என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த சூப்பை குடிக்கலாம். மேலும் இந்த சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்
    சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்
    தூளாக்கிய பனை வெல்லம் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 1 டம்ளர்
    உப்பு - சிறிதளவு

    அதிமதுரம் சுக்கு

    செய்முறை:


    அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதிக்க தொடங்கியதும் அதிமதுரம் பொடியை கொட்டவும்.

    அது நீரில் கலந்து கொதிக்க தொடங்கியதும் சுக்கு பொடியை தூவவும்.

    பின்னர் பனை வெல்லம், உப்பு சேர்க்கவும்.

    நன்கு கொதித்து சூப் பதத்துக்கு வந்ததும் எலுமிச்சை சாறை சேர்த்து இறக்கவும்.

    அதிமதுரம் சுக்கு சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்களின் ஸ்மார்ட்போன்களில் இருக்கவேண்டிய சில முக்கியமான அப்ளி கேஷன்களை பற்றிய தொகுப்பு இது.
    பெண்களின் ஸ்மார்ட்போன்களில் இருக்கவேண்டிய சில முக்கியமான அப்ளி கேஷன்களை பற்றிய தொகுப்பு இது.

    ஷேக் 2 சேப்ட்டி: மிகவும் சுலபமாக பயன்படுத்தக் கூடிய ஆப் இது. அவசர காலத்தில் ஸ்மார்ட்போனை ஷேக் செய்தால் போதும் அல்லது பவர் பட்டனை நான்கு முறை அழுத்தினாலே நீங்கள் பதிவு செய்துள்ள நபருக்கு ‘உங்களுடைய உதவி தேவை’ என்ற செய்தியானது சென்று விடும். இதற்கு இணைய வசதி தேவையில்லை. விபத்து, பாலியல் தொந்தரவு, கொள்ளை, இயற்கை பேரழிவு போன்ற காலங்களில் இது பெரும் உதவியாக இருக்கும்.

    எலா: குழந்தை பேறுக்காக காத்திருக்கிறீர்களா?... உங்களுக்கான ஆப் தான் இது. கடைசி மாதவிடாய் சுழற்சி எப்போது ஆரம்பித்தது?, எத்தனை நாட்கள் சுழற்சி இருந்தது?, வயது போன்ற தகவல்களை இதில் பதிவிட்டால், உடலுறவிற்கு பொருத்தமான நாட்களையும், அந்த நாட்களில் எதை செய்யவேண்டும், எத்தகைய உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற தகவல்களையும் உங்களுக்கு கொடுக்கும். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைகளும் கிடைக்கும்.

    சிடோர் ஸ்குவாட்: பெண்களுக்குப் பெரிய பிரச்சினையே ‘டாய்லெட்’ உபயோகப்படுத்துவதுதான். பயணம் செய்யும் இடங்கள் அல்லது புது இடங்களில் கழிவறை எங்கே இருக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடும், இந்த ஆப். உங்களுக்கு அருகாமையில் உள்ள கழிவறை மற்றும் ஓய்வறைகளை பயன் படுத்தியவர்களின் கருத்துகள் (கமெண்ட்ஸ்) அனைத்தையும் காண்பித்து விடும் என்பதால் உங்களுக்கு சிரமம் கொடுக்காமல் நல்ல ஓய்வறைகளை கண்டுபிடித்து தந்து விடும். பயணமும் சுகமாக அமையும்.

    ஒ.பி.ஐ: எந்த கலர் நெயில் பாலிஷ் (நகப்பூச்சு) உங்களது உடல் நிறத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்பதை உங்களுக்கு காட்டிவிடும் இந்த ஆப். இந்த ஆப்பின் கேமரா வாயிலாக உங்கள் விரலை படம் எடுத்தால், எந்த கலர் உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதற்கான ஆப்ஷன்களை காட்டிவிடும். அதற்கு பிறகு என்ன...? உங்களுக்கு ஏற்ற நெயில் பாலிஷ்களை தேர்ந்தெடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாமே..!

    மிண்ட்: பட்ஜெட்டை எப்படி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என தெரியவில்லையா?. எழுதி வைக்கவோ, நினைவில் வைக்கவோ நேரம் இல்லை என்பவர்களுக்கு இந்த ஆப் ஒரு வரப்பிரசாதம். இதில் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் மற்றும் கடன் அட்டை போன்ற தகவல்களைப் பதிவு செய்து, உங்களுடைய செலவுகளை பதிவு செய்து வந்தால், ஒவ்வொரு மாதத்திலும் நீங்கள் செய்திருக்கும் செலவு கணக்கினை துல்லியமாக காண்பிக்கும். கடந்த மாதம் எவ்வளவு செலவாகியிருக்கிறது. இந்த மாதம் எவ்வளவு செலவு என்பதையும் உங்களுக்கு ஒப்பிட்டு காண்பித்து விடும். கூடவே செலவை குறைக்கும் வழிமுறைகளையும் வழங்கும்.

    இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்கள் மட்டுமல்ல, இத்தகைய வசதி கொண்ட, வேறு பெயரிலான அப்ளிகேஷன்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றை பதிவேற்றம் செய்தும் பயன்படுத்தலாம்.
    துள்ளுபந்துகள் மற்ற பந்துகளைவிட அதிக உந்துசக்தி கொண்டவை என்பதால் அவை மற்ற பந்துகளைவிட அதிகமாகவே குழந்தைகளுக்கு ஊக்கசக்தியை அதிகரித்து திறமைகளையும் வளர்க்கிறது என்று நம்பலாம்.
    குழந்தைகளே, பந்துகளைக் கொண்டு விளையாடும் எல்லா விளையாட்டுகளும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அல்லவா? கிரிக்கெட் பந்து, கால்பந்து, கைப்பந்து, விளையாட்டுப் பந்து என எத்தனையோ பந்துகள் இருந்தாலும் துடிப்பான குழந்தைகள் விரும்புவது துள்ளிக் குதிக்கும் ‘துள்ளு பந்து’களைத்தான். இதை ‘ஜம்பிங் பால்’ என்றும் ‘பவுன்சிங் பால்’ என்றும் அழைப்பது உண்டு. வண்ண மயமாகவும், வினோத வடிவங்களுடனும் துள்ளிக் குதிக்கும் வேகத்தில் இந்தப் பந்துகள் சிறுவர்களை மட்டுமல்லாமல் எல்லோரையும் கவர்ந்துவிடும். துள்ளுபந்துகளைப் பற்றிய சங்கதிகளை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

    துள்ளுபந்துகள் (பவுன்சிங் பால்) மற்ற பந்துகளைப் போல தோல் மற்றும் ரப்பர் மூலம் இடையில் காற்று நிரப்பி உருவாக்கப்படுவதில்லை. இவை நவீன ரக பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படுகிறது. இவற்றில் காற்று நிரப்பப்படாமலே இவை துள்ளிக்குதிக்கும் திறன் கொண்டவை. ஏனெனில் இவை அந்த அளவு மீள்தன்மை கொண்ட பிளாஸ்டிக் ஆகும். இவற்றின் பெயர் செக்ட்ரான் எனப்படும். வேறுசில பிளாஸ்டிக் கலவையிலும் இந்த வகை பந்துகள் தயாராகின்றன.

    துள்ளுபந்துகளை உருவாக்கிய பெருமைக்குரியவர் நார்மன் ஸ்டிங்லி என்பவர் ஆவார். வாயில் போட்டு மெல்லும் சூயிங்கங்களை பந்துபோல உருட்டி விளையாடும் வழக்கம் பொதுமக்களிடம் இருந்தது. இதன் தாக்கத்தில்தான் துள்ளுபந்துகள் பிறந்ததாக கூறப்படுவது உண்டு.

    துள்ளுபந்துகளுக்கான பிளாஸ்டிக், மேற்கிந்திய ரப்பர் தாவரங்களில், மங்கோலிய பிளம் மரத்தை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. ஆனால் அதில் உண்மையில்லை. கோல்ப் பந்துகளின் உள்ளடாக இருக்கும் பாலிபுடாடையின் போன்ற மீள்தன்மை கொண்ட பிளாஸ்டிக் வகைதான் செக்ட்ரான் ஆகும்.

    துள்ளுபந்துகள் இவ்வளவு புத்துணர்ச்சியுடன் துள்ளிக்குதிக்க காரணம் என்ன தெரியுமா? அதன் மீள்தன்மை கொண்ட பிளாஸ்டிக் மட்டுமல்ல அதனுள் ஒரு சதுர அங்குலத்தில் 1200 பி.எஸ்.ஐ. அளவு அழுத்தம் இருப்பதே அவை ஆக்ரோஷத்துடன் துள்ளிக்குதிக்கக் காரணமாகும்.

    துள்ளுபந்துகளை ஒருமுறை அழுத்தம் கொடுத்து குதிக்க வைத்தால் அது எத்தனை முறை குதிக்கும் தெரியுமா? சுமார் 12 முதல் 15 தடவை அவை சிறுசிறு துள்ளல்களை வெளிப்படுத்தும். ஏனெனில் அவை ஒவ்வொரு முறையும் 8 சதவீத அளவுக்கு ஆற்றலை இழந்து கொண்டே வரும். முதல் முறை ஒரு துள்ளுபந்து ஒரு மீட்டர் உயரம் எழும்பினால் அடுத்த முறை அது 92 சென்டிமீட்டர் உயரம் எழும்பும், அடுத்தமுறை மேலும் அதன் எழும்பும் வேகம் குறைந்து கொண்டே வந்து சுமார் 15 முறையில் அது தரையில் உருள ஆரம்பித்துவிடும்.

    துள்ளுபந்துகள் இன்று 5 ரூபாய் மலிவு விலையில் கூட கிடைக்கிறது. ஆனால் அவை அறிமுகமான காலகட்டத்தில் சுமார் 100 டாலர் விலை வரை விற்றது.

    துள்ளுபந்துகளைக் கொண்டு வேடிக்கையாக விளையாடலாமே தவிர கிரிக்கெட் போல விளையாடுவது சிரமமாக இருக்கும். ஏனெனில் இந்த பந்தைக் கொண்டு கிரிக்கெட் விளையாடினால் பவுன்சர்கள் பேட்ஸ்மேன்களால் தொட முடியாத அளவுக்கு மிக உயரத்திற்கு சென்றுவிடும். அதாவது சாதாரணமாக பந்துவீசுபவர்கூட பவுன்சிங் பால் கொண்டு பந்துவீசினால் சுமார் பனை அளவு உயரத்திற்கு பந்து எழும்பி ஓடிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஆச்சரியமாக துள்ளிக் குதிப்பதால்தானே துள்ளுபந்துகள் குழந்தைகளை மகிழ்விப்பதுடன், உங்களை ஈர்த்து வைத்துள்ளன.

