புக்கார மாணவர்களின் எண்ணமே உங்களை பயமுறுத்துவதாகத்தான் இருக்கும். அவர்களைக்கண்டால் நீங்கள் பயந்து நடுங்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே அதற்கு இடம்கொடுக்காதீர்கள். எந்த சூழ்நிலையிலும் பயத்தை வெளிப்படுத்தக்கூடாது.
உங்கள் எதிர்ப்பை அமைதியாக, அதே நேரத்தில் உறுதியாக தெரிவிக்க தயங்க கூடாது. அதாவது குறும்பில் ஈடுபடும் மாணவரின் முகத்துக்கு நேராக ‘நீ செய்வது சரியல்ல’ என்று உரத்த குரலில் சொல்லுங்கள். உங்களின் உறுதி அவர்களுக்கு உங்கள் மீதான பயத்தை அதிகரிக்கும். உங்களை கேலி செய்து ஏதாவது குறும்பு செய்தால் நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு சிரியுங்கள். ‘இதுபோன்ற அசட்டுத்தனத்தை செய்யாதே’ என்று எச்சரியுங்கள்.
குறும்புக்கார மாணவரிடம் தனியாக மாட்டிக்கொள்ளாதீர்கள். அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றுவிடுங்கள். மேலும் எப்போதும் நீங்கள் பிற நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது பாதுகாப்பானது. உங்களை கேலி செய்தால் அதைக்கேட்டு மனம் வருந்தக் கூடாது. உங்களை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். எனவே அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
பழிக்குப்பழி என்று எதிலும் இறங்க வேண்டாம். அதுபோல தொந்தரவு அதிகரித்தால் அதை பிறரிடம் தெரிவிக்க தயங்கவும் கூடாது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பிரச்சினையை தெரிவித்து அதை கவனமாக கையாள வேண்டும். இதற்கு தயங்கவோ, பயப்படவோ கூடாது.

காலையில் எழுந்து பற்களை துலக்குவது, குளிப்பது மட்டும் சுத்தத்தின் அடையாளமல்ல. செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் சுத்தம் எதிரொலிக்க வேண்டும்.
காலையில் எழுந்து பற்களை துலக்குவது, குளிப்பது மட்டும் சுத்தத்தின் அடையாளமல்ல. செய்யும் செயல் ஒவ்வொன்றிலும் சுத்தம் எதிரொலிக்க வேண்டும். நம்மில் பலருக்கு சுத்தம் சொல் அளவில் இருக்கலாம். செயலில் சுத்தத்தை கடைப்பிடிப்பது மிகச் சிரமமான காரியம்தான். ஆனால் ஒவ்வொன்றிலும் சுத்தத்தை கடைப்பிடிப்பதால் வெற்றி எளிதில் வந்து சேரும் என்பது உறுதியான உண்மை.
சிறுவயதிலிருந்து சுத்தத்தை ஒரு பழக்கமாக்க வேண்டும். காலையில் பல் துலக்குவதைப்போல உங்களில் எத்தனைபேர் இரவு உணவுக்குப் பின்னும் பல் துலக்கிவிட்டு தூங்கச் செல்கிறீர்கள்? இதுபோல பல விஷயங்களில் சிறுவர்களான நீங்கள் சுத்தத்தை வழக்கமாக்க வேண்டி இருக்கிறது. அது பற்றி என் அனுபவங்களை கொஞ்சம் உங்களோடு பகிர்ந்து கொள்ளட்டுமா குழந்தைகளே... தினமும் பற்களை சுத்தம் செய்யுங்கள். அதுபோல வாரம் ஒருமுறை நகங்கள் வெட்டுங்கள். மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டிக் கொள்ளுங்கள். பள்ளி, வகுப்பறை, வீட்டில் படிக்கும் அறை ஆகியவற்றை வாரம் ஒருமுறை சுத்தம் செய்து, தேவையில்லாத குப்பைகளை அப்புறப்படுத்தி, பயனுள்ளவற்றை மீண்டும் அதே இடத்தில் ஒழுங்காக வைக்கும் சுத்த வழக்கத்தை கடைப்பிடியுங்கள்.
சிலர் பேசும்போது, அவருக்கு வாய் சுத்தமில்லை, கை சுத்தமில்லை என்று பேசுவதை கேட்டிருக் கிறீர்களா? வாய் சுத்தமில்லை என்றால் அவர் பல் துலக்குவதில்லை என்று அர்த்தமல்ல, பொய் பேசுகின்றார் என்று பொருள். அதுபோல கைசுத்தமில்லை யென்றால் அவர் சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதில்லை என்பதல்ல, அவர் பணம் கொடுக்கல், வாங்கலில் மற்றவர்களை ஏமாற்றுகிறார் என்பது பொருள்.
சிறுவர்களான நீங்களும், இளம் வயதிலிருந்தே வாய்சுத்தம், கைசுத்தத்தை பேண வேண்டும். ஆம், வாக்கு கொடுத்தால் தவறக்கூடாது, வாய் திறந்தால் பொய் பேசக்கூடாது. அதுவே வாய் சுத்தமாகும்.
