என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தில் ஒரு சில பெண்களுக்கு பல் பிரச்சனை உண்டாவது வழக்கம் தான். அதாவது கர்ப்பத்தின் போது அதிகரிக்கும் ஹார்மோன்களால் கிருமிகள் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. கர்ப்பிணிகள் தன் பற்களை தானாகவே பாதிப்புக்குள்ளாக்கி கொள்வதில்லை. கர்ப்பிணிகளின் பற்களை பொறுத்தே குழந்தைகள் பல் அமையும். கர்ப்பத்தின் போது எடுத்துக்கொள்ளும் கால்சியத்தின் அளவு என்பது குறைவாக இருக்குமெனில் குழந்தைக்கு தேவையான கால்சியத்தை அம்மாவின் எலும்பு தருகிறது.

    இருப்பினும், கர்ப்பத்தின் போது பெண்கள் சந்திக்கும் ஒரு சில பல் பிரச்சனைகள் பல வித பிரச்சனைகளுக்கு காரணமாகவும் அமைகிறது.

    ஒரு ஆராய்ச்சியின் கூற்றுப்படி கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பல் பிரச்சனை என்பது குறைப்பிரசவத்துடன் கூடிய குறைவான எடையை தருகிறதாம். இவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை குறைபாடு மற்றும் காது பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    கர்ப்பிணிகள் செய்ய வேண்டியது?

    1. ப்ளூரைடு டூத் பேஸ்ட் கொண்டு தினமும் இரண்டு முறை பல் துலக்குங்கள்.
    2. ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
    3. பல் மருத்துவரை சந்தித்து அவரிடம் அடிக்கடி ஆலோசனை பெற முயலுங்கள்.

    பல் பாதுகாப்பு பணியில் கர்ப்பம் என்பது பாதிக்கப்படலாம். ஓர் உதாரணத்திற்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு பல் மருத்துவர் X-கதிர்களை செலுத்திவிடக்கூடும். எனவே மிகவும் கவனமாக நீங்கள் இருந்திட வேண்டும். இந்த பல் பாதுகாப்பு X-கதிர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மருத்துவரிடம் முன்கூட்டியே கூறுவதன் மூலம் அவர் செலுத்தும் அளவு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்படும். அதனால் நீங்கள் கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் சென்றவுடன் சொல்லிவிட வேண்டியது மிகவும் அவசியம்.



    பல் பிரச்சனை வர என்ன காரணம்?

    1. கிருமி பிரச்சனை.
    2. வாந்தி எடுப்பதால் பல் இடுக்கில் அழுக்கு சேர்வது.
    3. இனிப்பு சாப்பிட்டு வாய் கொப்பளிக்காமல் இருப்பது.

    கர்ப்ப காலத்தில் கால்சியத்தை அதிகரிக்கும் உணவு:

    1. பால்.
    2. பாலாடைக்கட்டி.
    3. இனிப்பு இல்லாத தயிர்.
    4. சோயாப்பால் (கால்சியம் கொண்டது)

    கால்சியம் நிறைந்த வைட்டமின் D:

    வைட்டமின் Dஇல் தேவையான அளவில் கால்சியம் இருக்கிறது.

    1. பாலாடைக்கட்டி
    2. செறிவூட்டிய வெண்ணெய்.
    3. சால்மன் போன்ற மீன்.
    4. முட்டை. 
    நேர்முகத்தேர்வின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த விதிமுறைகளை கொஞ்சம் கடைபிடியுங்கள்...
    நேர்முகத் தேர்வின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதில் வெற்றி பெற வேண்டுமானால் இந்த விதிமுறைகளை கொஞ்சம் கடைபிடியுங்கள்...

    * சரியான நேரத்திற்கு நேர்காணல் அரங்கை அடைய, முன்கூட்டியே கிளம்பிச் செல்லுங்கள்.

    * தேவையான சான்றுகள், அடையாள அட்டைகள், அழைப்புக் கடிதங்களை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

    * நேர்காணல் அரங்கில் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் ஏற்படும் வகையில் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். அவசியமற்ற உடல்மொழிகளை காட்டாதீர்கள்.

    * தேர்வு அறைக்குள் அழைக்கப்படும்போது, அனுமதி பெற்று உள்ளே நுழையுங்கள். முகத்தில் புன்னகை தவழட்டும்.