    துள்ளுபந்துகளின் வடிவமைப்பும் குழந்தைகளை ஈர்க்க முக்கிய காரணமாகும். ஒளிஊடுருவும் திறன், பளிச்சிடும் வண்ணங்கள், மற்றும் வண்ணங்களின் கூட்டுக்கலவையில் தோன்றும் வினோத வடிவங்கள், துளி, துகள் போன்ற உருவங்களின் உள்ளடு, நியான் ஒளிவீச்சு ஆகியவை துள்ளுபந்துகளை ஈர்ப்புடையதாக வைத்துள்ளன.

    எல்லா வயது குழந்தைகளையும் துள்ளுபந்துகள் மகிழ்விக்கும் என்றாலும், 3 வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் துள்ளுபந்துகளை விளையாட கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அந்த வயதுக் குழந்தைகள் எல்லாப் பொருட்களையும் வாயில் வைத்து விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். துள்ளுபந்துகள் ஈர்ப்புடைய வண்ணங்களில் இருப்பதும், மென்மையான திறனுடன் இருப்பதுவும் குழந்தைகளை வாயில் வைத்து சுவைப்பதையும், கடிக்கும் ஆர்வத்தையும் தூண்டலாம். ஆனால் அது ஆபத்தானது என்பதால் துள்ளுபந்துகளை வாயில் வைத்து விளையாடக்கூடாது.

    1971-ல் துள்ளுபந்தில் இசையை இணைத்து வெளியிட்டார்கள். அதாவது அந்த பந்தின் குறிப்பிட்ட பகுதியை தேய்க்கும்போது ஒருவகை இசையை கேட்க முடிந்தது. இந்த துள்ளுபந்துகளுக்கு ‘சூப்பர் பால்’ என்ற பெயரும் உண்டு. இந்த பெயருடைய நிறுவனம்தான் அதிக அளவில் துள்ளுபந்துகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தது.

    குழந்தைகள் பந்துகளுடன் விளையாடுவதால் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். பந்துகளின் பின்னால் ஓடுவதால் அவர்களின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. வண்ணம் அறிதல், வடிவம் அறிதல், இணைந்து விளையாடும் திறன் உள்ளிட்ட பல்வேறு திறன்கள் வளர்கின்றன. துள்ளுபந்துகள் மற்ற பந்துகளைவிட அதிக உந்துசக்தி கொண்டவை என்பதால் அவை மற்ற பந்துகளைவிட அதிகமாகவே குழந்தைகளுக்கு ஊக்கசக்தியை அதிகரித்து திறமைகளையும் வளர்க்கிறது என்று நம்பலாம். துள்ளுபந்துகளுடன் துள்ளி விளையாடி மகிழ்வோம்!
    சுருக்கமாக சொன்னால் முறையான உணவும் போதுமான தூக்கமும் தேவையான அளவு உடற்பயிற்சியும் இருந்தால் எல்லா நாளும் சுறுசுறுப்பாக இயங்கும் இனிய நாளாக மாறிவிடும்
    ஐயம் தீர்க்கிறார் வாழ்வியல் மேலாண்மை மற்றும் ஆன்டிஏஜிங் நிபுணர் கவுசல்யா நாதன். ‘‘காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் உள்ள கழிவுகள் சரியான முறையில் வெளியேறும். 30 நிமிட உடற்பயிற்சிகளை காலையில் செய்வது அவசியம். காலை உணவாக புரதம் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஓட்ஸ் ராகி கஞ்சி முளை கட்டிய பச்சைப் பயறு சுண்டல் இட்லி தோசை போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். பூரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது. மந்தமான உணர்வை ஏற்படுத்தும். காலையிலேயே அஜீரணத்தை ஏற்படுத்தி உங்களின் சுறுசுறுப்பான நாளை வீணாக்கிவிடும். பத்து மணிக்கு மேல் ஒரு கப் தயிரில் பழங்களை வெட்டிப்போட்டு ஐஸ்க்ரீம் போல சாப்பிடலாம் அல்லது ஒரு மில்க்ஷேக் அருந்தலாம். தயிரில் கால்சியமும் உடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களும் இருப்பதால் உணவு செரிமானத்தை மேம்படுத்தும்.

     மதியம் இரண்டு மணிக்குள் சமச்சீரான உணவுகளை மதிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி சாதத்துக்கு இணையாக காய்கறி கூட்டு பொரியல் அவியல் எடுத்துக்கொள்வது அவசியம். அசைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் அவித்த சிக்கன் அல்லது மட்டன் கறி இரு துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். மாலை நான்கு மணி அளவில் பாப்கார்ன் பொரி அவித்த சுண்டல் ஸ்வீட்கார்ன் சூப் பழச்சாறு போன்ற வற்றை எடுத்துக் கொள்ளலாம்.

    காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் அருந்தக் கூடாது. இரவில் எளிமையான உணவுகளான கோதுமை தோசை அடை அவியல் இட்லி பணியாரம் சப்பாத்தி ஆகியவற்றை உண்ணலாம். இரவில் பொரித்த உணவுகளான புரோட்டா சிக்கன் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. இயற்கையான பழச்சாறுகளை மட்டுமே அருந்தவேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் துரித உணவுகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.

    இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும். குறைந்தது எட்டு மணி நேர தூக்கம் உடலுக்கு அவசியமானது. நேரம் தவறி சாப்பிடக் கூடாது. சுருக்கமாக சொன்னால் முறையான உணவும் போதுமான தூக்கமும் தேவையான அளவு உடற்பயிற்சியும் இருந்தால் எல்லா நாளும் சுறுசுறுப்பாக இயங்கும் இனிய நாளாக மாறிவிடும்...’’

