என் மலர்
ஆரோக்கியம்
குழந்தைகளுக்கு ஒவ்வாமை முதலில் வருவதற்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் பிரச்சனைகள், அல்ர்ஜி பிரச்னை இருக்கும், பெற்றோர் மூலமாக குழந்தைக்கு பிரச்சனை 50 சதவிகிதம் ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு ஒவ்வாமை முதலில் வருவதற்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று பரம்பரை காரணமாக வருவது. இன்னொன்று சுற்றுச்சூழல் பிரச்சனைகள், அல்ர்ஜி பிரச்னை இருக்கும், பெற்றோர் மூலமாக குழந்தைக்கு பிரச்னை 50 சதவிகிதம் ஏற்படுகிறது.
அதுபோல சில சுற்றுச்சூழல் காரணிகளும் அலர்ஜி ஆபத்தை அதிகரிக்கக்கூடும். 2013 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் உணவு அலர்ஜி பிரச்சனை 1997 மற்றும் 2011 க்கு இடையில் 3.4 சதவீதத்திலிருந்து 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில், 18 வயதிற்குட்பட்டவர்களிடையே தோல் ஒவ்வாமை 7.4 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு என்னென்ன அலர்ஜி பிரச்சனைகளை ஏற்படுத்தும் பார்ப்போம்.
1 பால் மற்றும் முட்டை அலர்ஜி
பால் மற்றும் முட்டைகள் சிறு குழந்தைகளிடம் ஏற்படும் மிகவும் பொதுவான ஒவ்வாமை ஆகும். பால் ஒவ்வாமையினால் மூச்சுத்திணறல், வாந்தி, தோலில் அரிப்பு மற்றும் செரிமான வரை பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். முட்டை அலர்ஜி பொதுவாக தோல் வெடிப்பு, தோலில் அரிப்பு, மூக்கில் அரிப்பு மற்றும் வாந்தியை ஏற்படுத்துகிறது.
2. வேர்க்கடலை அலர்ஜி
சில குழந்தைகளுக்கு வேர்க்கடலை அலர்ஜியை ஏற்படுத்தும். வேர்க்கடலை சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு தோல் அரிப்பு ஏற்படும். இப்படி ஏற்படும் அரிப்பு சில நேரங்களில் அதிக தோல் அழற்சியையும் ஏற்படுத்தும். பெற்றோர்கள் இதை கவனமாக பார்க்க வேண்டும்.
3. நட்ஸ் வகைகள் அலர்ஜி
இது பொதுவாக அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்படுவதல்ல. பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா போன்ற கொட்டை வகைகளை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தோல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது அனைத்து பருப்பு வகைகளுக்கும் பொருந்தாது. பெரியோர் எந்த பருப்பு வகைகளை குழந்தைகள் சாப்பிடும் பொழுது பிரச்சனைகள் ஏற்படுகிறது என பார்த்து அவைகளை தவிர்க்க வேண்டும்.
4. மீன் அலர்ஜி
பொதுவாக கடல் மற்றும் ஏரி மீன்கள் மற்றும் ஓடுகள் உள்ள கடல் உணவுகளான நண்டு, இறால், சிப்பி போன்றவை குழந்தைகளிடம் அலர்ஜியை ஏற்படுத்தும். மீன் மற்றும் ஓடுகள் உள்ள கடல் உணவுகளை சாப்பிடும் பொழுது அதில் உள்ள புரதங்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக செயல்படும்போது இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் வாந்தி, வீக்கம், தோலில் அரிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
5. சோயா ஒவ்வாமை
பொதுவாக இந்த ஒவ்வாமை குழந்தை பருவத்திலேயே தோன்றும். இதன் அறிகுறிகள் பொதுவாக வாயில் ஏற்படும் நமைச்சல், அரிப்பு மற்றும் புண்கள் ஆகும். சோயா ஒவ்வாமை ஏற்படும் போது சோயாவைக் கொண்டு தாயரிக்கப்படும் அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு இந்த பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
6. பருவகால ஒவ்வாமை
பருவகால ஒவ்வாமை ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குழந்தைகளை பாதிக்கிறது. இது ஏற்படும் பொழுது குழந்தைகளுக்கு நமைச்சல், கண்களில் தண்ணீர் நிறைந்து காணப்படுதல், மூக்கு ஒழுகுதல், இருமல், மூச்சுத்திணறல், தொண்டை புண் மற்றும் தோல் அழற்சி போன்றவை ஏற்படும்.
படை நோய் அல்லது தோல் அரிப்பு, தோலழற்சி , நமைச்சல் , தோல் தடிப்புகளும் பருவகால ஒவ்வாமைகளால் ஏற்படுகிறது. அதுபோல பல வாரங்கள் நீடிக்கும் சளி, ஜலதோஷம் அல்லது குளிர் அறிகுறிகள் உண்மையில் தொற்றுநோய்க்கு பதிலாக ஒவ்வாமையாக இருக்கலாம். எனவே இந்த பிரச்சனைகள் இருந்தால் உங்கள் குழந்தை மருத்துவரிடம் குழந்தையை காண்பியுங்கள்.
7. செல்லப்பிராணி ஒவ்வாமை
உங்கள் குழந்தைக்கு செல்லப்பிராணிகள் மூலமாக ஒவ்வாமை ஏற்படுவதை தெரிந்திருக்க மாட்டீர்கள். குறிப்பாக செல்லப்பிராணிகள் உரோமம் உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையை அதிகம் ஏற்படுத்தும்.”பூனை அல்லது நாயின் தோல் செல்கள், உமிழ்நீர், சிறுநீர், முடிகள் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
8. தோல் ஒவ்வாமை
பருவகால ஒவ்வாமை, செல்லப்பிராணிகள், உணவு, மருந்து மற்றும் பலவற்றால் தோலில் அழற்சி, அரிப்பு,தோல் வெடிப்பு, தோல் தடித்தல் போன்ற பிரச்சனைகள் குழந்தைகளின் தோலில் ஏற்படலாம். தோல் நோய் சில நேரங்களில் வைரஸ்கள் அல்லது தொற்றுநோய்களால் ஏற்படலாம். எனவே குழந்தைகள் தோல் நோயால் அவதிப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா, கூடாதா என்ற சந்தேகம் உலகளாவிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் கொலைகார வைரஸ் என்று உலகமே குற்றம் சுமத்துகிறது.
காரணம், இதுவரை உலகமெங்கும் 76½ லட்சம் பேருக்கு அதிகமாக பாதித்து இருக்கிறது. கிட்டத்தட்ட 4½ லட்சம் பேர் உயிர்களைப் பறித்திருக்கிறது. இன்னும் அதன் ஆதிக்கம் உலகநாடுகளில் எல்லாம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
கொரோனா வைரசுக்கும் தாய்மை...