    * தேர்வு அதிகாரி இருக்கையில் அமரச் சொன்ன பிறகு, நன்றி சொல்லி அமருங்கள்.

    * பதிலளிக்கும்போது தலையைச் சொறிவது, தேவையின்றி தலையை ஆட்டுவது, கைகளை ஆட்டுவது, கைகளை கட்டிக்கொள்வது என்றிருக்காமல் நிமிர்ந்திருந்து, நேர்த்தியான பதில்களை கூறுங்கள். இதற்கான பயிற்சிகளை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் கண்ணாடி முன்பே பேசிப் பழகலாம்.

    * தேர்வு அதிகாரியின் முகம்பார்த்து பதில் கூறுங்கள். கண்கள் அவசியமற்ற இடத்தில் உழன்றுகொண்டிருக்க வேண்டாம். தரையையும் நோட்டமிட வேண்டாம். குனிய வேண்டிய அவசியமும் இல்லை.

    * பதில்கள் மிகச்சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்கட்டும்.

    * கேள்விகள் புரியாவிட்டால் மீண்டும் கேட்பதில் தவறில்லை. அதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது.

    * முகத்தில் மலர்ச்சியும், பேச்சில் ஆர்வமும் தொனிக்க வேண்டும். குரலில் பணிவு தேவை. எரிச்சல், கோபம் தவிர்த்துவிடுங்கள்.

    * தேர்வு எதிர்பார்த்த மாதிரி அமையாவிட்டால், அதிகாரியிடம் விவாதம் செய்ய வேண்டாம். உரிய மதிப்பளிக்கத் தவறாதீர்கள்.

    இந்த வெற்றி விதிகள் உங்கள் வாழ்க்கைப் பாதையை வகுத்துத் தரும் என்பதில் ஐயமில்லை! 
    மகாராஷ்டிராவில் மோதகத்தை பொரித்து, விநாயகருக்கு படைப்பார்கள். இந்த வருடம் விநாயகருக்கு எப்போதும் செய்யப்படும் கொழுக்கட்டையை மட்டும் செய்யாமல், சற்று வித்தியாசமாக மோதகம் செய்து படைக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்
    மைதா மாவு - 1/2 கப்
    நாட்டுச்சர்க்கரை - 1 கப்
    தேங்காய் - 1 கப் (துருவியது)
    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
    நெய் - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)



    செய்முறை:

    கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பௌலில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து, நன்றாக மூடி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

    இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சூப்பரான தேங்காய் வெல்ல மோதகம் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கேழ்வரகில் கார கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராகி (கேழ்வரகு) மாவு - 2 கப்,
    அரிசி மாவு - ஒரு கப்,
    பச்சை மிளகாய் - 4,
    வெங்காயம் - ஒன்று,
    கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:


    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேழ்வரகு மாவு, அரிசி மாவை சேர்த்து வெறும் கடாயில் சூடுபட வறுக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு புரட்டவும்.

    உப்பு சேர்த்துக் கிளறவும்.

    தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதி வந்தவுடன் மாவு சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறவும். கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும்.

    ஈரக் கையினால் மாவை சிறிது எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி வைக்கவும். தயாரித்தவற்றை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    சத்து நிறைந்த கேழ்வரகு கார கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தரமில்லாத பொருட்களால் ஏற்படும் சருமத்தின் பாதிப்பினைத் தவிர்க்க இயற்கை நமக்கு பல நல்ல பொருட்களை அளித்துள்ளது. அதில் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய்.
    உடல் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களிலும், மேக்கப் எனப்படும் அழகு சாதனப்பொருட்களிலும் ரசாயன கலவைகள் உள்ளன. இவை சருமத்தின் மூலம் ரத்தத்தில் கலக்கின்றன என்பது ஆய்வின் கூற்று. இவை அனைத்து சுகாதார பொருட்களுக்கும் அலங்காரப் பொருட்களுக்கும் கண்டிப்பாய் பொருந்தாது. அநேக தரமான பொருட்கள் நம்மிடையே உள்ளன. இங்கு குறிப்பிடப்படுவது எல்லாம் தரமில்லாத பொருட்களால் ஏற்படும் பாதிப்பினைப் பற்றியே.