    - சுபாஷினி விருதுநகர்.
    தினமும் இரவில் பெண்கள் ‘மேக்கப்’பை நீக்கிவிட்டுத்தான் தூங்கச் செல்லவேண்டும். சமையல் அறை பொருட்களை கொண்டே ‘மேக்கப்’பை நீக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
    தினமும் இரவில் பெண்கள் ‘மேக்கப்’பை நீக்கிவிட்டுத்தான் தூங்கச் செல்லவேண்டும். சமையல் அறை பொருட்களை கொண்டே ‘மேக்கப்’பை நீக்கும் வழிமுறைகள்:

    மேக்கப்பை நீக்குவதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் பயன் படுத்தலாம். அவை மேக்கப்பை அகற்றுவதோடு சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும். மேக்கப்பை அகற்றியதும் சிலருடைய சருமம் ஈரப்பதமின்றி வறட்சியாகிவிடும். அப்போது இந்த எண்ணெய் வகைகளில் ஏதாவது ஒன்றை கொண்டு மசாஜ் செய்யலாம். மேக்கப் துடைப்பான்களில் சில துளி எண்ணெய் ஊற்றி ‘மேக்கப்’பை நீக்கவேண்டும்.

    மேக்கப்பை முழுவதுமாக அகற்றிய பிறகு சருமத்தில் சிறிதளவு எண்ணெய் தேய்த்துவிட்டு காலையில் முகத்தை நன்றாக கழுவி விடுவது சருமத்தில் ஈரப்பதம் தங்குவதற்கு வழிவகை செய்யும்.

    மேக்கப்பை நீக்குவதற்கு கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். அது சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். மேக்கப் துடைப்பானில் சிறிதளவு கற்றாழை ஜெல் தடவி சருமத்தை சுத்தப்படுத்துங்கள். அது எளிதில் மேக்கப்பை நீக்கிவிடும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்துவருவதும் சருமத்திற்கு நல்லது.

    மேக்கப்பை நீக்குவதற்கு தேனையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சில துளிகள் தேனையும், பேக்கிங் சோடாவையும் கலந்து சருமத்தில் தடவி நீக்கவேண்டும். அது எளிதில் மேக்கப்பை நீக்கி முகத்தை சுத்தப்படுத்திவிடும். லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் உதட்டில் இந்த கலவையை பூசலாம்.

    கண் இமை களில் போடப்படும் மேக்கப்பை நீக்குவதற்கு பாலை உபயோகிக்கலாம். பருத்தி பஞ்சுவை பந்துவாக உருட்டி அதனை பாலில் ஊறவைத்து சிலதுளி பாதாம் எண்ணெய் கலந்து கண்களை சுற்றி தடவி வரலாம். முகத்திற்கும் பயன்படுத்தலாம். பால் சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் தன்மை கொண்டது.

    ரோஸ் வாட்டரை கொண்டும் முகம், உதட்டில் பூசப்பட்டிருக்கும் மேக்கப்பை அகற்றலாம். அது சரும துளைகளில் படிந்திருக்கும் ரசாயனத்தை அப்புறப்படுத்திவிடும். அதன் பிறகு ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை கொண்ட கிரீமை சருமத்தில் பூசவேண்டும்.
    மறுமண வாழ்க்கை நறுமணமாக வேண்டும் என்றால், இங்கே இரு இதயங்கள் அன்பு பூர்வமாக இணைய வேண்டும். அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    மனைவியை இழந்துவிட்ட கணவர்கள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் தடுமாறிப்போகிறார்கள். அதோடு குழந்தையும் இருந்தால், அதனை வளர்க்க அவர்கள் படும் கஷ்டம் சொல்லிமாளாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பெற்றோரும் உறவினர்களும் அவருக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்வார்கள். இந்த மறுமணம் அவர்கள் வாழ்க்கையை நறுமணமாக்கும் விதமாக அமையவேண்டும்.

    நன்றாக அறிமுகமான பெண்ணாக இருப்பது நல்லது என்று சொல்லி மனைவியின் தங்கையையே திருமணம் செய்து கொள்ள முற்படுகிறவர்கள் அதிகம். வீட்டுப் பெரியவர்களும் அதற்கு ஒத்துழைப்பார்கள். அதன் முடிவு, அந்த பெண்ணின் மனதிற்குப் பிடிக்காத ஒரு கட்டாய திருமணம் போல் ஆகிவிடக்கூடாது. அந்தப் பெண் ஏற்கனவே யாரையாவது மனதில் நினைத்திருந்தால் அவனைத் தூக்கி தூரவீசிவிட்டு, இந்த தியாக வாழ்க்கையில் இறங்க வேண்டியிருக்கும். அந்த வாழ்க்கை இருவருக்குமே நறுமணம் தராது.

    மனைவியை இழந்த எல்லா ஆண்களையும் மறுமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. சூழ்நிலைகளை சாதகமாக்கிக்கொண்டு, அவசரப்படுத்தி மறுமணத்திற்கு சம்மதிக்க வைக்கக் கூடாது. அவர்கள் நன்றாக சிந்திக்கவேண்டும். சிந்தித்து தனக்கு மறுமணம் அவசியம் என்று உணரும்பட்சத்தில் அவசரப்படாமல் அவருக்கு பெண் தேடவேண்டும். அதற்கான திருமண தகவல் மையங்களில் தகவல் பெறுவதாக இருந்தால், அந்த தகவல்கள் உண்மையா என்பதை தீர விசாரிக்க வேண்டும். கூடுமானவரை நன்கு அறிமுகமான பெண்ணை தேர்வு செய்து அவர்கள் விருப்பத்துடன் மணமுடிப்பது அவசியம்.