அதுபோலவே மற்றவர் பொருளை கேட்காமல் எடுக்கக்கூடாது. கேட்டு வாங்கிய பொருளாக இருந்தால் திரும்ப அதை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தெரியாமல் எடுத்தால் திருட்டாகும், திரும்ப கொடுக்காமல் வைத்துக் கொண்டால் நீங்கள் ஏமாற்று பேர்வழி என்று பெயர்பெறுவீர்கள்.
அந்தக் களங்கம் உங்களுக்குத் தேவையில்லையே குட்டீஸ். அதனால் நீங்கள் சுத்தமானவர் என்ற பெயர் பெற்றால் பின்னாளில் நீங்கள் எந்த களங்கத்திற்கும் ஆளாக மாட்டீர்கள். அது உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.
கைசுத்தம், வாய் சுத்தம் போலவே செயல்சுத்தம் எல்லோருக்கும் மிகமிக முக்கியமாகும். செயல் சுத்தம்தான் உங்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடியதாகும். அதுதான் நீங்கள் எத்தகையவர் என்பதை மற்றவர்களுக்கு காட்டும், நீங்கள் எப்படி வாழ்வீர்கள் என்பதை தீர்மானிக்கும்.

ஒருமுறை காமராசர் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. அதற்காக எல்லா மாணவர்களிடமும் ஒரு அணா வசூலித்தனர்.
பூஜை முடிந்த பின்னர் ஆசிரியர் ஒருவர் அனைத்து மாணவர்களுக்கும் பொரி, கடலை, தேங்காய் வழங்கினார். மாணவர்களோ வரிசையில் செல்லாமல் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு சென்றனர். கடைசியில் நின்றிருந்த காமராசருக்கு சிறிதளவு பிரசாதமே கிடைத்தது.
வீட்டிற்கு அதை கொண்டு சென்ற காமராசரிடம், அவரது பாட்டி, “எல்லா பிள்ளைகளுக்கும் அதிகமாக பிரசாதம் கிடைத்திருக்க, உனக்கு மட்டும் ஏன் கொஞ்சமாக கிடைத்திருக்கிறது, நீயும் அவர்களைப்போன்று ஒரு அணாதானே கொடுத்தாய்?” என்று கேட்டார்.
“ஆமாம், வரிசை ஒழுங்கு இல்லாமல் போய்விட்டது. எல்லோருக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்காமல் தவறு செய்துவிட்டார்கள்” என்று காமராசர் வருந்தினார். அந்த நிகழ்வு அவரை பொதுவாழ்வில், எல்லோருக்கும் பொதுவாக கொடுக்கப்பட வேண்டியவை எல்லாம் அனைவருக்கும் சம அளவு கிடைப்பதை உறுதி செய்ய வைத்ததாம். அதுதான் பின்னாளில் அவர் அரசு பொறுப்பிற்கு வந்தபின்பு எல்லோருக்கும் சமமாக உரிமை வழங்கவும், நல்லாட்சி செய்யவும் உள்ளுணர்வை கொடுத்ததாக நினைவுபடுத்துகிறார்.
வரிசை நிலை சரியானால் வாழ்க்கை நிலையும் சரியாகும். இதை சிறுவயதிலேயே உணர்ந்தால் சிறப்பாக வாழலாம். தங்கள் செயல்களை சுத்தப்படுத்தி, வரிசைப்படுத்தி வெற்றியைத் தேட வேண்டும்.
செய்யும் செயல்களில் கடினமான முயற்சியிருந்தும் அதில் சுத்தமில்லையென்றால் அந்த முயற்சியினால் நல்ல பலன்கள் நிச்சயமாக கிடைக்காது. முயற்சியிருந்தும் முன்னேற முடியாத சூழல் உருவாகும்.
தரையில் அழுக்கு படிந்தால் அம்மா, துடைப்பம் கொண்டு துடைத்து சுத்தம் செய்வதை பார்த்திருப்பீர்கள், சிறுவர்களான நீங்கள் மனிதில் பதிந்திருக்கும் தீய பழக்கங்கள் எனும் அழுக்குகளை சொந்த முயற்சியால் துடைத்து எடுத்தால்தான் சுத்தமான செயல்கள் வெளிப்படும். வெற்றி வசப்படும்.
செயல்களை சுத்தமாக்க உணர்ச்சிக் கட்டுப்பாடு அவசியம். ஆசைகள், கோபங்கள் போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தினால் உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். சரியான ஆசைகளுக்கும், நியாயமான கோபங்களுக்கும் மட்டும் இடம் கொடுங்கள். அளவற்ற ஆசைகளையும், தீவிர கோபங்களையும் கட்டுப்படுத்துங்கள். சுத்தமாக்குங்கள். பின்னர் நீங்கள் நினைத்ததெல்லாம் நிச்சயம் நடக்கும். வெற்றி கிடைக்கும்.
-நல்லசிவம், குன்றத்தூர்.