    இத்தரமில்லாத பொருட்களால் ஏற்படும் பாதிப்பினைத் தவிர்க்க இயற்கையே நமக்கு பல நல்ல பொருட்களை அளித்துள்ளது. அதில் ஒன்றுதான் தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயினை சமையலில் உபயோகப்படுத்துங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    உடல் ஆரோக்கியத்திற்கு உடலுக்கு ‘மசாஜ்’ செய்வதும் பரிதுரைக்கப்படுகின்றன. அதிலும் தேங்காய் எண்ணெய் கொண்டு உடலில் மசாஜ் செய்வது வலி நீக்கவும், உடல் வீக்கத்தினைக் குறைக்கவும் உதவுகின்றது.

    உதடுகள் வெடிப்பு, வறண்டு விடுதல் இவற்றிற்கு விலை அதிகமான பொருட்கள் வாங்கி உபயோகிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயுடன் ஒரு சொட்டு நீர் கலந்து தடவி வந்தாலே போதும்.

    கர்ப்ப காலத்தில் அடிக்கடி வயிற்றில் தேங்காய் எண்ணெய் மிதமாய் தடவி குளிக்க பிரசவத்திற்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் வரிகள் வெகுவாய் குறையும் என இயற்கை வைத்தியம் வலியுறுத்துகிறது.



    வெயிலில் சென்று சருமம் வாடி வதங்கினால் சிறிது தேங்காய் எண்ணெய் தடவுங்கள். வெயில் எரிச்சல் அடங்கும். கொலஜன் நன்கு உருவாகி சருமத்தினை இளமையாக வைக்கும்.

    தேங்காய் எண்ணெக்கு கிருமி, பூஞ்சை பாதிப்பு தவிர்ப்பு ஆகிய குணங்கள் இயற்கையிலேயே இருப்பதால் தான் இதனை உடலில் தடவி குளிக்கச் சொல்கிறார்கள்.

    தலை வறண்டு இருந்தால் அதிக சரும பாதிப்புகள் ஏற்படலாம். தலைக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு பராமரிப்பது பரிந்துரைக்கப்படுகின்றது. இமை, நகம் இவற்றினை வறட்சியில் இருந்து பாதுகாக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

    வெளியில் செல்லும்போது மேக்கப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது பஞ்சில் தேங்காய் எண்ணெய் தொட்டு முகம் முழுவதும் தடவி மேக்அப்பினை எடுத்து விடலாம். பின்னர் முகத்தினை நீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளலாம். இது மிகச் சிறந்த சரும பாதுகாப்பாக அமையும்.

    சில சொட்டு தேங்காய் எண்ணெய், சில சொட்டு நீர் கலந்து குளித்த பின் உடலில் தடவலாம். அதிக காரணமான பொருட்களை உபயோகிக்காமல், சரும, முடி ஆரோக்கியத்திற்காக அதிக செலவு செய்யாமல் எளிதாய் பல நன்மைகளைத் தரும் தேங்காய் எண்ணெயினை இனி பயன்பாட்டில் கொண்டு வருவோமாக.
    மத்யம பிராணாயாமத்தில் நுரையீரலின் நடுப்பாகம் நன்றாக விரிவடைந்து அதிகளவு காற்று உட்செல்கிறது. அப்பகுதியில் தோன்றும் கோளாறுகளை நீக்குகிறது.
    செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். இரு முழங்கைகளையும் மடக்கி மார்பின் இருபக்கத்திலும் இரண்டு உள்ளங்கைகளையும் வைக்கவும். மூச்சை முழுவதுமாக இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும்.

    மூச்சை இரு நாசிகளின் வழியாக நிதானமாகவும், ஆழமாகவும் இழுத்து ஓரிரு வினாடிகள் நிறுத்தி பிறகு நிதானமாக இரு நாசிகளின் வழியாக வெளியே விடவும். இப்படி தொடர்ந்து 3 முதல் 6 முறை செய்யவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும்.