    மறுமணம் செய்துகொள்ளும் ஆண்களும், பெண்களும் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை. ‘தங்களுக்கு மறு மணத்தில் அவ்வளவு பெரிய ஆர்வம் ஒன்றும் இல்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துதான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன்’ என்பார்கள். குழந்தைகளுக்காக அப்பா செய்துகொள்ளும் மறுமணம் பெரும்பாலும் வெற்றி யடையாது. வளர்ந்த குழந்தைகளால் சுலபமாக புதிய அம்மாவை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகளை மட்டும் மனதில்வைத்துக்கொண்டு ஒரு பெண்ணை தேர்வு செய்தால், அவள் வீட்டில் ஆயா வேலை பார்ப்பவள் போல் ஆகிவிடுவாள். தனக்கும் அந்த ஆயா போன்ற பெண்ணுக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல் மறுமண கணவர் நடந்துகொள்வார். அதனால் அந்த பெண்ணுக்கும் திருப்தியான வாழ்க்கை கிடைக்காது. அவருக்கும் திருப்தி கிடைக்காது. மறுமணத்தில் வாழ வரும் பெண்ணின் மனநிலையும் மிக முக்கியம். மறுமண வாழ்க்கை நறுமணமாக வேண்டும் என்றால், இங்கே இரு இதயங்கள் அன்பு பூர்வமாக இணைய வேண்டும்.

    சளி இருமல் தொல்லை இருப்பவர்களுக்கு இந்த மிளகு சுக்கு தோசை ஒரு சிறந்த வரப்பிரசாதம். இன்று இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - ஒரு கப்
    சுக்குத் தூள் - இரண்டு ஸ்பூன்
    புழுங்கல் அரிசி - ஒரு கப்
    முழு உளுத்தம் பருப்பு - ஒரு கப்
    கெட்டித் தயிர் - ஒரு கப்
    மிளகு - இரண்டு ஸ்பூன்
    சீரகத் தூள் - இரண்டு ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    மிளகு சுக்கு தோசை

    செய்முறை

    உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை தூசு கல் நீக்கி களைந்து சுமார் நான்கு மணி நேரம் நன்கு ஊறவைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு, தயிர் ஆகிய இவற்றை சேர்த்துப் புளிக்க விடவும்.

    தோசையாக ஊற்றும் சமயத்தில் சுக்குத் தூள், மிளகு சீரகத் தூள் ஆகிய இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

    இதோ இப்போது சுவையான மிளகு சுக்கு தோசை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உணவு உண்ணும் செயல்முறையில் உங்கள் குழந்தைகளை இன்னும் அதிகமான அளவில் ஈடுபடுத்த, அவர்களையே பொருட்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கவும்.
    பெற்றோர்களுக்கு இருக்கும் பொதுவான புகார்களில் ஒன்று, அவர்களுடைய குழந்தைகளுக்கு சரியான, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் இல்லை என்பதே. பின்வரும் ஆரம்பக்கட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய வைக்கலாம்.
     
    * ஆரோக்கியமான உணவுகளை உண்ண தொடங்குவதற்கு முன்பு, ஆரோக்கியமான ஷாப்பிங்கைத் தொடங்குவது முக்கியமானது. விவசாயிகள் சந்தைக்கும், ஆர்கானிக் கடைகளுக்கும், சூப்பர் மார்க்கெட்களுக்கும் நேரடியாக குழந்தைகளை அழைத்து செல்லுங்கள், அப்போதுதான் பல்வேறு வகையான தயாரிப்புகளுக்கு இடையே உங்கள் குழந்தைகளால் வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும்.

    * உணவு உண்ணும் செயல்முறையில் உங்கள் குழந்தைகளை இன்னும் அதிகமான அளவில் ஈடுபடுத்த, அவர்களையே பொருட்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கவும். அவர்களே தேர்ந்தெடுத்த ஃப்ரெஷ்ஷான பொருட்களை வைத்து, என்ன சமைக்கலாம் என்று அவர்களிடம் கேட்கலாம், தேர்ந்தெடுக்கும், முடிவெடுக்கும் ஆற்றல் தம்மிடம் இருப்பதாகத் தெரிந்து கொள்ளும் குழந்தைகள், உணவைக் குறித்து இன்னும் நேர்மறையாகவும், சோதனை முயற்சிகளுக்கு தயாராகவும் உணர்வார்கள்.

    * உங்கள் குழந்தைகளை, நீங்கள் சமைக்கும்போதும் உணவுப்பொருட்களை சுத்தம் செய்யும்போதும் உங்களுடன் வேலைசெய்ய கூறுங்கள், அதில் உணவு சமைப்பதற்கான முன்னேற்பாடுகளான, நறுக்குதல், வெட்டுதல் போன்ற வேலைகளும் உள்ளடங்கும். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கத்திகளை குழந்தைகளிடம் தருவதன் மூலம், அவர்களையும் நறுக்கும் வேலைகளில் ஈடுபடுத்தலாம். இறுதி வரை இந்த வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உணவை சுவைத்து பார்க்க, எப்படி இருக்கிறது என்று கேட்க, இன்னும் சில மாற்றங்கள் செய்ய அனுமதிக்கவும். இதனால் அவர்கள் உணவு செய்யும் செயல்முறையின் ஒரு அங்கமாக தங்களை உணர்வார்கள், உணவுக்கு உரிமைதன்மையை உணர்ந்து கொள்வார்கள். பிறகு, உணவு ஒரு முழுமையான சரிவிகித உணவாக எப்படி மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்ள தொடங்குவார்கள்.

