search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை
    X
    குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை

    குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை

    குழந்தைகளின் உடல் வளர்ச்சி குறைபாட்டுக்கு பழக்கவழக்கங்களும், வாழ்வியல் முறையும், ஊட்டச்சத்து குறைபாடும் காரணமாக இருக்கலாம்.
    பெண் குழந்தைகள் ஒரு வயது முதல் பூப்பெய்தும் பருவம் வரை மாதந்தோறும் 2 முதல் 5 அங்குலம் வரை வளர்கிறார்கள். பூப்பெய்திய பின்பு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் உயரம் 4 அங்குலம் வரை அதிகரிக்கிறது. இளமைப் பருவத்தை எட்டும் வரை உடல் வளர்ச்சி கணிசமாக அதிகரித்துக்கொண்டிருக்கும். ஆனால் ஆண் குழந்தைகளை பொருத்தமட்டில் இளமைப்பருவத்தின் முடிவில் சட்டென்று வளர்ச்சி அடைந்துவிடுவார்கள். அதேவேளையில் சிறுவயதில் சராசரி உயரத்தை எட்ட முடியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தைகளின் உடல் வளர்ச்சி குறைபாட்டுக்கு பழக்கவழக்கங்களும், வாழ்வியல் முறையும், ஊட்டச்சத்து குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

    குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை:

    குழந்தைகள் வளரும் பருவத்தில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பும் அவசியம். பழங்கள், பச்சை காய்கறிகள், புரதம், முழு தானியங்கள், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைவாக கொடுக்க வேண்டும்.

    சரியான நேரத்தில் தூங்கவில்லை என்றால் அது உடல் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தூங்கும்போது வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன் வெளியாகும். போதுமான அளவு தூங்கவில்லை என்றால் வளர்ச்சியை தூண்டும் ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும். இரவில் சரியான நேரத்திற்கு தூங்க சென்று காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும்.

    குழந்தை பருவம் முதலே உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் தசைகள், எலும்புகளை பலப்படுத்துவதற்கும் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் உடற்பயிற்சி கைகொடுக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களின் சுரப்பும் அதிகரிக்க தொடங்கும்.

    நிற்பது, உட்காருவது, நடப்பது போன்ற செயல்களை சரியான முறையில் செய்ய வேண்டும். அவை தவறான முறையில் அமைந்தாலும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.
    Next Story
    ×