கொரோனா வைரசிடம் இருந்து உலகமே ஒரே நேரத்தில் விடுதலைப் போராட்டம் நடத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல.
ஆனால் இந்த கொரோனா வைரசுக்கும் கொஞ்சம் தாய்மை இருக்கிறதுபோல.
ஆமாம், அதனால்தான் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தாலும், அவர்கள் தாய்ப்பால் தந்தால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தாது என தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா, கூடாதா என்ற சந்தேகம் உலகளாவிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இப்போது இதற்கு உறுதியான பதில் கிடைத்திருக்கிறது. தரலாம் என்பதே பதில்.
இந்தப் பதிலை சொல்லி இருப்பது உலக சுகாதார நிறுவனம்.
ஊக்குவிக்கலாம்..
இந்த அமைப்பின் தலைவரான டாக்டர் டெட்ரோஸ் அதனோம், நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நிருபர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் இது பற்றி கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்று சந்கேத்துக்கு இடமான தாய்மார்கள் அல்லது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை ஊக்குவிக்க வேண்டும். உடல்நிலை மிகவும் மோசமானால் தவிர, மற்றபடி அவர்களை குழந்தைகளிடம் இருந்து பிரித்து வைக்கக்கூடாது” என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
நிபுணர் கருத்து
அவர் மட்டுமல்ல, தாய்மைப்பேறு, பிறந்த குழந்தை, குழந்தை, மற்றும் இளம்பருவ சுகாதார இயக்குனர் டாக்டர் அன்சூ பானர்ஜியும் இதுபற்றி குறிப்பிடத்தவற வில்லை.
அவர் கூறும்போது, “இதுவரை தாய்ப்பாலில் நேரடியாக கொரோனா வைரசை கண்டுபிடிக்க முடியவில்லை. தாய்ப்பாலில் ஆர்.என்.ஏ. கொஞ்சம் இருக்கிறது. ஆனால் நேரடி வைரஸ்களை இதுவரை எங்களால் தாய்ப்பாலில் காண முடியவில்லை. எனவே தாய்மார்களிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து இதுவரை நிறுப்படவில்லை” என தெரிவித்தார்.
விதிமுறைகள் உண்டு...
தொடர்ந்து டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கூறிய கருத்துக்கள் இவை:-
தாய்ப்பால் ஊட்டுகிற தாய்மார்களிடம் இருந்து அவர்களுடைய குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என்பது பற்றி மிக கவனமாக உலக சுகாதார நிறுவனம் ஆராய்ந்து இருக்கிறது.
குழந்தைகளுக்கு கொரோன வைரசின் ஆபத்து குறைவாக இருப்பதை நாங்கள் அறிவோம். ஆனால் பிற எண்ணற்ற நோய்கள் தாக்கும் ஆபத்து உண்டு. ஆனால் அதையெல்லாம் தாய்ப்பால் தடுத்து நிறுத்தி விடுகிறது.
எங்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் சொல்வது என்னவென்றால், கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்தை விட , தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படுகிற நன்மைகள்தான் அதிகம்.
- இப்படி சொல்கிறார் டாக்டர் டெட்ரோஸ் அதனோம்.
உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று உள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு சில விதிமுறைகளையும் வகுத்து அளித்து இருக்கிறது. அவை இவைதான்-
* தாய்மார் நல்ல சுவாச சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
* கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தையை தொடுவதற்கு முன்பும், தொட்ட பின்பும் கைகளை நன்றாக சுத்தம் செய்து விட வேண்டும்.
* தன்னைச்சுற்றியுள்ள இடங்களை மேற்பரப்புகளை எப்போதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு கொஞ்சம் கூட தயக்கமே வேண்டாம். இதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் உறுதியான வழிகாட்டுதல்.

‘மத்த நாட்கள்ல நேரமே இருக்கறது இல்லை; நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறதே அபூர்வம்.. ஞாயித்துக் கிழமைதான்... ஒன்னா சாப்பிடுவோம்... ஒன்னா வெளியில போயிட்டு வருவோம்.. அன்னைக்கு முழுக்க குழந்தைங்களோட மட்டும்தான் செலவு செய்வோம்...’
உலகம் முழுவதும் மனித மனங்கள் அநேகமாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. மனிதர்களின் முன்னுரிமைகள், ரசனைகள், விருப்பு வெறுப்புகளில் பெரிய வித்தியாசம் இல்லை. அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்கா, ஆசியா வரை அப்படித்தான்.
எந்த பள்ளிக்கு போனாலும் சில கேள்விகளை நான் தவறாமல் கேட்பதுண்டு. அதில் ஒன்று உங்களுக்கு பிடித்த கிழமை எது?. மிகுந்த வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் பிடிப்பது எங்கேயும், எப்போதும் ஞாயிற்றுக் கிழமை!
இதே போன்று, அதிகம் பிடிக்காத கிழமை என்றால், இங்கும் போட்டி கடினமாக இல்லை. முதல் இடத்தில் நிற்பது திங்கட்கிழமை!
‘ஞாயிற்றுக்கிழமை வருவதும் தெரியல; போறதும் தெரியலை... வே...கமா ஓ...டிப்போயிருது.., திங்கட்கிழமை ஏன்தான் வருதோன்னு இருக்குது...’ பலரது முகங்கள் ஞாயிறு மதியமே கூட வாடிப் போய்விடும். ‘அடுத்த நாள் பாதிப்பு!’
இந்த போக்கு நம் நாட்டில் மட்டும்தான் இருக்கிறதா..? இல்லவே இல்லை. உழைப்புக்கு பெயர் பெற்ற நாடுகளில் கூட மனிதர்கள் விடுமுறை நாட்களையே அதிகம் நேசிக்கிறார்கள். ஏன் அப்படி...? முக்கிய காரணங்கள் இரண்டு. முதலில் குடும்பம். அடுத்து பணிச்சுமை. என்னதான் நாகரிக வளர்ச்சி, மாறுபட்ட கலாசாரம் என்றெல்லாம் சொன்னாலும், எல்லா மனிதர்களுக்கும் பாச உணர்வு இயல்பாகவே, குடும்பத்தில்தான் அமிழ்ந்து கிடக்கிறது.
ஒட்டுதல், உளமார பழகுதல், சுயமாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளல், ஆதரவாக நிற்றல் ஆகியன எல்லோருக்கும் பொதுவான குண நலன்கள். ஆனால் இதனை எல்லோரும் எல்லோருடனும் சமமாக வெளிப்படுத்துவது இல்லை. குறிப்பாக தனது கவலைகள், தோல்விகளை யாரும் பிற உறவுகளுக்கு மத்தியில் காண்பித்துக் கொள்ள விரும்புவதே இல்லை. இவற்றுக்கு எல்லாம் வடிகால் குடும்பம் மட்டுமே. அதனால்தான், குடும்பத்துடன் செலவிடுகிற நேரத்தை மனிதர்கள் ஆனந்தமாய் வரவேற்கிறார்கள்.