    * நீங்கள் பார்ப்பதைத்தான் சாப்பிடுவீர்கள். உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜ் அல்லது கிச்சன் மேடைகளில், ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் இடுபொருட்களைக் காட்சிப்படுத்துங்கள். அதிக கலோரி உணவுகள், பதப்படுத்திய உணவுகள், சோடா மற்றும் இனிப்புகள் வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

    * நீங்கள் சமைக்கும்போதே, உங்கள் குழந்தைகளை ஒரு உணவில் இடவேண்டிய இடுபொருட்களைத் தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அப்போது, நீங்கள் ஒரு கறியை சமைக்கிறீர்கள் என்றால், அதில் என்னென்ன காய்கறிகளை சேர்க்க விரும்புகிறார்கள் என்று உங்கள் குழந்தையிடம் கேட்கவும். அது, உணவு தொடர்பான சிந்தனையைத் தூண்டும். அதுமட்டுமல்லாமல், பல்வேறு வகையான மசாலா மற்றும் ஃப்ளேவர்களை அறிமுகப்படுத்தவும். இது நல்ல வழிமுறையாக இருக்கும், இதனால்,உங்கள் குழந்தையின் சுவை உணர்வு மற்றும் விருப்பங்கள் பல்வேறு சுவைகளையும் அறியக்கூடியதாக மாறும்.
    பெண்களின் மாதாந்திர சுழற்சியின் போது ஏற்படும் வலியை குறைக்க இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் நிவாரணம் பெறலாம்.
    பல பெண்கள், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளைப் பற்றி புகார் கூறுவதால், இந்த நாட்களில் சிக்கல் அதிகரித்து வருகிறது. பாலிசிஸ்டிக் ஓவரியன் டிஸாடர் (பிசிஓடி), எண்டோமெட்ரியோசிஸ் போன்ற நிபந்தனைகள் மற்ற எல்லா பெண்களிலும் காணப்படுகின்றன. இந்த உடல்நலப் பிரச்னைகள் தலைவலி, குமட்டல், ஒற்றைத் தலைவலி, மனநிலை மாற்றங்கள், பிடிப்புகள் அல்லது பெண்களின் மாதாந்திர சுழற்சியின் போது அல்லது அதற்கு முந்தைய மாதவிடாய் வலி போன்ற பிற துணைப் பிரச்னைகளுடன் சேர்ந்து வருகின்றன.

    1.ஊறவைத்த திராட்சை மற்றும் குங்குமப்பூ

    இந்த பானத்தை வெறும் வயிற்றில் காலையில் குடிக்க வேண்டும். கருப்பு திராட்சையும், குங்குமப்பூவும் கலந்திருப்பது மாதவிடாய் வலி மற்றும் பிடிப்புகள் குறைய உதவும்.

    2. நெய்

    திவேகரின் கூற்றுப்படி ஒவ்வொரு உணவிற்கும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துச் சாப்பிடலாம். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் நெய்யைச் சேர்ப்பது பீரியட்ஸ் தொடர்பான பிடிப்புகள் மற்றும் குமட்டல் ஆகியவற்றைக் குறைக்க உதவும்.

    3. தயிர்ச் சாதம்

    தயிர்ச் சாதம் என்பது பீரியட்ஸ் வலியால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு மதிய உணவாகச் சாப்பிடலாம். பருப்பு வகைகள் கொண்ட தயிர்ச் சாதம் உடலில் எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ஒரு சுவையான, சுவையான உணவுக்காக வீட்டில் வறுத்த அப்பளத்துடன் சாப்பிடலாம்.

    நட்ஸ்

    ஒரு சில முந்திரி அல்லது வேர்க்கடலை தான் வேதனையான நாட்களில் ருஜுதா திவேகர் பரிந்துரைக்கிறார். சர்க்கரை பசி மற்றும் மனநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கு உதவும். இந்த சிற்றுண்டியை வெல்லம் அல்லது சர்க்கரை உடன் இணைக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

    5. கிச்சடி அல்லது ராகி

    ராகியுடன் செய்யப்பட்ட தோசை அல்லது ரோட்டியைப் போலவே, லெகுமினஸின் தயாரிப்பு கிச்சடி, பீரியட்ஸ் நாட்களில் ஏற்றதாக இருக்கும். விருப்பமான உணவைத் தயாரிக்கவும் மூங் தால் பயன்படுத்தப்படலாம். முழு தானியங்களுக்கான காலகட்டத்தில் மற்ற மாற்று வழிகள் ராஜ்ஜீரா பயன்படுத்தலாம். சபுதானா கிச்சடி ஒரு லேசான உணவாகும், இது வலியில் இருக்கும்போது சாப்பிடலாம்.
    வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வரும்போது கண்டிப்பாக தண்ணீர் பருக வேண்டும். அதன் மூலம் உடலில் வைரஸ், பாக்டீரியாக் கள் உள்ளிட்ட நோய் தொற்றுகள் இருந்தால் அவற்றின் வீரியம் குறைந்துவிடும்.
    உடலில் இருந்து வெளியேறும் வியர்வைக்கு ஈடுகொடுக்கும் விதமாக உடலில் நீர்ச்சத்தை பேண வேண்டியது அவசியம். தாகத்தை தணிப்பதற்காகவும், சுவைக்காகவும் நிறைய பேர் ஜூஸ், சூப் வகைகளை பருகுவதற்கு விரும்புவார்கள். அதேவேளையில் போதுமான அளவு தண்ணீர் பருகுவதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீராவது பருக வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேர் அதனை கவனத்தில் கொள்வதில்லை.