    மூச்சை இழுக்கும் போது, மார்புப் பகுதியை விரிவடையச் செய்யவும். மூச்சை வெளியே விடும்போது மார்புப் பகுதியை சுருக்க வேண்டும். இப்பயிற்சியின் போது வயிற்றை சுருக்கக் கூடாது. இந்தப் பயிற்சியை 3 முதல் 6 சுற்று பயிற்சி செய்யவும். பிறகு கைகளை கீழே இறக்கி சில வினாடிகள் ஓய்வு பெறவும். பிறகு ஆத்ய பிராணாயாமம் செய்யவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்:
    மார்புப் பகுதி மற்றும் சுவாச இயக்கத்தின் மீதும், அனாவித சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயன்கள்: மத்யம பிராணாயாமத்தில் நுரையீரலின் நடுப்பாகம் நன்றாக விரிவடைந்து அதிகளவு காற்று உட்செல்கிறது. அப்பகுதியில் தோன்றும் கோளாறுகளை நீக்குகிறது. நுரையீரலின் நடுப்பகுதி வலுப்பெறுகிறது. 
    சிலர் எந்நேரமும் செல்போனில் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். இவை ஆரோக்கியமற்ற பழக்கங்களாகவும் காலப் போக்கில் மனநலம், உடல் நலம் இவற்றினை பாதிக்கும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
    எந்த ஒரு பழக்கத்திற்கும் ஒருவர் தன்னை அடிமைப்படுத்திக் கொள்ள கூடாது. சிலருக்கு காப்பி குடிக்காவிட்டால் தலையே உடைந்து விடும். சிலர் எந்நேரமும் கையில் செல்போனோ அல்லது ஏதாவது ஒன்றினை வைத்து விளையாடிக் கொண்டே இருப்பார்கள். யாரிடமும் பேச மாட்டார்கள். இவை ஆரோக்கியமற்ற பழக்கங்களாகவும் காலப் போக்கில் மனநலம், உடல் நலம் இவற்றினை பாதிக்கும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. சிலருக்கு தாம் இவ்வாறு சில பழக்கங்களில் அடிமைப்பட்டுள்ளோம் என்று கூட தெரியாது. நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளவும்.

    சிலர் விடாமல் எந்நேரமும் செல்போனை குடைந்து கொண்டே இருப்பார்கள். கண் சோர்ந்து தானே மூடும் வரை இந்த வேலையைச் செய்வார்கள். இப்பழக்கம் உடையவர்கள், இது மிகவும் ஆபத்தானது என்பதனை உணர்ந்து தானே முயற்சி செய்து வெளிவர வேண்டும். சிறிது நேரம் நல்ல புத்தகம் படியுங்கள். வெளியில் சென்று விளையாடுங்கள். செல்போனை அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்துங்கள். மணிக்கணக்கில் போனில் பேசுவதும் உடலுக்கு அநேகத்தீமைகளை அளிக்கும்.

    மிக முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறும்போது பலர் செல்போனை கையில் வைத்து பார்த்த படியே இருப்பார்கள். இது மற்றவரை மிகவும் மதியாத செயலாகி விடும். பிறருடன் பேசும் போது போனை தள்ளி வையுங்கள்.



    இதன் விளைவுகள் இவர்களை மிகவும் சோம்பேறிகளாகவும், உடல் நலம் அற்றவர்களாகவும் முன்பின் தெரியாதவர்களை செல்போன் மூலம் நண்பர் என்ற பெயரில் பழகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களாகவும் ஆக்கி விடுகிறது. என்பது சமீபத்திய ஆய்வின் கூற்று. எனவே இன்றே உங்களை சரி செய்து கொள்ளுங்கள்.

    முதல் நாள் இரவு சரியான தூக்கம் இல்லையா? படுக்கையில் புரண்டு படுத்து, பழைய வாழ்க்கை சம்பவங்களை யோசித்து வருந்தி பின்பு வெகு நேரம் சென்று தூங்குவர். சமீபத்திய ஆய்வுகள் இத்தகையோர் மறுநாள் அதிக இனிப்புகளை சாப்பிடுவதாகக் கூறுகின்றது. மேலும் இவர்களுக்கு உடல் வீக்கம் ஏற்படுகின்றது. காலப் போக்கில் இவர்களுக்கு எடை கூடுதல், சர்க்கரை நோய் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

    அமைதியான, ஆழ்ந்த துக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான ஒன்று. இரவு படுக்கப்போகும் முன் ஈ மெயில் பார்ப்பது, டி.வி. பார்ப்பது போன்றவை உடலில் ஸ்ட்ரெஸ் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இதற்கு பதிலாக நல்ல புத்தகத்தினை சிறிது நேரம் படித்தால் அமைதியான தூக்கம் ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதுவும் மெழுகுவர்த்தி ஒளி சிறந்தது என்கின்றனர். இவற்றினை கடை பிடிப்போமே.
    விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். இன்று இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - இரண்டு கப்
    வெல்லம் - ஒன்றை கப்
    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
    தண்ணீர் - நான்கு கப்
    துருவிய தேங்காய் - அரை மூடி



    செய்முறை :


    ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறவும்.

    ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.

    பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எளிய முறையில் சிரமமில்லாமல் நுரையீரலில் காற்றை நிரப்பி வெளிவிடுவதால் இந்த பயிற்சி சுக பூரக பிராணாயாமம் என்று அழைக்கப்படுகிறது.
    ஆஸ்துமா நோய்க்கு நாடி சோதனா, சுகபூரக, சவானா, கபாலபாதி, பஸ்த்ரிகா, விபாக, சதுர்முத்திரை மற்றும் தீர்க்க சுவாச முத்திரைக்கு பிராணாயாமம் பயனுள்ளவையாகும். சுகபூரக பிராணாயாமம் மற்றும் விபாக பிராணாயாமம் பற்றிய விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

    பெயர் விளக்கம்: ‘சுக’ என்றால் சந்தோஷமான என்றும், பூரக என்றால் நிறைவு என்றும் பொருள். எளிய முறையில் சிரமமில்லாமல் நுரையீரலில் காற்றை நிரப்பி வெளிவிடுவதால் இந்த பயிற்சி சுக பூரக பிராணாயாமம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி மணிக்கட்டுகளின் ஓரப்பகுதியை அந்தந்த முழங்கால் முட்டிகளின் மேல் வைக்கவும். இரு கை விரல்களாலும் சின் முத்திரையை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். இரு நாசிகளின் வழியாக மூச்சை வெளியே விடவும். நுரையீரலில் இருக்கும் காற்று முழுவதையும் வெளியேற்றவும்.

    இரு நாசிகளின் வழியாக ஒரே சீராக மூச்சுக்காற்றை ஆழமாகவும், நிதானமாகவும் உள்ளே இழுக்கவும். ஓரிரு வினாடிகள் மூச்சை அடக்கவும்.
    பிறகு அதே போல் இரு நாசிகளின் வழியாக மூச்சுக் காற்றை ஒரே சீராக நிதானமாகவும், ஆழமாகவும் வெளியே விடவும். இப்படி செய்தால் அது சுக பூரக பிராணாயாமத்தின் ஒரு சுற்று பயிற்சியாகிறது. மூச்சை உள்ளே இழுக்கும் போது மார்பையும், வயிற்றையும் நன்கு விரிக்கவும்.

    மூச்சை வெளியே விடும்போது மார்பை சம நிலைக்கும் அடி வயிற்றை ஓரளவு உள்ளுக்குள் சுருக்கவும். ஆரம்பப் பயிற்சியில் சில வாரங்கள் 10 முதல் 15 சுற்று பயிற்சி என செய்து வந்து தொடர்ந்து பயிற்சியினால் சுற்றுகளை அதிகப்படுத்திக் கொண்டு போய் 30 சுற்றுகள் வரை காலை, மாலை பயிற்சி செய்யலாம்.
    ஆரம்பத்தில் ஒரு முறை மூச்சுக்காற்றை உள்ளே இழுக்க 5 வினாடியும், வெளியேவிட 5 வினாடியும் என ஒரு சுற்றுக்கு 10 வினாடி காலம் எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து பயிற்சியில் நேரத்தை அதிகப்படுத்தி ஒரு சுற்றுக்கு 20 வினாடி கால அளவும், நன்கு பழகிய பிறகு 30 வினாடி காலமும் எடுத்துக் கொள்ளலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: சுவாச இயக்கத்தின் மீதும், மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு: மூச்சை உள்ளுக்குள் இழுக்கும் போதும் வெளியே விடும்போதும் மூச்சுக்காற்றில் சப்தம் வராதபடி செய்யவும்.

