search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரசவ வலி
    X
    பிரசவ வலி

    பிரசவ வலியா பொய் வலியா எப்படித் தெரிந்துகொள்வது?

    பிரசவ வலியையும், பொய் வலியையும் குறித்து ஓரளவேனும் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். வலி ஏற்படும் போது உண்டாகும் சில அறிகுறிகள் வைத்து அவை பிரசவ வலியா என்னவென்பதை அறிந்துகொள்ளலாம்.
    பேறுகாலம் முழுவதும் மனதளவிலும் உடலளவிலும் பெண்கள் எந்தவிதமான பாதிப்பும் அடையாமல் இருந்தால் பிரசவ நேரமும் மகிழ்வானதாகவே அமையும். இன்றும் சில கருவுற்ற பெண்கள் பிரசவ வலியை என்னவென்று அறியாமல் வயிற்றைச் சுற்றி சற்று இறுக்கிப்பிடித்தாலும் அது பிரசவ வலியோ என்று அச்சம் கொள்கிறார்கள். கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவக்காலம் நெருங்கும் போது பிரசவ வலி குறித்தும் பிரசவ வலியாக இருக்குமோ என்று நினைகும் பொய் வலி குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.

    மருத்துவர் கொடுத்த பிரசவ நாளை எதிர்ப்பார்க்கும் போதே மனம் முழுக்க மகிழ்ச்சியும், ஒரு வித பரவசமும் அதற்கேற்ப மறுபுறம் பயமும் கலந்தே எதிர்நோக்கியிருப்பார்கள். பிரசவக்காலத்தைக் கடப்பதை விட அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது பிரசவிக்கும் நேரம். அதனால் தான் பெண்கள் பிரசவம் மறு ஜென்மம் என்று சொல்வார்கள்.

    பிரசவ வலியையும், பொய் வலியையும் குறித்து ஓரளவேனும் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியம். வீட்டு பெரியவர்கள், மருத்துவரிடம் பரிசோதனை செல்லும் போது பிரசவ வலி குறித்து கேட்டு அறிந்து கொள்வதும் முக்கியம். வலி ஏற்படும் போது உண்டாகும் சில அறிகுறிகள் வைத்து அவை பிரசவ வலியா என்னவென்பதை அறிந்துகொள்ளலாம்.

    கர்ப்பக்காலத்தில் பொதுவாகவே வயிற்றைச் சுற்றியிருக்கும் தசைகள் பிரசவக் காலத்துக்காக தயார்படுத்திக்கொள்ள தொடங்கும். அப்போது ஏற்படும் வலியை 6 அல்லது 7 ஆம் மாதத்திலிருந்தே உணரதொடங்கலாம்.

    பிரசவத்துக்கு கொடுத்திருக்கும் நாளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரம் முன்னதாகவே வலியில் ஒரு கவனத்தை வைத்திருங்கள். பிரசவ வலியாக இருந்தால் முதுகின் கீழ்ப்பகுதியிலிருந்து ஆரம்பிக்கும். பிறகு அந்த வலி சிறிது சிறிதாக வயிற்றின் முன்பக்கமாக வந்து அடிவயிற்றில் வலிக்க தொடங்கும். இப்படி ஒரு வலியை உணர்ந்தால் அது பொய் வலி அல்ல என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

    வலியோடு பிறப்புறுப்பிலிருந்து வெள்ளைப்போன்ற திரவம் கசிதலும் அதைத் தொடர்ந்து இரத்தப்போக்கும் உண்டானால் அதுவும் பிரசவ வலியை உறுதி செய்கிறது. பிரசவ வலியாக இருந்தால் வலியானது தொடர்ந்து இருக்கும். பிறகு வலியே இருக்காது. மீண்டும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வலியை உண்டாக்கும். கருப்பை சுருங்கி விரிய விரிய வலியும் மாறுபடும். முதுகு பகுதியில் தொடங்கி முன்புறம் கீழ் வயிறு, தொடை வர பரவும்.

    சுளீர் சுளீரென்று வலியானது குறித்த இடைவெளியில் விடாமல் இருக்கும். நேரம் செல்ல செல்ல வலியோடு இந்த இடை வெளிக்காலமும் குறையும். வலியும் தீவிரமாகும். தசைச்சுருக்கம் உண்டாகி கருப்பை வாய் திறப்பதால் குறைந்த இடை வெளியில் வலி அடிக்கடி உண்டாகும். வலியின் தீவிரம் அதிகரிக்கும்.

    படுக்கையில் இருக்க முடியாமல் நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் வலியானது தொடர்ந்து கொண்டே இருக்கும். வலியின் அளவில் எப்போதும் மாற்றம் இருக்காது. உடலுக்கு அசெளகரியம் இல்லாமல் பார்த்துகொண்டாலும் வலியின் தீவிரம் தொடரவே செய்யும்.

    முதுகுபக்கமாக இல்லாமல் வயிற்றைச் சுற்றி மட்டும் வலிகள் இருந்தால் அது பிரசவலி அல்ல என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். வலி மட்டுமே ஆனால் பிறப்புறுப்பிலிருந்து எவ்வித திரவமும் கசியாது.

    சுளீர் என்ற வலி தொடர்ந்தாலும் உட்கார்ந்திருக்கும் எழுந்து நின்றாலோ எழுந்து நின்றிருக்கும் போது உட்கார்ந்தாலோ வலியின் தீவிரம் குறையும். தகுந்த இடைவெளியில் வலி உண்டானாலும் வலியின் தீவிரம் அதிகரிக்காது. குறையவே தொடங்கும். இடைவெளிக்காலமும் மாறிக்கொண்டே இருக்கும். குறித்த இடைவெளியில் வராத வலியும், குறையும் வலியின் தன்மையும் அவை பிரசவ வலியல்ல என்பதையே உணர்த்துகிறது.

    பிரசவ வலி என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதே நேரம் பிரசவத்துக்கு மருத்துவர் சொல்லும் நாள்கள் தான் இன்னும் இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். குழந்தையின் அசைவையும் அவ்வபோது உறுதிபடுத் திக் கொண்டே இருங்கள்.

    பனிக்குடம் என்பதைப் பற்றியும் பனிக்குடம் உடைவது பற்றியும் தெரிந்து வைத்திருங்கள். பனிக்குடம் உடைந்தாலும் பிரசவ வலி சிலருக்கு உண்டாகாது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையான பிரசவ வலி என்பது பிரசவ நேரங்களில் மருத்துவர் குறித்த நாள்களுக்கு முன் பின் தான் வரவேண்டும் என்றில்லை. சிலருக்கு 7 அல்லது 8 ஆம் மாதங்களிலேயே வந்து விடுவதும் உண்டு.

    அத்தகைய வலியின் போது அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது தாய் சேய் இருவருக்குமே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். 
    Next Story
    ×