‘மத்த நாட்கள்ல நேரமே இருக்கறது இல்லை; நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிறதே அபூர்வம்.. ஞாயித்துக் கிழமைதான்... ஒன்னா சாப்பிடுவோம்... ஒன்னா வெளியில போயிட்டு வருவோம்.. அன்னைக்கு முழுக்க குழந்தைங்களோட மட்டும்தான் செலவு செய்வோம்...’
இதை சொல்கிறபோதே உணர்ச்சிகள் வந்து கொட்டும் பாருங்க... இதுதான் ஒவ்வொரு மனிதனின் இயல்பான சுயமான வடிவம். இயற்கையில் மனித மனம், ஈரம் நிறைந்தது; பிறரை அரவணைத்து செல்லக்கூடியது. அந்த ‘பிறர்’ யார்..? அதில் மற்ற பலரும் ஏன் வரக் கூடாது..? இது மட்டும் சாத்தியம் ஆனால், மனிதர்களுக்குள் வெறுப்பு, விரோதம் எல்லாம் மறைந்தே போகும். நம் நாட்டின் ஆகச் சிறந்த மிக வலிமையான ‘நிறுவனம்’ எது...? குடும்பம். எதற்கும் வளைந்து கொடுக்காத ‘ஆயுதம்’ எது..? குடும்ப உறவுகள். என்றைக்கும் மாறாத நிலையான உண்மை இது.
மேற்கத்திய நாடுகளில், இந்த அளவுக்கு வலுவாக இல்லை என்றாலும், முக்கியமான சமூக அலகாகத் தொடர்ந்து வருவது குடும்பம் மட்டுமே. அதனால்தான் வார இறுதி நாட்கள், பண்டிகைகள் மற்றும் ‘சிறப்பு’ நாட்கள் என்றால், குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பதையே உலக மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு பெரிதும் உதவுவது ஞாயிற்றுக்கிழமை. அடுத்து வருகிறது பணிச் சுமை, மன உளைச்சல். எவ்வளவு ஆனந்தமான ஆரோக்கியமான பணிச் சூழல் இருந்தாலும், அலுவலகம் என்பது அலுவலகம்தான். ‘வீடு’ ஆகி விடாது.
விதிகள், கட்டுப்பாடுகள், ‘பதில் சொல்ல வேண்டிய’ பொறுப்புகள், மேலதிகாரிகள், வாடிக்கையாளர்கள்... எல்லாம் சேர்ந்தது பணியிடம். அங்கே ‘சுகமாக’ இருக்கலாம்; ‘சுதந்திரமாக’ இருத்தல் இயலாது. தான் எங்கே தானாகவே இருக்க முடிகிறதோ... அங்குதான் மனம் லயிக்கும். எனக்கு மட்டும் வேண்டிய அளவு பணம் இருக்குன்னு வச்சுக்கயேன்... இங்கெல்லாம் நான் வரவே மாட்டேன்...’ என்று நினைக்காத நபர்கள், நம்மில் எத்தனை பேர்..? ஏதோ ஒரு தேவை, நிர்பந்தம் இருக்கிறது; அதனால் அலுவலகம் செல்கிறோம்; சம்பாதிக்க’ வேண்டி இருக்கிறது; அதனால் வேலைக்கு போகிறோம். கட்டாயத்தின் பேரில் செய்கிற எந்த காரியமும் மகிழ்ச்சியை தராது.
அந்த காரியத்தின் பயனை கொண்டுவந்து அனுபவிக்க வேண்டும். அப்போது தானாக மனம் குதூகலிக்கிறது. இதற்கு வழி கோலுகிறது ஞாயிற்றுக் கிழமை.
‘வேலை செய்யாமல் சோம்பேறியாக பொழுதை கழிக்கிற நாளை கொண்டாடுவது தவறு; எப்போது நாம் வேலை நாட்களை விரும்ப தொடங்குகிறோமோ..., அப்போதுதான் நாம் முன்னேறுவோம்...’ இப்படி எல்லாம் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். அறிவார்ந்த சொற்கள்தாம். ஆனால், ஆரோக்கியமானது அல்ல.
பணியில் இருந்து விடுதலை என்பது அவ்வப்போது கிடைக்கிற வலி நிவாரணம். அதானால்தான் வேலை நிறுத்தம், பணிக்கு வராதீர்கள் என்று சொன்னால் தொழிலாளர்கள், ஊழியர்கள், அலுவலர்கள் என்று அத்தனை பேரும், முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். ‘நூறு சதவீத வெற்றி’ இதனால்தான் சாத்தியம் ஆகிறது.
சற்றே மாறுபட்டு இப்படி சொல்லி பாருங்கள்: ‘கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு நாட்களுக்கு இங்கேயே பணியில் இருப்போம்.. யாரும் வீட்டுக்குப் போக மாட்டோம்..!’ என்று, சர்வ சத்தியமாக யாரும் ஆதரிக்க முன்வர மாட்டார்கள். ஞாயிறு தாக்கம் அத்தனை வலிமையானது. இதிலே சரி, தவறு என்று எதுவும் இல்லை. வீடு இயல்பானது; அலுவலகம் திணிக்கப் படுவது. மனம் முன்னதை விரும்புகிறது. அவ்வளவுதான்.
ஒரே ஒரு வேண்டுகோள்தான். மதுவில் இருந்து ஊர் சுற்றுதல் வரை பல்வேறு பொழுதுபோக்கு வழிகள் உள்ளன. இவை எதுவும் விடுமுறையை பயனுள்ளதாக ஆக்காது. மறுநாள் பணிக்கு ஊக்கத்தை அளிக்காது.
குடும்பத்துடன் ஆரோக்கியமாய் ஆனந்தமாய் செலவிட்டுப் பாருங்கள். ஞாயிற்றுக் கிழமையின் ஆனந்தம், அடுத்து ஆறு நாட்களுக்கும் உடன் வரும். வேறு என்ன வேண்டும்...?
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

‘செல்போன்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?’ -இது நம்மில் பலருக்குள் உள்ள கேள்வி. இதற்கான பதில், ‘ஆம்’ என்பதே என்கிறார்கள், நிபுணர்கள்.

நீங்கள் உங்களுடன் கொண்டு செல்லும் பொருட்களில் செல்போன்கள்தான் மிகவும் அசுத்தமானவை என்கிறார், கனடா டொரான்டோ பல்கலைக்கழக தொற்றுநோயியலாளர் கோலின் பர்னஸ்.