    வெளியே செல்லும்போது வெயிலின் தாக்கம் உடலை வருத்தி எடுக்கும். தாகமும், பசி உணர்வும் ஏற்படும். அதனால் போதுமான அளவு தண்ணீர் பருகிவிடுவார்கள். வீட்டிலேயே இருந்தாலோ அல்லது ஏதாவது ஒரு வேலையில் தீவிரமாக கவனம் செலுத்திக்கொண்டிருந்தாலோ போதுமான அளவு தண்ணீர் பருகமாட்டார்கள்.

    அப்படியே பருகினாலும் மற்ற சமயங்களில் பருகும் தண்ணீரின் அளவை விட குறைவாகவே இருக்கும். அப்படி இருப்பது உடல் இயக்க செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். பலவித நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும். காலையில் எழுந்ததும் தவறாமல் அரை லிட்டர் அளவாவது தண்ணீர் பருக வேண்டும். அது உடல் உறுப்புகள் சீராக இயங்க வழிவகை செய்யும். வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வரும்போது கண்டிப்பாக தண்ணீர் பருக வேண்டும். அதன் மூலம் உடலில் வைரஸ், பாக்டீரியாக் கள் உள்ளிட்ட நோய் தொற்றுகள் இருந்தால் அவற்றின் வீரியம் குறைந்துவிடும்.

    சாப்பிடும்போது தண்ணீர் பருகுவது கூடாது. அதற்கு பதிலாக சாப்பிட தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் பருகலாம். அது சாப்பிட்டு முடித்ததும் செரிமான சக்தியை மேம்படுத்த உதவும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு தண்ணீர் பருகலாம். அது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது ரத்த ஓட்டம் சீராக இயங்க துணைபுரியும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீராவது அருந்துவது நல்லது. தண்ணீரை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக பருகக் கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் அருந்த வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிப்பதாக இருந்தால், அதிக தாகம் எடுக்க வேண்டும். அதற்கு உடல் உழைப்பு தேவை. தண்ணீரை காய்ச்சி அருந்துவதுதான் நல்லது. சீரகம், வெந்தயம் போன்றவற்றை தண்ணீரில் கலந்தும் பருகலாம்.
    சென்னை, புதுடெல்லி, புனே, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில்தான் செல்போன் தொடர்புகள் மூலம் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் போக்கு அதிகமாக நடக்கிறது.
    இந்தியாவில் 10 பெண்களில் 8 பேர் செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, புதுடெல்லி, புனே, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில்தான் செல்போன் தொடர்புகள் மூலம் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் போக்கு அதிகமாக நடக்கிறது. தேவையற்ற நபர்களின் அழைப்புகள், குறுஞ்செய்திகள் தங்களுக்கு தொந்தரவாகவும், மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகிறார்கள்.

    சர்வேயில் பங்கேற்ற ஐந்து பெண்களில் ஒருவர், சம்பந்தமில்லாத நபர்கள் தங்களை தொடர்பு கொண்டு பேசுவதாகவும், அவர்களின் பேச்சு பாலியல் ரீதியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். பெண்களுக்கு எதிராக செல்போன்கள், எஸ்.எம்.எஸ்.கள் வழியாக நடக்கும் தொந்தரவுகள் இந்தியாவில்தான் அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கென்யா, கொலம்பியா, பிரேசில் மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலும் பெண் களுக்கு எதிராக பாலியல் ரீதியான சீண்டல்கள் செல்போன்கள் வழியாக அதிக அளவில் நடைபெற்றுகொண்டிருக்கின்றன.

    செல்போன் ரீசார்ச் செய்யும் கடைகள், ஷாப்பிங் செல்லும் இடங்கள், சில இடங் களின் வரவேற்பு அறையில் இருக்கும் புத்தகங்கள் உள்பட பல இடங்களில் பெண்கள் தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்கிறார்கள். அதன் வழியாகவும் தேவையற்ற அழைப்புகளை எதிர்கொள் கிறார்கள். அப்படி துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களில் 85 சதவீதம் பேர் புகார் அளிப்பதில்லை. சம்பந்தப்பட்ட நபர்களின் எண்களை தடை (பிளாக்) செய்து வைத்துவிடுவதாக சொல்கிறார்கள். 12 சதவீதம் பேர் மட்டுமே தைரியமாக புகார் தெரிவித்து குற்றவாளி களுக்கு தண்டனை வாங்கித்தர முயற்சி செய்கிறார்கள்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைகளை கடைபிடித்தாலே பச்சிளம் குழந்தையின் அஜீரணக்கோளாறுகள் சரியாகிவிடும். அப்படியும் குழந்தை தொடர்ந்து பால் கக்குதல், அஜீரணக்கோளாறால் அவதிபட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
    பெரும்பாலும் கைக்குழந்தைகள் அவதிப்படுவதற்கு முதன்மையான காரணம் வயிற்று வலியை உண்டாக்கும் உபாதைகள் தான். அதிலும் குறிப்பாக அஜீரணக்கோளாறுகள் என்றே சொல்லலாம்.  4 மாதத்துக்குட்பட்ட பச்சிளங்குழந்தைகளில் 50% குழந்தைகள் அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. இவை சாதாரணமாக இருந்தாலும் குழந்தையின் ஜீரணமண்டலம் சீராக செயல்பட உரிய சிகிச்சையும் அளிக்க வேண்டும். அதற்கு வீட்டிலேயே செய்யகூடிய சிகிச்சைகள் குறித்து பார்க்கலாமா?