    பயன்கள்: நுரையீரல், இருதயம், வயிறு சுத்தமாக்கப்பட்டு அவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கியத்தை அடையும். ரத்தத்தில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு ரத்தம் தூய்மையாகும். மூச்சின் வேகமும், இருதயத்தின் வேகமும் குறைந்து சமநிலைக்கு வரும். நுரையீரல் இருதயம் சீராக இயங்கும். நுரையீரல், சுவாசக்குழாய் மற்றும் இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் நன்மை அளிக்கிறது. 
    கருப்பு உளுந்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    நம் நாட்டில் உளுந்தே அதிகளவில் பயன்படுத்தப்படும் பயறு வகையாகும்.

    கருப்பு உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

    உளுந்தில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்) மற்றும் மிகக்குறைந்தளவு விட்டமின் ஏ ஆகியவை உள்ளன. மேலும் இது தாதுஉப்புக்களான இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செம்புச்சத்து, மாங்கனீசு, செலீனியம் ஆகியவைற்றை அதிகளவு கொண்டுள்ளது. இதில் கால்சியம், பொட்டாசியம் போன்றவையும் காணப்படுகின்றன. இது அதிக நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் ஆகியவையும் உள்ளன.

    மருத்துவப் பண்புகள்


    உளுந்தானது கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உடல் உறிஞ்ச உதவுகின்றன. மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது. செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுப்பொருட்களை கழிவாக மாற்றி வெளியேற்றவும் இவை உதவுகின்றன. எனவே உளுந்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம்.

    உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன. நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் லிப்பிடுகளின் அளவுகளை கட்டுக்குள் வைக்கிறது.

    பொட்டாசியமானது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து இரத்த ஓட்டத்தை தடை ஏதும் இல்லாமல் சீராக நடைபெற உதவுகிறது. எனவே இதயம் சீராக செயல்பட உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.



    மனச்சோர்வு, நரம்பு பலவீனம், நினைவாற்றல் குறைவு, நரம்பு சம்மந்தமான குறைபாடுகளுக்கு உளுந்தானது முழுமையாக குணப்படுத்த இயலாவிட்டாலும் ஆறுதல் அளிக்கிறது. உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மனதிற்கும், உடலும் புத்துணர்ச்சியை அளிக்கின்றன. எனவே நரம்பு சம்பந்தமான குறைபாடுகளுக்கு உளுந்தினை உண்டு ஆறுதல் பெறலாம்.

    உளுந்தில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான தாதுஉப்புக்களைக் கொண்டுள்ள உளுந்தினை அடிக்கடி எல்லா வயதினரும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துகளுக்காக கர்ப்பிணிகள் தங்களது உணவில் அடிக்கடி உளுந்தினைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இரும்புச்சத்தானது கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. மேலும் இதில் உள்ள புரதச்சத்து, நார்ச்சத்து, போலேட்டுகள் போன்றவை கர்பிணிக்கும், குழந்தைக்கும் மிகவும் அவசியமனவையாகும். எனவே கர்ப்பிணிகள் உளுந்தினை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    உளுந்தானது உடலில் யூரிக் அமிலத்தின் அளவினை அதிகரிக்கச் செய்யும். எனவே கீல்வாதம், சிறுநீரகக்கற்கள் ஆகியவற்றால் பாதிப்படைந்தவர்கள் உளுந்தினைத் தவிர்ப்பது நலம். 
    சிறுதானியங்களில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசியில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 250 கிராம்
    கருப்பட்டி - 100 கிராம்
    தண்ணீர் - 1/8 டம்ளர்
    உப்பு - மிகவும் சிறிதளவு (ஒரு பிஞ்ச்)
    ஏலக்காய் - 4 எண்ணம்
    தேங்காய் - ¼ மூடி


     
    செய்முறை :

    வரகு அரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்து கொள்ளவும். அரிசியின் நிறம் மாறி வறுத்த வாசனை வந்ததும் இறக்கி ஆறயதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    கருப்பட்டியை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

    ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும்.

    தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

    அரைத்த வரகு அரிசியுடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

    அதனுடன் ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் தூளாக்கிய கருப்பட்டியைப் போட்டு 1/8 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைசல் கொதித்தவுடன் இறக்கி வடிட்டி வரகு அரிசி மாவில் ஊற்றி ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும்.