நீங்கள் வெளியே செல்லும்போது, கடைகளில் பல இடங் களைத் தொட வேண்டியுள்ளதால், கொரோனா வைரசை உங்கள் போனுக்கு கடத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
அப்படி வெளியே இருக்கும்போதே நீங்கள் யாருடனாவது போன் பேசுகிறீர்கள் என்றால், அப்போது போன் உங்கள் முகத்தைத் தொடுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க, முகத்தைத் தொடாமல் இருப்பதன் அவசியத்தை சுகாதாரத் துறையினர் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் மற்ற பல வைரஸ்களைப் போலவே செல்போன் போன்ற பொருட்களின் பரப்பில் பல மணி நேரம் வரை உயிருடன் இருக்கக்கூடியது என்று கூறும் ஒன்டாரியோ தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கோலின் லீ, முகத்தில் எந்தப் பொருளும் படக் கூடாது என்பதுதான் இங்கு முக்கியமான விஷயம் என்கிறார்.
கொரோனா வைரஸ், செல்போன் பரப்பில் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்று தெரியாது எனத் தெரிவிக்கும் டொரான்டோ பொது மருத்துவமனையின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஐசக் போகோ, 2 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரம் வரை இந்த வைரஸ் செல்போன் பரப்பில் உயிருடன் இருக்கலாம் என்கிறார்.
எனவே, அவ்வப்போது நம் கன்னத்தோடு இழைந்து உறவாடுகிற செல்போன்களை அடிக்கடி சுத்தம் செய்துகொள்வதே நல்லது.

இப்போது வெளியில் செல்லும் போது உண்டாகும் மாசு, தூசிகளே கூந்தலை வலுவிழக்க போதுமானதாகிறது. தினமும் கூந்தலுக்கு பத்து நிமிடங்கள் ஒதுக்கினாலே உங்கள் கூந்தல் எப்போதும் வலுவாக இருக்கும்.
சிலர் கூந்தல் நன்றாகவே இருக்கு இதற்கு தனி பராமரிப்பு தேவையே இல்லை என்று நினைத்து விட்டுவிடுவார்கள். இவை கூந்தலின் வலுவை கெடுத்துவிடும். இப்போது வெளியில் செல்லும் போது உண்டாகும் மாசு, தூசிகளே கூந்தலை வலுவிழக்க போதுமானதாகிறது. தினமும் கூந்தலுக்கு பத்து நிமிடங்கள் ஒதுக்கினாலே உங்கள் கூந்தல் எப்போதும் வலுவாக இருக்கும்.
தலைக்கு எண்ணெய் வைக்கும் போதெல்லாம் நீங்கள் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி கூந்தலுக்கு மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெயை மேலாக தேய்க்காமல் விரல்களால் தொட்டு விரல்களை கூந்தலில் நுழைத்து ஸ்கால்ப் பகுதி வரை நன்றாக கூந்தலுக்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். தினமும் காலை அல்லது இரவு நேரத்தில் செய்தால் போதுமானது. கூந்தலுக்கு எண்ணெய் வைத்தால் முடி பிசுபிசுப்பு அதிகரிக்குமே என்று நினைப்பவர்கள் அதிக எண்ணெய் வைக்காமல் விரல்களால் தொட்டு மசாஜ் செய்தால் கூட போதுமானது. இப்படி செய்வது கூந்தல் வளர்ச்சிக்கும் வேர்க்கால்களுக்கும் உறுதுணையாக இருக்கும். மன அழுத்தத்தை குறைத்து ரிலாக்ஸாக வைக்க கூடுதலாக உதவும்.
பார்லர் சென்று தான் கூந்தலுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருக்கும் போதும் நீங்களே கூட செய்து கொள்ளலாம். உயர் ரக ஆயில் வாங்கி பயன்படுத்த வெண்டிய அவசியமில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் கூட போதுமானது. மாதம் ஒருமுறை எண்ணெயை இலேசாக சூடு செய்து உச்சந்தலை முதல் ஸ்கால்ப் நுனி வரை தடவி விடவும். பிறகு சீப்பு கொண்டு கூந்தலை நன்றாக 100 முறையாவது சீவிவிட வேண்டும்.
ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வலுவிழக்காமல் பாதுகாக்கப்படுகிறது. கூந்தலில் வெடிப்பு, பிளவு உண்டாகாமல் தடுக்கப்படுகிறது. கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதனால் முடி உதிர்வு குறைகிறது. கூந்தலை வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது. அதிகம் மெனக்கெட வேண்டாம் மாதம் 4 முறை போதும்.
வாரம் ஒருமுறை தலைக்கு குளித்தாலும் கூட தலையில் தூசி இல்லாமல் அழுக்கில்லாமல் வைத்துகொள்ள வேண்டும். இல்லையெனில் பொடுகு, பேன், முடி உதிர்வு போன்றவை உண்டாக்கும். தலை குளியலோடு கூந்தல் வளர்ச்சிக்கு வேண்டிய பராமரிப்பையும் செய்துவிடுங்கள். இதற்கென தனி பராமரிப்பு தேவையில்லை.
தலைக்கு குளித்ததும் கூந்தலுக்கு வலு கொடுக்க வேண்டுமே. அதனால் அரிசி கழுவிய நீரை கொண்டு தலையை அலசுவது முடிக்கு போஷாக்கும், வலுவும் கொடுக்கும். இதே போன்று உருளைக்கிழங்கு நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டும் அலசலாம்.
முடி அழுக்கை நீங்கதான் முடிக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்துவது உண்டு. தற்போது கூந்தல் உதிர்வுக்கு, கூந்தல் நுனி வெடிப்புக்கு, கூந்தல் வறட்சிக்கு, கூந்தல் வறட்சிக்கு என்று தனித்தனியாக ஷாம்புவை பயன்படுத்துவது உண்டு. அதோடு நறுமணத்துக்காகவும். இப்படி கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை அவ்வபோது மாற்றி மாற்றி பயன்படுத்துவதால் கூந்தலுக்கு நன்மை கிடைக்காது.
முடி வளர்ச்சிக்கு எப்போதும் ஒன்றை மட்டும் தேர்வு செய்யுங்கள். இயன்றவரை கெமிக்கல் இல்லாதவையாக இருக்கட்டும். இந்த நான்கையும் தொடர்ந்து செய்தாலே முடி ஆரோக்கியமாக பாதுகாக்கப்படும்.

பிரசவ வலியையும், பொய் வலியையும் குறித்து ஓரளவேனும் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். வலி ஏற்படும் போது உண்டாகும் சில அறிகுறிகள் வைத்து அவை பிரசவ வலியா என்னவென்பதை அறிந்துகொள்ளலாம்.