    குழந்தைகள் தாங்கள் அஜீரணக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் பால் கக்கும் போது தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை . அதற்கு முன்னரே சில அறிகுறிகளை உணர்த்துவார்கள்.

    தாய்ப்பால் கொடுக்கும் போது பெரும்பாலும் முதுகை வளைத்தபடியே குடிப்பார்கள். பாலை முழுமையாக குடிக்க மாட்டார்கள். விக்கல் வழக்கட்தை விட அதிகமாக இருக்கும்.ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். இதனாலும் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உண்டாகலாம். இவை சாதாரணமாக உண்டாகும் பாதிப்புதான் என்பதால் கைவைத்தியத்திய முறையில் சரிசெய்துவிடமுடியும். அப்படி செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

    குழந்தைகளுக்கு வாயு பிரச்சனையால் வயிறுவலி அஜீரணம் உண்டாகியிருந்தால் முதலில் வலியை குறைக்க முயற்சிக்கலாம். இதனால் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். மிருதுவான துணியை வெதுவெதுப்பான நீரில் முக்கி நீரை பிழிந்து குழந்தையின் மார்பு பகுதியில் இருந்து வயிறுவரை மெதுவாக ஒத்தடம் கொடுத்தபடி இலேசாக அழுத்தி அழுத்தி எடுக்கலாம். இதனால் குழந்தையின் உடலிலிருக்கும் வாயு பிரிந்து ஜீரணம் எளிதாக இருக்கும். தினமும் காலை மற்றும் மாலை வேளையில் இது போல் செய்துவரலாம்.

    தாய்ப்பால் குடித்ததும் குழந்தைகள் ஏப்ப விடும் வரை படுக்கையில் கிடத்தவேண்டாம். அம்மாக்கள் குழந்தையை அணைத்தபடி மடியிலேயே வைத்திருப்பார்கள். அப்படி செய்தால் குழந்தைக்கு ஏப்பம் வராமல் அதனாலும் அஜீரணம் உண்டாகலாம். அதோடு குழந்தை பால் குடிக்கும் போது பால் உறிஞ்சுவதோடு காற்றையும் சேர்த்து உறிஞ்சு கொள்ளவும் வாய்ப்புண்டு.

    அதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததும் அவர்களை தோளில் நிற்கும் படி வைத்து தட்டி கொடுக்க வேண்டும். ஐந்து முதல் பத்துநிமிடங்கள் வரை தட்டி கொண்டெ இருந்தால் குழந்தைக்கு ஏப்பம் வரும் பிறகு படுக்கையில் கிடத்தலாம். இதனால் அஜீரணக்கோளாறு சரியாகும்.

    சிலருக்கு அஜீரணம் பிரச்சனை உண்டாகும் பொது மலச்சிக்கலும் கூடவே இருக்கும். அதனால் குழந்தையை மலச்சிக்கலிலிருந்து விடுபட வைக்க வேண்டும்.

    தினமும் காலையில் குழந்தையை குளிக்க வைக்கும் முன்பு சுத்தமான தேங்காயெண்ணெய் அல்லது சோம்பு, பெருஞ்சீரக எண்ணெய் கிடைக்கும். இதை தேங்காயெண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம்.

    இந்த எண்ணெயை சிறிது எடுத்து உள்ளங்கையில் தடவி குழந்தையின் தொப்புளை சுற்றி தடவவேண்டும். பிறகு உள்ளங்கையை வைத்து குழந்தையின் வயிற்றை மென்மையாக கடிகார திசையில் மசாஜ் செய்யவேண்டும். இதனால் வயிற்றில் இருக்கும் வாயு வெளியேறும். இரண்டு காலையும் இலேசாக மசாஜ் செய்து ஒவ்வொரு காலையும் நீட்டி மடக்கி பொறுமையாக செய்யவேண்டும். இதனால் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துவதோடு செரிமானப்பிரச்சனையும் நீங்கும்.

    மூன்று மாதம் ஆன பிறகு குழந்தைக்கு செரிமானத்துக்கு ஓம வாட்டரை கொடுப்பது உண்டு. இதை வெளியில் வாங்காமல் நீங்களே வீட்டில் தயாரித்து கொடுப்பதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

    அஜீரணக்கோளாறு என்பது எளிதாகவே சரி செய்யகூடியது தான். எனினும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது உணவில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பால் ஒப்புக்கொள்ளாமல் குழந்தைக்கு செரிமானக்கோளாறு, அஜீரணம், மலச்சிக்கல் என்று உண்டாக்கிவிடும்.

    இந்த முறைகளை கடைபிடித்தாலே பச்சிளம் குழந்தையின் அஜீரணக்கோளாறுகள் சரியாகிவிடும். அப்படியும் குழந்தை தொடர்ந்து பால் கக்குதல், அஜீரணக்கோளாறால் அவதிபட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். 
    ×