    இந்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.

    பிடித்த வைத்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான வரகு கருப்பட்டி கொழுக்கட்டை தயார்.

    விருப்பமுள்ளவர்கள் தேங்காயை பற்களாகக் கீறிப் போட்டு கொழுக்கட்டை தயார் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் சுக்குப் பொடி சேர்த்து கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் ஆண்களைவிட நிறைய விஷயங்களில் சிறப்பு வாய்ந்தவர்கள். அந்த வகையில் பெண்களை பளிச்சிட வைக்கும் 10 குணங்களைப் பார்க்கலாம்.
    பெண்கள் ஆண்களைவிட நிறைய விஷயங்களில் சிறப்பு வாய்ந்தவர்கள். அந்த வகையில் பெண்களை பளிச்சிட வைக்கும் 10 குணங்களைப் பார்க்கலாம்.

    1 எந்த விஷயத்தையும் பெண்கள் எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். கற்றல் திறன் எல்லோருக்கும் பொதுவானதுதான் என்றாலும், ஆண்களுக்குப் பொறுமை குணம் குறைவு. ஆகையால்தான், வகுப்புகளில் பெரும்பான்மை பெண்களே முதலிடம் பிடிக்கிறார்கள்.

    2 சுகாதார விஷயத்தில் பெண்கள் எப்போதும் பல படிகள் மேலே என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு வீட்டையோ, அலுவலகத்தின் குறிப்பிட்ட ஓர் இடத்தையோ பார்க்கும்போதே அந்த இடத்தில் இருப்பவர் ஆணா, பெண்ணா என்று சொல்லிவிடலாம். பெண்கள், தன்னைச் சுற்றியுள்ள எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள்.

    3 இன்டெர்வியூ என்றாலே எல்லாருக்கும் ஒரு பயம் வரும். பெண்களுக்கும் அந்த பயம் உண்டுதான். ஆனால், அதை வெளிக்காட்டாமல் கூலாக கையாள்வதில் வல்லவர்கள். அதனால்தான், செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள். அது மட்டுமா? அவர்கள் எந்த விஷயத்திலும் முன்தயாரிப்புடன் செல்வார்கள்.



    4 ரொம்ப மெச்சூர்டாக செயல்படுவதும் பெண்கள்தான். அவர்கள் தன்மானத்தைக் காத்துக்கொள்வதில் பெரும் பங்காற்றுவார்கள்.

    5 எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் தெளிவான உறுதிகொண்டவர்களாக தோற்றம் அளிப்பார்கள். ஆனால், ஆண்கள் கொஞ்சம் குழப்பவாதிகள். ஓர் செயலில் ஈடுபடுவதற்கு முன்னரே யோசித்து, அதற்கு தகுந்தபடி செயல்படுவதே பெண்களின் வெற்றிகளுக்குக் காரணமாக இருக்கிறது.

    6 பெற்றோர்கள் மீது அக்கறை செலுத்துவதில் பெண்களுக்கே முதலிடம் என்றால் மிகையாகாது. 36 சதவிகிதப் பெண்கள், பெற்றோர்களுக்கு மிகுந்த ஆதரவு அளிப்பார்கள். ஆனால், 16 சதவிகித ஆண்களே பெற்றோர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவார்களாம்.

    7 சேமிப்பு என்று வந்துவிட்டால், அதிலும் பெண்கள்தான் சிறந்தவர்கள். ஆண்களுக்கு அதில் பக்குவம் குறைவு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேக்கப், டிரெஸ்ஸிங், காஸ்மெடிக்ஸ் என்று பெண்கள் செலவு செய்தாலுமே, பிற்காலத் தேவைக்கும் பயன்படும் வகையில் பணத்தை சேமிப்பார்கள். ஆனால், ஆண்கள் இப்போதைக்கு இது என்பதிலேயே இருப்பார்கள். சேமிப்புக்கும் ஆண்களுக்கும் தூரம் அதிகம்.

    எந்த வேலையை எடுத்தாலும் அதில் சாதிக்கும் மனஉறுதி பெண்களுக்கு எப்போதும் உண்டு. இதுபோல இன்னும் நிறைய விஷயங்களில் பெண்கள் மேம்பட்டவர்கள். 
    ×