பேறுகாலம் முழுவதும் மனதளவிலும் உடலளவிலும் பெண்கள் எந்தவிதமான பாதிப்பும் அடையாமல் இருந்தால் பிரசவ நேரமும் மகிழ்வானதாகவே அமையும். இன்றும் சில கருவுற்ற பெண்கள் பிரசவ வலியை என்னவென்று அறியாமல் வயிற்றைச் சுற்றி சற்று இறுக்கிப்பிடித்தாலும் அது பிரசவ வலியோ என்று அச்சம் கொள்கிறார்கள். கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவக்காலம் நெருங்கும் போது பிரசவ வலி குறித்தும் பிரசவ வலியாக இருக்குமோ என்று நினைகும் பொய் வலி குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.
மருத்துவர் கொடுத்த பிரசவ நாளை எதிர்ப்பார்க்கும் போதே மனம் முழுக்க மகிழ்ச்சியும், ஒரு வித பரவசமும் அதற்கேற்ப மறுபுறம் பயமும் கலந்தே எதிர்நோக்கியிருப்பார்கள். பிரசவக்காலத்தைக் கடப்பதை விட அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது பிரசவிக்கும் நேரம். அதனால் தான் பெண்கள் பிரசவம் மறு ஜென்மம் என்று சொல்வார்கள்.
பிரசவ வலியையும், பொய் வலியையும் குறித்து ஓரளவேனும் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். வீட்டு பெரியவர்கள், மருத்துவரிடம் பரிசோதனை செல்லும் போது பிரசவ வலி குறித்து கேட்டு அறிந்து கொள்வதும் முக்கியம். வலி ஏற்படும் போது உண்டாகும் சில அறிகுறிகள் வைத்து அவை பிரசவ வலியா என்னவென்பதை அறிந்துகொள்ளலாம்.
கர்ப்பக்காலத்தில் பொதுவாகவே வயிற்றைச் சுற்றியிருக்கும் தசைகள் பிரசவக் காலத்துக்காக தயார்படுத்திக்கொள்ள தொடங்கும். அப்போது ஏற்படும் வலியை 6 அல்லது 7 ஆம் மாதத்திலிருந்தே உணரதொடங்கலாம்.
பிரசவத்துக்கு கொடுத்திருக்கும் நாளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரம் முன்னதாகவே வலியில் ஒரு கவனத்தை வைத்திருங்கள். பிரசவ வலியாக இருந்தால் முதுகின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கும். பிறகு அந்த வலி சிறிது சிறிதாக வயிற்றின் முன்பக்கமாக வந்து அடிவயிற்றில் வலிக்க தொடங்கும். இப்படி ஒரு வலியை உணர்ந்தால் அது பொய் வலி அல்ல என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
வலியோடு பிறப்புறுப்பிலிருந்து வெள்ளைப்போன்ற திரவம் கசிதலும் அதைத் தொடர்ந்து இரத்தப்போக்கும் உண்டானால் அதுவும் பிரசவ வலியை உறுதி செய்கிறது. பிரசவ வலியாக இருந்தால் வலியானது தொடர்ந்து இருக்கும். பிறகு வலியே இருக்காது. மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வலியை உண்டாக்கும். கருப்பை சுருங்கி விரிய விரிய வலியும் மாறுபடும். முதுகு பகுதியில் தொடங்கி முன்புறம் கீழ் வயிறு, தொடை வர பரவும்.
சுளீர் சுளீரென்று வலியானது குறித்த இடைவெளியில் விடாமல் இருக்கும். நேரம் செல்ல செல்ல வலியோடு இந்த இடை வெளிக்காலமும் குறையும். வலியும் தீவிரமாகும். தசைச்சுருக்கம் உண்டாகி கருப்பை வாய் திறப்பதால் குறைந்த இடை வெளியில் வலி அடிக்கடி உண்டாகும். வலியின் தீவிரம் அதிகரிக்கும்.
படுக்கையில் இருக்க முடியாமல் நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் வலியானது தொடர்ந்து கொண்டே இருக்கும். வலியின் அளவில் எப்போதும் மாற்றம் இருக்காது. உடலுக்கு அசெளகரியம் இல்லாமல் பார்த்துகொண்டாலும் வலியின் தீவிரம் தொடரவே செய்யும்.
முதுகுபக்கமாக இல்லாமல் வயிற்றைச் சுற்றி மட்டும் வலிகள் இருந்தால் அது பிரசவலி அல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். வலி மட்டுமே ஆனால் பிறப்புறுப்பிலிருந்து எவ்வித திரவமும் கசியாது.
சுளீர் என்ற வலி தொடர்ந்தாலும் உட்கார்ந்திருக்கும் எழுந்து நின்றாலோ எழுந்து நின்றிருக்கும் போது உட்கார்ந்தாலோ வலியின் தீவிரம் குறையும். தகுந்த இடைவெளியில் வலி உண்டானாலும் வலியின் தீவிரம் அதிகரிக்காது. குறையவே தொடங்கும். இடைவெளிக்காலமும் மாறிக்கொண்டே இருக்கும். குறித்த இடைவெளியில் வராத வலியும், குறையும் வலியின் தன்மையும் அவை பிரசவ வலியல்ல என்பதையே உணர்த்துகிறது.
பிரசவ வலி என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதே நேரம் பிரசவத்துக்கு மருத்துவர் சொல்லும் நாள்கள் தான் இன்னும் இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். குழந்தையின் அசைவையும் அவ்வபோது உறுதிபடுத் திக் கொண்டே இருங்கள்.
பனிக்குடம் என்பதைப் பற்றியும் பனிக்குடம் உடைவது பற்றியும் தெரிந்து வைத்திருங்கள். பனிக்குடம் உடைந்தாலும் பிரசவ வலி சிலருக்கு உண்டாகாது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையான பிரசவ வலி என்பது பிரசவ நேரங்களில் மருத்துவர் குறித்த நாள்களுக்கு முன் பின் தான் வரவேண்டும் என்றில்லை. சிலருக்கு 7 அல்லது 8 ஆம் மாதங்களிலேயே வந்து விடுவதும் உண்டு.
அத்தகைய வலியின் போது அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது தாய் சேய் இருவருக்குமே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேநீர் பிரியர்களை வசப்படுத்துவதற்காக பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் வெங்காய தேநீரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.
உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் வெங்காயத்தில் உள்ள குர்செடின் கெட்ட கொழுப்பை குறைக்க துணைபுரியும்.

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு பல் - 3
தேன் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
பிரியாணி இலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் வெங்காயம், பூண்டு, பிரியாணி இலை போன்றவற்றை போடவும். அவை நன்றாக வெந்ததும் தண்ணீர் நிறம் மாறத்தொடங்கும்.
அதன்பிறகு பாத்திரத்தை இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.
அதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.
இந்த வெங்காய தேநீரை தினமும் காலையில் பருகலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும்.

வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் ரத்த உறைவை தடுக்கவும் உதவும். வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. வெங்காய தேநீர் தயாரிப்பது எளி தானது. வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு பல் - 3
தேன் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
பிரியாணி இலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் வெங்காயம், பூண்டு, பிரியாணி இலை போன்றவற்றை போடவும். அவை நன்றாக வெந்ததும் தண்ணீர் நிறம் மாறத்தொடங்கும்.
அதன்பிறகு பாத்திரத்தை இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.
அதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.
இந்த வெங்காய தேநீரை தினமும் காலையில் பருகலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும்.
குழந்தைகளுக்கு சமையலை கற்றுக்கொடுக்கும்போது சில அடிப்படையான விஷயங்களை தாய்மார்கள் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும்.
வகுப்பறைகள் இயங்கவில்லை. ஆனால் இப்போது சமையல் அறைகள் ஒவ்வொரு வீட்டிலும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதனால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு சமையல் அறை பாடத்தை கற்றுக்கொடுத்துவிடலாம் என்று நிறைய தாய்மார்கள், சமையல் செய்யும் முறைகளை கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு சமையலை கற்றுக்கொடுக்கும்போது சில அடிப்படையான விஷயங்களை தாய்மார்கள் மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும்.
பொதுவாக குடும்பத்தலைவிகள் 30 வயதினை கடக்கும்போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறார்கள். பெரும்பாலும் முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்துவலியால் அவதிப்படுகிறார்கள். சில தாய்மார்கள் சமையல் வேலைகளை செய்து முடித்ததும் தங்கள் கைவிரல்கள் மரத்துப்போவதாகவும் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் சமையல் வேலைகளில் செய்யும் சின்னசின்ன தவறுகள்தான். அந்த தவறுகளை அவர்கள் உணர்ந்து சரிசெய்துகொண்டால்தான், தங்களை வாட்டும் வலிகளில் இருந்து விடுதலை பெறமுடியும். அதோடு அந்த தவறுகளை தவிர்த்து, சமையல் அறை பாடங்களை சரியாக கற்றுக்கொடுத்தால்தான் எதிர்காலத்தில் அவர்களது குழந்தைகளால் எந்த வலியையும் அனுபவிக்காமல் சிறப்பாக சமையலை செய்யவும் முடியும்.
வலியில்லாத சமையலை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வழிமுறைகள்!
சமைப்பவரின் உயரத்திற்கு ஏற்ப சமையல் மேடை அமைந்திருக்கவேண்டும். சமையல் மேடை உயரம் அதிகமாக இருந்தால் அடுப்பில் இருக்கும் சமையல் பாத்திரங்களை எளிதாக கையாளமுடியாது. எட்டிப்பார்த்தபடி சமையல் வேலை செய்யவேண்டியதாகிவிடும். சமையல் பாத்திரங்களில் இருக்கும் உணவுப் பொருட்களை கிளறும்போது கைவலி ஏற்படும். அது பிள்ளைகளுக்கு சமையலில் இருக்கும் ஆர்வத்தை குறைத்துவிடும். அதனால் இயல்பாக நின்று சமைக்கும் விதத்தில் சமையல் மேடை அமைக்கப்பட்டிருக்கவேண்டும். உங்கள் பிள்ளைகள் உயரம் குறைவாக இருந்தால் அகலமான, பாதுகாப்பான மரப் பலகையை கீழேபோட்டு அதன் மீது ஏறி நின்றுகொண்டு சமையல் செய்ய கற்றுக்கொடுங்கள். இயல்பாக நின்றுகொண்டு, உடலுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்காமல் சமையல் செய்ய கற்றுத்தாருங்கள். ஒரு கையை சமையல் மேடையில் ஊன்றிக்கொண்டு இன்னொரு கையால் அடுப்பில் இருக்கும் உணவுப்பொருளை கிளறினால், கை வலி ஏற்பட்டு உடல் எளிதில் சோர்வடைந்துவிடும் என்பதை உங்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுங்கள், அதுபோல் சமையல் மேடையை குறைந்த உயரத்தில் அமைத்துக்கொண்டு குனிந்து வேலைபார்ப்பதும் சரியான முறையல்ல. அது முதுகு வலிக்கும், கழுத்து வலிக்கும் காரணமாகிவிடும்.
சமையல் பணி என்பது சமைப்பது மட்டுமல்ல, சமைத்த பாத்திரங்களை முறையாக கழுவவும் கற்றுக்கொடுங்கள். பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ‘சிங்க்’கும், பொருத்தமான உயரத்தில் அமைந்திருப்பது அவசியம். குனிந்து கழுவும் நிலையிலோ அல்லது எட்டிப்பார்த்து கழுவும் நிலையிலோ அது இருக்கக்கூடாது. பாத்திரங்கள் கழுவும்போது உடுத்தியிருக்கும் துணியில் தண்ணீர்பட்டு துணி அழுக்காகிவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தக் கூறுங்கள்.
கிரைண்டரை பயன்படுத்தும்போது முழுகவனமும் அதில்தான் இருக்கவேண்டும். குறிப்பாக மாவு அரைக்கும்போது கூந்தலை பறக்கவிடாமல் நன்றாக ஒதுக்கிகட்டிக் கொள்ளச்சொல்லுங்கள். கிரைண்டர் இருக்கும் மேடையும், நின்ற நிலையில் வேலை பார்க்க வசதியாக அமைக்கப்பட்டிருக்கவேண்டும். அவ்வப்போது குனிந்து, நிமிர்ந்து வேலைபார்க்கும் விதத்தில் கிரைண்டர் மேடை அமைந்துவிடக்கூடாது,
சமைக்கும் பொருட்களை, சமையல் அறையில் எந்தெந்த பகுதியில் வைத்திருக்கிறீர்கள் என்பதை முதலிலே பிள்ளைகளுக்கு, ஒவ் வொரு பொருளையும் திறந்துகாட்டி கற்றுக்கொடுங்கள். எந்த உணவுப் பொருளை சமைக்கவேண்டும் என்பது பற்றி முதலிலே திட்டமிட்டுவிட்டு அதற்குரிய பொருட்கள் அனைத்தையும் கைக்கு எட்டும் விதத்தில் எடுத்து வைத்துக்கொள்ள பழக்கப்படுத்துங்கள். பார்வைக்கு அப்பால் இருக்கும் பொருட்களை எடுக்க உடலை முழுமையாக திருப்பவேண்டும். கையை மட்டும் நீட்டி எடுத்தால் சில நேரங்களில் முதுகில் பிடித்துக்கொள்ளும்.
காய்கறிகளை, நின்று கொண்டே வெட்டும்படி கூறுங்கள். அப்போதுதான் முழு கவனத்தையும் செலுத்தி சரியாக வெட்டமுடியும். பெரும்பாலும் குழந்தைகள் டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டு காய்கறிகளை வெட்ட விரும்புவார்கள். அது சரியான அணுகுமுறையல்ல. ஏனென்றால் கைகள் விரைவாக வலிக்கத் தொடங்கிவிடும்.
