search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varagu rice karupatti kozhukattai"

    சிறுதானியங்களில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசியில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 250 கிராம்
    கருப்பட்டி - 100 கிராம்
    தண்ணீர் - 1/8 டம்ளர்
    உப்பு - மிகவும் சிறிதளவு (ஒரு பிஞ்ச்)
    ஏலக்காய் - 4 எண்ணம்
    தேங்காய் - ¼ மூடி


     
    செய்முறை :

    வரகு அரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்து கொள்ளவும். அரிசியின் நிறம் மாறி வறுத்த வாசனை வந்ததும் இறக்கி ஆறயதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    கருப்பட்டியை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

    ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும்.

    தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

    அரைத்த வரகு அரிசியுடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

    அதனுடன் ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் தூளாக்கிய கருப்பட்டியைப் போட்டு 1/8 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைசல் கொதித்தவுடன் இறக்கி வடிட்டி வரகு அரிசி மாவில் ஊற்றி ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும்.

    இந்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.

    பிடித்த வைத்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான வரகு கருப்பட்டி கொழுக்கட்டை தயார்.

    விருப்பமுள்ளவர்கள் தேங்காயை பற்களாகக் கீறிப் போட்டு கொழுக்கட்டை தயார் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் சுக்குப் பொடி சேர்த்து கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×