சிலிண்டர்களை எளிதாக கையாண்டு சமையல் அறைக்கு கொண்டு வருவது, காலி சிலிண்டரை இணைப்பில் இருந்து விடுவித்து மாற்றிவிட்டு, புதிய சிலிண்டரை இணைப்பது போன்ற வேலைகளை செய்யவும் சொல்லிக்கொடுங்கள்.

நீங்கள் எவ்வளவு நினைவாற்றல் கொண்டவர் என்பதை மிக எளிதாக கண்டுபிடிக்கும் வழிமுறை இது. இங்கே பத்து கேள்விகள் தரப்படுகின்றன. அதை படியுங்கள்! மறதியின் அளவை மதிப்பீடு செய்யலாம்!

1. செய்யவேண்டிய வேலைகள் அடிக்கடி மறந்துபோகிறதா?
ஆம்.. இல்லை..
2. ஏற்கனவே சென்ற இடங்களை காணும்போதும், ஏற்கனவே சந்தித்தவர்களை பார்க்கும்போதும் அவர்களை பற்றிய நினைவுகள் வருவதில்லையா?
ஆம்.. இல்லை..
3. அன்றாட வழக்கமான வேலைகளை செய்யவே மறந்துபோய் விடுகிறீர்களா?
ஆம்.. இல்லை..
4. சமீபகாலங்களில் நடந்த சம்பவங்கள் கூட மறந்துபோகிறதா?
ஆம்.. இல்லை..
5. ஒருவரை சந்திக்கும்போது அவருடன் பேசவேண்டிய முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டதுபோல் உணர்கிறீர்களா?
ஆம்.. இல்லை..
6. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்த இடம் தெரியாமல் அலைபாய்கிறீர்களா?
ஆம்.. இல்லை..
7. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள ரொம்பவும் சிரமப்படுகிறீர்களா?
ஆம்.. இல்லை..
8. முக்கியமான விஷயம் பற்றி பேசும்போது அது நினைவில் வராமல் தடுமாறிய அனுபவம் உண்டா?
ஆம்.. இல்லை..
9. நெருக்கமான நண்பர்களின் பெயர் கூட உடனடியாக நினைவில் வராமல் திணறுகிறீர்களா?
ஆம்.. இல்லை..
10. வெளியே செல்லும்போதும் பழக்கப்பட்ட பாதைகள் கூட மறந்ததுபோல் இருக்கிறதா?
ஆம்.. இல்லை..
அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதில் எது என்று ‘டிக்’ செய்யுங்கள்.
‘ஆம்’ என்பது இரண்டும், ‘இல்லை’ என்பது 8-ம் இருந்தால் உங்களுக்கு போதுமான நினைவாற்றல் இருக்கிறது.
அனைத்துக்கும் ‘ஆம்’ என்பது பதிலாக இருந்தால் நீங்கள் நினைவாற்றல் குறைபாடு அதிக அளவு கொண்டவர்கள் என்ற பட்டியலில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் தேவையில்லாமல் மனக்கவலைக்கு ஆளாகிறார்கள். சிலவகை நறுமண எண்ணெய்களை கொண்டு உடலையும், மனதையும் ஆசுவாசப்படுத்தலாம். அவை மனதிற்கு இதமளிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் தேவையில்லாமல் மனக்கவலைக்கு ஆளாகிறார்கள். ஏதாவதொரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் னோடு தன்னையோ தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையோ மனத்திரையில் ஒப்பிட்டுப்பார்த்து தங்களுக்கும் அப்படி ஏதேனும் நடந்துவிடுமோ என்று பயப்படவும் செய்கிறார்கள். மனஅழுத்தம், பதற்றம் போன்ற உணர்வுகள் மனக்கவலையை அதிகரிக்கச் செய்துவிடும். அதில் இருந்து மீளாவிட்டால் கடுமையான மன நோயாக மாறிவிடும். சிலவகை நறுமண எண்ணெய்களை கொண்டு உடலையும், மனதையும் ஆசுவாசப்படுத்தலாம். அவை மனதிற்கு இதமளிக்கும்.
லாவண்டர்: இதற்கு உடல் மற்றும் மனதில் உண்டாகும் சோர்வை போக்கும் தன்மை இருக்கிறது. மனம் சார்ந்த பல்வேறு அறிகுறிகளை கட்டுப்படுத்தி பதற்றம், மனக் கவலையை விரட்டவும் உதவும். குளிக்கும்போது சிறிதளவு லாவண்டர் எண்ணெய்யை தண் ணீரில் கலந்து குளித்துவரலாம். வீட்டின் அறையில் நறுமணம் வீசுவதற்கும் பயன்படுத்தலாம்.
மல்லிகை: இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி டிப்ரெசண்ட் தன்மை இருக்கிறது. பதற்றத்தின் அறிகுறிகளை எதிர்த்து போராடவும் உதவும். மனஅழுத்த எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு களைக் கொண்டுள்ளது. மனதை அமைதியாக்கி தூக்கத்தை மேம்படுத்தவும் செய்யும். தூக்கமின்மை முதல் மனச்சோர்வு வரை பல பிரச்சினை களுக்கு தீர்வு தரும். மல்லிகை எண்ணெய்யுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து கழுத்து, கைகளில் தடவி வரலாம். தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் களுக்கு நிவாரணம் தரும். வீட்டுக்கு நறுமணமும் ஏற்படுத்தி கொடுக்கும்.
ரோஜா: இதன் வாசம் சோர்வை போக்கி மனதை இதமாக்கும். மனக்கவலையை போக்குவதற்கு ரோஜா எண்ணெய் சிறந்த தேர்வாக அமையும் என்று சில ஆராய்ச்சிகளும் குறிப்பிடுகின்றன. இதனை பயன் படுத்துவதன் மூலம் மன அழுத்தம், மன சோர்வு, பதற்றம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
சாமந்தி: சாமந்தி டீயை போல சாமந்தி எண்ணெய் யும் ஏராளமான உடல்நல நன்மைகளை கொண்டி ருக்கிறது. இந்த எண்ணெய்யுடன் சிறிதளவு நீர் கலந்து உடலில் தடவி வரலாம். மன அமைதியை மேம்படுத்தும். மனக்கவலை, பதற்றத்தை குறைக்கும். சாமந்தி டீ பருகுவதன் மூலம் மன அழுத்தம் குறையும். நன்றாக தூக்கமும் வரும்.
எலுமிச்சை: இதன் வாசனை மனநிலையை மேம்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை எலுமிச்சை எண்ணெய்க்கு இருக்கிறது. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யுடன் எலுமிச்சை எண்ணெய்யை கலந்து உபயோகப் படுத்தலாம்.

பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களில் உடல் பருமன் பிரச்சினை முக்கியமானது. உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

உடல் பருமனுக்கு தூக்கமின்மையும் முக்கிய காரணமாகும். தூக்கமின்மை காரணமாக மூளையின் செயல்திறனில் பாதிப்பு ஏற்படும். உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடு களிலும் மாற்றங்கள் உருவாகும். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதன் தாக்கம் அதிகமாக வெளிப்படும். மன அழுத்தமும் உடல் நலனை பாதிக்கும். ஆதலால் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றுக்கு பெண்கள் பிரசவத்திற்கு பின்பு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்கள் குழந்தையை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அப்போது அவர்கள் தங்கள் உடல் நலன் மீது போதுமான அக்கறை கொள்வதில்லை. அதனால் சோர்வு, தூக்கமின்மை தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி விடும். அதன் காரணமாக கூடுதல் மன அழுத்தம் உண்டாவதோடு தாய்மார்களின் ஆரோக்கியத்திலும் கடும் பாதிப்பு ஏற்படும். குழந்தையின் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும்.
கர்ப்பிணி பெண்களின் உடல் எடை அதிகரிக்கும்போது கொழுப்பின் அளவும் கூடும். குழந்தையை பராமரிப்பதற்கு மத்தியில் தூக்கத்திற்கும், உடற்பயிற்சிக்கும் போதுமான நேரம் ஒதுக்குவது எளிதான விஷயம் அல்ல. குழந்தையை கவனிப்பதற்கு மத்தியில் தாய்மார்கள் தங்கள் உடல் நலம் பற்றி சிந்திப்பதும் கடினமானது. குழந்தையின் உடலை சுத்தப்படுத்தி பேணுவதற்கும், தூங்கவைப்பதற்குமே நேரம் சரியாக இருக்கும். அதற்குள் சோர்வு உண்டாகி தாய்மார் களின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகக் கூடும்.
பிரசவத்திற்கு பின்பு 5 முதல் 10 சதவீத பெண்கள் சினைப்பை கட்டி பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் இந்த பாதிப்பு நேருகிறது. இதன் காரணமாக உடல் எடையை குறைப்பது கடினமாகிவிடும். அதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியும் ஏற்படுகிறது.
உடற்பயிற்சி செய்வதற்கு மன ரீதியாக தயாராக இருந்தாலும் உடல் ஒத்துழைக்காது. குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை மூட்டுகள் மற்றும் தசை நார்கள் பாதிக்கப்படும். முதுகுவலி பிரச்சினையும் ஏற்படும்.
கர்ப்பகாலத்தில் வயிற்று தசைகளும் விரி வடைந்துவிடும். ஆனால் அவை குழந்தை பிறந்ததும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கும். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமான உடற்பயிற்சிகளை டாக்டரின் ஆலோசனை பெற்று மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல் பருமனாகிவிடும்.
பிரசவத்தால் பெண்கள் அதிகம் சோர்ந்து போவார்கள். அதில் இருந்து மீள்வதற்கு குறைந்தபட்சம் ஆறு வாரங்களாவது ஆகும். உடல் மீண்டும் வடிவம் பெறுவதற்கு மன ஆரோக்கியமும் முக்கிய பங்கு வகிக்கிறது. முறையான உடற்பயிற்சி மூலம் உடல் பருமனை குறைக்கலாம்.

பழங்களை சாப்பிடுவது மட்டுமல்ல. அவைகளை கூழாக அரைத்து முகத்தில் தடவியும் அழகுக்கு அழகு சேர்க்கலாம். எந்தெந்த பழங்கள் சருமத்திற்கு எப்படி பொலிவு சேர்க்கிறது என்று பார்ப்போமா!
சரும அழகை மெருகேற்றுவதில் பழங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பழங்களை சாப்பிடுவது மட்டுமல்ல. அவைகளை கூழாக அரைத்து முகத்தில் தடவியும் அழகுக்கு அழகு சேர்க்கலாம். எந்தெந்த பழங்கள் சருமத்திற்கு எப்படி பொலிவு சேர்க்கிறது என்று பார்ப்போமா!
வறண்ட சருமத்தை கொண்டவர்கள் வாழைப்பழங்களை பயன்படுத்தலாம். அதிலிருக்கும் பொட்டாசியம் மற்றும் ஈரப்பதம் வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தை சீர்செய்துவிடும். மேலும் வாழைப்பழங்களில் இருக்கும் வைட்டமின் ஏ, ஈரப்பதத்தை மீட்டெடுக்க உதவும்.
முகப்பரு பாதிப்புக்கு ஆளானவர்கள் வாழைப்பழத்தை தவறாமல் பயன்படுத்த வேண்டும். வாழைப்பழத்துடன் கால் கப் தயிர், சிறிதளவு லவங்கப்பட்டை தூள், தேன் கலந்து நன்கு மசித்துக்கொள்ளவேண்டும். அதனை முகத்தில் தடவி, உலரவிட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது முகப்பருவை போக்கும்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலமும், வைட்டமின் சி சத்தும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். சரும சுருக்கங்களை போக்கவும் உதவும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றி இளமையான தோற்றத்திற்கு வித்திடும். ஆரஞ்சு சருமத்திற்கு ஏற்ற சிறந்த மாஸ்ச்சரைசராகவும் செயல்படும் தன்மை கொண்டது. ஒரு ஆரஞ்சு பழத்தை தோலுரித்து கூழாக்கி அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சளை சேர்த்து பிசைந்து முகத்திலும், கழுத்திலும் பூசி கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவி விடலாம். ஆரஞ்சு பழ தோலை உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தயிர் கலந்தும் முகத்தில் பூசி வரலாம்.
கரு வளையத்தை காக்க பப்பாளி பயன்படும். அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் இ, சி போன்றவை சருமத்திற்கு பாதுகாப்பு கவசமாக செயல்படும். பப்பாளியில் இருக்கும் பாப்பெயின் எனும் நொதி இறந்த செல்களை அழித்து சருமத்தை புதுப்பிக்க உதவும். பப்பாளி பழ துண்டுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து மிக்சியில் அடித்து அதனை முகம், கழுத்தில் பூசி, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த மசாஜ் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பொலிவாக்கும்.
சரும அலர்ஜி பாதிப்புக்குள்ளாகுபவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தை பயன்படுத்தலாம். அதிலிருக்கும் வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நான்கைந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை மிக்சியில் அரைத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் கழுவவேண்டும்.
ஆப்பிளும் சருமத்தை பிரகாசிக்க செய்யும் தன்மை கொண்டது. தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர் வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். பாதி ஆப்பிளை மிக்சியில் விழுதாக அரைத்து அதனுடன் தேன் மற்றும் ஓட்ஸ் கலந்து சருமத்தில் பூசி வரலாம். அது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவை உருவாக்கும்.